NFTECHQ

Thursday, 30 June 2016

வாழிய பல்லாண்டு

30.06.2016 அன்று பணி ஓய்வு பெற்ற
திரு S.மகாலிங்கம் DGM
திரு C.ரவி JTO ஈரோடு
தோழர் M.ஜோ ரவிக்குமார் SSS ஈரோடு
தோழர் A.கந்தசாமி STS ஈரோடு
தோழர் P.குமார் STS ஈரோடு
தோழர்  K.C. மணி  STS கொடுமுடி
தோழர் V.சின்னசாமி TM காங்கயம்
தோழர் R.சின்னசாமி TM ஈரோடு
தோழர்  N. மோகன் TM கோபி
தோழியர் M. சந்திரா TM அந்தியூர்


ஆகியோர் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
விலைவாசிப்படி உயர்வு

01.07.2016 முதல்
விலைவாசிப்படி

2.4 சதம் உயரும்

சுழல் மாற்றல்


ஒரு வார காலமாக விவாதிக்கப்பட்டு 29.06.2016 அன்று TM  தோழர்களுக்கு சுழல் மாற்றல் உத்தரவு வெளியிடப்பட்டது.

Sunday, 19 June 2016

மாவ்ட்டச் செயற்குழு

18.06.2016 அன்று மாவட்டச் செயற்குழு நடைபெற்றது.

நடந்து முடிந்த உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் அதன் முடிவுகள் குறித்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

நமது மாவட்டத்தில் நாம் பெற்ற வாக்குகள், நமது தோழர்களின் கடும் உழைப்பு  இதற்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நமது கூட்டணி அனமைப்புகளின் தலைவர்கள் மற்றும் தோழர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய உழைப்புக்கு உளமார்ந்த நன்றியை மாவட்டச்
செயற்குழு தெரிவித்தது.

ஆரோக்கியமான, பயனுள்ள் கருத்துக்களைத் தோழர்கள் தெரிவித்தனர்.

மாநில மாநாட்டுக்கு நமது மாவட்டத்துக்கு தரப்பட்டுள்ள  இலக்கை நிறைவேற்ற அவசர நடவடிக்கைகைகள் எடுப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

நமது இயக்கத்தின் பாரம்பரியம் காக்கப்படும் வகையில் வேலூரில் தமிழ் மாநில மாநட்டைச் சிறப்பாகவும், பயனுள்ளதாகவும், வெற்றிகரமாகவும், ஒற்றுமையாகவும், ஒரு மனதாகவும் நடத்த் வேண்டும் என்ற விருப்பத்தைத் தோழர்கள் தெரிவித்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.

மாவட்ட மாநாட்டை 31.08.2016க்குள் நடதி முடிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

மாற்றல் கொள்கை அமலாக்கத்தை விரைந்து முடித்திட வேண்டும்  என முடிவெடுக்கப்பட்டது.

நமது இயக்கத்தின் மாநில அலுவலகமாம் தோழர் ஜெகன் இல்லத்தில் பணியாற்றி மறைந்த தோழன் கார்த்தி குடும்ப நிவாரண நிதி குறித்த வேண்டுகோளுக்கு தோழர்களின் பங்களிப்பு நிறைவாக இருந்தது.

நமது மாநிலச் சங்கம்   சார்பாக வழங்கப்படவுள்ள நிவாரண நிதிக்க்கான நமது மாவட்டச் சங்கத்தின் பங்கை  விரைந்து அனுப்பிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.


போணஸ், மருத்துவத்திட்டம் போன்ற பிரச்னைகளுக்கு மத்திய சங்கம் விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என செயற்குழு வலியுறுத்தியது.

Saturday, 18 June 2016

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு


இந்தக் குறள் இன்றைய கால கட்டத்தில் மிக மிக பொருத்தமானது. இதன் பொருளைச் சரியாகப் புரிந்து, உணர்ந்து செயல்படுவது அவசியம்.


ஜூன் 18: விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதியும், தமிழக முன்னாள் அமைச்சருமான பி. கக்கன் பிறந்த தினம் இன்று
எளிமைக்கும் நேர்மைக்கும் இன்றுவரை உதாரணமாகச் சொல்லப்படுபவர்களில் ஒருவர் கக்கன். சில சமயங்களில் பட்டமும் பதவியும் 'வேண்டும், வேண்டும்' என்று அலைகிறவர்களுக்கு அது கிடைப்பதில்லை. 'வேண்டாம், வேண்டாம்' என்று அலறுகிறவர்களை அவை தேடி வரும் அப்படி ஒருவர் தான் கக்கன். ஹரிஜன மாநாடு ஒன்றில், "ஹரிஜன் ஒருவரை மந்திரியாக நியமிக்க வேண்டும்'' என்ற தீர்மானம் வந்தபோது, அதை இவர் எதிர்த்தார். "சாதி அடிப்படையில் பதவி கோருவது முறையல்ல'' என்று அப்போதே வலியுறுத்தியவர்.
அரசாங்க பணத்தில் வாழாமல், இவரது மனைவி ஆசிரியை வேலை பார்த்து குடும்பத்தை கவனித்து வந்தார். தனது தம்பிக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர், மனை ஒதுக்கீடு செய்து அளித்த அரசாணையைக் கிழித்தெறிந்தார். பதவிக் காலத்தில் எந்தப் பரிசுப் பொருளையும் யாரிடமிருந்தும் பெற்றதில்லை கக்கன்.

இவரது தம்பி தனது தகுதி, திறமையின் அடிப்படையில் போலீசில் வேலைக்கு சேர்ந்த போதிலும், தன் சிபாரிசினால் கிடைத்தது என்று பிறர் கருதுவார்கள் என்பதால், அதில் சேர வேண்டாம் என்று கண்டிப்பாக கூறிவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர், 10 ஆண்டுகள் மாநில முக்கியத் துறைகளின் அமைச்சர் என பொறுப்புகள் வகித்தபோதும் தனக்கென்று எதுவும் சம்பாதிக்காமல் நேர்மையின் வடிவமாகத் திகழ்ந்தவர்.

Friday, 17 June 2016

மாவட்ட்ச் செயற்குழு

நாள்
18.06.2016

இடம்
டெலிபோன்பவன் ஈரோடு

தலைமை
குமார்

ஆய்படு பொருள்


ஏழாவது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல்-ஆய்வு
மாநில மாநாடு
மாவட்ட மாநாடு
தோழர் கார்த்தி குடும்ப நிவாரண நிதி
மாற்றல் கொள்கை அமலாக்கம்

ஊழியர் பிரச்னைகள்
இன்ன பிற தலைமை அனுமதியுடன்

அனைவரும் வருக

வாழ்த்துக்களுடன்

பழனிவேலு

மாவட்டச் செயலர்

Wednesday, 15 June 2016

இராமாயணத்து அணில்கள்

சிறந்த செயல்பாட்டாளர்கள் என மதிப்பிட்டு சில அதிகாரிகளுக்கு 14.06.2016 அன்று
பாராட்டு வழங்கப்பட்டதாக அறிகிறோம்.

சிறப்பாக பணியாற்றுபவர்களைப் பாராட்டி ஊக்குவிப்பதற்க்காக இது போன்ற செயல்கள் நடைபெறுவது பாராட்டுக்குரியது.

பாராட்டிய நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள.

பாராட்டு பெற்றோருக்கு வாழ்த்துக்கள்.

பாராட்டு பெற்றவர்கள் அத் தகுதியைப் பெறுவதற்கு குறைந்த பட்சம் இராமாயணத்து அணில்களைப் போல் பலர் பணியாற்றியிருப்பார்கள்.


அப்படிப்பட்ட பலரை நமது மாவட்டச் சங்கம் மனதாரப் பாராட்டுகிறது.

Saturday, 4 June 2016

திருத்தங்கள்

டெலிகாம் மெக்கானிக் சுழல் மாற்றல் குறித்த பணி  தொடர்கிறது.

நிர்வாகம் கொடுத்த பட்டியலில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என 03.05.2016 அன்று கேட்டுள்ளோம்.

இப்பணியை சரியாகவும், சுமுகமாகவும் செய்து முடிப்போம்.