NFTECHQ

Pages

Pages

Pages

Pages

Wednesday, 6 April 2016

பெருமித்ம் தந்த

பெருந்துறை செயற்குழு

02.04.2016 அன்று  மாவட்டச் செயற்குழு
பெருந்துறை தொலைபேசி நிலையத்தில் மிக்ச் சிறப்பாக நடைபெற்றது.

அனைத்து நிர்வாகிகளும் கிளைச் செயலர்களும் முன்னணித் தோழர்களும் பங்கேற்றனர்.

செயற்குழுவை தோழர் யாசின் துவக்கி வைத்து உரையாற்றினார்.

TEPU  இயக்கத்தின் முன்னோடித் தலைவர்  தோழர் காசிராஜன், அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர் ஆனந்தராஜ், மாவட்டச் செயலர் தோழர் ஷாஜகான் SEWA BSNL  அமைப்பின் மாவட்டச் செயலர் தோழர் சதாசிவம், தோழர் மாலி, தோழர் செல்வராஜன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரையும் வெற்றிக்கான ஆலோசனைகளையும் வழங்கி உரையாற்றியது மிகுந்த நம்பிக்கை அளித்தது.

செயற்குழு முடிவுகள்

தேர்தல் செலவுக்கான நிதி பெறும் பணியை 10.04.2016க்குள் முடித்திட வேண்டும்.

மாநில மாநாட்டு நிதி வசூல் பணியையும் விரைந்து முடித்திட வேண்டும்.

பூத் கமிட்டிக்கான பொறுபாளர்கள் தங்கள் பணியை சிறப்புடன் செய்திட வேண்டும்.

ஊழியர்கள அனைவரையும் சந்தித்து NFTE இயக்கத்துக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கிட வேண்டும்.

கூட்டணி அமைப்புகளுடன் மனம் ஒன்றி இணைந்து பணியாற்றிட வேண்டும்.


நம்பிக்கை தந்திட்ட மாவட்டச் செயற்குழு

இந்த செயற்குழுவை சிறப்புடன் நடத்த உதவிட்ட பெருந்துறை கிளைச் செயலர் தோழர் மௌனகுருசாமி, கிருபாகரன், சம்பத் உள்ளிட்ட அனைத்துத் தோழர்களுக்கும் மாவட்டச் சங்கத்தின்  நண்றியும் பாராட்டுக்களும்.

No comments:

Post a Comment