NFTECHQ

Saturday, 29 June 2019



மாவட்டச் செயற்குழு
26.06.2019 அன்று மாவட்டச் செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.
தோழர் பாலசுப்ரமணியன் தலைமையேற்றார்.
மைசூர் மத்திய செயற்குழு முடிவுகளை மாவட்டச் செயலர் விளக்கினார்.
01.08.2019 அன்று கோபியில் தமிழகம் தழுவிய அளவில் தேர்தல் பிரச்சாரத் துவக்க விழாவைச் சிறப்பாக நடத்துவது, அதற்கான நிதி ஆதாரம் குறித்து நல்ல பல முடிவுகள் எடுக்கப்பட்டன.


அகவிலைப்படி உயர்வு

01.07.2019 முதல் அகவிலைப்படி 5.3 சதவிகிதம் உயரும். ஆக மொத்த அகவிலைப்படி   146.7 சதவிகிதமாக இருக்கும்.

Thursday, 27 June 2019


*****தகவலுக்காக******
தொலைதொடர்புத்துறை அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தெரிவித்த தகவல்

31.05.2019 அன்று BSNL நிறுவனத்தில்
1,17,305 ஊழியர்களும்
46,597   அதிகாரிகளும்
என பணியில் உள்ளவர்களின் எண்ணிக்கை
1,63, 902 என தகவல் அளித்துள்ளார்.


60 வயது வரை பணி

BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதான் 60 என்பதை 58 ஆகக் குறைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவையின் செயலாளர் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.
2000 ஆம் ஆண்டில் செப்டம்பர் போராட்டத்தில் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையைத் தகர்க்கும் முயற்சிகள் வெற்றி பெற வாய்ப்பில்லை. அந்த உடன்பாட்டைத் தொடர்ந்து  அமல்படுத்த சட்ட ரீதியான அனைத்து முயற்சிகளையும் ந்மது சங்கம் மேற்கொண்டு ஊழியர் நலன்களைக் பாதுகாக்கும்.

Monday, 10 June 2019

சாத்தியம் என்று சொல்லுங்கள்

உங்கள் லட்சியத்தை வெளிப்படையாக எழுதிவைப்பது முக்கியமானது. நீங்கள் யாராக இருந்தாலும் சரி. உங்கள் லட்சியத் திட்டத்தை வெளிப்படையாக எழுதிவையுங்கள். அதை உரக்கப் படியுங்கள். மன உறுதிப்பாட்டுடன் ஒருநாளைக்கு இரண்டு முறையாவது படியுங்கள். எதை மன உறுதியுடன் பேசுகிறீர்களோ... அது உங்களை நோக்கி வருகிறதா என்று பாருங்கள்.
இதை உரக்க வாசியுங்கள்:
"மற்றவர்கள் செய்யாத ஒன்றை நான் இன்று செய்வேன். அதனால் பிறருக்குக் கிடைக்காத நாளை எனக்குக் கிடைக்கும்!"
மீண்டும் வாசியுங்கள்:
"மற்றவர்கள் செய்யாத ஒன்றை நான் இன்று செய்வேன். அதனால் பிறருக்குக் கிடைக்காத நாளை எனக்குக் கிடைக்கும்!"
மீண்டும் வாசியுங்கள்:
"மற்றவர்கள் செய்யாத ஒன்றை நான் இன்று செய்வேன். அதனால் பிறருக்குக் கிடைக்காத நாளை எனக்குக் கிடைக்கும்!"
இது மிகவும் எளிமையானது. உங்களால் முடியும் என்று நீங்கள் சொன்னீர்களானால்... உங்களால் முடியும். உங்களால் முடியாது என்று சொன்னால் முடியாது. உங்கள் உதடுகளிலிருந்து வரும் எல்லா வார்த்தைகளும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
எந்த எதிர்மறையான எண்ணமும் உங்களைச் சிறையில் முடக்கும். இன்னொருவருக்குச் சாத்தியமாகும் ஒன்று எனக்கும் சாத்தியம்தான். நீங்கள்தான் அந்தச் சாத்தியம்!
சிகரத்தை எட்டுங்கள். ஆழ உழுதுகொண்டே செல்லுங்கள். தொடர்ந்து முன்னேறுங்கள். அது சாத்தியம் என்று சொல்லுங்கள்!
"வேதனை மலரட்டும் சாதனை) என்னும் நூலிலிருந்து

Wednesday, 5 June 2019


இனிய ரமலான் வாழ்த்துக்கள்
அன்பு, இரக்கம், ஈகை, கருணை இவற்றை அடிப்படையாகக் கொண்டு வாழும் இஸ்லாமிய சகோதர ஸ்கோதரிகளுக்கு உள்ளம் நிறைந்த இனிய ரமலன்ன் வாழ்த்துக்கள்.

Tuesday, 4 June 2019


தேர்தல்
BSNL நிறுவனத்தில் ஊழியர்களின் தொழிறங்கங்களின்  அங்கீகாரத் தேர்தல் 16.09.2019 அன்று நடைபெறும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
வாக்குகள் எண்ணிக்கை 18.09.2019 அன்று நடைபெறும்.

அரசின் நிலை,
அரசியல் நிலை,
நிறுவனத்தின் நிலை என
அனைத்தையும் கணக்கில் கொண்டு இத் தேர்தலை அணுக வேண்டிய தருணம் இது.

Friday, 31 May 2019


வாழிய பல்லாண்டு
31.05.2019  அன்று பணி நிறைவு பெறும்

1.தோழர் P.D.ஜெயயக்குமரன் SDE ஈரோடு
2.தோழர் R மோகன்ராஜ் SDE கோபி
3. தோழர்.K.ஆறுமுகம் JE  ஈரோடு
4.தோழர் M.ஆறுமுகம் JE  மூலனூர்
5.தோழர் M.பழமனிசாமி JE   D.G. புதூர்
6.தோழர் G.R.இந்திரா OS ஈரோடு
7.தோழர் K.குமாரசாமி OS ஈரோடு
8. தோழர் C.மணி OS சென்னிமலை
9. தோழர் V. முரளி OS ஈரோடு
10.தோழர் M. அகஸ்தீஸ்வரன் TT தராபுரம்
11.தோழர் H அஸ்கரஅலி TT ஈரோடு
12.தோழர் C.பன்னாரி TT  பவானிசாகர்
13.தோழர் M. பர்ணபாஸ் TT காங்கயம்
14.தோழர் G. கோவிந்தராஜு TT சித்தோடு
15.தோழர் S. மணி  TT தராபுரம்
16.தோழர் P மனோகரன் மலையபாளையம்
17.தோழர் P. மூர்த்தி  சத்தி
18.தோழர் D.சம்பத் டிரைவர் கோபி
19. தோழர் P செள்ந்திரராஜன் TT தராபுரம்
20.தோழர் G.K திருவேங்கடசாமி TT கோபி
ஆகியோர்
நலமுடனும்
 மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Friday, 17 May 2019


மே 17
தோழர் ஜெகன் பிறந்த தினம்
தோழர் ஜெகன்.
தமிழகத்தில் தபால் தந்தி இயக்கத்தில் மட்டுமின்றி பல்வெறு அமைப்புகளில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்ட தன்னலமற்ற தியாகத் தலைவர் தோழர் ஜெகன்.
தனது அபாரத் திறமை, அளப்பரிய ஆற்றல் அறிவார்ந்த பேச்சுத்திறன் என பன்முகத்தன்மை கொண்ட ஒரு தோழனாய் வாழ்ந்தவர்.
அவரது வாழ்விலிருந்து கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம்.

Wednesday, 1 May 2019


மே தின வாழ்த்துக்கள்
உழைப்பாளிகள் வாழ்வில் ஒரு உன்னத விடியலை உருவாக்கிய தினம் மே 1 .
சிலரின் உயிர்த்தியாகமும்,
பலரின் உதிரத் தியாகமும் உழைப்பு, ஓய்வு, உறக்கம் இவை ஒவ்வொம்றூக்கும் எட்டு மணி நேரம் என வரையறுத்துத் தந்தன.
தனியார்மயம் தலைதூக்கிய பின்னர் எட்டுமணி நேர வேலை என்பது காலாவதியாகி விட்டது.
12 மணி நேரம், 14 மணி நேரம் என உழைப்பு நேரம் மாறிவிட்டது.
இத்தகைய நிலைகள் மாற இன்னும் போராட வேண்டிய நிலை உள்ளது.
வேலையின்மை ஒரு புறம் சுரண்டல் மறுபுறம் என சமுதாய அவலம் தொடர்கிறது.
மே தினத் தியாகிகளின் வழியில் சமரசம் இன்றி போராடுவதே மேதினத் தியாகிகளுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள்.


வாழிய பல்லாண்டு
30.04.2098  அன்று பணி நிறைவு பெற்ற
1.தோழியர் V கெளரி SDE ஈரோடு
2.தோழர் S.மதியழகன் SDE  ஈரோடு
3.தோழர் D.செந்தில்குமார் SDE  காங்கயம்
4.தோழர் R.சந்திரமேளளீஸ்வரன் OS ஈரோடு
5.தோழர் P.ஜெயபால் OS ஈரோடு
6.தோழர் P.காசிராஜன் OS ஈரோடு
7.தோழர் M. நாச்சிமுத்து OS ஈரோடு
8. தோழர்.C.K.பழனிசாமி OS ஈரோடு
9.தோழர் G. ரவிச்சந்திரன் OS ஈரோடு
10.தோழியர் G.உமாமகேஸ்வரி OS ஈரோடு  
11. தோழர் K.வடிவேல் OS கோபி
12.தோழர் A. அயூப்கான் TT N.G.பாளையம்
13.தோழர் E.V.. ராஜேந்திரன் TT ஈரோடு
14.தோழர் A வீரப்பன் TT ஈரோடு
ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Monday, 8 April 2019


வாழ்வு தந்த தலைவன்

பணியில் இருப்போருக்கும்,
பணி ஓய்வு பெற்றோருக்கும்
பாதுகாப்பு தந்திட்ட தலைவர்.

தலைவருக்கென ஒரு இலக்கணத்தை வகுத்திட்ட தலைவர்.

எப்போது, எப்படி போராட்டத்தை துவக்க வேண்டும் என்ற பாதையைத் தேர்வு செய்யும் ஆற்றல் மிக்க தலைவர்.

எப்போது, எப்படி போராட்டத்தை முடிக்க வேண்டும் என்பதையும் துல்லியமாகக் கணக்கிடும் திறமை படைத்த தலைவர்.

ஒளிவுமறைவு இல்லாமல் யதார்த்தமாக கருத்துக்களைத் தெரிவிக்கும் தனிப்பட்ட  திறன் படைத்த தலைவர்.

சாதாரண பிரச்னை முதல் கடினமான பிரச்னை வரை அனைத்திற்கும் தீர்வு காணும் ஆற்றல் இந்தத் தலைவனின் தனிச் சிறப்பு.

அரும்பெரும் குணங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்ட உன்னதத் தலைவன் தோழர் குப்தாவுக்கு இன்று 98ஆவது பிறந்த தினம்.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தோழ்ர் குப்தா தேவைப்படுகிறார். தேவைப்படுவார். இதுவே அவரது ஆளுமை.  


Monday, 1 April 2019


வாழிய பல்லாண்டு
31.03.2019  அன்று பணி நிறைவு பெற்ற
1.திருமதி ப்ளோரா லில்லி ஆரோக்கியமேரி CAO
2.தோழியர் S.ஜமுனா  OS ஈரோடு
3.தோழியர் P.ஜோதிமணி  OS ஈரோடு
4.தோழர் V.சுந்தரராஜன்  OS ஈரோடு
5.திரு J.மேகராஜன் JTO  ஈரோடு
6.தோழர் P. ராமன் OS  காங்கயம்
7.தோழியர் D.சரஸ்வதி TT சத்தி
8.தோழர் சையத் ரபிமொகதீன் TT தாராபுரம்
9.தோழர் A.மதிவாணன் TT ஊத்துக்குளி
10.தோழர் A. செல்வராஜ் TT நம்பியூர்
11.தோழர் Y. சைமன் ATT பெருந்துறை
ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.



மாவட்டச் செயற்குழு
அன்பார்ந்த தோழர்களே

வணக்கம். நமது மாவ்ட்டச் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் வரும் 03.04.2019 ப்தன் கிழமை காலை 10 மணிக்கு ஈரோடு டெலிபோன்பவன் ஆண்கள் ஓய்வறையில் மாவட்டத் தலைவர் தோழர்  ப.பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெறும். கிளைச்செயலர்களும் மாவட்டச் சங்க நிர்வாகிகளும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்


ஆய்படுபொருள்
2019- பிப்ரவரி மூன்று நாட்கள் வேலைநிறுத்தம்-ஆய்வு
மாவட்ட அளவிலான பிரச்னைகள்
இன்னபிற தலைவர் அனுமதியுடன்

தோழமை  வாழ்த்துக்களுடன்

N.பழனிவேலு
மாவட்டச் செயலர்

Thursday, 28 March 2019


கதவைத் தட்டும் பேரழிவு: கடலை கொல்லும் மனிதர்கள்!

கடலுக்கு ஏற்படும் அபாயம் மொத்த பூமிக்கும் ஏற்படும் அபாயம்!

எல்லையே இல்லாத ஆச்சரியங்களால் கடல்கள் நிறைந்துள்ளன. நம் பூமி 70% கடலால் சூழப்பட்டிருந்தாலும், மிகக் குறைவாகவே ஆராயப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் நம் கற்பனைக்கும் எட்டாத உயிரினங்களும் பல விந்தைகளும் புதைந்துள்ளன. இதில் என்ன நடக்கிறது என்பதையும் அவை சந்திக்கும் பிரச்சினைகளையும் தெரியப்படுத்த இதைவிட ஒரு முக்கியத் தருணம் வேறு இருக்க முடியாது.”
- இவ்வாறு டேவிட் அட்டன்பரோவின் வசீகரக் குரலில் தொடங்கும் பிபிசியின் தி ப்ளூ பிளானெட் – 2 (The Blue Planet : 2) ஆவணப்படம் கடந்த வருடம் பெரிதாகப் பொதுவெளிக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் இயங்கிவந்த முன்னணித் திரை விநியோகஸ்தர்களின் உதவியுடன் பல்வேறு நகரங்களில் திரையிடப்பட்டது. 1,406 நாட்கள் பயணமும் 6,000 மணி நேரப் படப்பிடிப்பும் ஏழு பகுதிகளைக் கொண்ட தொடராகப் பகுக்கப்பட்டிருந்தது. சென்னையிலும் திரையிடப்பட்ட அந்தப் படத்தினைப் பார்த்தபோது மாயாஜால உலகுக்குள் சென்றுவந்ததைப் போன்ற ஓர் உணர்வு. ஆழ்கடல் அவ்வளவு அற்புதங்களைக் கொண்டதா என்று வியப்பாக இருந்தது. இயற்கை இவ்வளவு ஆச்சரியங்களைத் தன்னுள் வைத்திருப்பதைப் பிரமித்துப் பார்த்துக்கொண்டிருந்த ஒவ்வொருவரும், தாம் செய்துவரும் சின்னச் சின்னத் தவறுகளால் அந்த அதிசயங்கள் அதிவேகமாக அழிந்துவருவதையும் பார்த்தனர்.
அதீத மீன் பிடித்தல், கட்டுப்பாடில்லாத வேட்டை, கொடூரமான அளவுகளில் கொட்டப்படும் குப்பைகள் என்று பொருளாதாரச் சுரண்டல் மற்றும் அதைச் சார்ந்த விளைவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது கடல்.

மேற்குறிப்பிட்ட ஆவணப்படத்தின் ஒரு காட்சி இது. ஒரு தாய் திமிங்கலம் தன் இறந்த குட்டியின் உடலைப் பிரிய மனமில்லாமல் பல நாட்களாகச் சுமந்துகொண்டு அலைந்துவருகிறது. அதைப் பார்க்கும்போது அவ்வளவு கனமாக இருந்தது. அந்த குட்டியின் இறப்புக்குக் காரணம், திமிங்கலத்தின் தாய்ப்பாலிலிருந்த விஷம்! கடலில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக், குப்பையால் நீரின் நச்சுத்தன்மை அதிகமானதால் தாய்ப்பால் விஷமாக மாறிவிட்டதே குட்டியின் இறப்புக்குக் காரணம் என்றது பத்திரிகைச் செய்தி.
மிகப் பெரிய அளவில் நிகழ்ந்துவரும் கடல் உயிரின உயிரிழப்புகளின் மிகச் சிறிய வெளிப்பாடு இது. இந்தச் சங்கிலி கடல்வாழ் உயிர்களை மட்டுமல்ல; அதனைச் சார்ந்து வாழும் துருவக் கரடிகள், பெங்குயின்கள், நீர் நாய்கள், கடற்பறவைகள் போன்ற பல்வேறு விலங்குக் குழுக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை மிகப்பெரிய அளவில் துடைத்தழித்திருக்கிறது.
கடல் உயிரிகளின் அழிவால் உணவு கிடைக்காமல் ரஷ்யாவின் ஜெம்லியா தீவுக்குள் ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் புகுந்ததும், அதை அவசர நிலையாக அந்நாட்டு அரசு அறிவித்ததும், பொருளாதாரத்துக்காகச் சுரண்டப்பட்ட கடல் அழிவின் நேரடி சாட்சியங்கள். மனிதச் செயல்பாடுகளின் விளைவால் கடல் அழிக்கப்படுகிறது என்பதை நிறுவுவதற்கான அறிவியல் வாதங்களைவிட ஆயிரம் மடங்கு அதிக வீரியம் கொண்ட ஆதாரங்கள் அவை.
இது அவ்வப்போது நிகழ்வதுதான் என்ற வழக்கமான வாதத்தை முன்வைத்துத் தப்பிக்க முடியாது. ஏனெனில் பனிக்கரடிகளின் இந்தப் படையெடுப்பு குறித்து அந்நகராட்சித் தலைவர் ஜிகன்ஷா முசின் கூறுகையில், 1983ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இப்படி ஒரே நேரத்தில் அதிக அளவிலான பனிக்கரடிகள் ஊருக்குள் புகுந்ததை தான் கண்டதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.
காட்டுக்குப் புலி, கடலுக்குத் திமிங்கிலம்
நாம் கற்பனை செய்துகூடப் பார்க்கவியலாத வாழ்வியல் அற்புதங்களைக் கொண்டிருக்கிறது கடல். அந்தக் கடலை ஆள்பவை திமிங்கலங்கள். எப்படி ஒரு புலியின் இறப்பு காட்டின் ஒரு பகுதியை அழிவுக்கு வழிவகுக்குமோ அப்படியே ஒரு திமிங்கலத்தின் இறப்பும் கடலுக்கு. சமீப காலங்களில் வரலாற்றில் என்றும் பதிவு செய்யப்படாத அளவில் திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்குகின்றன. அவற்றால் கடலில் வாழ முடியவில்லை. அவற்றின் வாழ்விடத்தை நாம் அப்படி அசிங்கப்படுத்தியிருக்கிறோம். அவ்வளவு சீர்குலைத்திருக்கிறோம்.
திமிங்கலங்கள் இப்படிக் கூட்டம் கூட்டமாக இறந்து போவதற்கு பருவநிலை மாற்றம்தான் காரணம். இதை நாம் நேரடியாகப் புரிந்துகொள்ள முடியாது. கடலின் வெப்பநிலை உயர்வு, புவி வெப்பமயமாதலால் புவியில் ஏற்படும் இயற்கைச் சீற்றங்கள் கடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள், குப்பைகளாலும் கழிவுகளாலும் கடலின் நீர்த்தன்மையில் ஏற்படும் மாற்றம் ஆகியவைதான் திமிங்கலங்களின் இறப்புக்குக் காரணம். அவை ஒலி உணர்வின் வழி (Eco-location) வழிநடத்தப்படுபவை. சிறிய மாற்றங்கள்கூட அவற்றின் பாதைகளிலும் அன்றாடச் செயல்பாடுகளிலும் பெரிய தாக்கத்தை உண்டாக்கும். அப்படிப் பாதையிழந்து உணர்விழந்து தவிக்கும் திமிங்கலங்கள் கடைசியில் இறந்துவிடுகின்றன.” - இதுதான் கடல்சார் விஞ்ஞானிகளான டிபானி சுடாரியா, கில் பிரௌலிக், ஜே.கே. பேட்டர்சன் எட்வர்ட் (Dipani Sutaria, Gill Braulik, J K Patterson Edward) ஆகியோர் வெவ்வேறு தளங்களில் வெளியிட்ட ஆய்வுகளின் சுருக்கம்.
அத்தனை அழிவுகளையும் பொருளாதார வளர்ச்சி எனும் பூதத்தின் வாயில் நின்றுகொண்டு இந்த மனிதகுலம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. அந்த பூதம் மனிதகுலத்தையும் விழுங்க ஆரம்பித்துவிட்டது.
வேடிக்கை பார்க்கத்தான் ஆள் இல்லை!
நன்றி  நரேஷ்