NFTECHQ

Monday, 2 July 2018


மாநிலச்செயலர்கள் கூட்டம்
NFTE சங்க மாநிலச்செயலர்கள் கூட்டம் 29.06.2018 மற்றும் 30.06.2018 ஆகிய தேதிகளில் அகில இந்தியத்தலைவர் தோழர்.இஸ்லாம் அவர்களின் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. 

கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

3வது ஊதியத்திருத்தக்குழுவில் NFTE சார்பாகத் தலைவர் இஸ்லாம் அகமது அவர்களும் பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர்சிங் அவர்களும்
உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள். மேலும் ஊதியக்குழுவில் NFTE சங்கத்திற்கு கூடுதல் உறுப்பினர்களை நிர்வாகத்திடம் கோருவது.

அடுத்த தேசிய செயற்குழுக்கூட்டம் ஹரித்துவாரில் அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறும்.

தேங்கிக்கிடக்கும் எண்ணற்ற ஊழியர் பிரச்சினைகள் தீர்விற்காக பலகட்டப்போராட்டங்களை நடத்துவது.

சம்பளத்தேதியை மாற்றி உத்திரவிட்ட BSNL நிர்வாகத்தின் மோசமான முடிவினை மாநிலச்செயலர்கள் கூட்டம் வன்மையாக கண்டிப்பதோடு அந்த உத்திரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது.

ஊதியத்திருத்தம் சம்பந்தமாக அமைக்கப்பட்ட நமது சங்கத்தின் ஊதியக்குழு பரிசீலனைக்கூட்டம் விரைவில் நடத்தப்படும். ஊதியக்குழு சம்பந்தமாக அனைத்து சங்கங்களுடனும் விவாதங்கள் நடத்தப்படும்.

Sunday, 1 July 2018


இயக்கத்தை இயக்கும் இதயங்கள்

30.06.2018 அன்று தோழியர் கமலம் ATT அவர்களுக்கு அலுவலகத்தில் நடைபெற்ற பணிநிறைவு பாராட்டு விழாவில் தோழர்கள் மாலி, செல்வராஜன் அவர்களுடன் நானும் பங்கேற்றேன். அனைவரும் பாராட்ப்டுரை நல்கியபின் தோழியர் கமலம் ஆற்றிய ஏற்புரை இது.

"எனது கணவர் நோயுற்றபோதும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்த பின்பும் தோழர்கள் மாலி, செல்வராஜன், ராஜமாணிக்கம் ஆகியோர் மிகவும் உதவிகரமாக இருந்தனர். எனக்கு ஆறுதல் கூறினர். அவர்கள் முயற்சியால் எனக்கு வேலையும் கிடைத்தது. அன்று முதல் இன்று வரை எனக்கு எல்லாமே தொழிற்சங்கம்தான். தொழிற்சங்கம்தான் எனக்கு எல்லாமுமாக இருந்தது. தொழிற்சங்கம் இல்லாதிருந்தால் எனக்கு இந்த வாழ்வு இல்லை. சந்தா, நன்கொடை ஆகியபற்றை மனநிறைவுடன் கொடுத்துவிடுவேன். எந்த போராட்டமாக இருந்தாலும் பங்கேற்றுள்ளேன். வேலைநிறுத்தம் செய்தால் சம்பளம் கிடைக்காது என்று சிலர் சொன்னார்கள். சமபளத்தைவிட தொழிற்சங்கம் தான் சொல்வதுதான் பெரிது என்பதாலும், இந்த சம்பளம் வாங்குவத்ற்கே தொழிற்சங்கம்தானே காரணம்  என்பதாலும்
வேலைந்றுத்தத்தில் பங்கேற்றேன். எல்லோருக்கும் நன்றி."

தோழியர் கமலம் போன்றவர்களின் இதயங்கள் கொண்டவர்களால்தான் இன்னமும் இந்த இயக்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

Saturday, 30 June 2018


வாழிய பல்லாண்டு

30.06.2018 அன்று பணி நிறைவு பெறும்

1.திரு T.R.ஆறுமுகம் DGM (CFA)
2.திரு இக்னேசியஸ் SDE (Electricals)
3.தோழியர் P. கமலம் ATT ஈரோடு
4.தோழியர் S. வசந்தகுமாரி TT கள்ளிப்பட்டி
5.தோழர் V. ராமச்சந்திரன் OS ஈரோடு
6.தோழர் D.R.ராகவேந்திரன் AOS ஈரோடு
7.தோழர் R.அண்ணாதுரை OS ஈரோடு
8.தோழர் R.பரசுராமன் TT ஈரோடு
9.தோழர் C. சுப்ரமணியம் TT பாசூர்
10.தோழர் R.சொக்கலிங்கம் TT  கவிந்தப்பாடி
11.தோழர் N. சுப்ரமணியன் TT வெள்ளகொவில்
12.தோழர் P. செளந்தரராஜன் TT அவல்பூந்துறை
13.தோழர் J. செளந்தரராஜன் TT பவானி
14தோழர் M ரத்னவேல் TT. சென்னிமலை
15.தோழர் M.ஜெகனாதன் TT மூலனூர்

ஆகியோர் நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.


விலைவாசிப்படி
01.07.2018 முதல் 0.8 சதவிகிதம் விலைவாசிப்படி உயரும்.

ஆக மொயத்த விலைவாசிப்படி 01.07.2018 முதல் 128 சதவிகிதமாக இருக்கும்.

Friday, 29 June 2018


பிரதமரின் வெளிநாட்டு

பயணச் செலவு

பதவியேற்ற நான்காண்டுகளில் இதுவரை பிரதமர் மோடி 52 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளதாகவும், இதற்காக 355.30 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.
பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து தகவல் அறிக்கை அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சமூக ஆர்வலர் பீமப்பா காதத், பல்வேறு கேள்விகளுடன் பிரதமர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். காதத்தின் கேள்விகளுக்குப் பிரதமர் அலுவலகம் அளித்த பதில்களை அவர் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திடம் பகிர்ந்துள்ளார்.
அதில், கடந்த 48 மாதங்களில் பிரதமர் மோடி, 41 அரசு முறை பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் 52 நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். ஜெர்மனி, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு 2015ஆம் ஆண்டு சென்ற 9 நாட்கள் பயணம்தான் மோடி சென்றதிலேயே அதிக செலவுகளைக் கொண்ட பயணமாக அமைந்துள்ளது. இதற்காக 31.25 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மிகக் குறைந்த செலவாக 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் பூடான் பயணத்தின்போது ரூ.2.45 கோடி மட்டும் செலவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 165 நாட்கள் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களில் மோடி இருந்துள்ளார். இதற்காக 355.30 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகள் பயணம் மட்டுமே தகவல் அறியும் உரிமை சட்டப்படி கிடைத்துள்ளது. மோடியின் உள்நாட்டுச் சுற்றுப்பயணத்துக்கு எவ்வளவு செலவானது என்ற விவரத்தைப் பிரதமர் அலுவலகம் தெரிவிக்கவில்லை.



இருதரப்பு ஊதியக்குழு
3வது ஊதியமாற்றப்பேச்சுவார்த்தைக்காக 10 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது. 
நிர்வாகத்தரப்பில் 5 உறுப்பினர்களும்
அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் சார்பாக 
5
உறுப்பினர்களும் குழுவில் இடம் பெறுவார்கள். 
அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தரப்பில் 
BSNLEU
சார்பாக 3 உறுப்பினர்களும்
NFTE
சார்பாக 2 உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள்.
இதற்காக குழு உறுப்பினர்களின் பெயர்களைத் தெரிவிக்குமாறு NFTE மற்றும் BSNLEU சங்கங்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

ஊதியமாற்றப் பேச்சுவார்த்தை என்ற மிகப்பெரிய நிகழ்வில்…
ஊழியர்கள் தரப்பில் வெறும் 5 உறுப்பினர்கள் மட்டுமே 
என்பது சரியல்ல்ல.
முதலாம் ஊதியத்திருத்தத்தில் தோழர்.குப்தா
அன்று இருந்த அனைத்து 9 தொழிற்சங்கங்களையும் பங்கேற்கச்செய்தார்.
இரண்டாவது ஊதியத்திருத்தத்தில்
BSNLEU
சார்பாக 11 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மூன்றாவது ஊதியத்திருத்தம் DOTல் இருந்து BSNLலில்
பணியமர்ந்த ஊழியர்களுக்கு கடைசி ஊதியத்திருத்தமாகும்.
ஊழியர்களுக்கு சம்பளத்தில் பல்வேறு குறைகள் உள்ளன.
குறைகளை விட பல்வேறு குளறுபடிகளும் உள்ளன.
இந்நிலையில் 5 உறுப்பினர்களைக் கொண்ட
சிறிய குழு பெருமளவில் விவாதங்களை
முன்வைக்க இயலாத சூழல் உருவாகும்.
ஊதியக்குழுவில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் பங்கேற்பு
என்ற நிலையை விட
அனைத்து சங்கங்கள் பங்கேற்பு என்ற நிலையே
தற்போதுள்ள சூழலில் ஊழியர்களுக்கு கூடுதல் பலனளிக்கும்.

மேலும் DPE வாழிகாட்டுதலில் கொடுக்கும் திறன் (AFFORDABILITY) என்ற நிபந்தனையை நீக்காமல் பேச்சுவார்த்தையால் என்ன பலன் இருக்கும் என்பதும் கேள்விக்குரிய ஒன்றாகவே இருக்கும்.

எனினும் ஒரு துவக்கம் நிகழ்கிறது என்பது மகிழ்ச்சி தருகிறது

Wednesday, 27 June 2018

தொடரும் போராட்டங்கள்
26.06.2018 அன்று டெல்லியில் நடைபெற்ற
BSNL
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவுகள்.

11.07.2018 அன்று கார்ப்பரேட் அலுவலகத்தில்,
மாநிலத்தலைநகர்களில்,
மற்றும் மாவட்டத்தலைநகரங்களில்
ஆர்ப்பாட்டம்.

25.07.2018 முதல்
27.07.2018 வரை
தலைநகர் டெல்லியில்
மாநிலத்தலைநகரங்களில்
மாவட்டத்தலைநகரங்களில்
தொடர் உண்ணாவிரதம்

கோரிக்கைகள்
தொலைத்தொடர்பு அமைச்சர் அவர்களே…
1.ஊதிய உயர்வு
2.
ஓய்வூதிய உயர்வு
3.ஓய்வூதியப்பங்களிப்பு..
4.BSNL
க்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு என
24.02.2018
அன்று அனைத்து சங்கங்களிடம்
அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்.