NFTECHQ

Thursday, 5 October 2017

அன்பான வேண்டுகோள்
சங்கங்கள் இணைந்து போராட்ட முடிவுகளை எடுத்துள்ளன.

16.10.2017 அன்று ஆர்ப்பாட்டம்.
எனத் துவங்கி
12.12.2017 மற்றும் 13.12.2017ல் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இடையில் சில இயக்கங்க்களைத் தவிர்த்து வேலைநிறுத்தத்தை முன்கூட்டியே  (அக்டோபர் இறுதியில்)  திட்டமிட்டிருக்கலாம்.
காலவிரயத்தைக் குறைக்கலாம்.


இது நமது அன்பான வேண்டுகோள்.
சங்கமித்த சங்கங்கள்
04.10.2017 அன்று NFTE BSNL சங்க அலுவலகத்தில்
NFTE,
BSNLEU, AIBSNLEA,
SNEA,
FNTO,
SEWA BSNL, AIGETOA,
BSNL MS,
BSNL OA,
ATM &
TOA BSNL
அமைப்புகளின் தலைவர்கள் கூடி கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்தனர்.
BSNL  நிறுவனத்தில் உள்ள அனைத்து சங்கங்களும்
இணைந்து  
"All Unions and Associations of BSNL" என்ற பெயரில் செய்ல்பட முடிவெடுக்கப்பட்டது.
மூன்றாவது ஊதிய மாற்றம் பெற,
இரண்டாவது ஊதிய மாற்றத்தில் விடுபட்ட நேரடி ஊழியர்களின் ஓய்வூதியப் பிரச்னைக்குத்தீர்வு காண,
தனி டவர் அமைப்பைத் தடுத்திட
போராடுவது என முடிவெடுக்கப்பட்டது.
நிர்வாகத்துக்கும், அரசுக்கும் கொடுக்கும் போராட்ட அறிவிப்பில் அனைத்து அமைப்புகளின் பொதுச்செயலர்களும் கையெழுத்திடுவதென முடிவெடுக்கப்பட்டது.
போராட்டத் திட்டங்கள்
*16.10.2017 அன்று ஆர்ப்பாட்டம்.
*15.11.2017 அன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை மனு அளிப்பது.
*16.11.2017 அன்று மனிதச் சங்கிலிப் போராட்டம்
*12.12.2017 மற்றும் 13.12.2017ல் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம்
*சுமுகமான தீர்வு ஏற்படாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம்.
நல்ல முயற்சி
விடுபட்ட பிற சங்கங்களையும் இணைத்து ஒற்றுமையை வலுப்படுத்துவோம்.
ஒற்றுமையே நம் பலமும் ஆயுதமும்.
போராடுவோம்

வெல்வோம். 

எதிர்காலத் தலைவர்கள்

ஓர் உற்பத்தி நிறுவனம் அல்லது சேவை நிறுவனம், தனது வளர்ச்சிக்காகத் தரத்தினை உறுதி செய்தல், அதனை இடைவிடாது மேம்படுத்துதல், தனது சேவையை - உற்பத்தியை விரிவாக்குதல், சந்தையில் போட்டி மற்றும் அதனை சமாளிக்கும் திட்டங்கள், ஊழியர்களின் நலன், அவர்களுக்கு பயிற்சியளித்தல், லாபம் ஈட்டுதல், இவை தொடர்பான அடுத்த சில ஆண்டுகளுக்கான திட்டங்கள் போன்றவற்றை அந்நிறுவனங்களின் உயர்நிலை தலைவர்கள் மூலமாக திட்டமிட்டுச் செயல்படுத்தும் .
இன்னொருபுறம், களத்தில் - உற்பத்திக்கூடத்தில், அந்தப் பணிகளை, பொருள்களை உருவாக்குவது, சேவையை வாடிக்கையாளர்களுக்குத் தருவது எனக் கடைசி மட்ட ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் செயல்படுத்துவர்.
இவ்விரண்டு பெரும் பிரிவுகளுக்கு இடையில் ஒரு மிக முக்கியமான இணைப்புச் சங்கிலியாக இரண்டாம் கட்ட நிர்வாகம் செயல்படும்; இந்த இரண்டாம் கட்ட நிர்வாகம் என்பது மிக மிக முக்கிய அம்சம் ஆகும்.
எந்த ஒரு நல்ல நிறுவனமும், தனது வளர்ச்சியின் அங்கமாக, இந்த இரண்டாம் கட்ட அதிகாரிகளை, அடுத்த கட்டதுக்குத் தயார் படுத்தும்.
சில நிறுவனங்களில்- 'எதிர்காலத் தலைவர்கள்' என ஒவ்வொரு துறையிலும் சிலரைக் கண்டெடுத்து சவாலான பணிகளில் ஈடுபடுத்துவது, முக்கிய பேச்சு வார்தைகளில், திட்டங்களில் இணைத்துக் கொள்ளுவது என, ஒரு செயல் திட்டத்தோடு, அவர்களது திறமையை வளர்ப்பார்கள்
அவர்களை அதிக பொறுப்புக்களை ஏற்கவும், எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் மாற்றங்களுக்கும் - போட்டிகளுக்கும் ஈடு கொடுப்பவர்களாகவும் அருகில் இருந்து பயிற்றுவித்து, அடுத்த கட்ட வளர்ச்சிக்கு, தலைமை பொறுப்புக்கு தயார் செய்வர்.
இத்தகைய திறமைசாலிகள் - ஊக்கப்படுத்தப்படும்போது, நிறுவனத்தின் எதிர்காலம் உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு செய்யத் தவறினால், ஒரு நிறுவனம், தனது எதிர்கால திட்டங்களை சரிவர செயல்படுத்த முடியாது, உற்பத்தி வீழ்ச்சி - தரம் குறைவு படுதல் - நஷ்டம் - வாடிக்கையாளர் அதிருப்தி போன்றவை ஏற்படும்
மேலும், இவற்றைவிட முக்கியமாக, மூப்பு - மரணம் - பணி ஓய்வு போன்றவற்றின் காரணமாக அந்நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம் விலகும்போது - வெற்றிடம் ஏற்படாத வண்ணம் இத்தகைய இரண்டாம் கட்டத் தலைவர்கள் - எதிர்காலத் தலைவர்கள் - அந்த இடத்தை நிரப்புவது உறுதி செய்யப்படுகிறது.
இந்த இரண்டாம் கட்ட தலைமை - 'எதிர்காலத் தலைவர்கள்' - என்பது, தொழில் நிறுவனங்களில் மட்டுமல்ல - அரசியல் கட்சிகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது
லாப நோக்கோடு செயல்படும் தொழில் நிறுவனத்தையும், மக்கள் தொண்டு, அரசு நிர்வாகம் என வேறு தளத்தில் செயல்பட வேண்டிய அரசியல் கட்சிகளையும் ஒப்பீடு செய்வது தவறல்ல.
ஓர் அரசியல் கட்சியின் தலைமை, கொள்கைகளை வகுப்பது - அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கத் திட்டங்களை வகுப்பது, தேர்தலில் போட்டி, வெற்றிக்கு வழி வகுப்பது என செயல்படும்.
கட்சியின் கொள்கைகளால் - தலைமையால் ஈர்க்கப்பட்ட தொண்டர்கள், பொதுமக்கள், வாக்காளர்கள் என ஒரு சாராருக்கும் தலைமை என இன்னொரு சாராருக்குமிடையில் ஒரு முக்கியமான இணைப்பு சங்கிலியாக அக்கட்சியை சார்ந்த பேச்சாளர்கள் - பத்திரிக்கையாளர்கள் - எழுத்தாளர்கள் - தொழிற்சங்கவாதிகள் - கட்சியின் அடுத்த மட்ட நிர்வாகிகள் என்ற பல்வேறு நபர்கள் இரண்டாம் கட்ட தலைவர்களாக இருப்பார்கள்
தன்னம்பிக்கையும் திறமையும் மிக்க தலைவர்கள், இவர்களை எதிர்காலத்தில் அதிக பொறுப்புகளை ஏற்கும் திறமையான தலைவர்களாக உருவாக்குவார்கள். ஆனால் இன்று இவை எல்லாம் பழைய கதை
அரசியலில் கொள்கைப்பிடிப்பு - சேவை மனப்பான்மை போன்றவை பெருமளவில் நீர்த்துப் போயிருக்கும் நேரமிது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெரும் அறிவும் தீர்க்க தரிசனமும் தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக திகழ்வதும் அரிதாகி வருகிறது
இவர்களில் பலர், தங்களது தலைமையைத் தக்க வைத்துக் கொள்ளுவதில் மட்டுமே நாட்டம் காட்டுவதால், அடுத்த தேர்தலை தாண்டி சிந்திப்பதுமில்லை; அடுத்த கட்டத் தலைமையை உருவாக்குவதுமில்லை
சில கட்சிகளில் இரண்டாம் கட்டத் தலைவர்களை தயார் செய்வதனைவிட, கட்சி வளர்ச்சியின் செலவில் தனது வாரிசுகளை உருவாக்குவார்கள். சில கட்சிகளில், தன்னால் உருவாக்கப்படுபவர்களால், அரசியலில் தனது இடத்தையே இழப்பவர்களும் உண்டு. எனவே, பெருமளவு கட்சிகளில், இரண்டாம் கட்டத் தலைவர்களை உருவாக்குவதே இல்லை
சில கட்சிகளில், கவலை தரும் இன்னொரு அம்சம், திறமையைவிட விசுவாசம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, திறமையற்ற விசுவாசிகளையே இரண்டாம் கட்டத் தலைவர்களாக - எதிர்காலத் தலைவர்களாக -அடையாளம் காட்டும் போக்கு ஆகும். இத்தகையோரால், ஒரு நெருக்கடியான சூழலில், கட்சியில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப முடியாது போய்விடும்.
இத்தகைய, சரியான இரண்டாம் கட்டத் தலைமை அற்ற ஒரு நிலை, ஆளும் கட்சியில் ஏற்படும்போது சிக்கல் அதிகமாகும். இவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் பொறுப்புகளை ஏற்கும்போது,சரியான பயிற்சி மற்றும் திறமையின்மையால் கட்சி மட்டுமின்றி ஆட்சியும் பாதிக்கப்படும். மக்களின் எதிர்பார்ப்புகள் பொய்க்கும்.
இவற்றை நோக்கும்போது, அடுத்த கட்டத் தலைவர்களை - எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவது, தொழிற்கூடமாக இருப்பினும் - சேவை நிறுவனமாக இருப்பினும் - அரசியல் கட்சியாக இருப்பினும், எவ்வளவு முக்கியம் வாய்ந்ததென்று உணர முடிகிறது.
இத்தகைய முக்கிய பொறுப்பு, ஒரு நிறுவனத்திற்கோ - அரசியல் கட்சிக்கோ மட்டுமல்ல. இவை இரண்டையும்விட ஒவ்வோர் ஆசிரியருக்கும் - பெற்றோருக்கும் அதிகமாக உள்ளது. இவர்கள்தான், நாட்டுக்கு நல்ல குடிமக்களை - நல்ல தலைவர்களை உருவாக்க, சரியான அடித்தளம் அமைப்பவர்கள்.
 

நன்றி தினமணி 05.10.2017
உதவும் உள்ளங்கள் விழா
NFTE BSNL ஈரோடு மாவட்டம்
உதவும் உள்ளங்கள் சார்பாக உதவி வழங்கும் விழா
                       நாள் 11.10.2017
               காலம் காலை 11 மணி 
இடம் தோலைபேசி நிலையம் சத்தியமங்கலம்
அனைவரும் வருக
ஆதரவு தருக
இயன்றதைத் தரும்

ஈகை உள்ளத்துடன் வருக 

Saturday, 30 September 2017

வாழ்த்துகிறோம்
இன்று இலாகா பணி நிறைவு பெறும்,
தமிழகத்தில் NFTE இயக்கத்தின் வளர்ச்சிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்த
தோழர்கள்
பாலகுரு, திருச்சி
சென்னகேசவன், வேலூர்

ஆகிடோர் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
தோழர் சுப்ரமனியன்

"சத்தி சுப்பு" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய சத்தியமங்கலம் கிளைச் செயலர் தோழர் சுரமணியன் இன்று இலாகா பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

மிகச்சிறந்த
ஒரு முன்மாதிரியான
கிளைச் செயலராக
இயக்கத்தின் மீது அளவற்ற பற்றுடனும் விசுவாசத்துடனும்  செயல்பட்டவர் அருமைத் தோழர் சுப்ரமனியன்

இவரது பணிநிறைவுக்காலம்
நலமுடனும்,
மகிழ்வுடனும்
பயனுடனும்

அமைய வாழ்த்துகிறோம்.