NFTECHQ

Friday, 30 June 2017

உயர்கிறது விலைவாசிப்படி
01.07.2017 முதல்
1.9 சதவிகிதம்
விலைவாசிப்படி

 உயர்கிறது.
வாழிய பல்லாண்டு

இன்று (30.06.2017) பணி நிறைவு பெறும்
1.தோழர் C.பெரியசாமி  CAO
2.தோழர் G.கருப்புசாமி SDE
3.தோழர் N.தங்கவேல் SDE
4.தோழியர் G.பிரேமா OS
5. தோழர் V.அங்குராஜ் TT
6.தோழர் K.முத்துசாமி  TT
7. தோழர் V.ராஜேந்திரன் TT
8. தோழர் M.நடராஜன் TT
9. தோழர் S.ஆரிப் சாஹிப் TT
10. தோழியர் S.சண்முகவடிவு  ATT
11. தோழர் A.ராஜமாணிக்கம் ATT
ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்
 பல்லாண்டு வாழ
மாவட்டச் சங்கம் சார்பாக

வாழ்த்துகிறோம்.

Monday, 26 June 2017

நல்வாழ்த்து
நாம் சொல்வோம்

அனைவருக்கும்
இனிய
உள்ளம்
நிறைந்த

ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்

Saturday, 24 June 2017

மாவட்டச் செயற்குழு
நாள் 28.06.2017
காலம் காலை 10 மணி
இடம் ஆண்கள் ஓய்வறை டெலிபோன்பவன் ஈரோடு

ஜூலை 3,4 தேதிகளில்  பட்டினிப்போர் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திட,
உதவும் உள்ளங்கள்
விழாவைச் சிறப்புடன் நடத்திட,
செப்டம்பர் மாதம் பணி  ஓய்வு பெறும் சத்தி கிளைச்செயலர் அன்புத் தோழர் சுப்ரமணியம் அவர்களின் பணி நிறைவு விழாவைச் சிறப்புடன் நடத்த திட்டமிட
ஊழியர் பிரச்னைகளை  விவாத்திட
நடைபெறும் செயற்குழுவில்
அனைவரும் காலத்தே பங்கேற்க வேண்டுகிறோம்.

தோழமையுடன்
N.பழனிவேலு

மாவட்டச் செயலர்
கண்ணதாசன்
பிறந்த தினம்
ஜூன் 24

திரையுலகின் திருவள்ளுவராக
கனவுத்தொழிற்சாலையின் கம்பனாக
இன்னிசைப் பாடலின் இளங்க்கோவடிகளாக
வாழ்ந்த கண்ணதாசன் பிறந்த தினம் இன்று.

"கலங்க்காதிரு மனமே" என்ற வரியுடன் துவங்கும் பாடலே அவரது முதல் திரைப்படப் பாடல்.

"எல்லாரும் "எல்லாமும் பெற வேண்டும்-இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்"
என்ற வரிகள் பொதுவுடைமைக் கொள்கையின் அடிநாதத்தை
உணர்த்தும் வரிகள்.

கண்ணதாசன்
நிரந்தரமானவர்.

எந்னிலயிலும் அவருக்கு மரணமில்லை. 

Thursday, 22 June 2017

பாஜகவின் குறியீட்டு

மூலதனக் கொள்ளை!

  T+  
குடியரசுத் தலைவர் தேர்தலில் தலித் ஒருவரை வேட்பாளராக நிறுத்தியிருப்பதன் மூலம் எதிர்க்கட்சிகளைத் தற்காப்பு நிலைக்கு பாஜக தள்ளியிருக்கிறது.
தலித் என்பது சாதிய வகைமை என்றுதான் நாம் கருதிக்கொண்டிருக்கிறோம். அதற்கும் மேல் அதுவொரு குறியீட்டு மூலதனமும் (Symbolic Capital) ஆகும். குறியீட்டு மூலதனத்துக்கு அம்பேத்கர், காந்தி, பெரியார் முதலான ஆளுமை களையும்; தமிழ், தலித் போன்ற சமூகக் குழுக்களையும் உதாரணங்களாகச் சொல்லலாம். அத்தகைய குறியீட்டு மூலதனத்தை அளப்பரிய இழப்புகளும், போராட்டங்களுமே உருவாக்குகின்றன.
அதிகாரத்தில் இருப்பவர்கள் பொருளாதார மூலதனத்தைக் கட்டுப்படுத்துவதோடு நின்றுவிடுவ தில்லை, குறியீட்டு மூலதனத்தையும் அபகரிக்க முனைகிறார்கள். தமக்கேற்ற மரபான குறியீடுகளை உயர்த்திப் பிடிப்பதோடு, தமக்கு எதிரான கலகக் குணம் வாய்ந்த குறியீடுகளைத் தன்வயப்படுத்தி அவற்றை மதிப்பழிப்புச் செய்கிறார்கள்.
படேலுக்கு அமைக்கப்படும் பிரம்மாண்டமான சிலை மரபான குறியீட்டை உயர்த்திப் பிடிப்பதற்கும், டெல்லியில் அம்பேத்கருக்கு அமைக்கப்படும் தேசிய நினைவிடம் கலகக் குறியீட்டைத் தன்வயப்படுத்துவதற்கும் பாஜக எடுக்கும் முயற்சிகளுக்கு உதாரணங்கள். தலித் என்ற குறியீட்டு மூலதனத்தை அபகரிப்பதற்கு பாஜக இரண்டு விதமான உத்திகளைக் கையாள்கிறது. ஒன்று, அம்பேத்கர் என்ற ஆளுமையை அபகரிக்க முயற்சித்தல். இரண்டு, பலவீனமான பிம்பங்களைக் குறியீடுகளாக உயர்த்திப் பிடித்தல். இரண்டாவது உத்தியின் வெளிப்பாடுதான் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் ராம்நாத் கோவிந்த்.
தலித் குறியீட்டு மூலதனத்தை அபகரிக்க முயற்சித்துக்கொண்டே இன்னொரு புறம், தலித் மக்களுக்கான திட்டங்களை ஒழித்துக் கட்டிக்கொண்டிருக்கிறது பாஜக. மூன்றாண்டு கால ஆட்சியில் தாழ்த்தப்பட்டோர் துணைத் திட்டத்தின் (SCSP) அடிப்படையில் தலித் மக்களின் நலத் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டிய தொகையில் சுமார் ரூ. 2 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்காமல் வஞ்சித்தது, ‘ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப்’ என அழைக்கப்படும் தலித் மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை ரூ.882 கோடியிலிருந்து வெறும் 50 கோடியாகக் குறைத்தது என அதைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
தலித் மக்களை சமூக, பொருளாதாரத் தளங் களில் அடிமை நிலைக்குத் தள்ளிக்கொண்டிருக்கும் வகுப்புவாத வன்முறையை ‘தலித் குடியரசுத் தலைவர்’ என்ற நெகிழ் திரை கொண்டு மறைக்கப் பார்க்கிறது பாஜக. நிச்சயம் அதன் நோக்கம் நிறைவேறாது.
ரவிகுமார், எழுத்தாளர், விசிக துணைப் பொதுச் செயலாளர்.

நன்றி இந்து தமிழ்

Wednesday, 21 June 2017

சமூக பாதுகாப்புத் திட்டம்

நமது நிறுவனத்தில் பணியில் உள்ள
ஊழியர்கள் பணிக்காலத்தில்
உயிர் இழக்க நேர்ந்தால்
அவர்களின் குடுபம்பத்துக்கு
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ உதவித்தொகவழங்கும் திட்டம்
குறித்து அனைத்து சங்கங்களும்
ஆலோசனைகளை வழங்குமாறு
 நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது..

விருப்பம் உள்ள ஊழியர்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

இதற்கான கடைசி தேதி 30.06.2017.

கருத்துக்களை அனுப்ப
வேண்டிய ம்ன்னஞ்சல் முகவரி
restg@bsnl.co.in

Tuesday, 20 June 2017

இரங்கல்
அன்பு
அடக்கம்
அறிவு
ஆற்றல்
இவற்றின்
உருவமாகத் திகழ்ந்த்
NFTE இயக்கத்தின்
முன்னணித் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்த
தோழர் வாதிராஜன்
அவர்களின் மறைவுக்கு

நமது இரங்கலைக் காணிக்கையாக்குகிறோம்.

Monday, 19 June 2017

பட்டினிப் போர்
NFTE
TEPU
SEWA
PEWA
BTEU (BMS)
ஆகிய அமைப்புகள் இணைந்து
03.07.2016
04.07.2016 ஆகிய்
இரு
தினங்களில்
பட்டினிப்போர் இய்க்கத்தை
தலைநகரிலும்
மாநில தலைநகரங்களிலும்
மாவட்ட தலைநகரங்களிலும்
பட்டினிப்போர்
இயக்கத்தை நடத்த முடிவு செய்துள்ளன.
         கோரிக்கைகள்
மூன்றாவது ஊதிய மாற்றத்துக்கான DPE வழிகாட்டுதலை உடனே வெளியிட வேண்டும்.

மூன்றாவது ஊதிய மாற்ரத்துக்கான பேச்சு வார்த்தையை உடனே துவங்க வேண்டும்.

சிறப்புற  நடத்திடுவோம்.

திரளாகப் பங்கேற்போம்.

Monday, 1 May 2017

மேதின வாழ்த்துக்கள்
மேதினம் தந்திட்ட
உரிமைகளைக்காத்திடுவோம்

உழைப்பவர் ஒற்றுமையை

உறுதி செய்வோம்.
வாழிய பல்லாண்டு

30.04.2017 அன்று பணி ஓய்வு பெற்ற
1. தோழர் R.பழனிசாமி JE
2. தோழர்V..P.லோகனாதன் Tech Supr
3. தோழர் N.காளியப்பன் OS
4. தோழர் T.சம்பத்குமார் OS
5. தோழர் K.வேலுசாமி TT
6. தோழர் M.ராஜேந்திரன் TT
7. தோழர் P.சீனிராஜ் TT
8. தோழர் S.கிருஷ்ணமூர்த்தி TT
9. தோழர் K.மணி TT
ஆகியோரது
பணி ஓய்வுக்காலம்
மகிழ்வுடனும் நலமுடனும்

பல்லாண்டு அமைய வாழ்த்துகிறோம்.

Saturday, 29 April 2017

திருச்சி மாவட்டத் தலைவர்
தோழர் சுந்தரம்
அவர்களுக்கு
இன்று 29.04.2017
கரூரில் பணி நிறைவு பாராட்டு விழா

பாராட்டு விழா சிறக்க வாழ்த்துகிறோம்.

இயக்கத்தின் வளர்ச்சிக்கும்
ஊழியர்களின் நலனுக்கும்
ஓயாது உழைத்திட்ட
தோழர்  சுந்தரம் அவர்களின்
 பணி ஓய்வுக்காலம்
நலமுடனும்
மகிழ்வுடனும்

பயனுடனும் அமைய வாழ்த்துகிறோம்.

Monday, 24 April 2017

தோழர் பாபநாசம் 
பணிநிறைவு பாராட்டு விழா

28.04.2016


நெல்லை தந்த தோழன்
நெஞ்சங்களில் நிறைந்த தோழன்
நீதியின் வழியில் நின்ற தோழன்
நியாயத்தின் நிழலாய் வாழும் தோழன்
நெறிமுறைகளின் வழி நிற்கும் தோழன்

தோழனின் பாராட்டு விழா
சிறக்க வாழ்த்துகிறோம்

பணி ஓய்வுக்காலம்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பயனுடனும்
பல்லாண்டு அனமய
ஈரோடு மாவட்டச் சங்கம்
சார்பாக மனம் நிறைய
வாழ்த்துகிறோம்.

Saturday, 22 April 2017

கருணைத் தொகை

பணியில் இருக்கும்போது உயிர் இழக்கும் ஊழியர்களின் குடும்பத்துக்கு கருணைத் தொகை வழங்க்குவதற்காக "Benevolent Fund" என்ற ஒரு திட்டத்தை உருவாக்க பி எஸ் என் எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக் ஒரு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஊழியர்கள் மாதம் தோறும் ஒரு தொகையைச் செலுத்த வேண்டும். இது சம்பள்த்தில் பிடிக்கப்படும். இந்த நிதியிலிருந்து உயிர் இழக்கும் ஊழியர்களின் குடும்மப்த்துக்கு கருணைத்தொகை வழங்கப்படும்.

மாதம் எவ்வளவு தொகை பிடிக்கலாம், கருணைத்தொகை எவ்வளவு வழங்கலாம் என்பது குறித்து கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு நிர்வாகம் கேட்டுள்ளது.


இத்திட்டம் கருணை அடிப்படயில் பணி  வழங்குதலில்  மேலும்  சிக்கலைஉருவாக்குமா? 

Friday, 21 April 2017

பாவேந்தர்

பாரதிதாசன்

நினைவுதினம்


ஏப்ரல் 21



சாய்ந்த தராசு


வாழ்வதிலும் நலம் சூழ்வதிலும் புவி
மக்களெல்லாம் ஒப்புடையார்!

ஏழ்மையில் மக்களைத் தள்ளுவதோ? - இதை
இன்பமெனச் சிலர் கொள்ளுவதோ?

கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர்
கொள்ளையடிப்பதும் நீதியோ - புவி
வாழ்வதுதான் எந்தத் தேதியோ?

சிற்சிலர் வாழ்ந்திடப் பற்பலர் உழைத்துத்
தீர்கஎனும் இந்த லோகமே - உரு
அற்றொழிந் தாலும்நன் றாகுமே!

காண்பதெலாம் தொழிலாளி செய்தான் அவன்
காணத்தகுந்தது வறுமையாம் - அவன்
பூணத் தகுந்ததும் பொறுமையாம்!

அன்பெனச் சொல்லியிங் காதிமுதற் பேத
வன்மை வளர்த்தனர் பாரிலே - அதன்
பின்புகண் டோம்இதை நேரிலே

மக்கள் பசிக்க மடத்தலைவர்க் கெனில்
வாழை யிலைமுற்றும் நறுநெய்யாயம் - இது
மிக்குயிர் மேல்வைத்த கருணையாம்

கோயிலிலே பொருள் கூட்டும் குருக்களும்
கோதையர் தோளினிற் சாய்கின்றார் - இங்கு
நோயினிலே மக்கள் மாய்கின்றார்

கோரும் துரைத்தனத்தாரும் பெரும் பொருள்
கொண்டவர்க்கே நலம் கூட்டுவார் - உழைப்
போரிடமே கத்திதீட்டுவார்

மக்களெல்லாம் சமமாக அடைந்திட
மாநிலம் தந்ததில் வஞ்சமோ? - பசி
மிக்கவரின் தொகை கொஞ்சமோ?

Thursday, 20 April 2017

GPF
பிரச்னை தீருமா?

இந்த மாதம் GPF பணம் கிடைக்குமா என்று ஒவ்வொரு மாதமும் கேள்விகள் எழுகின்றன்.

ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை வங்கிகள் மூலம் பட்டுவாடா செய்யும் DOT CELL அமைப்பே இனி GPF பட்டுவாடாவையும் செய்யும் என நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

ஊழியர்கள் ESS எனப்படும் ONLINE மூலம் விண்ணப்பித்தவுடன் சம்பந்தப்பட்ட கணக்கு அதிகாரி அதனை ஒப்புதல் செய்து நேரடியாக DOTCELLக்கு E-MAIL மூலம் அனுப்பிவிடுவார். DOTCELL நேரடியாக ஊழியர்களின் வங்கிக்கணக்கில் வைப்புநிதியை வரவு வைத்துவிடும். 

இந்தப்பணி இரண்டு கட்டமாக அமுல்படுத்தப்படும். முதற்கட்டமாக ஏப்ரல் 2017க்குள்  12 மாநிலங்களிலும், இரண்டாம் கட்டமாக ஏனைய மாநிலங்களிலும் அமுல்படுத்தப்படும். தமிழகம் இரண்டாம் கட்ட அமுலாக்கத்தில் உள்ளது. வைப்புநிதி DOTCELL மூலமாகப் பட்டுவாடா செய்வதன் மூலமாக ஊழியர்கள் விரைவாக பட்டுவாடா பெறமுடியும். ஆனால் தற்போதுள்ள நடைமுறைப்படி மாதாமாதம்  பெற
முடியுமா என்பதற்குக் காலம்தான்  விடை காணும்.

Thursday, 13 April 2017

அண்ணல் அம்பேத்கர்
பிறந்த தினம்

ஏப்ரல் 14


இனிய
தமிழ்ப் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்


இந்தியாவின் துயர நாள்

13.04.1019








இந்தியாவின் துயர நாள்
13.04.1019




ஜாலியன் வாலாபாக்கில் படுகொலைகள் நடந்த தினம்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 389 இந்திய மக்கள் கொல்லப்பட்டதினம்.
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் இவர்கள். 1500க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர்.

வெள்ளையனின் ரெள்லட் சட்டத்தை எதிர்த்து நடபெற்ற போராட்டத்தில் இந்த துயரம் நடைபெற்றது.

எந்த விசாரணையும் இன்றி ஒருவரைத் தண்டிக்கும் உரிமையை இச்சட்டம் தந்தது.

இந்தச் சட்டத்தைத்தான் கொடுங்க்கோலன் டயர் பயன்படுத்தினான். கொன்று குவித்தான்.

இப்படியெல்லம் துன்பங்க்களுக்கு ஆளாகி, இன்னுயிரை ஈந்து சுதந்திரம் பெறப்பட்டது.

ஆனால் இன்று மக்களை 4000, 3000, 2000 என விலை கூவி வாங்கும் அவலம்.

ஆனால்...
மக்கள் சக்தி நிச்சயம் ஒரு நாள் திரளும்.
நாம் விரும்பும் மாற்றங்கள் நிகழும்.
மக்கள் கவிஞர்
பட்டுக்கோட்டை கலயாணசுந்தரம் பிறந்த நாள்

ஏப்ரல் 13





நாடு கெட்டுப் போகுது
பாடுபட்டுக் காத்த
நாடு கெட்டுப் போகுது

கேடுகெட்ட கும்பலாலே

சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே-பெரும்....சூடுபட்ட
வேடிக்கையான பல வித்தையைக் கண்டு பயந்து
வேதனையில் மாட்டிக்கிடும் வீணராலே

வாடிக்கையாய் நடக்கும் வஞ்சகச் செயல்களுக்கு
வாழ இடமிருக்கு மண் மேலே-இன்னும்
வாழ இடமிருக்கு மண் மேலே-நாம்.... 
சூடுபட்ட மடமை,கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே...