NFTECHQ

Friday, 11 November 2016

ஆய்வாளர்கள் கருத்து

சி.பி.சந்திரசேகர்,
பொருளாதார பேராசிரியர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புது டெல்லி
இந்திய பிரதமர், ஆச்சர்யமளிக்கும் விதமாக ரூபாய் 500, 1000 தாள்கள் இனி செல்லுபடியாகாது என அறிவித்திருக்கிறார். இந்த முறையை அமல்படுத்த, .டி.எம்-கள் இரண்டு நாட்களும், வங்கிகள் இரு நாட்களும் மூடப்படும். இது பயங்கரவாதிகளுக்கான நிதி உதவி, கறுப்புப்பணம், சமூக விரோத செயல்களுக்கு கறுப்புப்பணம் பயன்படுத்தப்படுவது போன்ற காரியங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக சொல்லப்படுகிறது. இது உண்மையோ இல்லையோஆனால், இது நிச்சயம் பொருளாதார இயங்கு முறையில் பிரச்னையை உருவாக்கும்.
.டி.எம்-களில் இருந்தோ, சம்பளமாகவோ பணத்தைப் பெற்று கொண்டு, கிரெடிட் கார்டுகளாலும், டெபிட் கார்டுகளாலும் பணம் செலுத்த முடியாத எவருமே, வங்கிக்கு ஓடியிருப்பர். இதுவே மோசம். அதன் தாக்கங்கள் இதை விட பெரிதாக இருக்கும். பணம் செலுத்துதலையும், பணம் கொடுத்து வாங்கும் அமைப்பையும் முடக்கி, பணப்பரிமாற்ற பொருளாதாரத்தையும் வணிகத்தையும் உறையச் செய்யும். உண்மையான எதிரிகளையும், கற்பனை எதிரிகளையும் தோற்கடிக்கலாம் என்று நினைத்த பிரதமர், சராசரி குடிமகனுக்கு எதிராக போர் தொடுத்திருக்கிறார்.
----------------------------------------------------------------
அபிஜித் சென், திட்ட கமிஷன் முன்னாள் உறுப்பினர்
சட்ட முறைக்கேடாக குவிந்திருக்கும் கறுப்புப்பணத்தை குறைக்கவே, ரூபாய் 500, 1000 தாள்கள் பண மதிப்பிழக்கச் செய்யப்பட்டது. கணக்கில் வராத பணத்தை சேர்த்து குவித்து வைக்கவே இவை பயன்படுத்தப்படுகிறது. பணப்பரிமாற்றத்துக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்றால், இது மிகச் சரியான காரியம். இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கி, பணப்புழக்கத்தில் 80% இருப்பது ரூபாய் 500, 1000 ரூபாய் தாள்கள் தான் இருக்கிறது என்று சொல்கிறது. எனவே, பெருமளவு பணம் நிரந்தரமாகஇருப்பாகவேவைக்கப்பட்டிருந்தால் இது சரி. அல்லது பணப்பரிமாற்றங்களையே பெரிதும் நம்பி இருக்கும் பொருளாதாரத்தின் மீது பெரிய தாக்கமாக இந்த நடவடிக்கை இருக்கும்.
இந்தியாவின் பணப் பொருளாதாரத்தின் அளவு மிகச் சரியாக தெரியவில்லை. இருந்தாலும், முறைசாரா துறைகளில் எல்லாம் வேலை செய்பவர்களின் அளவை பார்த்தால், மொத்த பொருளாதாரத்தின் பாதி அளவு இருக்கலாம். எனவே, அடுத்த இரண்டு நாட்களில் இந்த பொருளாதாரம் உடனடியாக சுருங்கும் என்று எதிர்பார்க்கலாம். இதன் நீண்ட கால நன்மைகள் என்னவாக இருந்தாலும், தினக் கூலியாகவோ, தங்கள் சரக்குகளை விற்கவோ பணத்தை சார்ந்திருக்கும் பலருக்கு இனி தினங்கள் கடினமாகவே இருக்கும். மேலும், கறுப்புப்பணம் உருவாகும் செயல்முறையை அழிக்காமல், குவிக்கப்பட்டிருக்கும் கறுப்புப்பணத்தில் சிறிய அளவையே அழிக்கிறது இந்த நடவடிக்கை.


Thursday, 10 November 2016

ஐடியா கொடுத்த அந்த நபர்

ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவிக்க மோடிக்கு ஐடியா கொடுத்த அந்த நபர் யார் தெரியுமா?

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்ததன் பின்னணியில் ஒரு நபர் உள்ளார்.

சில மாதங்கள் முன்பு, டெல்லியில் பிரதமரை சந்தித்து கருப்பு பணத்தை ஒழிக்க ஆலோசனை கூறிய அவருக்கு முதலில் கொடுக்கப்பட்டது 9 நிமிட அப்பாயின்மென்ட்.

ஆனால், அவரது விளக்கத்தால் கவரப்பட்ட மோடி, தொடர்ந்து ஆலோசனை நடத்த ஆரம்பித்ததன் விளைவு, இந்த சந்திப்பு 2 மணி நேரம் நீடித்தது.

இப்படி, பிரதமரையே வியப்பில் ஆழ்த்தி ஐடியா கொடுத்த அந்த நபர் பெயர் அனில் போகில். புனே நகரை சேர்ந்த நிதி ஆலோசகர். அனில் போகில் பிரசன்டேசன் மூலம் பிரதமருக்கு சில ஆலோசனைகளை வழங்கியிருந்தார். அந்த ஆலோசனைகளில் முக்கியமானவை இவைதான்:

*இறக்குமதி வரியை தள்ளுபடி செய்யுங்கள். 56 வகை வரி விதிப்புகளை ரத்து செய்யுங்கள்.

*ரூ.1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை மட்டுமின்றி 100 ரூபாய் நோட்டுக்களையும் தடை செய்ய வேண்டும்.

*அனைத்து வகை பண பரிவர்த்தனைகளும் வங்கிகள் வழியாக, செக், டிடி மற்றும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற வேண்டும்.

*வருவாய் வசூல் சிங்கிள் பேங்க் சிஸ்டம் மூலமாகவே நடைபெற வேண்டும்.

இதுபோன்ற ஐடியாக்களைத்தான் அனில் போகில் கொடுத்திருந்தார்.

இந்தியாவில் தினமும் சராசரியாக 2.7 லட்சம் கோடி மதிப்புள்ள பணம் பரிவர்த்தனையாகிறது.

அதாவது ஆண்டுக்கு ரூ.800 லட்சம் கோடி. இதில் 20 சதவீத பரிவர்த்தனைகள் மட்டுமே வங்கிகள் வழியாக நடைபெறுகிறது.

எனவே கருப்பு பணத்தை கண்காணிக்க முடிவதில்லை.


நாட்டின் 78 சதவீத மக்கள் தினசரி சராசரியாக 20 ரூபாய் செலவிடுவதாக புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது. 

Tuesday, 8 November 2016

தகவல்கள்

JTO தேர்வு
டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள JTO இலாகா தேர்வுக்கான காலியிடங்கள் குறித்த விபரங்களை 15.11.2016க்குள் அனுப்புமாறு மாநில அலுவலகங்களுக்கு கார்ப்பரேட் அலுவலம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்காலர்ஷிப்
மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகள் படிக்கும் நமது நிறுவனத்தின் ஊழியர்களின் குழந்தைகளுக்கு ஸ்காலர்ஷிப் வழங்குவது குறித்து தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

விண்ணப்பங்கள் அலுவலக்ம்

சேரவேண்டிய நாள் 30.11.2016


பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம்
01.01.2016 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடைக்கான உசவரம்பு ரூ  10 லடசத்திலிருந்து ரூ 20 லட்சமாக உயர்த்தப்பட்டது. குறைந்தபசட்ச ஓய்வூதியம் ரூ 3500 லிருந்து ரூ 8000 ஆக உயர்த்தப்பட்டது. ஏழாவது சம்பளக் குழு முடிவுகளின் அமலாக்கம் இது. இதை நமது நிறுவனத்தில் 01.01.2016 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என நமது மத்திய் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Monday, 7 November 2016

நவம்பர் 7

ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு


மன்னராட்சி மடிந்தது.
மக்களுக்கான மானுட  ஆட்சி மலர்ந்தது.

ஏறத்தாழ 50 லட்சம் ரஷ்ய மக்கள் இரண்டாம் உலகப் போரில் இன்னுயிரை இழந்தனர்.

இரண்டு லட்சம் மக்களின்
மகத்தான போராட்டத்தால்
ரஷ்யப் புரட்சி மலர்ந்தது.

இது பற்றி பாரதியின் வரிகள்

ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சி

ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி! 
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்!                                                 
குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு 
மேன்மையுறக் குடிமை நீதி 
கடியொன்றி லெழுந்ததுபார் குடியரசென்று 
உலகறியக் கூறி விட்டார்; 
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது 
 
அடிமையில்லை அறிக என்றார்; 
இடிபட்ட சுவர்போலே கலிவிழுந்தான் 
கிருதயுகம் எழுக மாதோ!                                                          


நமது அனுபவம்.

ஒரு ஆட்சி முடிந்து மற்றொரு ஆட்சி வருகிறது.

அட்சியாளர்கள் மாறுகிறார்ள்.
ஆனால் கொள்கையில் மாற்றமில்லை.
மக்களின் வாழ்வில் ஏற்றமில்லை.

ஆனால் ரஷ்யப் புரட்சியால்
ஏற்பட்ட ஆட்சி மாற்றம்
மக்கள் விரும்பிய மாற்றமாகும்.

மக்களின் தேவைகளை
நிறைவேற்றிய மாற்றமாகும்.

உழைப்பையும்,
உழைப்பவனையும் மதிக்கும் மாற்றமாகும்.

பெண்களுக்கு உரிமை தந்த மாற்றம்.

விவசாயிகள் நலம் காக்கும் மாற்றம்.

சமவேலைக்குச் சம ஊதியம் வந்தது.

ஆண் பெண் சமத்துவம் உருவானது.

பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு என்பது உருவானது.

இந்தியாவில் ரஷ்யப் புரட்சியின் தாக்கம்

தூக்கில் போட அழைத்துச் செல்ல
சிறையதிகாரிகள் வந்தபோது
பகத் சிங் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.
 அது லெனின் எழுதிய
அரசும் புரட்சியும்.’


இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் அல்லாதோரும் தங்கள் குழந்தைக்களுக்கு லெனின் என்றும் ஸ்டாலின் என்றும் பெயர் வைத்தார்கள்.

நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா
நடக்கும்  தருணத்தில்
இந்திய தொழிலாளி வர்க்கம்
தன் கடமையை உணர்ந்து
சவால்களைஎஎதிர்கோண்டு
போராடி வெற்றி பெற
சபதம் ஏற்க வேண்டும்.

Sunday, 6 November 2016

அற்புதமான முயற்சி
NFTCL மாநிலச் செயலர் தோழர் ஆனந்தன் அவர்களின் முகநூல் கபகிர்வு

சம வேலைக்கு சம ஊதியம் என்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அவரவர்கள் செய்யும் பணிக்கேற்ற ஊதியம் வழங்கிடக்கோரி NFTCL மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன் சென்னை DEPUTY C.L.C., துணை முதன்மைத் தொழிலாளர் ஆணையரிடம் வழக்குத் தொடுத்திருந்தார்.

பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. 
25/10/2016
அன்று DEPUTY C.L.C., நமது நிர்வாகத்திற்கு அளித்திருந்த கடிதத்தில் BSNLலில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களில்..
கேபிள் பணி புரிவோர்...
காவல் பணி புரிவோர் 
அலுவலகங்களில் எழுத்தர் பணி புரிவோர்..
ஆகியோருக்கு அந்தந்தப் பணிகளுக்குரிய சம்பளம் வழங்கிடவும்  இது சம்பந்தமான அறிக்கையை சென்னை மற்றும் தமிழ் மாநில நிர்வாகங்கள் 04/11/2016 அன்று நடைபெறவுள்ள முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது  சமர்ப்பிக்க வேண்டும்  எனவும் குறிப்பிட்டிருந்தார்.

04/11/2016 அன்று நடைபெற்ற
முத்தரப்பு  பேச்சுவார்த்தைக்கு 
நமது நிர்வாகம் வழக்கம் போலவே வந்திருந்தது. DEPUTY C.L.C.,யின் 25/10/2016 கடிதத்தில் உள்ள வழிகாட்டுதல்களை அமுல்படுத்துவதற்குப் பதிலாக அந்தக் கடிதத்தின் மீது மாவட்ட நிர்வாகங்களின் கருத்துக்களை தமிழ் மாநில நிர்வாகம் கேட்டிருந்தது.
இது முறையற்ற செயல் என்று குறிப்பிட்ட DEPUTY C.L.C.,  நமது BSNL நிர்வாக அதிகாரிகளைக் கடிந்து கொண்டார்.

மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள BSNL நிறுவனம்  ஒரு முன்மாதிரியான முதலாளியாக இருக்க வேண்டும் எனவும்... தொழிலாளர் நலச்சட்டங்கள் எந்தவிதத் தயக்கமும் இன்றி அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் உறுதிபட எடுத்துரைத்தார்.

தற்போதைய உச்ச நீதிமன்ற உத்திரவை நினைவூட்டிய DEPUTY C.L.C., அவர்கள் BSNL நிறுவனம் உச்ச நீதிமன்ற உத்திரவை மதிக்க வேண்டும் எனவும் சமவேலைக்கு சம சம்பளம் என்ற கொள்கையை அமுல்படுத்த வேண்டும் எனவும் மீண்டும் தெளிவுபடக் கூறினார்.

BSNL நிறுவனம் அமுல்படுத்த தயங்கும் பட்சத்தில்
சட்ட ரீதியான நடவடிக்கைகள் நிர்வாகத்தின் மீது 
நிச்சயம் எடுக்கப்படும் என்பதனையும் கூறினார்.
வரும் 23/11/2016 அன்று இறுதிக்கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும். அதற்கு முன்பாக சம வேலைக்கு சம ஊதியம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு 
மாநில நிர்வாகம் உரிய உத்திரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்  எனவும் உத்திரவிட்டுள்ளார்.

04/11/2016 கூட்டத்தில்  தமிழ் மாநில நிர்வாகத்தின் சார்பாக  உதவிப்பொது மேலாளர் திரு.ஆஞ்சநேயன் அவர்களும்... சென்னை மாநில நிர்வாகத்தின் சார்பாக 
உதவிப்பொது மேலாளர் திருமதி.சங்கரி அவர்களும்...

NFTCL சார்பாக மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன்,
காரைக்குடி மாவட்டச்செயலர் தோழர்.மாரி...
சென்னைத் தோழர்கள் பாபு... இளங்கோ ஆகியோரும்...
TNTCWU சார்பாக தோழர்கள். முருகையா... பழனிச்சாமி 
ஆகியோரும் கலந்து கொண்டனர்...
மிகுந்த மனித நேயத்துடன் ஊழியர் தேவைகளைப் பரிசீலித்த  துணை முதன்மைத் தொழிலாளர் ஆணையர்  திரு,ஸ்ரீவத்சவா அவர்களுக்கு நமது நன்றியும் வணக்கங்களும்....

நமது மாநில நிர்வாகங்களும் மனித நேயத்தோடு
தங்களது பொறுப்பை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம்..



NFTCL இயக்க்த்தின் அற்புதமான முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறோம்.