NFTECHQ

Saturday, 5 July 2014

அஞ்சலி



தோழர் P.V.சண்முகம் 04.07.2014 அன்று இரவு இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.. PVS என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட தோழர். NFPTE, NFTE பேரியக்கங்களில் ஆழமான பற்றும் விசுவாசமும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட தோழனாக வாழ்ந்தார். குன்னூர், கோவை, சேலம், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களை  உள்ளடக்கிய த்ந்திப்பிரிவு கோட்டத்திற்கு கோட்டச் செயலராக சிறப்பாகப் பணியாற்றிய தோழர்.

தந்தி நம்மை விட்டு நிரந்தரமாகப் பிரிந்திருக்கலாம். ஆனால் தந்திப் பிரிவின் தளபதிகளில் ஒருவராக வாழ்ந்த தோழர் PVS நம் நினைவுகளில் என்றும் வாழ்வார்.

Friday, 4 July 2014

இலவச சிம் கார்டு



ஊழியர்கள் பலருக்கு இலவச ப்ரிபெய்டு சிம் கார்டு (FREE SIM) வழங்க்ப்பட்டுள்ளது. அதற்கு மாதம் தோறும் 200 ரூபாய் டாப்அப் செய்யப்படுகிறது. இந்த சிம் கார்டுக்கு காலக்கெடு (வேலிடிட்டி) அந்த ஊழியர் பணி ஓய்வு பெறும் நாள் வரை உண்டு.

ஓய்வு பெறும் போது இந்த சிம் கார்டை நிர்வாகத்திடம் திருப்பித் தர வேண்டிய அவசியம் இல்லை. ஓய்வு பெற்ற அடுத்த நாள் அந்த் சிம் கார்டு வினாடி பிளானுக்கு மாற்றப்பட்டு CUG திட்டத்திலிருந்தும் வெளியேற்றப்படுகிறது. 200 ரூபாய் டாப் அப் செய்யப்படுவதும் நிறுத்தப்படும்.

ஊழியர் விரும்பினால் ஓய்வுபெறும் நாளில் தனது விருப்பத்திற்கேற்ற பிளானுக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.


மாவட்டச் சங்க நிர்வாகிகளும் கிளைச் செயலர்களும் இத்தகவலை உரியவர்களுக்குத் தெரிவிக்க வேண்டுகிறோம்.

Thursday, 3 July 2014

பணிக்குழு



நமது மாநிலச் சங்கம் தலைமைப் பொது மேலாளரிடம் விவாதித்த அடிப்படையில் மாநில நிர்வாகம் 01.07.2014 அன்று ஒரு உத்தரவு வெளியிட்டுள்ளது.

அந்த உத்தரவின் அம்சங்கள்

ஒவ்வொரு மாதமும் பணிக்குழு (WORKS COMMITTEE)கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

சேவையின் மேம்பாடு, விரிவாக்கம், தேவையான உபகரணங்கள் மற்றும் உதிரி பாகங்கள் ஆகியவற்றை உரிய காலத்தில் கிடக்கச் செய்தல், வளர்ச்சிக்கும் வருமானத்துக்கான புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.

இக்கூட்ட அறிக்கையினை (MINUTES) மாநில அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

Tuesday, 1 July 2014

ரிலையன்ஸ் ஜியோவுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு ரத்து?



  
முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு நாடு முழுவதும் தொலைத் தொடர்பு சேவை அளிப்பதற்கு வழங்கப்பட்ட அலைக்கற்றை லைசென்ஸை ரத்து செய்யுமாறு தலைமை தணிக்கைத் துறை (சிஏஜி) வரைவு அறிக்கை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அலைக்கற்றை ஏலத்தை முறைகேடாக இந்நிறுவனம் பெற்றுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத்துறைக்கு அனுப்பிய கடிதத்தில் சிஏஜி குறிப்பிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் தொலைத் தொடர்பு சேவை அளிப்பதற்கான லைசென்ஸை இன்ஃபோடெல் பிராட்பேண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (ஐபிஎஸ்பிஎல்) நிறுவனம் பெற்றது. இந்நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பை விட 5 ஆயிரம் மடங்கு அதிக தொகைக்கு இந்நிறுவனம் டெண்டர் கோரி பெற்றது.
லைசென்ஸ் பெற்ற பிறகு இந் நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வாங்கி அதன் பெயரை ரிலையன்ஸ் ஜியோ என மாற்றியதாக சிஏஜி குறிப்பிட்டுள்ளது. ஐபிஎஸ்பிஎல் நிறுவனம் செலுத்திய முன்வைப்புத் தொகை ரூ. 252.50 கோடி. ஆனால் அது ரூ. 12,847.77 கோடி தொகைக்கான லைசென்ஸை பெற்றுள்ளது. இது அந்நிறுவனத்தின் சொத்து மதிப்பை விட 5 ஆயிரம் மடங்கு அதிகம் என்று சிஏஜி சுட்டிக் காட்டியுள்ளது.
இந்து தமிழ் நாளிதழ் (30.06.2014) இச் செய்தியை வெளியிட்டுள்ளது.
தொலைத்தொடர்புத் துறையில் முறைகேடுகள் தொடர்கதையாகி விட்டது.
ஊழலற்ற இந்தியா என்ற மத்திய அரசின் முழக்கம் இப் பிரச்னையில்
நியாயம் நிலைநிறுத்தப்படுமா? தர்மம் காக்கப்படுமா?

பஞ்சப்படி



01.07.2014 முதல் 2.9 சதவிகிதம் பஞ்சப்படி
உயர்கிறது

Monday, 30 June 2014

மாவட்டச் செயற்குழு



மாவட்டச் செயற்குழு 28.06.2014 அன்று ஈரோட்டில்  நடைபெற்றது. செழுமையான, ஆக்கபூர்வமான விவாதங்களோடு நல்ல ஆலோசனைகளும் தந்திட்ட செயற்குழுவாக அமைந்தது.

கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன

உதவும் உள்ளங்கள் NFTE BSNL  ஈரோடு மாவட்டம் சார்பாக ஆண்டு தோறும் நடத்தப்படும் விழாவினை இந்த ஆண்டும் சிறப்பாக நடத்த வேண்டும். அதற்கான பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.

சேலம் மாநிலச் செயற்குழுவில் மாநிலச் செயலர்  பணிக்குழு (WORKS COMMITTEE) குறித்து பயிலரங்கம் ஒன்றை ஈரோட்டில் நடத்தித் தர விடுத்த வேண்டுகோளை ஏற்று அதைச் சிறப்பாக நடத்திட வேண்டும்.

நமது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் சேவைக்கும் தடையாக உள்ள சிக்கல்கள் குறித்து பொது மேலாளரிடம் பேசி தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கிளை மாநாடுகள் நடத்திட வேண்டிய கிளைகள் கிளை மாநாட்டை நடத்திட வேண்டும் என்பதன் அவசியத்தை விளக்கி அதற்கான காலமும் நிர்ணயம் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டச் சங்கத்தின் இணைய தளத்தை மாவட்டத் தலைவர் குமார் பராமரிக்க வேண்டும்.

`இந்த ஆண்டு போனசைப் பெற்றிட மத்திய சங்கம் உறுதியான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என மாவட்டச் செயற்குழு வலியுறுத்தியது.


சீர்மிகு கிளை மாநாடு



டெலிபோன் பவன் கிளை மாநாடு 28.06.2014 அன்று கிளைத்தலைவர் தோழியர் லட்சுமி அவர்கள் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. கீழ்க்கண்டோர் புதிய நிர்வாகிகளாக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் தோழியர் S.P.நிலைமதி STSO
செயலர்    தோழர் A.நித்ய ஜெரால்டு TTA
பொருளர்  தோழர் M.ரவி TTA

புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
ஏழு ஆண்டுகள் சிறப்பாகச் செயல்பட்ட முன்னாள் கிளைச் செயலர் தோழர் தங்கமணி அவர்களுக்கு ந்மது பாராட்டுக்கள்.

மாநாட்டில் தோழியர் லட்சுமி, தோழியர் உஷாராணி ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு சிறப்புடன்நடத்தப்பட்டது.
மாநில உதவிச் செயலர் தோழர் யாசின், மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு மற்றும் தோழர்கள் மாலி, செல்வராஜன், ராஜமாணிக்கம் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

Monday, 7 April 2014

விழா



நமது மாவட்டச் சங்கத்தின் அலுவலகத் திறப்பு விழா 08.04.2014 அன்று காலை 11 மணிக்கு நடைபெறும்.
அகில இந்திய துணைப் பொதுச் செயலர் தோழர் மதிவாணன் அவர்கள் சங்க அலுவலகத்தைத் திறந்து வைப்பார்.

Tuesday, 1 April 2014

ப்ல்லாண்டு வாழ்க



தோழர் D.சுப்ரமணியன் (AGM ADMN)
தோழர் S.ஈஸ்வரன் (AGM NWOP CM)
தோழர் S.சீனிவாசன் SDE
தோழர் G.ஜெகதீசன் SDE
தோழர் R.கோவிந்தசாமி SSSO
தோழர் M.கஜபதிராஜன் TM
தோழர் A.M.முருஜகேசன் TM
தோழர் I. சதாசிவம் TM
தோழர் அய்யாசமி T M
தோழர் முருஜகேசன் TM

31.03.2014 அன்று இலாகா பணியை நிறைவாகச் செய்து பணி ஓய்வு பெற்றுள்ளனர்

அனைவருக்கும் நமது மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்

அவர்களின் பணி ஊய்வுக் காலம் சிறப்பாகவும் இனிமையாகவும் அமைய வாழ்த்துக்கள்

Saturday, 8 March 2014

மகளிர் தினம்



மார்ச் 8
சர்வதேச மகளிர் தினம்.
அனைத்து மகளிருக்கும்
மாவட்டச் சங்கத்தின்
மனம் நிறைந்த
வாழ்த்துக்கள்

Thursday, 6 March 2014

சொசைட்டி தேர்தல்



NFTE-TEPU-BSNLAU-FNTO
வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர்கள்

வரிசை எண்
பெயர்
பதவி
ஊர்
1
அங்குராஜ்.V
TM
ஈரோடு
5
குல்சார் அகமது.A
JTO
கோபி
11
நாகராஜன்.M
RM
பவானி
17
செல்வராஜ்.P
TTA
கோபி
18
சௌந்தரராஜு.G
TM
புதுப்பை
19
சுப்ரமணி.D
TM
பவானி
21
சுப்ரமணியன்.M II
TSO
ஈரோடு
23
சுந்தர்.N
SR TOA G
ஈரோடு

நமது  கூட்டணி வேட்பாளர்களின் வரிசை எண்கள்
நாம் வாக்களிக்க வேண்டிய வரிசை எண்கள்


1     5    11     17    18   19     21     23


Tuesday, 4 March 2014

பொது மேலாளருடன் சந்திப்பு



03.03.2014 அன்று மாலை 3 மணிக்கு நமது பொதுமேலாளரைச் சந்தித்தோம். வெள்ளகோவில் TTA  தோழியரை மாற்றலில் விடுவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தோம்.
அவர் விரும்பும் இடம் பெறுவதற்கும் அதற்கேற்றவாறு அவரை விடுவிக்கவும் பொதுமேலாளர் உறுதி அளித்தார்.
சந்திப்பின் போது DGM (CFA), AGM (ADMN &HR)  ஆகியோர் உடன் இருந்தனர்.

Friday, 28 February 2014

இதுவே முடிவு



  • மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவிகிதம் பஞ்சப்படி உயர்வு
  • EPFO  திட்டத்தில் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூபாய் ஆயிரம்
  • ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி

இவையே 28.02.2014 அன்று 2014 தேர்தலுக்கு முன் கூடிய கடைசி மத்திய அமைச்சரவைக் கூட்ட முடிவுகள்

வாழிய பல்லாண்டு



வாழிய பல்லாண்டு
இன்று 28.02.2013 அன்று நமது மாவட்டத்தில் கீழ்க்கண்டவர்கள் பணி ஓய்வு பெறுகின்றனர்.
1.திரு K. அட்லி DGM
2.திருமதி அனந்தலட்சுமி கருணாநிதி SDE
3. திரு S.தனபாலன் JTO
4.திரு T.V பழனிவேல் JTO
5. தோழர் V.சுந்தரராஜன் TM
6. தோழர் S.P காளியண்ணன் TM
7. தோழர் S.ராமன் TM
8. தோழர் K. சசீதரன் TM
9. தோழர் J. அத்தாவுல்லா TM
10. தோழர் J ரோக்கி TM
அனைவரின் பணி ஓய்வுக் காலம் இனிதுறவும் இன்பமுறவும் உளமார வாழ்த்துகிறோம். 




62



62
62 என்ற எண் சில நாட்களாக மிகவும் பிரபலமாகி விட்டது.
62 வருமா?
62 எப்போது வரும்?
62 வந்தால் எந்த தேதியிலிருந்து அமலாகும்?
62 வந்தால் அது நமக்கு வருமா?
62 வருவது சரியா தவறா?
இப்படி பல்வேறு கேள்விகள்
இந்திய நாட்டில்  அனைத்து முடிவுகளும் அரசியல் காரணங்களுக்காகவே எடுக்கப்படுகின்றன.
நாட்டின் பொதுவான நலன் மற்றும் நாட்டு மக்களின் பொதுவான நலன் குறித்த முடிவுகள் கனவாகி விட்ட காலம் இது.
அனைத்துக் கேள்விகளுக்கும் காலம் மட்டுமே விடை தரும்.



Friday, 31 January 2014

நலமுடன் வாழ்க



தோழர் R.பஞ்சாபகேசன் STSO
தோழர் R.நந்தகோபால் STSO
தோழர் S.பாலசுப்ரமணியன் TM
தோழர் E.C.சந்திரசேகரன் TM
தோழர் C. சண்முகம் TM
ஆகிய தோழர்கள் இன்று 31.01.2014 இலாகா பண்யிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். அவர்களது பணி ஓய்வுக் காலம் ம்கிழ்ச்சிகரமாக அமைந்திட உளமார வாழ்த்துகிறோம்.

Monday, 27 January 2014

இளைஞர்களுக்கு வாய்ப்பு



தற்பொழுது இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற குரல் பரவலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. எந்த அமைப்பும் இதற்கு விதி விலக்காக இல்லை.

நமது துறையில் பொறியியல் படிப்பு முடித்து, ஒரு கடினமான தேர்வு எழுதி, பயிற்சி முடித்து ஆயிரக் கணக்கான இளம் தோழர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தோழர்களுக்கு பதவி உயர்வு, சம்பள நிர்ணயம் போன்றவற்றில் தீர்க்கப்படாத பிரச்னைகள் உள்ளன. தங்களது பிரச்சனைக்கு  தீர்வு வரவில்லையே என்ற ஏக்கம் அவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.

இளைஞர்களின் திறமை, ஆற்றல், அறிவு இவற்றை முழுமையாகப் பயன்படுத்தும் நிறுவனமே வாழும். வளரும். நிலைத்து நிற்கும்.

இளைஞர்களின் திறமை, ஆற்றல், அறிவு இவற்றை 
மதிப்பதும்அவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதும், அவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகை செய்வதும் ஒரு நல்ல நிர்வாகத்தின் கடமை. அந்த கடமையை நிறைவேற்ற நமது நிர்வாகம் தவறி விட்டது. இந்நிலையில் பொறுப்புள்ள, சமூக நோக்கமுள்ள தொழிற்சங்கம் இப்பிரச்னையில்  நமது சங்கம் அக்கறை கொண்டு செயல்பட்டது. இப்பிரச்னைக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. அதுவே நிறுவனத்துக்கும், அந்த இளம் தோழர்களுக்கும், நமது சங்கத்துக்கும் நலலது.

காலத்தே சில பிரச்னைகளை தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டியது நமது கடமை.

Sunday, 26 January 2014

25.01.2014ல் கற்ற பாடம்

25.01.2014 அன்று மத்திய அரசுத் துறைகளான தபால், தொலைத்தொடர்பு (DOT), வருமானவரி மற்றும் பி.எஸ்.என்.எல் போன்றவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் சங்க ஆண்டு மாநாடு 

ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது..

நாம் கண்ட சிறப்பு அம்சங்கள்

ஆண்டுக்கு ஒரு முறை தவறாமல் ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் ஆண்டு மாநாட்டை நடத்துவது என முடிவு செய்து கடந்த 23 ஆண்டுகளாக இந்த நடைமுறையைப் பின்பற்றி வருகின்றனர்.

ஒரு அமைப்பிற்குத் தேவையான ஒற்றுமை உணர்வு, அறிவாற்றல், பிரச்னைகளைப் புரிந்து கொண்டு தீர்வு காணும் ஆற்றல், சகிப்புத்தன்மை,   அனைவரியும் அனைத்துக் கருத்துக்களையும் ஏற்று அரவணைக்கும் உயரிய் மனப்பாங்கு போன்ற குணங்களைக் காண முடிந்தது..

உலகத் தொழிலாளர்களை ஒன்றுபடச் சொனனவரின் வழி வந்தோரும் பிறரும் ஒற்றுமையை உடைத்து பிளவை உருவாக்கிய பின்னரும் தலைமை மீது நம்பிக்கை கொண்டு 600க்கும் மேற்பட்டோர் இந்த அமைப்பில் நம்பிக்கை கொண்டு உறுப்பினர்களாகத் தொடர்கின்றனர்.  

நிர்வாகிகள் தேர்வு ஒரு மனதாக போட்டியில்லாமல் நடைபெற்றது.


இவர்களையும் இவர்களின் செயல்பாடுகளையும் பார்க்கும் போது ஓய்வு பெற்றோர் போன்று உணர முடியவில்லை. மாறாக வருத்தமே இல்லாத வாலிபர்களைப் போன்ற உணர்வுதான் ஏற்பட்டது..