NFTECHQ

Friday, 15 September 2017

சென்னைத் தொலைபேசி

14.09.2017 அன்று சென்னைத் தொலைபேசி மாநிலச் செயலர் தோழர் மதி தலைமையில் 500க்கும் மேற்பட்ட  தோழர்கள் பங்கேற்ற ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணா சாலை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

வாடிக்கையாளர் சேவை மையங்களைத் தனியாருக்குத் தருதல், தனி டவர் கம்பெனி அமைத்தல் போன்ற முடிவுகளை எதிர்த்தும் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம்.

அரசியல் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள்  பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

தனி டவர் கம்பெனி அமைக்கும் முடிவை எதிர்த்து ஆர்ப்பாட்ட அறைகூவல். ஆனால் வாடிக்கையாளர் சேவை மையங்க்களைத் தனியாருக்கு விடும் திட்டம் குறித்து
ஏண் இந்த மெளனம்?

ஏன் இந்த மயான அமைதி? 
சேவை மையங்களைச் சூழ்ந்துள்ள கருமேகங்கள்

வாடிக்கையாளர் சேவை மையங்களைத் தனியார் நிறுவனங்கள் கையாளும் என்ற முடிவு அபாயகரமானது.

ஒரு மனிதனின் இதயத்துக்குள் வைரஸ் கிருமிகளைப் பாய்ச்சுவது போன்றது இந்த முடிவு.

இந்த முடிவு பல மோசமான விளைவுகளை உருவாக்கும்.

தற்போது உள்ள வாடிக்கையாளர்களைத் தக்க வைத்தல், புதிய வாடிக்கையாளர்களை இணைத்தல், மற்ற நிறுவனங்களிலிருந்து  நமது நிறுவனத்துக்கு வர விரும்புவோரை நம் வசப்படுத்துதல்
போன்ற பணிகளுக்கு    நெருக்கடிகள் உருவாகும். தடைகளும் தாண்டவமாடும்.

எதிர்பாராத பல சிக்கல்களும் உருவாகும்.

இது உடனடியாகக்      கவனிக்கப்பட்டு சேவைமையங்களை நமது வசமே தக்கவைத்துக் கொள்ள வழிவகை கான் வேண்டும்.

காலம் கடந்துவிட்டாலும் இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே எஞ்ச்சியுள்ளன.
கருததரங்குகள் நடத்தும் காலமல்ல இது. சூழ்நிலையின் கடுமையைக் கருத்தில் கொண்டு காலத்தே காரியமாற்ற வேண்டியது அவசியம்.  

"நல்ல பொழுதையெல்லாம்
தூங்கிக் கழிப்பவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன்
தானும் கெட்டார்"-பட்டுக்கோட்டை

2017 ஜூன் மாதமே இதற்கான டெண்டர் விடப்பட்டும் அதைப்பற்றி அறியாமல் இருந்தது விழிப்புணர்வற்ற தன்மையாகும்.

"விழித்துக் கொண்டோர் மட்டுமே பிழைக்க முடியும்.


விழித்துக் கொள்ள்வார்களா?

Monday, 4 September 2017


வாழிய பல்லாண்டு
31.08.2017 அன்று இலாகா பணி ஓய்வு பெற்ற
தோழியர் S.V.வான்மதி OS
தோழர் C.ராமன்குட்டி OS
தோழர் M.குருசாமி OS
தோழர் M.ராஜேஸ்வரன் TT
மற்றும் தோழியர் வசந்தமல்லிகா சுரேஷ் (விருப்ப ஓய்வு)

ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்

பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Thursday, 24 August 2017

உச்சக்கட்ட அடாவடித்தனம்

வங்கி ஊழியர்கள் 22.08.2017 அன்று நாடு முழுமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

"வங்கிகள்  இணைப்பு கூடாது" என்பதும் ஒரு கோரிக்கை.

ஆனால் அடுத்த நாளே அதாவது    23.08.2017 அன்று மத்திய அமைச்சரவை கூடி வங்கிகள் இணைப்பை உடனடியாக அமலாக்க வேண்டும் என்ற முடிவினை எடுக்கிறது.  அதற்கான பணிகளை விரைவுபடுத்துமாறு ரிசர்வ் வங்கி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.


அரசின் இப்படிப்பட்ட  போக்கு கண்டிக்கத்தக்கது.

Friday, 18 August 2017

நன்கொடை?
2012-13 மற்றும் 2015-16 நிதியாண்டுகளில் 5 தேசியக் கட்சிகள் பெற்ற நன்கொடைத் தொகை ரூ.1,070.68 கோடி. இதில் 89% அதாவது ரூ.956.77 கோடி கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அளித்த நன்கொடையாகும்.

இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நன்கொடைகளில் பாஜக மட்டும் ரூ.705.81 கோடி பெற்றுள்ளது. அதாவது 2,987 கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜகவுக்கு இந்த நன்கொடையை அளித்துள்ளது.

ஜனநாயகச் சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள இந்தப் புள்ளி விவரங்களின்படி கார்ப்பரேட் நிறுவன நன்கொடைகளில் மற்ற 4 கட்சிகள் பெற்றதவிட பாஜக 3 மடங்கு அதிக நன்கொடைகளைப் பெற்றுள்ளது. அடுத்ததாகப் பயனடைந்த தேசியக் கட்சி காங்கிரஸ், இது 167 கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து ரூ.198.16 கோடி நன்கொடை பெற்றுள்ளது.

ஆவணண்ங்களின்படி பகுஜன் சமாஜ் கட்சி இந்தக் காலக்கட்டத்தில் ரூ.20,000த்துக்கும் மேல் நன்கொடையாகப் பெறவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கார்ப்பரே நிறுவனங்களிடமிருந்து ஆகக்குறைந்த தொகையான ரூ.18 லட்சம் கிடைத்துள்ளது. இதனை அளித்தது 17 நிறுவனங்கள்.
பாஜக, காங்கிரஸ், தேசியவாதக் காங்கிரஸ் கட்சிகளே அதிகம் இத்தகைய நன்கொடைகளைப் பெற்றுள்ளன. அதாவது என்னமாதிரியான கார்ப்பரேட் நிறுவனங்கள் என்பதில்தான் சுவாரசியம் அடங்கியுள்ளது,

பெரும்பாலும் சுரங்கத்துறை, ரியல் எஸ்டேட், மின்சாரம், செய்தித்தாள்கள் மற்றும் பிற வர்த்தக ஆர்வ நிறுவனங்கள்தான் இந்த 3 கட்சிகளுக்கும் அதிக தொகையை நன்கொடையாக அளித்துள்ளன.
மொத்தம் 14 தொழிற்துறைகளிலிருந்தும் அதிக நன்கொடையைப் பெற்றுள்ளது பாஜகதான். இதில் ரியல் எஸ்டேட் துறை சுமார் ரூ.105.20 கோடி, சுரங்கம், கட்டுமானம், ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் ரூ.83.56 கோடி, ரசாயனம் மற்றும் மருந்துற்பத்தி நிறுவனங்கள் ரூ.31.4 கோடி என்று பாஜகவுக்கு நன்கொடை வழங்கியுள்ளன
*********************************************
நமது கருத்து

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இவ்வாறு வெள்ளையாகவே நன்கொடயென்றால் கருப்பாக எவ்வளவு இருக்கும்?

கார்பரேட் நிறுவனங்களிடம் இவ்வாறு நன்கொட பெறும் கட்சி பொத்துத்துறை நிறுவனங் வளர உதவுமா?

வாழத்தான் விடுமா?

நமது ஒற்றுமை அதன் வழியான போராட்டங்கள் மூலமே பொத்துதுறைகளைக் காத்திட முடியும்.

Monday, 14 August 2017

விடுதலைத் திருநாள்
வாழ்த்துக்கள்

சிறைக்குள் அடைக்கப்படனர்.
சிறையின் அறைக்குள்ளும்
சிறையின் வெளியிலும்
சித்ரவதைகளை அனுபவித்தனர்.

கொட்டடிச் சிறைக்குள்
கொடுமைகளின் கும்மாளம்.

எண்ணற்ற உயிர்ப்பலிகள்
ஏராளமான தியாகங்கள்

சுதந்திரம் வந்தது.
சுதந்திரம் பெற
சிறைக்குச் சென்று
சித்ரவதை கண்டு
இன்றும் வாழும் சிலருக்கும்
கோட்டை கொத்தளத்தில்
கொடியேற்றும்
வாய்ப்பற்ற நிலை.

ஆனால் ...
சிறைக்குள் இருக்க வேண்டியவர்களுக்கு
கோட்டை கொத்தளத்தில்
கொடியேற்றும் வாய்ப்பு.

கல்வி கற்க வந்த
பாரத மாதாவின்
பச்சிளம் குழந்தைகள்
கல்விக் கூடத்திலேயே
வெந்து செத்தார்கள்.

சாகடித்தவர்களுக்கு
சாதகமான தீர்ப்புக் காற்று.

சுதந்திரப் பிரதேசத்தில்
சுவாசம் தரும் காற்றின்றி
சுவாசத்தை இழக்கும்
பாரத மாதாவின்
பச்சிளம் குழந்தைகள்.

இப்படி பல சிந்தனைகள் நம
இதயத்தைச் சிதைத்தாலும்
நம்பிக்கைக் இழக்காமல்
நடைபோட வேண்டிய கட்டாயச் சூழல்.

எல்லாம் மாறும்
ஏற்றம் சேரும்.
உணர்வுகளை உள்ளுக்குள் வைத்து
அறிவைப் பயன்படுத்தி
நாட்டுக்கு ...
நாட்டு மக்களுக்கு...
நம்மால் ஆனதைச் செய்வோம்.

வேளிவியால் வந்த விடுதலையை
விடுதலையால் பெற்ற
உரிமைகள் காப்போம்.

அனைவருக்கும்
விடுதலயத் திருநாள்

வாழ்த்துக்கள்.

Wednesday, 9 August 2017

இது மாற்றமா?

அமைச்சருடன் சந்திப்பு
BSNL ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 08.08.2017 அன்று டெல்லியில் BSNL ஊழியர்கள் அதிகாரிகள் தேசியகூட்டமைப்பு சார்பாக இலாக்கா அமைச்சர் திரு.மனோஜ் சின்கா அவர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. நாடாளுமன்ற மேலவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா அவர்களால் கூட்டமைப்பு வழிநடத்தப்பட்டது. NFTE பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர் சிங் அவர்களின் தலைமையில் கூட்டமைப்புத் தலைவர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கை மனுவை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சாதகமாக பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இப்படிப்பட்ட நிகழ்வுகள் தோழர் குப்தா காலத்தில் நட்ந்ததில்லை.

பேச்சுவார்த்தை நடைபெறும்.
தேவையெனில் போராட்டம் நடைபெறும்.
உடன்பாடு வரும்.
உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.

மாற்றம் ஒன்றே மாறாதது.

இது மாற்றமா?

Friday, 4 August 2017


பவளவிழா வாழ்த்துக்கள்
அன்பு தோழர் ஆர்.கே. அவர்களுக்குக்கு உள்ளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். 


மிகச் சிறந்த தொழிற்சங்கப் போராளியாக செயல்பட்ட தோழர் ஆர்.கே. நாளை நடைபெறும் விழா சிறக்க வாழ்த்துக்கள்.

Monday, 31 July 2017

வாழிய பல்லாண்டு

இன்று பணிநிறைவு பெறும்
தோழியர் P.வசந்தி OS
தோழர் L.பரமேஸ்வரன்  TT
தோழர் K.நாகராஜன் JE
தோழர் P.ஜெகனாதன் TT
தோழர் S.மாணிக்கம் TT
ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ

வாழ்த்துகிறோம்.

Thursday, 27 July 2017

பண்பாடும் பாரம்பரியமும்

1991ல் போபால் E3 அகில இந்திய மாநாடு.

அதற்குப் பிறகு   அடுத்த E3 அகில இந்திய மாநாட்டை தமிழகத்தில் நடத்துவது என்ற ஆலோசனை யை திருச்சியில் நடைபெற்ற மாநிலச் செயற்குழுவில் முன்மொழியப்பட்டது.

அந்த ஆலோசனையை  அப்போதைய மாநில உதவிச் செயலர் தோழர் அபிமன்யூ ஏற்கவில்லை. அதற்குச் சில காரணங்கள் அவருக்கு இருந்தன.

ஆயினும் விவாதங்களுக்குப் பிறகு அகில இந்திய மாநாட்டை தமிழகத்தில் நடத்துவது என மாநிலச் செயற்குழு முடிவெடுத்தது.

அகில இந்திய  மாநாடு,
மாநில மாநாடு மற்றும் பிற நிகழ்வுகளை நடத்துவது குறித்து மாநிலச் செயற்குழுவில் விவாதித்து ஜனநாயக அடிப்படையில் செயல்படும் பண்பாடும் பாரம்பரியமும் தமிழ் மாநிலச் சங்கத்தில் இருந்தது.

ஆனால் இன்று...


தொடரும்
செய்தி


NFTE மற்றும் தோழமைச் சங்கத் தலைவர்கள் இன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கான அமைச்சர் திரு ஆனந்த் ஜி கீத் அவர்களைச் சந்தித்தனர். மூன்றாவது ஊதிய மாற்றத்துக்கான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். பரிசீலித்து விரைவில் அறிவிப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
ஏவுகணை நாயகன்.
எல்லோருக்கும் பிடித்தவர்.
எலாரையும் பிடித்தவர்.
என்பத்து நான்கு வயது வாழ்ந்தவர்.
எழுபத்து ஐந்தைக் கொண்டாட  விரும்பாதவர்.
ஏழ்மையில் உழன்றவர்
ஏற்றம் கண்சடவர்

இன்று அப்துல் கலாம் நினைவு தினம்

Friday, 21 July 2017

ஏச்சுப்  பொழக்கும் பொழப்பே சரிதானா?
பார்தி ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உட்பட 6 தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் 2010-11 மற்றும் 2014-15 ஆண்டுகளில் தங்கள் வருவாயை ரூ.61.064.5 கோடி அளவுக்கு தங்கள் வருவாயைக் குறைத்துக் காட்டியுள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அரசுக்கு ரூ.7,697.6 கோடி குறைவான வருவாய் வந்துள்ளது.

வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட சிஏஜி அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது, அதாவது 6 நிறுவனங்களின் “சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் தொகையைக் குறைத்துக் காண்பித்தது ரூ.61,064.5 கோடியாகும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா, ஐடியா செல்லுலார், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல் ஆகிய இந்த 5 நிறுவனங்களுக்கான தணிக்கை ஆண்டுக் காலம் 2010-11 முதல் 2014-15 வரை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாறாக, சிஸ்டிமா ஷியாம் நிறுவனத்திற்கான தணிக்கை ஆண்டு 2006-07 முதல் 2014-15 வரையாகும்.

இந்தக் குறைந்த வருவாய் காட்டலினால் அரசுக்குச் சேர வேண்டிய தொகையில் ரூ.7,697.62 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மம்மி
ஒரு கல்லுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு? நாம் தினமும் வளர்கிறோம். ஆனால், கல் அப்படியே இருக்கும். கல் மட்டுமல்ல, உயிரில்லாத எந்தப் பொருளுக்கும் வளர்ச்சி இல்லை. கல், மண், சிலை, படம், புத்தகம், மேஜை, வீடு, பேனா, பெட்டி என்று அனைத்துப் பொருட்களுக்கும் இது பொருந்தும். இப்படி நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால், இந்த நிமிடமே உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

1835-ம் ஆண்டு என்ன நடந்தது தெரியுமா? பிரிட்டிஷ் அருங்காட்சியகத்துக்கு ஒரு பொருள் வந்துசேர்ந்தது. ஒரு பெரிய கறுப்புப் பெட்டி. கவனமாக உள்ளே எடுத்துச் சென்றார்கள். பெட்டியின் மேல்புறத்தில் அழகிய, வண்ணச் சித்திரங்கள் இருந்தன. அதே சமயம் அது மிகவும் பழைய பெட்டி என்பதால் உடைந்துவிடக் கூடாதே என்று பொறுமையாகப் பிரித்தார்கள். பெட்டிக்கு உள்ளே கரிய நிறத்தில் ஒரு மம்மி. அதாவது, பத்திரமாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு மனித உடல்.
பெட்டிக்கு உள்ளே இருந்த எகிப்திய எழுத்துகளை ஆராய்ந்தபோது பல ஆச்சரியமூட்டும் விஷயங்கள் தெரியவந்தன. பழங்கால எகிப்தில் வாழ்ந்த ஒரு மனிதனின் மம்மிதான் அது. அவர் பெயர், Hornedjitef. ஒரு கோயிலில் பூசாரியாக இருந்திருக்கிறார். மூன்றாம் தாலமி என்னும் மன்னரின் காலத்தில் வாழ்ந்திருக்கிறார். அப்படியானால் இந்த மம்மியின் வயது கிட்டத்தட்ட 2,230 ஆண்டுகள்.

அடடா, ஒரு பழைய பெட்டிக்குள் இத்தனை வரலாறா என்று திகைத்து மேலும் ஆராய்ந்தார்கள். பல்வேறு வண்ணங்களில் பெட்டியின் உள்ளேயும் வெளியேயும் நிறைய எழுத்துகளும் ஓவியங்களும் காணப்பட்டன. பெட்டிக்கு உள்ளே மேல்புறத்தில் குட்டிக் குட்டி நட்சத்திரங்கள் வரையப்பட்டிருந்தன. மம்மிக்கு அருகில் இருந்த சிறிய கலை வேலைப்பாடு கொண்ட பொருட்கள் காணப்பட்டன. அவை என்ன? பழைய வரலாற்று நூல்களை எடுத்து வைத்துத் தேடியபோது, அவை மந்திர சக்தி வாய்ந்த தாயத்துகள் என்று கண்டுபிடிக்கப்பட்டன.
இப்போது ஓரளவுக்கு அந்த மம்மியைப் பற்றி அவர்களுக்குப் புரிந்துபோனது.
அந்தப் பூசாரி மீண்டும் உயிருடன் திரும்ப ஆசைப்பட்டிருக்கிறார். எனவே, தன் உடலைக் கவனமாகப் பாதுகாக்கச் சொல்லி, தன்னுடைய உதவியாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அவர்களும் பயபக்தியுடன் அவரைப் பதப்படுத்தியிருக்கிறார்கள்.

அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக கூடவே தாயத்துகளையும் வைத்திருக்கிறார்கள். திரும்பவும் உயிர் வருவதற்காகச் சில மந்திரங்களையும் பொறித்து வைத்திருக்கிறார்கள்.
ரொம்ப நன்றி மம்மி, உன்னிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டோம் என்று சொல்லி, பெட்டியைப் பூட்டி வைத்தார்கள் ஆய்வாளர்கள். பல ஆண்டுகள் கழிந்த பிறகு புதிய ஆய்வாளர்கள் வந்து திரும்பவும் பெட்டியைத் திறந்தார்கள். மீண்டும் முதலில் இருந்தே ஆராயத் தொடங்கினார்கள். மேலும் பல விஷயங்கள் கிடைத்தன. மம்மி இருந்தது ஒரு பெட்டியில் அல்ல. அது உண்மையில் ஒரு சிறிய உலகம்.

பெட்டியைத் திறந்தால் உள்ளே மேல்புறத்தில் வானம். அதனால்தான் அங்கே நட்சத்திரங்கள் வரைந்திருக்கிறார்கள். அங்கும் இங்குமாக உள்ள கோடுகள், சாதாரணக் கோடுகள் அல்ல, அது திசை காட்டும் ஓவியம். அதாவது, வரைபடம்.
மம்மி சொர்க்கத்துக்குப் போயாக வேண்டும். ஒருவேளை அதற்கு வழி தெரியாவிட்டால் அங்கும் இங்கும் அலையக் கூடாது அல்லவா? அதனால்தான் சொர்க்கத்துக்கு எப்படிச் செல்வது என்பதற்காக அந்த வரைபடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதையெல்லாம் கண்டுபிடித்த ஆய்வாளர்கள் ஆச்சரியப்பட்டுப்போனார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் இப்படியெல்லாமா யோசித்திருக்கிறார்கள்!
சரி, மம்மி நிறைய சொல்லிக் கொடுத்துவிட்டது, இனி மேற்கொண்டு திறக்கவேண்டியிருக்காது என்று நினைத்து பெட்டியை இறுக்கமாக மூடினார்கள். பல ஆண்டுகள் கழிந்தன. சில புதிய ஆய்வாளர்கள் மீண்டும் ஆர்வத்துடன் வந்து பெட்டியைத் திறந்தார்கள். இந்தமுறை மம்மியை வெளியில் எடுத்து நவீன அறிவியலைப் பயன்படுத்தி ஸ்கான் செய்ய ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு முக்கியமான தடயம் கிடைத்தது. மம்மியின் முதுகில் சில எலும்புகள் முறிந்திருந்தன. உயிருடன் இருந்தபோது அந்த மனிதனுக்கு முதுகு வலி இருந்திருக்க வேண்டும் என்று கண்டுபிடித்தார்கள்.
உற்சாகத்துடன் மேலும் ஆராயத் தொடங்கினார்கள். இந்த முறை அவர்களுக்குப் பல சந்தேகங்கள் இருந்தன. இவர் உயிருடன் இருந்தபோது என்ன சாப்பிட்டிருப்பார்? எந்த மாதிரியான ஆடையை அணிந்திருப்பார்? அவருக்கு எழுதப் படிக்கத் தெரியுமா? இசை பற்றியும் ஓவியம் பற்றியும் தெரிந்திருக்குமா? அவர் எவ்வளவு மணி நேரம் தூங்குவார்? அவருடைய வீடு எப்படி இருந்தது? அவர் என்ன மாதிரியான கடவுளை வணங்கியிருப்பார்? அவருக்குப் பல் வலி, தலை வலி எல்லாம் வருமா?

தெரியவில்லை. ஆனால் விடை தெரியும்வரை அவர்கள் தேடிக்கொண்டேதான் இருப்பார்கள். பாருங்கள், கிடைத்தது என்னவோ ஒரே ஒரு பெட்டிதான். ஆனால், அதை ஒவ்வொரு முறை திறக்கும்போதும் புதிது புதிதாக நிறைய கற்க முடிகிறது. முதல்முதலில் 1835-ம் ஆண்டு திறந்தபோது அந்த மம்மியைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது. இப்போதோ நிறைய தெரிந்துகொண்டிருக்கிறோம். காரணம் நம்முடன் சேர்ந்து அந்தப் பெட்டியும் வளர்ந்துகொண்டு இருக்கிறது. அதனால்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து பற்றிய நம் அறிவும் வளர்ந்திருக்கிறது, இல்லையா?

இந்தப்  பதிவைத் தந்து உதவிய தோழர் மாலி அவர்களுக்கு நன்றி

Thursday, 20 July 2017

மத்திய அமைச்சரவை முடிவு
பொத்துத்துறை ஊழியர்களுக்கு 15 சதம் ஊதிய உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் விபரங்க்கள் பின்னர்.

Wednesday, 19 July 2017

சம்பள உயர்வு
இருபத்து நான்கு மணி நேரமும்
இடையறாது மக்கள் பணியாற்றும்
இருநூற்று 33 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும்
இந்த மாதம் முதல் சம்பள உயர்வாம்.
இதுவரை மாதம்தோறும் பெற்றது 50000.
இந்த மாதம் முதல் பெறவுள்ளது 1,05,000
இனி உயர்வது மாதம் 50000.
இது மட்டுமல்ல
தொகுதி மேம்பாட்டு நிதி ஆண்டுக்கு 2 கோடி

என்பது இனி 2.5 கோடியாம்.

Saturday, 8 July 2017

அஞ்சலி

தோழர் ஞானையா


NFPTE சம்மேளனத்தின் பொதுச் செயலராகப் பணியாற்றி பல பிரச்னைகளுக்குத் தீர்வு கண்ட தோழர்.

NFPTE சம்மேளனத்தில் பிளவு ஏற்பட்ட போது சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு மீண்டும் ஒரு மனதாக பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆழந்த அறிவாற்றலும்
அபாரமான நினைவாற்றலும் நிறைந்தவர்

நாற்பதுக்கும் மேற்பட்ட பயனுள்ள புத்தகங்களை எழுதியுள்ளார்.

வயதின் காரணமாக இயற்கையான உடல் சோர்வு இருந்தபோதும்சிந்தனையில் இளைஞனாக விளங்கினார்

சிறந்த சமூகச் சிந்தனையாளர்

மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர் கலவி மையம் என்ற அமைப்பைத் துவங்கி ஏராளமான தோழர்களை அந்த இயக்கத்தில் இணைய வைத்தார்.

பல ஆண்டுகள் அந்த அமைப்பின் செயலாலராகப் பணியாற்றி தோழர் மதியிடம் அப்பொறுப்பைக் கொடுத்தார்.

97 ஆண்டுகள் வாழ்ந்து 08.07.2017 அன்று தனது சுவாசத்தை நிறுத்திக் கொண்டார்.

அவரது மறைவுக்கு நமது கொடி தாழ்ந்த அஞ்சலி.

தொழிலாளிகளுக்காக தன்னலம் துறந்து போராட வேண்டும் என்பதே அவர்   வாழ்வு தரும் பாடம். அதுவே இன்று பயில வேண்டிய பாடம்.

Friday, 7 July 2017

என்ன கணக்கு


BSNL நிறுவன ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய மாற்றத்தால்  ஏற்படும் செலவுகள் குறித்து DOT விபரங்களைக் கேட்டுள்ளது.

Wednesday, 5 July 2017

சிறப்புடன் நடைபெற்ற பட்டினிப்போர்

03.07.2017 மற்றும் 04.07.2017 ஆகிய இரண்டு நாட்களும் நடைபெற்ற பட்டினிப்போரில் NFTE, TEPU,SEWA அமைப்புகளைச் சார்நத் தோழியர்களும்  தோழர்களும் திரளாகப் பங்கேற்றனர்.

03.07.2017 அன்று TEPU இயக்கத்தின் முன்னணித் தலைவர் தோழர் காசிராஜன் துவக்கி வைத்தார்.
தோழர்கள் மாலி, செல்வராஜன்
பரமேஸ்வரன் (மாவட்டச் செயலர் BSNLEU)
ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி உரையாற்றினர்.

04.07.2017 அன்று  NFTE  மாநில அமைப்புச் செயலர் தோழர் புண்ணியகோட்டி துவக்கிவைத்தார்.
கூட்டமைப்பைச் சார்ந்த முன்னணித் தோழர்கள் கருத்துரையாற்றினர்.

மலைவாழ்மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபடும் தோழர் V.P. குணசேகரன், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஏற்றம் காண உழைத்திடும் தோழர் சிறுத்தைவளவன், தோழர் சுப்ரமணியம் (AIBSNLEA) தோழர் தனுஷ்கோடி  (AIBSNLEA) தோழர் V.சண்முகம் , (SNEA)
தோழர் T.P.பழனிசமி (SNEA) தோழர் பரமேஸ்வரன் (BSNLEU) ஆகியோர் வாழ்த்துரை வழங்க்கி சிறப்பித்தனர்.
NFTE மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு, TEPU மாவட்டச் செயலர் தோழர் ஷாஜகான் SEWA மாவட்டச் செயலர் தோழர் சதாசிவம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.

வாழ்த்துரை வழங்கிய அனைத்து தலைவர்களுக்கும் நன்றி.

Monday, 3 July 2017

பட்டினிப்போர்

மூன்றாவது ஊதிய மாற்றத்துக்கான DPE வழிகாட்டு நெறிமுறைகளை உடனே வெளியிடக் கோரியும்,

மூன்றாவது  ஊதிய மாற்றத்துக்கான பேச்சு வார்த்தையை உடனே துவக்கக் கோரியும்

இன்றும் (03.07.2017)
நாளையும் (04.07.2017)
பட்டைனிபோரில்

திரளாகப் பங்கேற்பீர்.