NFTECHQ

Tuesday, 12 August 2014

விழாக் காலச் சலுகை



14.08.2014 முதல் 11.11.2014 வரை 90 நாட்களுக்கு
ரூபாய் 100க்கு டாக்டைம் ரூபாய் 100
ரூபாய் 150க்கு டாக்டைம் ரூபாய் 150
ரூபாய் 250க்கு டாக்டைம் ரூபாய் 250
ரூபாய் 350க்கு டாக்டைம் ரூபாய் 350
ரூபாய் 550க்கு டாக்டைம் ரூபாய் 575
ரூபாய் 750க்கு டாக்டைம் ரூபாய் 790
டேட்டா சலுகை
14.08.2014 முதல் 11.11.2014 வரை 90 நாட்களுக்கு

ரூ561   5 GB  60 நாட்கள்
ரூ821   7 GB  90 நாட்கள்
ரூ1011  10 GB  90 நாட்கள்
ரூ1949 20 GB  90 நாட்கள்

Monday, 11 August 2014

மாவட்டச் செயற்குழு



13.08.2014 அன்று மாவட்டச் செயற்குழு நடைபெறும்.
02.09.2014 அன்று நடைபெறவுள்ள பணிக்குழு பயிலரங்கம் மற்றும் உதவும் உள்ளங்கள் NFTE BSNL ஈரோடு மாவட்டம் சார்பான விழா

ஆகியவற்றைச் சிறப்பாக நடத்துவது பற்றி திட்டமிடப்படும்.

Saturday, 9 August 2014

வி ஆர் எஸ் VRS



பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம்: மத்திய அரசு

பிஎஸ்என்எல் செலவினத்தைக் குறைக்கும் வகையில், அதன் ஊழியர்கள் ஒரு லட்சம் பேருக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டம் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்தத் தகவலை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்தார்.இது தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் டாக்டர் மைத்ரேயன், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், நஷ்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல்லுக்கு செலுத்த வேண்டிய தொலைத்தொடர்பு சேவைக்குரிய நிலுவைக் கட்டணத்தை வசூலிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ரவிசங்கர் பிரசாத் வெள்ளிக்கிழமை அளித்த எழுத்துப்பூர்வ பதில் வருமாறு:இந்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி பிஎஸ்என்எல்லுக்கு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1,206.65 கோடி அளவுக்கு நிலுவைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதில், ரூ.1,053.84 கோடிக்குரிய கட்டணம் தொடர்பாக தனியார் நிறுவனங்கள் சில முறையீடுகளை செய்துள்ளன.நிலுவைக் கட்டணத்தை வசூலிக்க தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து வங்கி உத்தரவாதம் பெறுவது, மத்தியஸ்த முறையில் பேச்சு நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றில் பிஎஸ்என்எல் ஈடுபட்டுள்ளது.வாடிக்கையாளர்கள் தரைவழி தொலைபேசி சேவையில் இருந்து செல்போன் சேவைக்கு வேகமாக மாறி வருவதால் பிஎஸ்என்எல் சேவை எண்ணிக்கை சரிவடைந்து வருகிறது. தொலைத் தொடர்புத் துறையில் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், போட்டியை சமாளிக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதியை விரிவுபடுத்த தேவைப்படும் முதலீடுகள் பிஎஸ்என்எல் வசம் இல்லை. அதன் ஊழியர்களுக்கான செலவினம் கூடுதலாக உள்ளது.பிஎஸ்என்எல் புனரமைப்பு நடவடிக்கையாக, அந்த நிறுவனம் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய ரூ.1,411 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல்லின் வளங்களை உரிய முறையில் பயன்படுத்தவும், அதன் ஊழியர் செலவினத்தைக் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த புனரமைப்புத் திட்டத்தை மத்திய அரசு வகுத்து வருகிறது. பிஎஸ்என்எல் நிர்வாகமும் தனியாக புனரமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சுமார் ஒரு லட்சம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்தை அந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் மூலம் ஊழியர்களுக்கான செலவினம் குறையும். இந்தத் திட்டம் தொடர்பான பரிந்துரைகளை மத்திய அமைச்சர்கள் குழு ஆய்வு செய்த பிறகு, பிஎஸ்என்எல்லுக்கு தேவைப்படும் நிதியுதவியை மத்திய அரசு வழங்கும் என்றார் ரவிசங்கர் பிரசாத்

Wednesday, 6 August 2014

கோரிக்கைகள்




கூட்டுப் போராட்டக் குழு



07.08.2014
 ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகள்


1.போனஸ்  வழங்கு 2.01/01/2007க்குப்பின் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு ஊதிய நிர்ணயத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளைக் களை
3ஆண்டு உயர்வுத்தொகை தேக்கநிலை பிரஸ்னைக்கு தீர்வு காண்
4.பரிவு அடிப்படையிலான பணி நியமனத்தில் விதிகளை தளர்த்து
5.மருத்துவப்படி,
L TC  க்காக விடுப்பைக் காசாக்குதல் ஆகியவற்றை மீண்டும் கொடு
6.BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அளித்தல்.
7.  01/01/2007ல் இருந்து 78.2 IDA நிலுவை வழங்கு.
8.அனைத்து அலவண்ஸ்களையும்  உயர்த்தி வழங்கு.
9.பதவி உயர்வில் அதிகாரிகளுக்கான  E1 சம்பள விகிதம் வழங்கு
10.SRTOA தோழர்களின் குறைகளை நீக்குதல்.
11.பதவிகளுக்கான பெயர் மாற்றம் செய்
12.JTO பதவிகளில் தற்காலிக பதவி வகிக்கும் TTA தோழர்களை நிரந்தரப்படுத்து
13.இலாக்கா தேர்வுகளில் SC/ST  தோழர்களுக்கான மதிப்பெண்களில் தளர்வு செய்
14.JTO  மற்றும் JAO தேர்வு முடிவுகளை மறு பரிசீலனை செய்
15. ஆளெடுப்பு மூலம் புதிய ஊழியர்களை நியமனம் செய்
16.விடுபட்ட மஸ்தூர் தோழர்களை நிரந்தரம் செய்
17.ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம்,EPF,ESI வசதி வழங்குதல்.
18.MANAGEMENT TRAINEE தேர்வெழுத ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்கு
19.TM பயிற்சி முடித்து நிரந்தரம் ஆகாதவர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தல்.
20.மஸ்தூர் தோழர்களுக்கு IDA சம்பள விகிதத்தில் சம்பளம் வழங்கு.
21.SC/ST இட ஒதுக்கீட்டில்  நிரப்பப்படாத காலியிடங்களை நிரப்பு
22.SR.TOA, DRIVER, மற்றும் TM பதவிகளின் சம்பள விகிதங்களை உயர்த்து
23. 01/10/2000க்கு முன் பதவி உயர்வு பெற்று 01/10/2000க்குப்பின் ஆண்டு உயர்வுத்தொகை பெற விருப்பம் கொடுக்க அனுமதி.
24.ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 IDA இணைப்பை இனியும் தாமதமின்றி வழங்கு
25.முதலாம் சம்பள மாற்றத்தில் உருவான அனாமலிகளை நீக்கு
26.JTO/JAO/TTA/TM தேர்வுக்கான தகுதிகளைத் தளர்த்து.
27.அழைப்பு மையங்களில் CALL CENTERகளில் BSNL ஊழியர்களை பணியமர்த்து.
28. ஊழியர்கள் அனைவருக்கும்க் இலவச சிம் கார்டு வழங்கு
29.TELECOM FACTORYகளை மறு சீரமைப்பு செய்
30.01.10.2000 க்கு முன் பயிற்சிக்கு சென்று BSNLலில் பணி நியமனம் பெற்றவர்களை   DOT ஊழியராக கருது.

Tuesday, 5 August 2014

சொத்து



நமது BSNL நிறுவனத்துக்கு நாடு முழுமையும் உள்ள நிலத்தின்  அளவு 48,52,02,459 சதுர அடிகள். 11,128.497 ஏக்கர்.

நமது BSNL நிறுவனத்துக்கு நாடு முழுமையும் உள்ள கட்டிடங்களின் அளவு 13,15,36,259 சதுர அடிகள். 301.6802 ஏக்கர்.
நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்த தகவல்

Saturday, 2 August 2014

விற்பனை நிலவரம்



ஜூலை 2014ல் ஈரோடு மாவட்டத்தில் 5045 புதிய ப்ரி பெய்டு மொபைல் இணைப்புகள் வழங்க்கப்பட்டுள்ளன. இதில் வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாக 3045 (60.4%) இணைப்புகளும் FRANCHISEE மூலாமாக் 2045 (39.6) இணைப்புகளும் வழங்க்கப்பட்டுள்ளன.
ஈரோடு MCCC 1134 இணைப்புகள் வழங்கி முதலிடம் பெறுகிறது.
66 புதிய போஸ்ட்பெய்டு இணைப்புகள் ஜூலை 2014ல் வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாக் மட்டுமே வழங்க்கப்பட்டுள்ளன.
இதிலும் 36 இணைப்புகள் வழங்கி ஈரோடு MCCC  முதலிடம் பெறுகிறது.
டேட்டா கார்டு, டம்மி சிம், GSM FWP கருவி விற்பனையிலும்
ஈரோடு MCCC  முதலிடம் பெறுகிறது.
கோபி வெங்க்கடேஸ்வரா FRANCHISEE  637 ப்ரிபெய்டு இணைப்புகள் வழங்க்கியுள்ளது.
ஈரோடு MCCC யில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. மேலும் 3 ஊழியர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தப்பட்டால் செயல்பாடுகள் மேலும் சிறக்கும். இது குறித்து ந்மது மாவட்டச் சங்கம் பொது மேலாளரிடம் வேண்டுகோள் வைத்துள்ளது.

Friday, 1 August 2014

நல்ல செய்தி



நமது நாட்டின் மிகப் பெரிய
பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ONGC) நமது BSNL மற்றும் MTNL நிறுவனங்களின் தொலைத்தொடர்பு சேவைகளைப் பெறுவதற்கான ஒப்பந்த்ம் உருவாகியுள்ளது. இந்த  
ஒப்பந்தத்ம் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும்.
மற்ற பொதுத்துறை நிறுவனங்க்களும் அரசுத் துறைகளும் இப்படி ஒரு முடிவை எடுத்தால், மகிழ்ச்சி கூடும்.
அதற்கான முயற்சியை ந்மது நிறுவனமும் எடுக்க வேண்டும். அனைத்து மத்திய் சங்க்கங்களும் இதற்கான முற்சியை மேற்கொள்ள வேண்டும்.


Thursday, 31 July 2014



நலமுடன்  வாழ்க

1.திரு R.சாமிநாதன் DGM
2.தோழியர் G.பெர்சி தாராபாய் SDE
3.தோழர் P.சென்னியப்பன் STSO
4.தோழர் K.கிருஷ்ணசாமி TM
5. தோழர் K.பழனிசாமி SSSO
6. தோழர் M.ராஜேந்திரன் SSSO
7. தோழர் P.சுப்ரமணியன் STSO
8. தோழர் K.V.வெங்கடேசன் TM

ஆகியோர் இன்று 31.07.2014 பணி நிறைவு பெறுகின்றனர். அவர்களது பணி நிறைவுக் காலம் நலமுடனும் வளமுடனும் பல்லாண்டு அமைய மாவட்டச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்

Wednesday, 30 July 2014

இந்தியாவில் எப்போது?



உலகெங்கும் பெரும்பாலான அரசுகள் முதலாளிகள் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும்போது, தொழிலாளர் நலனைக் கருத்தில் கொண்டு சமீபத்தில் ஒரு முடிவை எடுத்திருக்கிறது ஜெர்மனி. தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம், வரும் ஜனவரி 1 முதல் மணிக்கு 8.5 யூரோக்களாக (சுமார் ரூ.700) இருக்கும் என்று ஜெர்மனி அறிவித்துள்ளது. 8 மணி நேரம் வேலை செய்தால் சுமார் ரூ.5,600. ஒரு மாத ஊதியம் சுமார் ரூ.1.5 லட்சம்.
ஜெர்மனி நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் பிற ஐரோப்பிய நாடுகளிலும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த லட்சக் கணக்கான தொழிலாளர்களின் வறுமை நிலையைக் கணக்கில் கொண்டு, அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டதுதான் இந்த முடிவு.
பிரிட்டனிலும் 1998 முதல், குறைந்தபட்ச ஊதியச் சட்டம் அமலில் இருக்கிறது. தொழிலாளர் நலச் சட்டங்களிலும் சமூகநலத் திட்டங்களிலும் ஜனநாயக நாடுகளுக்கெல்லாம் முன்னோடியான பிரிட்டனும் குறைந்தபட்ச ஊதியத்தை மேலும் உயர்த்துவது அவசியம் என்று கருதுகிறது. பிரான்ஸும் ஐரோப்பா முழுமைக்கும் பொதுவான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. இதை இனியும் தள்ளிப்போட முடியாது என்பதை இத்தாலி, நார்வே, சுவீடன் உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளும் உணர்ந்துள்ளன. அமெரிக்காவிலும் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த அதிபர் ஒபாமா முயற்சி மேற்கொண்டார். ஆனால், நாடாளுமன்றம் அதைத் தடுத்துவிட்டது.
வளர்ந்த நாடுகளிலாவது தொழிற்சங்கங்கள் வலிமையுடன் உள்ளன. அந்த நாடுகளிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஊதிய உயர்வின் அவசியத்தை உணர்ந்துள்ளன. வளரும் நாடுகளில் தொழிற்சங்கங்கள் வலிமையாக இல்லை. பெரும்பாலான தொழிலாளர்கள் அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாமல், வேலைக்கு உத்தரவாதம் இல்லாமல் வேலை செய்கின்றனர். சட்டங்கள் பல இருந்தும் அவற்றை முறையாக அமல்படுத்தி, தொழிலாளர் நலனைக் காப்பதில் வளரும் நாடுகளின் அரசுகள் முயற்சி எடுப்பதில்லை.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதால் வேலைவாய்ப்பு பெருகும், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்பதை அரசுகளும், செல்வாக்குள்ள முதலாளிகளும் ஏற்றுக்கொள்வதேயில்லை. இதனால், உற்பத்திச் செலவு கூடும், லாபம் குறையும் என்றே வாதிடுகிறார்கள். அது உண்மையல்ல. தொழிலாளர்கள் வெறும் தொழிலாளர்கள் மட்டும் இல்லை, அவர்கள்தான் பிரதானமான நுகர்வோர்கள். தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் ஊதியம் முழுக்க மீண்டும் செலவிடப்பட்டு, பொருளாதாரத்தை வளர்ச்சியடையவே செய்கிறது. அவர்கள் செய்யக்கூடிய முதலீடும் சமூகத்துக்கே பயன்படுகிறது.
அரசுப் பணிகள், தகவல் தொழில்நுட்பத் துறை போன்ற துறைகளில் பணிபுரிபவர்களைவிட அமைப்புசாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அப்படிப்பட்ட தொழிலாளர்களை வெகு காலமாகப் புறக்கணித்துக்கொண்டிருக்க முடியாது; சமூகத்தில் இரண்டு தரப்புகளுக்கும் இடையே ஏற்கெனவே காணப்படும் பிளவு மேலும் மோசமாகிவிடும். ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதுதான் வளர்ச்சியின் முதல் படியாக இருக்குமே தவிர, சந்தையையும் பொருளாதாரத்தையும் வரம்பில்லாமல் பெருநிறுவனங்களுக்குத் திறந்துவிடுவதல்ல என்பதை உணர்ந்து அரசுகள் செயல்பட வேண்டும்.

35000 ரூபாய்



01.01.2004 முதல் அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஓய்வூதியம்  கிடையாது.
ஏழை எளிய மக்களின் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூபாய். 1000.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தற்போதைய ஓய்வூதியம் ரூபாய் 20000. இதை 75 சதம் உயர்த்துவதற்கான முடிவை மத்திய அமைச்சரவை எடுக்க உள்ளதாம். இதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரூபாய் 35000 ஆக உயரும்.

Monday, 28 July 2014

ரம்ஜான் வாழ்த்துக்கள்




மாவட்டச் சங்கத்தின்
இதயம் நிறைந்த
ரம்ஜான் வாழ்த்துக்கள்

சிறக்கட்டும்



அந்தியூர் கிளையின் மாநாடு 27.07.2014 அன்று சிறப்பாக நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட AITUC சங்க்த்தின் செயலர் தோழர் செல்வராஜன், மாநிலத் துணைச்செயலர் தோழர் யாசின், மாவட்டச் செயலர் தோழர் பழனிவேல் தோழர் பங்காரு மற்றும் மாவட்டச் சங்க நிர்வாகிகள், கிளைச்செயலர்கள்  பங்க்கேற்று சிறப்பித்தனர்.
தோழர் v.நாகராஜன் ™) தோழர் S.சந்தானம், ™
தோழர் S.A.முருகவேல் TTA  ஆகியோர் தலைவர், செயலர், பொருளாளர் பொறுப்புகளுக்கு ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டன்ர்.
அனுபபவம் மிக்க தோழர் M.P.ராமலிங்க்கம் உதவிச் செயலரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தோழர் நல்லுசாமி மாநட்டுக்கான ஏற்பாடுகளச் சிறப்புடன் செய்திருந்தார். பணி ஓய்வு பெற்ற முன்னாள கிளைச் செயலர் தோழர் வெங்க்கடேசன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழாவும் நடைபெற்றது.
அந்தியூர் கிளையின் செயல்பாடு சிறக்க மாவட்டச் சங்க்கத்தின் வாழ்த்துக்கள்

Saturday, 26 July 2014

தண்ணீருக்கு வெற்றி



24.07.2014 அன்று பவானி தொலைபெசி நிலையத்திலும் ஊழியர் குடியிருப்பிலும் தண்ணீர் வசதி கோரி  பவானி கிளைத் தோழர்களும் தோழியர்களும்  குடியிருப்பில் உள்ள மகளிரும் திரண்டிருக்க பவானி கிளைச் செயலர் தோழர் நாகராஜன் மற்றும் மாவட்ட உதவிச் செயல்ர் மெளனகுருசாமியும் காலை 10 மணிக்கு காலவரையற்ற பட்டினிப் போரைத் துவக்கினர். கோட்டப் பொறியாளருடன் அவரது அறையில் அனைவரும் திரண்டு பிரச்னை  குறித்து விவாதிக்கப்பட்டது. துணைப்பொது மேலாளர் (DGM EB) திரு சாமிதாஸ் அவர்கள் தொடர்பு கொண்டு தானும்
துணைப்பொது மேலாளர் (DGM CFA) திரு ராமச்சந்திரன் அவர்களும் மதியம் ஒரு மணிக்கு பவானி வருவதாகத் தெரிவித்தார்
சொன்னபடி
அவர்கள் இருவரும் பவானி  வருகை தந்தனர். தண்ணீர் வழங்குவதற்கான பணிகள் 25.07.2014 அன்று துவங்கும் என்று பட்டினிப் போர் நடைபெற்ற இடத்திற்கே வருகை தந்து வாக்களித்தனர். பட்டினிப்போரை முடித்துக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.
நகராட்சி குடிநீர் குழாய்களில் உள்ள பழுதுகளைச் சரி செய்ய  நகராட்சி அதிகாரி ஒருவரும் ஊழியர்களும் வந்தனர். பழுதுகளை ஓரிரு நாட்களில் சரி செய்து தருவதாக உறுதியளித்தனர்.
நமது அதிகாரிகள் தந்த உறுதிமொழி நம்பிக்கை தரும் வகையில் அமைந்ததால் பட்டினிப் போர் விலக்கிக் கொள்ளப்பட்டது.
போராடிய பவானி கிளையின் தோழர்களுக்கு பாராட்டுக்கள்.
ஊழியர் குடியிருப்பிலிருந்து பங்கேற்ற தோழியர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
இப்பிரச்னையில் தலையிட்டு தீர்வுக்கு உதவிய துணைப் பொதுமேலாளர்கள் இருவருக்கும் நமது  நன்றி.
பிரச்சினை தீர்வில் அக்கறை காட்டிய கோட்டப் பொறியாளர்,   துணைக் கோட்டப் பொறியாளர் ஆகியோருக்கும் நன்றி.
உறுதிமொழியின் அடிப்படையில் தண்ணீர்ப் பிரச்னை தீர்வுக்கான பணிகள் துவங்கி  நடைபெற்று வருகின்றன.

Friday, 25 July 2014

போனசில் நிர்வாகத்தின் அர்த்தமற்ற போக்கு



உற்பத்தியின் அடிப்படையில் போனஸ்
பெற்ற வரலாறு அறிவோம்
அது இலாபத்தின் அடிப்படையில் ஊக்க ஊதியமாக (இன்செண்டிவ்)
மாற்றப்பட்ட வரலாறும் அறிவோம்
இதனால் போனஸ் என்பதையும் இழந்தோம்.
வரலாறு கற்றுக் கொடுத்த பாடத்தின் அடி சிந்திக்க வைத்த வரலாறும் அறிவோம்.
மீண்டும் உற்பத்தியுடன் இணைந்த போனஸ் என்பது நமது கோரிக்கையாக எழுந்துள்ளது.
23.07.2014 அன்று இது குறித்து நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
பரிவு அடிப்படையில் இறந்தோரின் வாரிசுகக்கு மதிப்பெண் போடுவதைப் போல் போனசுக்கும் மார்க் போடும் திட்டத்தை நிர்வாகம் கூறியுள்ளது.
கேபிள் இல்லாமல்,ட்ராப் ஒயர் இல்லாமல், இன்ஸ்ட்ரூமெண்ட் இல்லாமல் தொலைபேசி இணைப்பு கொடுப்பதைப் பற்றி நிர்வாகம் சொல்லிக் கொடுக்குமா?
இப்படி ஆரம்பித்து பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கலாம்.
நமது சங்கம் உற்பத்தியின் அடிப்படையில் போனஸ்
என்ற அடிப்படையையே உறுதியாக வலியுறுத்தியுள்ளது. மற்ற சங்கங்களின் நிலைபாடும் இதுவே.
இந்த ஆண்டு போனஸ் கிடைக்கும் என்ற ஊழியர்களின் கனவு நனவாகும் என நம்புகிறோம். அத்திசை வழியில் னமது மத்திய சங்கம் செயல்படும்..

Wednesday, 23 July 2014

அலைக்கற்றை பகிர்வு



செல்போன் நிறுவனங்கள் அலைக்கற்றை பகிர்வு: டிராய் பரிந்துரை

செல்போன் நிறுவனங்கள் அலைக்கற்றைகளை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கலாம் என்று தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அனைத்து வகையான ஏர்வேவ்-களையும் செல்போன் நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது. ரூ. 1,658 கோடிக்கு ஏலம் விடப்பட்ட முந்தைய அலைக்கற்றைகளையும் இவ்விதம் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது.
அனைத்து அலைக்கற்றைகள் அதாவது 800/900/1800/ 2100/2300/2500 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை இவ்விதம் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அலைக்கற்றை பகிர்வு குறித்த தனது பரிந்துரையில் டிராய் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இப்போது தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 800 மெகா ஹெர்ட்ஸ் (சிடிஎம்ஏ), 900 மெகாஹெர்ட்ஸ், 1800 மெகாஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ் (3ஜி), 2300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 2500 மெகா ஹெர்ட்ஸ் (4ஜி) ஆகிய அலைக் கற்றைகள் தொலைத் தொடர்பு சேவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
பட்ஜெட்டுக்கு முன்பு வெளியான பொருளாதார ஆய்வறிக்கையில் அலைக்கற்றை நிர்வாகத்தில் வர்த்தகம், பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றுக்கு அனுமதிக்கும் வகையில் அரசு கொள்கை வகுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த முறை நடைபெற்ற அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஏலத்தில், முதல் முறையாக ஏலத்தில் போன லைசென்ஸ் விலையைக் காட்டிலும் 5 மடங்கு கூடுதல் விலையில் இப்போது ஏலம் போனது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பரஸ்பரம் செல்போன் கோபுரங்களை பகிர்ந்து கொள்ளுகின்றன. இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் அலைக்கற்றைகளையும் பகிர்ந்து கொள்வர். இதனால் வாடிக்கை யாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் செல்போன் சேவை கிடைக்கும். புதிய நடைமுறையின்படி லைசென்ஸ் பெற்றுள்ள இரு நிறுவனங்கள் நிர்வாக ரீதியில் அவற்றுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட அலைக்கற்றைகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளலாம்.
புதிய லைசென்ஸ் கொள்கையின்படி 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவ்விதம் பகிர்ந்து கொள்வதற்கு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்தது. இவ்விதம் அலைக் கற்றைகளை பகிர்ந்து கொள்ள முன்வரும் நிறுவனங்கள் ஒருமுறை செலுத்தும் கட்டணமாக ரூ. 30 ஆயிரம் கோடியை செலுத்த வேண்டும் என்று தெரிவித் திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்போன் சேவை நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.
ஒருமுறை கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அலைக்கற்றையை பகிர்ந்து கொள்ள அரசு அனுமதித்தால் இதன் மூலம் ஏற்கெனவே சேவை அளித்து வரும் ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலர், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல், டாடா டெலி சர்வீசஸ் ஆகியன பயன் பெறுவதோடு கட்டணத்தையும் குறைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இருப்பினும் அதிகபட்சமாக இரண்டு நிறுவனங்கள் மட்டும் இவ்விதம் அலைக்கற்றையை பகிர்ந்து கொள்ளலாம் என்ற கட்டுப்பாட்டை டிராய் விதித்துள்ளது. 3-ஜி அலைக்கற்றையை பகிர்ந்து கொள்வ தற்கும் அனுமதிக்கலாம் என குறிப்பிடப் பட்டுள்ளது. இருப்பினும் 3 ஜி லைசென்ஸ் வைத்துள்ள ஒரு நிறுவனம் இதே போன்று 3 ஜி லைசென்ஸ் பெற்ற இன்னொரு நிறுவனத்துடன்தான் அலைக்கற்றையை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
மாறாக 4 ஜி அலைக்கற்றை வைத்துள்ள நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது அலைக்கற்றை பகிர்வு குறித்து லைசென்ஸ் வழங்கிய அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிராய் பரிந்துரையை தொலைத் தொடர்பு அமைச்சகம் (டிஓடி) தீவிரமாக ஆராய்ந்து அதன்பிறகு தொலைத் தொடர்பு ஆணையத்தின் அமைச்சக குழுவின் முன் சமர்ப்பிக்கும்.

Monday, 21 July 2014

தீர்வுக்கான போராட்டம்



பவானி தொலைபேசி நிலையத்திலும் ஊழியர் குடியிருப்பிலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் ஊழியர்கள் அவதிக்குள்ளாயினர்.

தலமட்டத்தில் கிளைச் சங்கம் தீர்வுக்காக வேண்டியது. மாவட்டச் சங்கமும்  மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டியது. நமது வேண்டுதல்கள் உரிய தீர்வைத் தரவில்லை.

“ரெளத்திரம் பழகு” என்ற பாரதியின் வழியில் இனியும் பொறுப்பதில்லை என நமது பவானி கிளைச் சங்கம் போராட்ட அறிவிப்பு கொடுத்துள்ளது.
22.07.2014 அன்று ஆர்ப்பாட்டம்
24.07.2014 முதல் காலவரையற்ற பட்டினிப்போர் என்ற காந்தியடிகள் வழியில் ஒரு அறப் போராட்டத்திற்கு அறைகூவல் விடப்பட்டுள்ளது.

இது விளம்பரம் தேடும் போராட்டம் என்பவர்கள்
தண்ணீர் இல்லாமல் வாழ முடியும் என்பதைக் கற்றுக் கொடுத்து அப்படி ஒரு வாழ்வை சில மணி நேரங்கள் வாழ்ந்து காட்டினால் இப்போராட்டத்தை  உடனடியாக விலக்கிக் கொள்ளலாம்.