NFTECHQ

Friday, 13 September 2019


இனி ஒரு விதி செய்வோம்
இணைந்த கரங்களில் வாக்களிப்போம்.
இழந்தவைகள் ஏராளம்
இனியும் இழப்புகளைத் தவிர்க்க
இணைந்த கரங்களில் வாக்களிப்போம்.
இன்னும் இருப்பது இரண்டு நாட்ககளே.
இனி வரும் காலம் இனிமையானதாக இருக்க
இணைந்த கரங்களில் வாக்களிப்போம்.
இருக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட்டால்
இனிவரும் காலம் இருள் சூழ்ந்தத்தாகிவிடும்.
இருப்பதைத் தக்கவைக்க
இழந்தவைகளை மீட்க
இணைந்த கரங்களில் வாக்களிப்போம்.
இந்த வாய்ப்பே
இறுதி வாய்ப்பு.
இதைத் தவற விடலாமா?
இவ்வியக்கத்தின் தலைவர்கள்
இமைசோரா விழிப்புடன் பணியாற்றி
இயற்றிட்ட சாதனைகளை
இதயத்தில் கொள்வோம்.
இடர்கள் அனைத்தையும்
இல்லாமல் செய்திட்ட
இயக்கத்தின் சின்னமாம்
இணைந்த கரங்களில் வாக்களிப்போம்.

Thursday, 12 September 2019


கனிவான கவனத்திற்கு
16.09.2019 வாக்களிக்கச் செல்லும்போது அலுவலக அடையாள அட்டையை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். அடையாள அட்டையைக் காண்பிக்காவிடால் வாக்களிக்க இயலாமல் போய்விடும்.

அடையாள அட்டை இல்லாதவர்கள் உரிய படிவத்தில் அவர்களுக்கான துணைக்கோட்ட அதிகாரியிடம் கையெழுத்து பெற்று அதை எடுத்துச் சென்று வாக்களிக்கலாம்.

வாக்குப்பதிவு மையத்தின் அதிகாரி தங்களுக்கான வாக்குச்சீட்டீல்
கையெழுத்திட்டுள்ளாரா என்பதைக் கவனமாகப் பார்த்திக் கொள்ள வேண்டும்.

வாக்களிக்கும் முன்பு வாக்குச் சீட்டில் நமது இணைந்த கரங்கள் சின்னம் சரியாகவும் தெளிவாகவும் அச்சிடப்பட்டுள்ளதா, வாக்குச்சீட்டு கிழிந்து சேதம் ஏற்பட்டுள்ளதாஎன்பதைக் கவனமாகப் பார்க்க வேண்டும் .
சரியாக, முறையாக
இல்லையெனில் வேறு வாக்குச் சீட்டை கோரிப் பெறலாம்.

வரிசை எண் 15ல் வாக்களிப்போம்.
விடியலுக்கான விதையிடுவோம்

Tuesday, 10 September 2019



அன்பான வேண்டுகோள்
16.09.2019 திங்கள்கிழமை அன்று நடைபெற்வுள்ள BSNL ஊழியர்களுக்கான உறூப்பினர் சரிபார்ப்புத் தேர்தலில்

வாழ்வளித்த
NFTE சங்கத்திற்கு
வரிசை எண் 15ல்
இணைந்தகரங்கள் சின்னத்தில்
வாக்களிக்க வேண்டுகிறோம்.

Thursday, 5 September 2019


விரிவடைந்த மாவட்டச் செயற்குழு மற்றும்
தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

நாள்    07.09.2019
காலம்  காலை 10 மணி
இடம் டெலிபோன்பவன் ஈரோடு

சிறப்புரை
தோழர் நடராஜன்
மாநிலச் செயலர்

அனைவரும் பங்கேற்பீர்

Tuesday, 27 August 2019


வதந்திகளின் வசந்தகாலம்
தந்திசேவை காலாவதியாகி விட்டது.
ஆனால் வதந்திகளுக்கு இன்று வசந்தகாலம்.
வதந்திகளையப் பரப்புவதும், வாய்க்கு வந்த பொய்களைப் பரப்புவதும்,
வசைமாரி பொழிவதும்
பல ஆண்டுகளாக  தொடர்ந்து நடக்கும் செயல்கள்தான்.
நம்பிக்கை என்னும்   நாற்றை விதைப்பது நல்லோர் செயல்.
எல்லாம் நாசமாய்ப் போய்விடும் என்று சொல்வது மட்டுமே சிலருக்குத் தெரிந்த ஒன்று.. அப்பணியில் மட்டுமே அவர்களுக்குத் தெளிவு உண்டு.
சமீபத்திய சான்று யாதெனில் ஓய்வுபெறும் வயது 60 என்பது 58 ஆகக் குறைப்து என்பது  பிரதம மந்திரி அலுவலகத்தால் ஏற்கப்பட்டுவிட்டது என்று செய்தி பரப்பப்பட்டது.  ஊழியர்கள் மத்தில் ஒரு அசாதாரண சூழலை உருவாக்கினார்கள்.ஆனால் உண்மை என்ன?
பிரதமரின் முதன்மைச் செயலர் சகூட்டிய கூட்டத்தின் அதிகார பூர்வமான குறிப்பில் (Official Minutes) விருப்ப ஓய்வுத் திட்டம் அமலாக்கப்பட்டால் அதற்கான செலவு விபரம் குறித்து அறிக்கை தருமாறு DOT செயலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓய்வு பெறும் வயதை 58 ஆகக் குறைப்பது பற்றி விவாதம் எதுவும் நடைபெற்றதாக அக்குறிப்பில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை.
"அச்சம் தவிர் "  என்றான் பாரதி. ஆனால் "அச்சத்தை உருவாக்கு" என்று எந்த ஒரு மானுடனும் சொல்லவில்லை.
இப்படிப்பட்டவர்களை மிகச்சரியாக அடையாளம் காண வேண்டிய தருணம் இது.

Monday, 26 August 2019


இறுதி வாக்காளர் பட்டியலும்
சில கணக்குகளும்
தமிழகத்தில்  உறுப்பினர் சரிபார்ப்புக்கான தேர்தலின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 2013ஆம் ஆண்டு 780 வாக்காளர்கள் இருந்தனர்.2019ல் 477 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். 303 பேர் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 2013ஆம் ஆண்டு 12074 வாக்காளர்கள் இருந்தனர்.2019ல் 7682 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். 4392 பேர் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.

அகில இந்திய அளவில் 2013ஆம் ஆண்டு 163820 வாக்காளர்கள் இருந்தனர். நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட தகவலில் 31.05.2019 அன்று 117305 ஊழியர்கள் பணியில்  இருப்பதாக அறிவிக்கப்பட்ட்டது.
2013 மே முதல் 2019 மே வரை 37 மாதங்களில் 46515 பேர் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.
சராசரியாக மாதம் ஒன்றுக்கு 1300பேர் பணிக்காலம் முடிந்து ஓய்வு பெறுகின்றனர்.

இதனையே அளவீடாகக் கொண்டால் BSNL நேரடி நியமன ஊழியர்கள் மற்றும் பரிவு அடிப்படையில் பணி பெற்றவர்களையும் தவிர்த்து கணக்கிட்டால் மீதி உள்ள ஊழியர்கள் அனைவரும் 60  மாதங்களில் பணிநிறைவு பெற்றுவிடுவார்கள்.

Tuesday, 20 August 2019

துவங்குகிறது பயணம்

உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலில் நமது NFTE பேரியகத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் நாளை 21.08.2019  தோழர்களின் பிரச்சாரப் பயணம் துவங்குகிறது.

BSNL நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பங்கேற்கும் தேர்தல் இது.

BSNL நிறுவனம் வளர்ர்ச்சி பெறவும், ஊழியர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படவும், ஊழியர்களின் பிரச்னைகள்  மற்றும் கோரிக்கைகள் தீர்வு காணப்படவும்  NFTE பேரியக்கத்தின் இணைந்த கரங்கள் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்து ஊழியர்களிடம் நடைபெறும் பிரச்சாரம் துவங்குகிறது.

NFTE பேரியக்கத்தால் பெற்ற நன்மைகளைச் சொல்வோம்.
உண்மைகளைச் சொல்வோம்.

Monday, 19 August 2019


செயலுக்கு வித்திட்ட
செம்மையான செயற்குழு
18.08.2019 அன்று கோபியில் மாவட்டச் செயற்குழு மாவட்டத் தலைவர் தோழர் பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது.
கோபி கிளைச்செயலர் தோழர் கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார். மாநில அமைப்புச் செயலர் தோழர் புண்ணியகோட்டி செயற்குழுவைத் துவக்கிவைத்து உரையாற்றினார்.

செயற்குழுவின் நோக்கம் குறித்து மாவட்டச்செயலர் தோழர் பழனிவேலு எடுத்துரைத்தார்.

01.08.2019 அன்று கோபியில் நடைபெற்ற தமிழ்மாநில தேர்தல் பிரச்சாரத் துவக்க விழா மற்றும் 16.09.20119 அன்று நடைபெறவுள்ள உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் குறித்து கிளைச்செயலர்களும் மாவட்டச் சங்க நிர்வாகிகளும் தங்கள் கருத்துக்களை நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் முன்வைத்தனர்.

தோழர்கள் மாலி, ராஜமாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மத்துய சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் செம்மல் அமுதம் சிறப்புரையாற்றினார்.
தேர்தல் பிரச்சாரத் துவக்கவிழாவைச் சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு நல்கிய மாவட்டச் சங்க நிர்வாகிகள் கிளைச்செயலர்கள், முன்னணித்தோழர்கள் தோழியர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து கெள்ரவிக்கப்படனர்.

விழாவினைச் சிறப்பாக நடத்திட அரும்பணியாற்றிய கோபி கிளைத் தோழர்கள் தோழியர்கள் அனைவரும் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.

உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வது குறித்து முடிவுகளும் பிரச்சாரப் பயணத் திட்டமும் வகுக்கப்பட்டன.
மாவபட்ட அமைப்புச் செயலர் தோழர் செளந்தர் நன்றி கூறினார்.

சிறப்பான, 
ஆக்கபூர்வமான,  
வெற்றிக்கு வித்திட்ட முடிவுகளொடு 
செயற்குழு சிறந்தது.


அக்ங்கள் மகிழ்ந்த ஆண்டுப்பேரபவை
825 உறுப்பினர்களைக் கொண்ட ஈரோடு மத்திய அரசு ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தின் 28ஆவது ஆண்டுப்பேரவை 17.08.2019 அன்று அறிவாற்றல் மிக்க தோழர் D.மாணிக்கம் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
பொருள்பொதிந்த செயல் அறிக்கையை செயலாற்றல் மிக்க தோழர் S.ராஜசேகரன் சமர்ப்பித்தார். வியக்கத்தக்க பல்வேறு பிரச்னைகள் தீர்வைப் பற்றி எடுத்துரைத்தார். வளமான நிதிநிலை அறிக்கையை பொருளாளர் அனுபவம் மிக்க தோழர் C.ராமசாமி சமர்ப்பித்தார். செயல்பாட்டின் சிறப்பையும் அமைப்பின் வளர்ச்சியையும் நிதிநிலை சுட்டிக்காட்டியது. வருமானவரி மற்றும் அஞ்சல்துறையில் வங்கிச்சேவை குறித்து செயலால் பொழுதளக்கும் தோழர் P.சண்முகம் விள்க்கவுரையாற்றினார். 90 மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட தோழர் தோழியர்களுக்கு சிறப்பான வாழ்த்து வழங்கப்பட்டு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தோழர் மாலி "BSNL  இன்று"  என்னும் தலைப்பில் உரையாற்றினார். தோழர்கள் V.செல்வராஜன், K.ராஜமாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  அனைவருக்கும் நினைவுப்பரிசு அளிக்கப்பட்டது. 250க்கும் மேற்பட்ட தோழியர்கள் உட்பபட 500  பேர் கலந்து கொண்டனர். தலைவர்களின் உரையை அனைவரும் அமைதியுடன் செவிமடுத்தது சிறப்பு. சுவைமிக்க மதிய உணவு  பாராட்டுக்குரியது.
தோழர்கள் D.மாணிக்கம், S.ராஜசேகரன், C.ராமசாமி ஆகியோர் முறையே தலைவ்ர், பொதுச்செயலர், பொருளர் பதவிகளுக்கு மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தோழர்கள் D.மாணிக்கம், S.ராஜசேகரன், C.ராமசாமி, P.சண்முகம், A.பாலசுப்ரமணியன், K.மாசிலாமணி ஆகியோர் உறுப்பினர்களுக்காக ஆற்றும் அரும்பெரும் சேவை பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது. அமைப்பில் சிறப்பாகச் செயல்படும் தோழர்கள் கெளரவிக்கப்பட்டனர். வரும் காலத்தில் மேலும் சிறப்பான செயல்பாட்டுக்கான சில நடைமுறைகளும் உருவாக்கப்பட்டன.  அகங்களை மகிழ்வித்த ஆண்டுப்பேரவை சிறப்பாக நடைபெற உழைத்திட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.


Thursday, 15 August 2019



இனிய
சுதந்திர தின
வாழ்த்துக்கள்


Wednesday, 14 August 2019



மாவட்டச் செயற்குழு
அன்பார்ந்த தோழர்களே

வணக்கம். நமது மாவ்ட்டச் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் வரும் 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கோபி தொலைபேசிநிலையத்தில் மாவட்டத் தலைவர்
தோழர்  ப.பாலசுப்ரமணியன்
அவர்கள் தலைமையில் நடைபெறும். கிளைச்செயலர்களும் மாவட்டச் சங்க நிர்வாகிகளும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்

ஆய்படுபொருள்
16.09.2019 அம்று நடைபெறவுள்ள உறுப்பினர் சரிபார்புத் தேர்தல்-நமது கடமைகளும் பணிகளும்
01.08.2019 -தமிழ் மாநில தேர்தல் பிரச்சாரத் துவக்கவிழா சிறக்க
பணியாற்றியோருக்கு பாராட்டு
மாவட்ட அளவிலான பிரச்னைகள்
இன்னபிற தலைவர் அனுமதியுடன்

தோழமை  வாழ்த்துக்களுடன்

N.பழனிவேலு
மாவட்டச் செயலர்

Monday, 12 August 2019

இன்று பக்ரீத்.

இது ஒரு தியாகத் திருநாள்.

இந்நன்னாளில் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

Thursday, 8 August 2019


தலைமையும் தோழமையும்
ஒரு அமைப்பின் பொறுப்பில் இருப்பவர்கள் பிறருக்கு வழிவிட்டு மற்றவர்களுக்கு வாய்ப்பினை உருவாக்கித் தருவது அந்த அமைப்பின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். அந்த அடிப்படையில் 2013ஆம் ஆண்டு நான் மாவட்டச்செயலர் பொறுப்பிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். தோழர் பழனிவேலு (லாசர்) மாவட்டச் செயலராகப் பொறுப்பேற்றார். 2016ல் நான் பணி ஓய்வு பெறும்வரை என்னால் இயன்ற அளவுக்கு உறுதுணையாக இருந்தேன். அவருக்கு சுயமாகச் சிந்தித்தல், சுயமாகச் செயல்படுதல் போன்ற திறமைகள் உண்டு. மற்றவர்களின் கருத்தை உள்வாங்க்கிக் கொள்ளுதல், மற்றவர்களின் கருத்துக்களுக்கு மரியாதை அளித்தல், மற்றவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ளுதல் என்ற பண்புகளும் அவரிடத்தில் உண்டு. சுய விமர்சனம் செய்து கொள்ளும் பண்பு நிறைந்தவர். பிறரது விமர்சனங்கள் நியாயமானதாக இருப்பின் அவற்றை ஏற்பார். தவறான விமர்சனங்களாக இருப்பின் பொறுமையாக உரிய பதில் சொல்லும் ஆற்றல் மிக்கவர். இயக்கத்தின் நலன் கருதி சகிப்புத்தனமையுடன் செயல்படும் குணமும் அவரிடத்தில் உண்டு.

தலைமைக்குரிய பண்புக்ளை வளர்த்துக் கொண்டதன் விளைவாக 01.08.2019 அன்று NFTE பேரியக்கத்தின் தேர்தல் பிரச்சாரத் துவக்க விழாவை அனைவரும் போற்றிப் பாராட்டும் வகையில் கோபியில் மிகச் சிறப்பாக நடத்த முடிந்தது. அனைவரையும் அரவணைத்து, கருத்துக்களைக் கேட்டு திட்டமிட்டார். உருவான திட்டத்துக்கு சிறப்பான செயல் வடிவம் தந்தார். ஆக, தன்னை ஒரு சிறந்த் தலைவனாக நிரூபித்து கொண்டார் தோழர் லாசர். அவருக்கு நன்றியையும், பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் உளமார மகிழிச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனி ஒரு மனிதனாக இப்பணியை அவரால் செய்திருக்க இயலாது. இளமைத்துடிப்பும், ஆர்வமும் மிக்க மாவட்டத் தலைவர் தோழர் பாலு,  அனுப்பவமும் ஆற்றலும் மிக்க மாவட்டப் பொருளர் தோழர் மெளனகுருசாமி, மாவட்டச் சங்க நிர்வாகிகள் தலைவர்கள் சிரமமின்றி வந்து செல்ல உதவிய     தோழர் நாகராஜன், சிறப்பான களப்பணியாற்றிய தோழர் செளந்தர்  தோழர் ஈஸ்வரன், தோழர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் உறுதுணை புரிந்தனர். கிளைச்செயலர்கள்  போதுமான  அளவுக்கு துணை நின்றனர். இயக்கத்தின் ஆணிவேர்களான தோழர்களும் தோழியர்களும் உதவினர். கோபி கிளையின் தோழர்கள் அனைத்து ஏற்பாடுகளுக்கும் அளப்பரிய பணிகளை
அற்புதமாகச் செய்தனர். மாநில அமைப்புச் செயலர் தோழர் புண்ணியகோட்டி காசாலும் கருத்தாலும் உதவினார்.

தமிழகத்தில் நமது பேரியக்கத்தின் வரலாற்றில்  பல  முத்திரைகளைப் பத்தித ஈரோடு மாவட்டச் சங்கம் ஒரு மிகப்பெரிய கடமையை மீண்டும் ஒருருமுறை முத்தாட்ப்போடு மிகச் சிறப்பாக செவ்வனே ஆற்றியிருக்கிறது.
அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் பெருமகிழ்வு அடைகிறேன்.
வாழ்த்துக்களுடன்
G.குமார்

Friday, 2 August 2019


வாழிய பல்லாண்டு

31.07.2019 அன்று பணிநிறைவு பெற்ற

1.திரு P.K.சுரமனியன் SDE
2.திரு S.P.சண்முகசுந்தரம் SDE
3.தோழர் G. ரகுநாராயணன்O S
4.தோழர் A.குணசெகரன்  TT
5.தோழர் P.கணேசன் TT
6.தோழர் V.ராஜேந்திரன் TT
7.தோழர் K.ஆறுமுகம் TT
ஆகியோர் நலமுடனும் மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Wednesday, 31 July 2019


வருக வருக

01.08.2019 அன்று கோபியில் நடைபெறும் எட்டாவது அங்கீகாரத் தேர்தல் பிரச்சாரத் துவக்க விழாவிற்கு வருகை தரும் தலைவர்களையும், தோழர்களையும்  ஈரோடு மாவட்டச் சங்கம் சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுவோம்.
தலைவர்களின் உரை கேட்போம்.
கலந்துரையாடுவோம்.
களம் காண்போம்.
வெற்றிக்கனியைப் பறிப்போம்.
வாரீர் வாரீர்

Wednesday, 24 July 2019

கால நீட்டிப்பு

வருமான வரி விபரங்களைத் தாக்கல் செய்ய ஆகஸ்டு 31  2019 வரை கால  அவகாசம் தரப்பட்டுள்ளது

Monday, 22 July 2019


கோபியில் சந்திப்போம்
ஈரோடு மாவட்டம் கோபியில்
சீதா திருமண மண்டபத்தில் 01.08.2019 அன்று
NFTE பேரியக்கத்தின் சிறப்பு நிகழ்வு.

தோழர்கள் பங்களிப்பால் பாங்குடன் நடத்திட மாவட்டச் சங்கம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
வாருங்கள்
வரவேற்கிறோம்.

Monday, 1 July 2019


வாழிய பல்லாண்டு
30.06.2019  அன்று பணி நிறைவு பெற்ற

1.தோழர் N.திருனாவுக்கரசு SDE ஈரோடு
2.தோழர் R.தெய்வசிகாமணி JTO ஈரோடு
3. தோழர்.M.அமானுல்லா OS  ஈரோடு
4.தோழர் P.நவநீதன் OS  ஈரோடு
5.தோழர் P.M.வேல் OS கவிந்தப்பாடி
6.தோழர் S.சின்னசாமி JE அந்தியூர்
7.தோழர் K.ராஜேந்திரபிரபு JE ஈரோடு
8.தோழர் M.ஆனந்தன் TT ஈரோடு
9. தோழர் K.அற்புதமணி TT பெருந்துறை
10.தோழர் R.சந்திரமெளலி TT தாராபுரம்
11.தோழர் V.V.மகேந்திரன் TT கொடுமுடி
12.தோழர் K.முத்துசாமி TT  கொடுமுடி
13.தோழர் S.பழனிசாமி TT கள்ளிப்பட்டி
14.தோழர் A.பூசப்பன் TT ஈரோடு
15.தோழர் P.ராஜமாணிக்கம்  TT சத்தி
16. தோழர் A.T.சண்முகராஜ் TT காஞ்சிக்கோவில்
17.தோழர் S.வேலாயுதம் TT தாராபுரம்
ஆகியோர்
நலமுடனும்
 மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Saturday, 29 June 2019



மாவட்டச் செயற்குழு
26.06.2019 அன்று மாவட்டச் செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.
தோழர் பாலசுப்ரமணியன் தலைமையேற்றார்.
மைசூர் மத்திய செயற்குழு முடிவுகளை மாவட்டச் செயலர் விளக்கினார்.
01.08.2019 அன்று கோபியில் தமிழகம் தழுவிய அளவில் தேர்தல் பிரச்சாரத் துவக்க விழாவைச் சிறப்பாக நடத்துவது, அதற்கான நிதி ஆதாரம் குறித்து நல்ல பல முடிவுகள் எடுக்கப்பட்டன.


அகவிலைப்படி உயர்வு

01.07.2019 முதல் அகவிலைப்படி 5.3 சதவிகிதம் உயரும். ஆக மொத்த அகவிலைப்படி   146.7 சதவிகிதமாக இருக்கும்.

Thursday, 27 June 2019


*****தகவலுக்காக******
தொலைதொடர்புத்துறை அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தெரிவித்த தகவல்

31.05.2019 அன்று BSNL நிறுவனத்தில்
1,17,305 ஊழியர்களும்
46,597   அதிகாரிகளும்
என பணியில் உள்ளவர்களின் எண்ணிக்கை
1,63, 902 என தகவல் அளித்துள்ளார்.


60 வயது வரை பணி

BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதான் 60 என்பதை 58 ஆகக் குறைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவையின் செயலாளர் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.
2000 ஆம் ஆண்டில் செப்டம்பர் போராட்டத்தில் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையைத் தகர்க்கும் முயற்சிகள் வெற்றி பெற வாய்ப்பில்லை. அந்த உடன்பாட்டைத் தொடர்ந்து  அமல்படுத்த சட்ட ரீதியான அனைத்து முயற்சிகளையும் ந்மது சங்கம் மேற்கொண்டு ஊழியர் நலன்களைக் பாதுகாக்கும்.

Monday, 10 June 2019

சாத்தியம் என்று சொல்லுங்கள்

உங்கள் லட்சியத்தை வெளிப்படையாக எழுதிவைப்பது முக்கியமானது. நீங்கள் யாராக இருந்தாலும் சரி. உங்கள் லட்சியத் திட்டத்தை வெளிப்படையாக எழுதிவையுங்கள். அதை உரக்கப் படியுங்கள். மன உறுதிப்பாட்டுடன் ஒருநாளைக்கு இரண்டு முறையாவது படியுங்கள். எதை மன உறுதியுடன் பேசுகிறீர்களோ... அது உங்களை நோக்கி வருகிறதா என்று பாருங்கள்.
இதை உரக்க வாசியுங்கள்:
"மற்றவர்கள் செய்யாத ஒன்றை நான் இன்று செய்வேன். அதனால் பிறருக்குக் கிடைக்காத நாளை எனக்குக் கிடைக்கும்!"
மீண்டும் வாசியுங்கள்:
"மற்றவர்கள் செய்யாத ஒன்றை நான் இன்று செய்வேன். அதனால் பிறருக்குக் கிடைக்காத நாளை எனக்குக் கிடைக்கும்!"
மீண்டும் வாசியுங்கள்:
"மற்றவர்கள் செய்யாத ஒன்றை நான் இன்று செய்வேன். அதனால் பிறருக்குக் கிடைக்காத நாளை எனக்குக் கிடைக்கும்!"
இது மிகவும் எளிமையானது. உங்களால் முடியும் என்று நீங்கள் சொன்னீர்களானால்... உங்களால் முடியும். உங்களால் முடியாது என்று சொன்னால் முடியாது. உங்கள் உதடுகளிலிருந்து வரும் எல்லா வார்த்தைகளும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
எந்த எதிர்மறையான எண்ணமும் உங்களைச் சிறையில் முடக்கும். இன்னொருவருக்குச் சாத்தியமாகும் ஒன்று எனக்கும் சாத்தியம்தான். நீங்கள்தான் அந்தச் சாத்தியம்!
சிகரத்தை எட்டுங்கள். ஆழ உழுதுகொண்டே செல்லுங்கள். தொடர்ந்து முன்னேறுங்கள். அது சாத்தியம் என்று சொல்லுங்கள்!
"வேதனை மலரட்டும் சாதனை) என்னும் நூலிலிருந்து

Wednesday, 5 June 2019


இனிய ரமலான் வாழ்த்துக்கள்
அன்பு, இரக்கம், ஈகை, கருணை இவற்றை அடிப்படையாகக் கொண்டு வாழும் இஸ்லாமிய சகோதர ஸ்கோதரிகளுக்கு உள்ளம் நிறைந்த இனிய ரமலன்ன் வாழ்த்துக்கள்.

Tuesday, 4 June 2019


தேர்தல்
BSNL நிறுவனத்தில் ஊழியர்களின் தொழிறங்கங்களின்  அங்கீகாரத் தேர்தல் 16.09.2019 அன்று நடைபெறும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
வாக்குகள் எண்ணிக்கை 18.09.2019 அன்று நடைபெறும்.

அரசின் நிலை,
அரசியல் நிலை,
நிறுவனத்தின் நிலை என
அனைத்தையும் கணக்கில் கொண்டு இத் தேர்தலை அணுக வேண்டிய தருணம் இது.

Friday, 31 May 2019


வாழிய பல்லாண்டு
31.05.2019  அன்று பணி நிறைவு பெறும்

1.தோழர் P.D.ஜெயயக்குமரன் SDE ஈரோடு
2.தோழர் R மோகன்ராஜ் SDE கோபி
3. தோழர்.K.ஆறுமுகம் JE  ஈரோடு
4.தோழர் M.ஆறுமுகம் JE  மூலனூர்
5.தோழர் M.பழமனிசாமி JE   D.G. புதூர்
6.தோழர் G.R.இந்திரா OS ஈரோடு
7.தோழர் K.குமாரசாமி OS ஈரோடு
8. தோழர் C.மணி OS சென்னிமலை
9. தோழர் V. முரளி OS ஈரோடு
10.தோழர் M. அகஸ்தீஸ்வரன் TT தராபுரம்
11.தோழர் H அஸ்கரஅலி TT ஈரோடு
12.தோழர் C.பன்னாரி TT  பவானிசாகர்
13.தோழர் M. பர்ணபாஸ் TT காங்கயம்
14.தோழர் G. கோவிந்தராஜு TT சித்தோடு
15.தோழர் S. மணி  TT தராபுரம்
16.தோழர் P மனோகரன் மலையபாளையம்
17.தோழர் P. மூர்த்தி  சத்தி
18.தோழர் D.சம்பத் டிரைவர் கோபி
19. தோழர் P செள்ந்திரராஜன் TT தராபுரம்
20.தோழர் G.K திருவேங்கடசாமி TT கோபி
ஆகியோர்
நலமுடனும்
 மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Friday, 17 May 2019


மே 17
தோழர் ஜெகன் பிறந்த தினம்
தோழர் ஜெகன்.
தமிழகத்தில் தபால் தந்தி இயக்கத்தில் மட்டுமின்றி பல்வெறு அமைப்புகளில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்ட தன்னலமற்ற தியாகத் தலைவர் தோழர் ஜெகன்.
தனது அபாரத் திறமை, அளப்பரிய ஆற்றல் அறிவார்ந்த பேச்சுத்திறன் என பன்முகத்தன்மை கொண்ட ஒரு தோழனாய் வாழ்ந்தவர்.
அவரது வாழ்விலிருந்து கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம்.

Wednesday, 1 May 2019


மே தின வாழ்த்துக்கள்
உழைப்பாளிகள் வாழ்வில் ஒரு உன்னத விடியலை உருவாக்கிய தினம் மே 1 .
சிலரின் உயிர்த்தியாகமும்,
பலரின் உதிரத் தியாகமும் உழைப்பு, ஓய்வு, உறக்கம் இவை ஒவ்வொம்றூக்கும் எட்டு மணி நேரம் என வரையறுத்துத் தந்தன.
தனியார்மயம் தலைதூக்கிய பின்னர் எட்டுமணி நேர வேலை என்பது காலாவதியாகி விட்டது.
12 மணி நேரம், 14 மணி நேரம் என உழைப்பு நேரம் மாறிவிட்டது.
இத்தகைய நிலைகள் மாற இன்னும் போராட வேண்டிய நிலை உள்ளது.
வேலையின்மை ஒரு புறம் சுரண்டல் மறுபுறம் என சமுதாய அவலம் தொடர்கிறது.
மே தினத் தியாகிகளின் வழியில் சமரசம் இன்றி போராடுவதே மேதினத் தியாகிகளுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள்.


வாழிய பல்லாண்டு
30.04.2098  அன்று பணி நிறைவு பெற்ற
1.தோழியர் V கெளரி SDE ஈரோடு
2.தோழர் S.மதியழகன் SDE  ஈரோடு
3.தோழர் D.செந்தில்குமார் SDE  காங்கயம்
4.தோழர் R.சந்திரமேளளீஸ்வரன் OS ஈரோடு
5.தோழர் P.ஜெயபால் OS ஈரோடு
6.தோழர் P.காசிராஜன் OS ஈரோடு
7.தோழர் M. நாச்சிமுத்து OS ஈரோடு
8. தோழர்.C.K.பழனிசாமி OS ஈரோடு
9.தோழர் G. ரவிச்சந்திரன் OS ஈரோடு
10.தோழியர் G.உமாமகேஸ்வரி OS ஈரோடு  
11. தோழர் K.வடிவேல் OS கோபி
12.தோழர் A. அயூப்கான் TT N.G.பாளையம்
13.தோழர் E.V.. ராஜேந்திரன் TT ஈரோடு
14.தோழர் A வீரப்பன் TT ஈரோடு
ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Monday, 8 April 2019


வாழ்வு தந்த தலைவன்

பணியில் இருப்போருக்கும்,
பணி ஓய்வு பெற்றோருக்கும்
பாதுகாப்பு தந்திட்ட தலைவர்.

தலைவருக்கென ஒரு இலக்கணத்தை வகுத்திட்ட தலைவர்.

எப்போது, எப்படி போராட்டத்தை துவக்க வேண்டும் என்ற பாதையைத் தேர்வு செய்யும் ஆற்றல் மிக்க தலைவர்.

எப்போது, எப்படி போராட்டத்தை முடிக்க வேண்டும் என்பதையும் துல்லியமாகக் கணக்கிடும் திறமை படைத்த தலைவர்.

ஒளிவுமறைவு இல்லாமல் யதார்த்தமாக கருத்துக்களைத் தெரிவிக்கும் தனிப்பட்ட  திறன் படைத்த தலைவர்.

சாதாரண பிரச்னை முதல் கடினமான பிரச்னை வரை அனைத்திற்கும் தீர்வு காணும் ஆற்றல் இந்தத் தலைவனின் தனிச் சிறப்பு.

அரும்பெரும் குணங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்ட உன்னதத் தலைவன் தோழர் குப்தாவுக்கு இன்று 98ஆவது பிறந்த தினம்.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தோழ்ர் குப்தா தேவைப்படுகிறார். தேவைப்படுவார். இதுவே அவரது ஆளுமை.  


Monday, 1 April 2019


வாழிய பல்லாண்டு
31.03.2019  அன்று பணி நிறைவு பெற்ற
1.திருமதி ப்ளோரா லில்லி ஆரோக்கியமேரி CAO
2.தோழியர் S.ஜமுனா  OS ஈரோடு
3.தோழியர் P.ஜோதிமணி  OS ஈரோடு
4.தோழர் V.சுந்தரராஜன்  OS ஈரோடு
5.திரு J.மேகராஜன் JTO  ஈரோடு
6.தோழர் P. ராமன் OS  காங்கயம்
7.தோழியர் D.சரஸ்வதி TT சத்தி
8.தோழர் சையத் ரபிமொகதீன் TT தாராபுரம்
9.தோழர் A.மதிவாணன் TT ஊத்துக்குளி
10.தோழர் A. செல்வராஜ் TT நம்பியூர்
11.தோழர் Y. சைமன் ATT பெருந்துறை
ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.



மாவட்டச் செயற்குழு
அன்பார்ந்த தோழர்களே

வணக்கம். நமது மாவ்ட்டச் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் வரும் 03.04.2019 ப்தன் கிழமை காலை 10 மணிக்கு ஈரோடு டெலிபோன்பவன் ஆண்கள் ஓய்வறையில் மாவட்டத் தலைவர் தோழர்  ப.பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெறும். கிளைச்செயலர்களும் மாவட்டச் சங்க நிர்வாகிகளும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்


ஆய்படுபொருள்
2019- பிப்ரவரி மூன்று நாட்கள் வேலைநிறுத்தம்-ஆய்வு
மாவட்ட அளவிலான பிரச்னைகள்
இன்னபிற தலைவர் அனுமதியுடன்

தோழமை  வாழ்த்துக்களுடன்

N.பழனிவேலு
மாவட்டச் செயலர்