NFTECHQ

Friday, 15 February 2019


நெருப்பு இல்லாமலும் புகையும்
நெருப்பு இல்லாமல் புகையாது என்பர். ஆனால் நெருப்பு இல்லாமலும் புகையைக் கிளப்பும் சக்தி சிலருக்கு உண்டு. அப்படிப்பட்ட சக்தி படைத்த சில சதிகாரர்கள்  கிளப்பி விட்ட புகைதான் பி.எஸ்.என்.எல்    மூடப்படும் என்ற செய்தி.

கொள்ளை லாபத்துக்காக  
எதையும் செய்யத் துணியும் கூட்டம் ஒன்று  சுயலாபத்துக்காக செய்த சதி இது.

லட்சக்கணக்கானோரின் வியர்வையிலும் உழைப்பிலும் உதிரத்திலும் விளைந்த இந்த நிறுவனம் மூடப்படும் வாய்ப்பு என்பது கிஞ்சித்தும் கிடையாது.
நமது நோக்கங்களைத் திசை திருப்பும் சதியே இது.

நிறுவனம் காத்திட,
ஊழியர் உரிமை பெற்றிட
18.02.2019 முதல் 20.02.2019 வரை நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.
சதிகளை முறியடிப்போம்.
நமது நியாயமான உரிமைகளைப் பெற்றிடுவோம்.


நேற்றும் இன்றும்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மூடுவதற்கு அரசு திட்டமிடுகிறது என்று நேற்று எலும்புத்துண்டுகளுக்கு ஆளாய்ப் பறக்கும் சில பத்திரிக்கைகளும், ஊடகங்ளும் செய்தி வெளியிட்டன.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மூடும் திட்டம் எதுவும் இல்லை என்று இன்று அதிகாரபூர்வமான செய்திகள் வெளியாகியுள்ளன. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மூடுவதற்கு திட்டம் வகுத்தால் அதை லட்சக்கணக்கான ஊழியர்கள் தடுத்து நிறுவனத்தைக் காப்பார்கள்.


Saturday, 2 February 2019


புயலை எதிர்த்து பூத்த பாளை!

கஜா புயலை செய்திக் காற்றாக வீச வைத்த ஊடகங்கள் ஓய்ந்துவிட்டன. வீழ்ந்த மரங்களுக்கும், வாழ்ந்த வாழ்வுக்கும் நிவாரணம் கொடு என்று கேட்ட மக்களின் ஓலங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மறக்கப்பட்டுவிட்டன.
கஜா புயலின் போது என் டெல்டா மண்ணில் வேதனையில் திரிந்து சென்னை திரும்பிய நான், போன வாரம் ஊருக்குச் சென்றிருந்தேன். கஜாவால் வேட்டையாடப்பட்ட என் உறவுகளின் வீடுகளுக்கு மீண்டும் சென்று பார்த்தேன். திருத்துறைப்பூண்டி பகுதிதான் கஜாவால் கடுமையான சேதத்தைச் சந்தித்திருந்தது. தென்னை மரங்களை எல்லாம் பார்த்து தேம்பித் தேம்பி அழுதிருக்கிறேன். குளங்களில் எல்லாம் தண்ணீர் மீது இளநீர் தேங்காய்கள் விழுந்து மிதந்துகொண்டிருந்தன. அதே குளங்களில் கஜாவால் வளைத்து ஒடிக்கப்பட்ட தென்னைகள் தங்கள் சோக முகத்தைப் பார்த்துக்கொண்டு ஸ்தம்பித்துக் கிடந்தன. இப்போது ஊருக்குப் போனபோது அறுவடைக் காலம். ஆங்காங்கே சாலையோரங்களில் அறுவடை இயந்திரங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ’‘நல்லா கதிர் விடுற நேரத்துல கஜா வந்து ஆட்டி வச்சிருச்சு... நெல் எல்லாம் கருக்காவாப் போச்சு. கண்டுமுதல் பாதியாக் குறைஞ்சுடுச்சுஎன்று ஊரில் தகவல் சொன்னார்கள்.
என் மாமனார் வீட்டின் கொல்லையில் சுமார் நாற்பது தென்னைமரங்கள் கஜாவால் வீழ்ந்திருக்கும். மீண்டும் இப்போது கொல்லைக்கு சென்றேன். வீழ்ந்த மரங்களின் உடல்கள் அப்படியே கிடந்தன. தொட்டுத் தொட்டுப் பார்த்தேன், மத்திய -மாநில அரசுகளைப் போலவே இருந்தன. வளைக்கப்பட்ட தென்னைகள், ஒடிக்கப்பட்ட தென்னைகள், தலைப் பகுதி திருகிப் பிய்த்து வீசப்பட்ட தென்னைகள் எல்லாம் புயல் வீசிய கணத்தை அப்படியே பத்திரப்படுத்தி வைத்திருந்தன தங்களுக்குள்.
நேர்ந்த துயரத்துக்கு இடையே நிமிர்ந்து பார்த்தேன். இன்ப அதிச்சி. கஜாவால் வளைத்து கிட்டத்தட்ட ஒடிக்கப்பட்டு, தலை பிய்த்து வீசப்பட்ட ஒரு தென்னையின் உச்சியில் பாளை பூத்திருந்தது.  ‘’என்ன மாமா இது?” என்றேன் ஆச்சரியமாய்.
தலையைத் திருகி போட்டாலும் பூத்திருக்கு பாத்தீங்களா... அதான் நம்பிக்கைசட்டெனச் சொல்லி கிராமத்து மனுஷன் விவரமாய் சிரித்தார். கஜா பேரழிவுக்காக கண்டம் தாண்டியெல்லாம் கண்ணீர் சிந்தினார்கள். ஆனால் கஜாவின் வேட்டைக் காட்டில் கஜாவை வென்று, அந்தத் தென்னைமரம் மீண்டும் தன் பாளை மூலம் சிரிக்கிறது. இது நம்பிக்கையின் குறியீடு. டெல்டா மீண்டும் எழும். புரட்டிப் போடும் புயல்களையும், புயலின் பெயரைச் சொல்லி புரட்டுகளை வீசும் பயல்களையும் தாண்டி டெல்டா எழும் என்ற நம்பிக்கை வார்த்தையை, தலை பிய்க்கப்பட்ட தென்னையில் இருந்து உயிர்த்திருக்கும் பூம்பாளை பேசுகிறது.
இப்போதெல்லாம் மனசை சில கவலைப் புயல்கள் கடக்கும்போது கண்ணை மூடி அண்ணாந்து கொள்கிறேன். என் கிராமத்துத் தென்னையின் பாளை என்னைப் பார்த்து சிரிக்கிறது, ‘எதிர்த்து நில்லுடா... பூக்கலாம். ’ என்ற வார்த்தைகளை உதிர்த்தபடி!
-ஆரா

Friday, 1 February 2019


நெகடிவ் மார்க் கூடாது
போட்டித் தேர்வுகளில் தவறான பதில்களுக்கு மதிப்பெண்களைக் குறைக்கும் நெகடிவ் மார்க் முறையை முழுமையாக அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வியில் முன்னேறிய கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளில் கூட நெகடிவ் மார்க் முறையைப் பின்பற்றவில்லை. தேர்வர்களும் துன்புறுத்தப்படவில்லைஎன்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சரியான பதில்களுக்கு ஏன் மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என கேள்வி எழுப்பியதோடு, சிபிஎஸ்இ மற்றும் பிற போட்டித் தேர்வுகளில் நெகடிவ் மார்க் முறையை முழுமையாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பி.எஸ்.என்.எல் நிறுவனம் நடத்தும் பதவி உயர்வுக்கான போட்டித் தேர்வுகளில் நெகட்டிவ் மார்க் முறை உண்டு. நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காடி நெகட்டிபவ் மார்க் முறையை அகற்ற NFTE மத்திய சங்கம் முயற்சிக்க வேண்டும்.

Thursday, 31 January 2019

வாழிய பல்லாண்டு

31.01.2019 அன்று பணி ஓய்வு பெற்ற
1.தோழர் K.அய்யாவு OS ஈரோடு
2.தோழியர்  C. சரஸ்வதி TT கொடுமுடி
3. தோழர் S.கிருஷ்ணன் TT ஈரோடு
ஆகியோர் நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Tuesday, 29 January 2019


அஞ்சலி

இந்திய தேசத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடல்நலக் குறைவால் டெல்லியில் இன்று காலமானார்.

மத்திய அரசில் பாதுகாப்புத் துறை, தொலைத்தொடர்புத்துறை, தொழில்துறை, மற்றும் ரயில்வே துறை அமைச்சராகவும் பெர்னாண்டஸ் இருந்துள்ளார்.

அவசரநிலை காலகட்டத்தை எதிர்த்து கடுமையாகப் போராடியவர்.
1974ல் நடைபெற்ற பிரமாண்டமான ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் இவரும் ஒருவர்.

ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு நமது அஞ்சலி

Saturday, 26 January 2019


விழா சிறக்க வாழ்த்துக்கள்
NFTE  தமிழ் மாநிலப் பொருளர் மற்றும் NFTCL அமைப்பின் துணைப் பொதுச்செயலர் அன்பிற்குரிய
அருமைத் தோழர் L.சுப்பராயன்
அவர்களுக்கு இன்று 26.01.2019 கோவையில் நடைபெறும் பணிநிறைவு பாராட்டு விழா மிகச் சிறப்பாக அமைந்திட வாழ்த்துகிறோம்.

Sunday, 20 January 2019



வாழ்த்துக்கள்

இன்று (20.01.2019) JTO பதவிக்கு தேர்வு எழுதுவோர் வெற்றி பெற்று பதவி உயர்வு பெற உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்

Monday, 14 January 2019


இனிய
பொங்கல் மற்றும்
தைத்திருநாள்வாழ்த்துக்கள்


Thursday, 10 January 2019


வாழ்த்துகள்
பாராட்டுகள்
2019 ஜனவரி 8 மற்றும் 9  ஆகிய இரு நாட்களில்  நடைபெற்ற பொதுவேலை நிறுதத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.


Wednesday, 9 January 2019


வாழிய பல்லாண்டு

31.12.2018 அன்று பணி ஓய்வு பெற்ற திரு ஸ்ரீதரன் SDE  அவர்கள் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

குறிப்பு: வழக்கமான பதிவில் இவரது பெயர் வுடுபட்டுப் போனது. அதற்காக வருந்துகிறோம்.

Saturday, 5 January 2019


ஜனவரி 6
தோழர் குப்தா நினைவு தினம் 

ஒரு வரலாற்று நாயகனின் ஆறாவது நினைவு நாள் ஜனவரி 6.

ஒரு மனிதன் தோழனாகவும் தலைவனாகவும் இருப்பது அரிது. அப்படிப்பட்ட அரியதொரு தோழமை நெஞ்சம் படைத்த மாமனிதன் அவர்.
கடைநிலை ஊழியர்களின் வாழ்வுக்காக சிந்தித்து செயலாற்றி வெற்றி பெற்ற தலைவன்.
அவரது பலம் உள்ளதை உள்ளபடி பேசுவது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் தன்மை இல்லாத தலைவன்.
இப்படி ஒரு தலைவன் இனி உருவானால் அது அரிது.
அவர் போராட்டம் என்று அறிவித்தால் பந்தயக் குதிரை போல் தொழிலாளிகள் பாய்ந்து போராடிய காலம் அது. அவரது போராட்ட அறிவிப்புகள் மதிக்கப்பட்டன.அவரது காலத்தில் போராட்டங்கள் விடியலைத் தந்தன. வெளிச்சத்தைப் பாய்ச்சின.
அவர் பங்கேற்கும் கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் எழுத்து பூர்வமான விமர்சனக் கேள்விகளையும் "காதல் கடிதங்கள்" எனக் கூறிய தலைவன்.
BSNL ஓய்வூதியர்கள் உலகின் மிகப்பெரிய பாக்கியசாலிகள்.அவரது காலத்தில் நிறுவனமானதால் ஓய்வூதியம் உள்ளிட்ட உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. இல்லையேல்.....?????? அந்த நிலையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
உயிரும் உணர்வும் உள்ள வரை போற்றப்பட வேண்டிய ஒப்பில்லா தலைவன் குப்தா.


பொதுவேலை நிறுத்தம்
தேசம் காக்க,
உழையப்பவர் உரிமை காத்திட,
பொத்துதுறைகளைச் சீரழிக்கும் அரசின் கொள்கைகளை முறியடித்திட
ஜனவரி 8, 9 தேதிகளில் இரண்டு நாட்கள் பொது வேலைநிறுத்தம்.
பங்கேற்போம்.