NFTECHQ

Friday, 3 August 2018


ஆடி 18
தீரன் சின்னமலை நினைவு தினம்
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை ஈரோடு        மாவட்டம் சென்னிமலைஅருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர்.  தீர்த்தகிரி கவுண்டர்.
தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை கற்றுத் தேர்ந்தார்.கொங்கு நாடு அப்பொழுது மைசூரார்ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர்அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று .
இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்று சேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார்.  ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான்  ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியினரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார்.
நான்காம் மைசூர்ப் போரில்  இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து அரச்சலூர்அருகே ஓடாநிலைக் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும்தயாரிக்கப்பட்டன. போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாச்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.
அவர் கூட்டமைப்பில் கவுண்டர், தேவர், வன்னியர், வேட்டுவர், நாயக்கர், நாடார், தாழ்த்த பட்டோர் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர். கருப்பசேர்வை, ஓமலூர் சேமலைப் படையாச்சி, முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன், பத்தே முகம்மது உசேன் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர். எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.
1801இல் ஈரோடுகாவிரிக்கரையிலும், 1802ல் ஓடாநிலையிலும், 1804ல் அரச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.
போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். அவருடன் சின்னமலையின் தம்பியர்களும், படைத்தலைவர் கருப்பசேர்வையையும் தூக்கிலிட்டனர்.
ஆடி 18 அம்று அவர் தூக்கிலிடப்பட்டதால் அந்த நாளே அவரது நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

Thursday, 2 August 2018


2 முதல் 6 வரை...
வங்கி ஊழியர்களின் சம்பள மாற்றப் பேச்சுவார்த்தை இன்று (02.08.2018) மும்பையில் நடைபெற்றது.

ஊழியர் தரப்பில் 25 சத ஊதிய உயர்வுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

நிர்வாகம் 2 சதவிகித ஊதிய உயர்வு மட்டுமே தர இயலும் என தெரிவித்து வந்தது.

இன்றைய பேச்சுவார்த்தையில் 6 சதவிகித ஊதிய உயர்வு
தருவ்தாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்படது.
பேச்சுவார்த்தை தொடரும்.
மேலும் முன்னேற நமது வாழ்த்துக்கள்.


இனிய துவக்கம்
மூன்றாவது ஊதிய மாற்றம் குறித்து நமது இயக்கத்தின் ஐவர்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று துவங்கியது.

FNTO, TEPU, SEWA BSNL  அமைப்பின் தலைவர்களும் இந்த ஆளொசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.


அமைச்சருடன்  சந்திப்பு

01.08.2018  அன்று BSNL ஊழியர்கள் மற்றும அதிகாரிகள் அமைப்புகளின் தலைவர்கள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் திரு.மனோஜ் சின்கா  அவர்களைச் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பிற்கு கநாடாளுமன்ற உறுப்பினர் திரு ராஜேஷ் அவர்கள் ஏற்பாடு செய்தாராம்.

நமது அமைப்பின் சார்பில் துணைப் பொதுச்செயலர் தோழர்.சேஷாத்திரி பங்ககேற்றார்..

24.02.2018 ல் அமைச்சருடன் விவாதித்து உறுதிமொழி அளிக்கப்பட்ட ஊதியமாற்றம் -கொடுக்கும் திறன் சம்பந்தமான பிரச்னையில் விலக்கு பெறுதல்

ஓய்வூதியப்பங்களிப்பு

ஓய்வூதிய மாற்றம்

4G அலைக்கற்றை ஒதுக்கீடு
ஆகிய பிரச்னைகளில் யாதொடரு முன்னேற்றமும் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டது.

4G அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றி விரைவில் மத்திய அரசு முடிவெடுக்கும்  என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மற்ற பிரச்னைகள் குறித்து தொலைத்தொடர்புத்துறை செயலருடன் 03.08.2018 அன்று விவாத்திப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தங்கள் பிரச்னைகளுக்காக போராடும் ஊழியர்கள் நிறுவனத்தின் வருமானத்தைப் பெருக்கவும் பாடுபட வேண்டும் என அமைச்சர் அறிவுரை நல்கியுள்ளார்.
சந்தித்த அமைச்சருக்கும், சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் நன்றியை தலவர்கள் தெரிவித்தனர்.


Wednesday, 1 August 2018


ஐவர் குழு ஆலோசனை

மூன்றாவது ஊதிய மாற்றம் குறித்து NFTE சங்கத்தின் நிலைபாடு குறித்து ஆய்வு செய்யவும், ஆளோசனைகள் வழங்கவும் அமைக்கப்பட்ட ஐவர் குழுக்கூட்டம் 02.08.2018 அன்று டெல்லியில் நடைபெறுகிறது.

குழு உறுப்பினர்கள்
1. தோழர் ஷேசாத்ரி
2.தோழர் மதிவாணன்  
3.தோழர் நடராஜன்
4.தோழர் மகாபீர்சிங்
5.தோழர் டேனி ரஞ்சன்
பணிசிறக்க வாழ்த்துக்கள்