NFTECHQ

Wednesday, 27 June 2018

தொடரும் போராட்டங்கள்
26.06.2018 அன்று டெல்லியில் நடைபெற்ற
BSNL
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவுகள்.

11.07.2018 அன்று கார்ப்பரேட் அலுவலகத்தில்,
மாநிலத்தலைநகர்களில்,
மற்றும் மாவட்டத்தலைநகரங்களில்
ஆர்ப்பாட்டம்.

25.07.2018 முதல்
27.07.2018 வரை
தலைநகர் டெல்லியில்
மாநிலத்தலைநகரங்களில்
மாவட்டத்தலைநகரங்களில்
தொடர் உண்ணாவிரதம்

கோரிக்கைகள்
தொலைத்தொடர்பு அமைச்சர் அவர்களே…
1.ஊதிய உயர்வு
2.
ஓய்வூதிய உயர்வு
3.ஓய்வூதியப்பங்களிப்பு..
4.BSNL
க்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு என
24.02.2018
அன்று அனைத்து சங்கங்களிடம்
அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்.

Sunday, 24 June 2018


கவியரசு பிறந்தநாள்

காலத்தால் அழியாத
காவியம் பலதந்த
கவியரசு கண்ணதாசன்
பிறந்ததினம் இன்று ஜூன் 24

Thursday, 21 June 2018


சம்பளத் தேதியில் மாற்றம்
மூன்றாம் பிரிவு, நான்காம் பிரிவு ஊழியர்கள், JTO, SDE   ஆகியோருக்கு
இனிமேல் மாதச் சம்பளம் மாதத்தின் கடைசி நாள் என்பதற்கு பதில் அடுத்த மாதத்தின் முதல் தேதி  வழங்கப்படும்.
உதாரணமாக ஜூன் 30ஆம் தேதி வழங்கப்பட வேண்டிய சம்பளம் ஜூலை மாதம் முதல் தேதியில் வழங்கப்படும்.மாதத்தின் முதல் நாள் விடுமுறை நாளாக இருப்பின் அதற்கு அடுத்த நாள் வழங்கப்படும்.  

CMD முதல்  DE கேடர் வரை  சம்பளம் மாதத்தின் கடைசி நாள் என்பதற்கு பதில் அடுத்த மாதத்தின்  
5ஆம் தேதி வழங்கப்படும். 01.07.2018 முதல் இந்த நடைமுறை அமலாகும்.

இது கார்ப்பரேட் அலுவலக உத்தரவு.

Monday, 18 June 2018


அவசர மாவட்டச் செயற்குழு
மாற்றல் கொள்கை அமலாக்கம் குறித்து விவாதிக்க இன்று அவசர மாவட்டச் செயற்குழு நடைபெறும்.

இடம் : டெலிபோன்பவன் ஈரோடு


வோடாபோன் - ஐடியா இணைப்புக்கு இன்று ஒப்புதல்


வோடாபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களின் இணைப்புக்கு இன்று தொலைத் தொடர்புத் துறை ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருவாய் இழப்பை எதிர்கொண்டுவரும் வோடாபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைந்து செயலாற்ற முடிவெடுத்துள்ளன. இதன்மூலம் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக உருவாக இந்நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில் இந்நிறுவனங்களின் இணைப்புக்குத் தொலைத் தொடர்புத் துறை இன்று ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஜூன் 17ஆம் தேதி அளித்துள்ள பேட்டியில், “வோடாபோன் - ஐடியா இணைப்புக்கு ஜூன் 18ஆம் தேதி ஒப்புதல் அளித்து அதற்கான சான்றிதழை வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் வோடாபோன் இந்தியா நிறுவனம் சமர்ப்பித்துள்ள ஒத்திவைக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் கட்டணத்திற்கான ஓர் ஆண்டு வங்கி உத்திரவாதத்தைத் திருத்தியமைக்க ஐடியா நிறுவனம் கேட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை ஏற்று இரு நிறுவனங்களும் தங்களது நிலுவைத் தொகையை செலுத்தி விடும்” என்று கூறியுள்ளார்.
இணைப்புக்குப் பிறகு இரு நிறுவனங்களும் இணைந்து வோடாபோன் ஐடியா லிமிடெட் என்ற பெயரில் இயங்க முடிவெடுத்துள்ளன. இந்தப் பெயர் மாற்றம் ஜூன் 26ஆம் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த நிறுவனத்தில் வோடாபோன் நிறுவனம் 45.1 விழுக்காடு பங்கையும், ஆதித்ய பிர்லா குழுமம் 26 விழுக்காடு பங்கையும், ஐடியா பங்குதாரர்கள் 28.9 விழுக்காடு பங்கையும் கொண்டிருப்பார்கள்.
இந்நிறுவனத்தின் நிர்வாகத்தில் ஈடுபடாத தலைவராக பிர்லா முன்மொழியப்பட்டுள்ளார். தலைமை நிர்வாக அதிகாரியாக பாலேஸ் சர்மா நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல புதிய நிறுவனத்தின் புதிய நிதி செயற்பாட்டாளராக ஐடியாவின் தலைமை நிதி அதிகாரி அக்ஷய மூந்த்ரா நியமிக்கப்படவுள்ளார். இணைப்புக்குப் பிறகு இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 23 பில்லியன் டாலர்களாக இருக்கும்.


Sunday, 17 June 2018


சூடுபிடிக்கும் வர்த்தகப் போர்!


அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும்விதமாக, ஜூன் 16ஆம் தேதியன்று 50 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கச் சரக்குகள் மீது கூடுதலான வரியை சீனா விதித்துள்ளது.
ஜூன் 15ஆம் தேதி சீனாவின் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 25 விழுக்காடு வரியை விதித்தார். இதற்கு அடுத்த நாளே (ஜூன் 16) அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும்விதமாக 50 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கச் சரக்குகள் மீது சீனா வரி விதித்துள்ளது. இதனால் உலகின் இரண்டு மிகப்பெரும் பொருளாதாரங்கள் இடையே முழுமையான வர்த்தகப் போர் மூண்டுள்ளது. ட்ரம்ப் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீது 25 விழுக்காடு வரியை விதித்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 50 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் மீது 25 விழுக்காடு கூடுதல் வரியை விதிக்க சீன அரசு தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சின்குவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. எந்தெந்த அமெரிக்கப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுகிறது என்ற பட்டியலையும் சீன அரசு வெளியிட்டுள்ளது. வேளாண் பொருட்கள், வாகனங்கள், நீர்வாழ் சரக்குகள் உள்ளிட்ட 34 பில்லியன் டாலர் மதிப்பிலான 545 பொருட்களுக்குக் கூடுதல் வரி விதிக்கப்படுவதாக சீனாவின் சுங்க வரி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசாயனப் பொருட்கள், மருத்துவக் கருவிகள் மற்றும் மின்சக்திப் பொருட்கள் உள்ளிட்ட 114 பொருட்களுக்கான கூடுதல் வரி அமல்படுத்தப்படுவதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.


Saturday, 16 June 2018


ரம்ஜான் வாழ்த்துக்கள்





அனபு
ஈகை
மனியதநேயம்
சகோதரத்துவம்
இவற்றை உணர்த்தும்
ராம்ஜான் திருநாள் இன்று

அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.