NFTECHQ

Wednesday, 30 May 2018


காணாமல் போகும் வங்கிகள்

மிக மோசமான வருவாய் இழப்பையும், வாராக் கடன் பிரச்சினைகளையும் சந்தித்துவரும் இந்திய வங்கிகள் சில இத்துறையில் நீண்ட நாள்கள் நீடிப்பது கடினமானது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநரான எஸ்.எஸ்.முந்த்ரா கருத்துத் தெரிவித்துள்ளார்.
“வாராக் கடன் உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கும் 11 பொதுத் துறை வங்கிகளை ரிசர்வ் வங்கி சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உட்படுத்தியுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் அதில் பாதி அளவு வங்கிகள் செயலற்றுப் போகும் வாய்ப்புள்ளது. ரிசர்வ் வங்கியின் சீரமைப்பில் உள்ள இவ்வங்கிகள் ஏற்கெனவே தங்களது கடன் நடவடிக்கைகளில் சரிவைச் சந்தித்து வருகின்றன. எனவே, இவ்வங்கிகள் தங்களது மூலதனத்தைக் கொண்டு தொடர்ந்து இயங்க முடியுமா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு தொடர்ந்து இயங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையெனில் அவற்றை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவது சரியான முடிவாக இருக்காது” என்று கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் சீர்திருத்தக் கண்காணிப்பில் உள்ள 11 வங்கிகளில் 10 வங்கிகள் தங்களது காலாண்டு வருவாய் விவரங்களை வெளியிட்டுள்ளன. அதில் ஒன்பது வங்கிகள் வாராக் கடன் சுமையைக் குறைக்கும் நடவடிக்கையில் எவ்வித முன்னேற்றமும் காணவில்லை. பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மட்டுமே சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது. சமீபத்தில் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், ‘2015ஆம் ஆண்டின் மார்ச் 31ஆம் தேதி ரூ.2.67 லட்சம் கோடியாக இருந்த இந்தியப் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு 2017 ஜூன் 30ஆம் தேதி ரூ.6.89 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாகச் சென்ற இரண்டு ஆண்டுகளில் மட்டும் வங்கிகளின் வாராக் கடன் இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. இந்தியாவின் 21 பொதுத் துறை வங்கிகளில் 11 வங்கிகளின் வாராக் கடன் அல்லது செயற்படா சொத்துகளின் மதிப்பு அவற்றின் மொத்த சொத்துகளின் மதிப்பை விட 15 சதவிகிதம் அதிகமாக இருக்கிறது’ என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

Tuesday, 29 May 2018


பதஞ்சலி சிம் கார்டு அறிமுகம்

பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து பதஞ்சலி நிறுவனம் தனது பிரத்யேக சிம் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் (FMCG) சந்தையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கே சவால் விடும் வகையில் பல்வேறு வகையான நுகர்பொருட்களை ஆயுர்வேத முறைப்படி தயாரித்து விற்பனை செய்துவரும் பதஞ்சலி நிறுவனம், இத்துறையில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாகத் திகழ்கிறது. இத்துறை மட்டுமல்லாமல் ஆடை தயாரிப்பு, பாதுகாப்புச் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் களம்கண்டுள்ள பதஞ்சலி தொலைத் தொடர்புத் துறையையும் விட்டுவைக்கவில்லை. மே 27ஆம் தேதி ஹரித்வாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பதஞ்சலி நிறுவனரும், அதன் விளம்பரத் தூதருமான யோகா குரு பாபா ராம்தேவ் பதஞ்சலி நிறுவனத்தின் பிரத்யேக ‘சுதேசி சம்ரிதி’ சிம் கார்டை அறிமுகப்படுத்தினார்.
பிஎஸ்என்எல் நெட்வொர்க் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகம் செய்துள்ள இந்த சிம் கார்டு சேவை துவக்கத்தில் பதஞ்சலி நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும், பின்னர் நாடு முழுவதும் இதன் சேவை விரிவுபடுத்தப்படும் எனவும் பாபா ராம்தேவ் கூறினார். பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் சுமார் 5 லட்சம் சிம் கார்டு கவுன்ட்டர்கள் இருப்பதாகவும், அங்கு கூடிய விரைவில் பதஞ்சலி சிம் கார்டுகள் கிடைக்கும் எனவும் பாபா ராம்தேவ் கூறியுள்ளார். ரூ.144 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்புச் சலுகையுடன், 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களும் பதஞ்சலி சிம் கார்டுகளில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. பதஞ்சலி சிம் கார்டுகளில் பதஞ்சலி தயாரிப்புகளை 10 சதவிகிதத் தள்ளுபடியில் பெறலாம் எனவும் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.

Friday, 18 May 2018

மே 18
தோழர் மாலி பிறந்த தினம்

இன்று தோழர் மாலி அவர்கள் பிறந்த தினம்.


இன்னா செய்தவருக்கும் இனியவை செய்யும் ஒப்பற்ற தனிப்பெரும் குணத்துடன் 73 ஆண்டுகள் வாழ்ந்த அருமைத் தோழர் மாலி இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திட, பயன் தரும் வாழ்க்கையும் வாழ்ந்திட   மனாதார வாழ்த்துகிறோம்.


பணி நிறைவு பாராட்டு விழா

கோபி கிளைத் தலைவர் தோழர் ஆறுமுகம், கோபி கிளைச்செயலர் தோழர் முருகசாமி, தோழர் சம்பத்குமார் ஆகியோருக்கு 16.05.2018 அன்று பணி நிறைவு பாராட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தோழர்கள் மாலி, செல்வராஜன், ராஜமாணிக்கம், பழனியப்பன் (AGM EB)) ஆகியோர் வாழ்த்துரையும் பாராட்டுரையும் வழங்கினர்.


கிளை மாநாடு
கோபி கிளையின் மாநாடு 16.05.2018 அன்று  சிறப்புடன்  நடைபெற்றது.  தோழர் ஆற்முகம் தலைமையில், கிளைச்செயலர் தோழர் முருகசாமி வரவேற்க, மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு துவக்க வைத்து உரை நிகழ்த்த, மாநில அமைப்புச்செயலர் தோழர் புண்ணியகோட்டி வாழ்த்துரை வழங்க, ஒரு மனதான நிர்வாகிகள் தேர்வுடன் மாநாடு சிறப்புடன் நடைபெற்றது.

Thursday, 17 May 2018


மே 17
தோழர் ஜெக்ன் பிறந்த தினம்

தோழர் ஜெகனின் சிந்தனைகளை நம் புரிந்தோம்.
தோழர் ஜெகனின் செயல்களை நம் அறிந்தோம்.
வெறும் எழுத்துக்களாலும், பேச்சுக்களாலும் அவரை நினைப்பதைக் காட்டிலும் அவர் வழியில் செயல்படுவதே அவரை உண்மையில் நினைபவில் நிறுத்துவதாகும்.


மே 17
சர்வதேச் தொலைத்தொடர்பு தினம்
அசுர வளர்ச்சி
என்பதன் அடையாளம் தொலைத்தொடர்புச் சேவை.
கற்பனைக்கெட்டாத மேலும் சில நிகழ்வுகளை தொழில்நுட்பம் தொலைத்தொடர்பில் செய்டயும்

Saturday, 12 May 2018


தெருமுனைப் பிரச்சாரம் நிறைவு

08.05.2018காங்கயம் தோழர் புண்ணியகோட்டி மற்றும் தோழர்கள்
09.05.2018 பவானி தோழர் எம்.நாகராஜன் மற்றும் தோழர்கள்
11.05.2018 பெருந்துறை மற்றும் சென்னிமலை பகுதிகள் தோழர் மெளனகுருசாமி மற்றும் தோழர்கள்
11.05.2018 அந்தியூர் பகுதி தோழர் நல்லுசாமி மற்றும் தோழர்கள்
11.05.2018 GM  அலுவலகத்தில் நிறைவு.

Thursday, 10 May 2018


09.05.2018
தெருமுனைப் பிரச்சாரம்
09.05.2018
அன்று கோபி , சத்தி, தாராபுரம் ஆகிய பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

கோபி,சத்தி  பகுதிகளில் தோழர்கள் பழனிவேலு நாகராஜன் ஆகியோரும், தாராபுரம் பகுதியில் தோழர்கள் புண்ணியகோட்டி, செளந்தர் ஆகியோரும் பங்கேற்றனர்.

Tuesday, 8 May 2018


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கடலூர்தந்த NFPTE  இயக்கத்த்ன் போராளி அருமைத் தோழன் ரகு அவர்களுக்கு இன்று பிற்ந்த நாள்.

களம் பல கண்டு இயக்கத்தை வளர்த்திட்ட அருமைத் தோழர் ரகு இன்னும் பல ஆண்டு நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்.


தெமுனைப் பிரச்சாரம்
அகில இந்திய அமைப்புகளின் அறைகூவலுக்கிணங்க ஈரோட்டில் 07.05.2018 அன்று தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன.

டெலிபோன் பவன்,
ஈஸ்வரன் கோவில் வீதி,
கருங்கல்பாளையம் காந்தி சிலை,
எல்.ஐ.சி அலுவலக வீதி,
சூரம்பட்டி நால்ரோடு,
வீரப்பன்சத்திரம்
ஆகிய இடங்களில்
இவ்வியக்கம் நடைபெற்றது.
தோழர்கள் மாலி, செல்வராஜன், சுப்ரமணி  (CITU)ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

மாவட்டத்தின் பிற பகுதிகளில்   இயக்கம் தொடர்கிறது.

Saturday, 5 May 2018


மார்க்ஸ் 201
மே 5 மார்க்ஸ் 201ஆம் பிறந்த தினம்
ஒரு அரசியல் அறிக்கை வெற்றிபெற வேண்டுமென்றால் அது ஒரு கவிதையைப் போல நம் இதயத்துடன் பேச வேண்டும். அதே நேரத்தில் நம் மனதில் அசாதாரணமான புதிய படிமங்களையும் கருத்துக்களையும் விதைக்க வேண்டும். நம்மைச் சுற்றி நிகழும் குழப்பம் நிறைந்த, வருத்தமளிக்கக்கூடிய, பரவசமான மாற்றங்களின் உண்மைக் காரணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளும் வகையில் நம் கண்களை அது திறக்க வேண்டும்.
கூடவே, நம் தற்போதைய சூழல் தன்னுள் கருக்கொண்டிருக்கும் சாத்தியங்களையும் அது வெளிக்காட்ட வேண்டும். இந்த உண்மைகளை நாமே அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போய்விட்டதே என்று நம் இயலாமையை நினைத்து நம்மை வருத்தப்பட வைக்க வேண்டும். மிகவும் பிற்போக்கான கடந்த காலத்தையே திரும்பத் திரும்ப உற்பத்திசெய்வதில் நாமும் கொஞ்சம் உடந்தையாகத்தான் இருந்திருக்கிறோம் என்ற சங்கடமான உண்மையை நாம் உணர்வதற்குத் தடையாக இருக்கும் திரையை அது அகற்ற வேண்டும். இறுதியாக, அது பீத்தோவனின் சிம்பனியைப் போல சக்தி கொண்டிருக்க வேண்டும்: அதாவது பெரும் மக்கள் திரள் அனுபவித்துக்கொண்டிருக்கும் தேவையில்லாத துயரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் எதிர்காலம் ஒன்றின் முகவர்களாக மாற அது நம்மைத் தூண்ட வேண்டும்; தான் கொண்டிருக்கும் அசலான விடுதலைக்கான சாத்தியத்தை மனிதகுலம் உணர்வதற்கான உந்துதலை அது தர வேண்டும்.
46 லிவர்பூல் தெரு, லண்டன் என்ற முகவரியில் 1848 பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின் அளவுக்கு வேறு எந்த அறிக்கையும் மேற்குறிப்பிட்டவற்றை ஒருங்கே இதுவரை சாதித்ததில்லை. இரண்டு இளம் ஜெர்மானியர்கள் சேர்ந்து எழுதிய அறிக்கை அது. ஒருவர் கார்ல் மார்க்ஸ், 29 வயது தத்துவவாதி. இன்னொருவர் ஃப்ரெடெரிக் எங்கெல்ஸ், வயது 28, மான்செஸ்டர் ஆலைக்கு வாரிசுதாரர்.

எழுத்து வன்மை,   
அரசியல் சித்தாந்தப் படைப்பு
என்ற வகையில் இந்த அறிக்கைக்கு நிகராக வேறெதையும் எக்காலத்திலும் சொல்ல முடியாது.

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மனிதகுலம் முழு விடுதலை பெற இப்படி ஒரு தத்துவத்தை யாரும் தர இயலாது.

இதனால்தான் மார்கஸ் மாமனிதன் என போற்றப்படுகிறார்.

Friday, 4 May 2018


பாராட்டுக்கள்

ஏப்ரல் மாதத்திலும் தனியார் நிறுவனங்களில் இருந்து வாடிக்கையாளர்களை BSNL  நிறுவனத்திற்குள் ஈர்ப்பதில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

தொடர்ந்து மூன்று மாதமாக இச்சாதனையைப் படைத்திட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்.

Wednesday, 2 May 2018


மேதின வாழ்த்துக்கள்
மேதினி எங்கும்
உழைப்பவர்கள் கொண்டாடும் ஒப்பற்ற திருநாள் மே தினம்.

மேதினம் தந்திட்ட உரிமைகளைக் காத்திட உழைக்கும் வர்க்கம் ஓரணியாய் நிற்கட்டும்.
பெருகிவரும் பகை அனைத்தும் முறியடிக்கப்பட்டடும்.
அனைவருக்கும் இனிய மே தின வாழ்த்துக்கள்


வாழிய பல்லாண்டு
30.04.2018 அன்று பணி ஓய்வு பெற்ற


1. தோழர் P.ஆறுமுகம்  OS
2.தோழர் S.ஜோசப் ஆரோக்கியராஜ் OS
3. தோழர் K. திருஞானம்  SOA
4. தோழர் V.C. வெங்கடாசலம் OS
5. தோழர் P.J.அசோலக்குமார்  OS
6. தோழர் K.சின்னசாமி JE
7.தோழர் P. விஸ்வநாதன்  TT
8 தோழர் A.R சுப்ரமணியன் TT.
9. தோழர் M. செல்வன் TT
10. தோழர் V. ராமசாமி TT
11. தோழியர் K.காமாட்சி  TT
12. தோழர் R. மனோகரன் TT

ஆகியோர் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ மாவட்டச் சங்க்கம் சார்பாக வாழ்த்துகிறோம்