NFTECHQ

Monday, 5 February 2018

வரலாறு??!!
நாம் அறிந்த வரை, இதுவரை போராட்ட காலத்தில் கிளைமாநாடுகள், மவட்டமாநாடுகள், மாநில மாநாடுகள், அகில இந்திய மாநாடு என எதையும், எந்த சங்கமும் நடத்தியதில்லை.

ஆனால் முதன்மைச் சங்கம் கேரளாவில் மாநில மாநாட்டை சத்தியாகிரக போராட்ட காலமான 01.02.2018 முதல் 03.02.2018 வரை நடத்தியுள்ளது. 

Saturday, 3 February 2018

மனிதவள மேம்பாட்டு இயக்குனர் அளித்த உறுதிமொழி


BSNL நிறுவனத்தின் மனிதவள இயக்குனர்  (DIRECTOR SR) தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் மற்றும் செயலாளரைச் சந்திக்கவும் பிரஸ்னைகள் குறித்து விவாதிக்கவும்  ஆவன செய்வதாக தொழிற்சங்கத் தலைவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
சத்தியாகிரகம் நிறைவு
30.01.2018 அன்று துவங்கிய சத்தியாகிரக இயக்கம் 03.02.2018 அன்று நிறைவுற்றது.

காலவரையற்ற விதிப்படி வேலை தொடர்கிறது.
அண்ணா தந்த பாடம்
பிப்ரவரி 3
அண்ணா நினைவு தினம்.

அரசியல் களத்தில் யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, பரமவைரியான ராஜாஜியையும் இணைத்து ஒரு வலுபவான கூட்டணியை அமைத்து 1967ல் காங்க்கிரஸைஆட்சியிலிருந்து அகற்றினார்.
இன்றைய சூழலில் 2019ல் நாட்டை யார் ஆளக்கூடாது  என்ற உறுதியுடன் அணிசேர்க்கை அமைவது அவசியம்.


இதுவே அண்ணா கற்றுத்தந்த பாடம்.
சத்தியாக்கிரகம்

காந்திஜி அறிமுகப்படுத்தியப் போராட்ட வடிவங்கள் ஒத்துழையாமை,செய் அல்லது செத்துமடி,வரிகொடா இயக்கம்,உண்ணாவிரதம்,சத்தியாக்கிரகம் என்பன.

முன்னவை மூன்றும் அரசியல் தளத்தில் இருந்து எழந்தவை.பின்னவை இரண்டும் ஆன்மீகத் தளத்தில்
இருந்து முன் வைக்கப்பட்டவை.
அரசியல் வடிவங்கள் காந்திஜிக்கு முன்பும்,கட்டப்பொம்மன் உட்படகுறுநில மன்னர்கள் முயற்சித்தவை.

லெனின் கூட ருஷ்யாவின் அந்நியப் படையெடுப்பு நடந்த போழ்து தன்தேசத்து மன்னன் ஜாருக்கு ஒத்துழைக்க வேண்டாம் என்று அறைகூவல் விடுத்தார்.அது புரட்சிக்கு வழி கோலியது.

உண்ணாவிரதம்,சத்தியாக்கிரக- வடிவங்கள் காந்திஜி மீது உலகப் பார்வையை ஈர்த்தவை.காந்திஜி ஒரு தூய இந்துவின் வாழ் நெறிகளை ஓம்பினார்.பிற மதத்தினர் மீது காழ்ப்பு இன்றி அக்கறைச் செலுத்தினார்.

தூய இந்துவின் கடமை பிறரை நேசிப்பது என்பதே இந்து தத்துவமும் அதன் தரும்மும் போதிப்பவை.எல்லா மத தத்துவங்களின் சேர்கூடு அது.

பாரதிய ஜனதாக் கட்சி தனது வசிய சக்தியால், தான் ஒவ்வாமைக் கொண்டிருந்த தேசத் தலைவர்களைக் கூட, தன்னுக்குள் காந்தப் புலனாய் இழுத்துக் கொள்ளும் தகிடு தத்தங்களைச் செய்கிறது.

காந்திஜி,அம்பேத்கர்,பகத்சிங்,வாஞ்சி எனப் பலரைச் சுடலாம்.

இந்திய இடதுசாரிகள் தங்கள் சொந்தக் குழந்தைகளை ஆராதிக்க வல்லவர்கள்.அடுத்த வீட்டுக் குழந்தை அழகாய் இருந்தாலும் தூக்கிக் கொஞ்ச தயங்குபவர்கள்.இது பலவீனம் தான்.

இடதுசாரி தொழிற்சங்கங்கள் காந்திஜியின் உண்ணாவிரதத்தை சுவீகரித்துக் கொண்டது ஒரு நல்ல விஷயம்.
சத்தியாக்கிரகம் என்பது ஒரு உயர்ந்த ஆழ்நிலைத் தியானம்.இதன் மெய்யைப் புரிந்து கொள்வது கடினம்.குண்டலினி யோகப் பயிற்சியைப் போன்றது.சகிப்புத் தன்மையின் உச்சம் அது.இயேசுவின் மறு கண்ணத்தைக் காட்டு என்பதானது.பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை உலுக்கிப் போட்டது இது.

தொழிற்சங்கங்கள் எந்த அர்த்தத்தில் இந்த வடிவத்தைக் கையாள்வது?எதையாவது புதுசா செய்யனும் என்று மூளை உபத்திரவத்தால் முயல்பவர்கள் காந்திஜி ஆக முடியுமா? தொழிற்சங்கங்கள் தங்கள் பகுதி கோரிக்கைகளை வலியுறுத்தும் போது இவ்வடிவம் சாத்தியப்படுமா? தேசத்தின் இறையாண்மையைக் காத்திட காந்திஜி முன் வைத்த இந்த வடிவம்' வன்கொடுமைகளைத் தாங்கிக் கொள்.உயிரேப் போனாலும் திருப்பித் தாக்காதே.கழிவிரக்கம் மூலம் தேச மக்களைக் கிளர்ந்தெழச் செய்' என்பதை வலியுறுத்தியது.
பரசுராமரின் தூக்கம் கலையக்கூடாது என்பதற்காக கர்ணன் விஷவண்டுவின் குடைச்சலைத் தாங்கிக் கொண்டது போல.
நாம் எந்த வலியைச் சகித்துக் கொண்டோம்?

நன்றி தோழர் ஜெயராமன், சம்மேளனச் செயலர்

Friday, 2 February 2018

"பணவீக்கம் உயர்ந்ததற்கு பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, காய்கறிகள் விலை உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தியது போன்றவைதான் முக்கிய காரணமாகும்." அருண் ஜேட்லி

அப்படியா? அப்புறம் ஏன் குடியரசுத்தலவர், துணைக் குடியரசுத்தலவர், கவர்னர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இந்த சம்பள உயர்வு இருக்கும் என்ற அறிவிப்பு.


Thursday, 1 February 2018

2018 - 19ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று (01.02.2018-) தாக்கல் செய்தார்.

2018 - 19ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று (01.02.2018-) தாக்கல் செய்தார்.

2018 - 19ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று (01.02.2018-) தாக்கல் செய்தார். 
தொடரும் அறப்போர்
30.01.2018 முதல் துவங்கி இன்று மூன்றாவது நாளாக அறப்போராட்டம் அறவழ்யில் தொடர்கிறது.

தொடர்வோம் அறப்போரை.

Wednesday, 31 January 2018

பல்லாண்டு வாழ்க
31.01.2018 அன்று பணி நிறைவு பெறும்
தோழர் N.ஆனந்தராஜு   OS
தோழர் S.சண்முகம் TT
தோழர் V.பன்னீர்செல்வம் TT
ஆகியோர் நலமுடனும்
மகிழ்வுடனும்

பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Tuesday, 30 January 2018

ஜனவரி 30
இன்று மகாத்மா காந்தியடிகள்
மதவாதிகள் தூண்டுதலால்
மாபாவி கோட்சேவால்
படுகொலை செய்யப்பட்ட நாள்.
அண்ணலைக் கொன்றது நாதுரோம் கோட்சேவின் குண்டுகள் இல்லை. எங்கிருந்தோ பாய்ந்த் நான்காவது குண்டுதான் கொன்றது என்று இன்றும் நீதிமன்றத்தில் வாதாடும் பேர்வழிகள்  நடமாடும் காலமிது.
அப்படிப்பட்டவ்ர்களின் ஆட்சியில்தான் நியாயம் கேட்டு இன்று போராட்டத்தை துவக்குகிறோம்.
சத்தியாகிரகம் சாதிக்கும் என்ற நம்பிக்கையில் களம் காண்கிறோம்.

நமது மனவலிமையும் அதன் வழியில் செயல் வலிமையும் வெற்றியைத் தரும் என்ற உறுதியுடன் களம் காண்போம்.
சத்தியாகிரகம்,
விதிப்படிவேலை
என்னும் இரு கருவிகளுடன் களம் காண்போம்.
காரியங்கள் பல செய்வோம்.

கள்த்தில் வெற்றி கான்போம்.

Saturday, 27 January 2018

போராட்டமும் கோரிக்கைகளும்

போராட்ட இயக்கங்கள்

30.01.2018 முதல் தொடர்ந்து ஐந்து நாட்கள் சத்தியாகிரகம்

30.01.2018 முதல் காலவரையற்ற விதிப்படி வேலை

23.02.2018 அன்று டெல்லியில் DOT அலுவலகமான 
சஞ்சார் பவன் நோக்கி பேரணி

கோரிக்கைகள்

1. மூன்றாவது ஊதிய மாற்றம்
 (a)01.01.2017 முதல் 15 சதவிகித உயர்வுடன் 
ஊதிய மற்றத்தை அமல்படுத்து
(b) 01.01.2017 முதல் ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்து
(c) இரண்டாவது ஊதிய மாற்றத்தில் விடுபட்ட
பிரச்னைகளுக்குத் தீர்வை உருவாக்கு
2. துணை டவர் நிறுவனத்தை உருவாக்கும் 
முடிவைக் கைவிடு
3.ஓய்வு  பெறும் வயது 60 என்பதை 58 ஆக குறைக்காதே. விருப்ப ஓய்வின் மூலம் ஊழியர்களைக் 
குறைக்கும் முயற்சியைக் கைவிடு.

தோழர்களே தோழியர்களே

மேற்கண்ட கோரிக்கைகளை 
வென்றெடுக்க உறுதியுடன் போராடுவோம்.
இறுதி வெற்றி நமதே
வாழ்த்துக்கள்

நாளை 28.01.2018 அன்று நடைபெறும் JE தேர்வில் பங்க்கேற்க்கும் தோழர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
வாழ்த்துக்கள்

சிறப்பான முறையில் பணிசெய்தமைக்காக ஈரோடு எக்ஸ்டர்னல் பகுதியைச் சேர்ந்த கீழ்க்கண்ட டெலிகாம் டெக்னீசியன் தோழர்கள் நிர்வாகத்தால் பாராட்டப்படு கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

தோழர் G.பூபாலன்
தோழர் E.V.ராஜேந்திரன்
தோழர் R.யுவராஜ்சிங்
தோழர் V.மணியன்
இப்படிப்பட்ட அணுகுமுறையைக் கையாளும் நிர்வாகத்தைப் பாராட்டுகிறோம்.
பாராட்டப்பட்டு, கெளரவிக்கப்பட்ட தோழர்களுக்கு மாவட்டச் சங்கம் சார்பாக உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
நமது வேண்டுகோள்
சிறப்பாகப் பணி செய்வோரைத் தேர்வு செய்யும்போது  விருப்பு வெறுப்பற்ற அணுகுமுறையைக் கையாள வேண்டும்.
உண்மையான கணக்கீடுகளை ஒப்பிட்டு தேர்வு முறை அமைவதே பொருத்தமாக இருக்கும்.
அதுவே நிர்வாகத்துக்கும் பாராட்டு பெறூவோருக்கும் கிடைக்கும் மரியாதையாக அமையும்.
மற்ற ஊழியர்களுக்கும் ஊக்கம் தருவதாக அமையும்.

மேலும் மாவட்டம் முழுமையும் உள்ள அனைத்து கேடர்களிலும் உள்ள ஊழியர்களின் பணிகளையும் கணக்கில் கொள்வது மேலும் சிறப்பைத் தரும்.

Friday, 26 January 2018

குடியரசு தின வாழ்த்துக்கள்



இந்திய தேசத்தின் 69 ஆம் குடியரசு தினம் இன்று.
சுதந்திரம் எவ்வள்வு முக்கியமோ அதற்கு இணையானது குடியரசும். மக்களின் ஆட்சி என்பதே குடியரசின் மகத்துவம். மக்கள் ஆட்சி என்னும் ஜனநாயக முறைப்படி 1952ல் நமது நாட்டில் முதல் தேர்தல் நடைபெற்றது.
71 ஆண்டுகளாக ஒன்றுபட்ட சுதந்திர நாடாகவும்,
66 ஆண்டு களாக மக்கள் ஆட்சி என்னும் ஜனநாயக மாண்பும் காக்கப்பட்டு வருவது பெருமைக்குரியது.
இப்பெருமைகளைத் தொடர்ந்து காப்போம்.
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்
உயர்வு தந்த தளர்வு
பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு, ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து போக்குவரத்து அதிகாரி கள் கூறும்போது, “கட்டண உயர்வுக்கு முன்பு அரசு போக்குவரத்து கழகங்களில் தினமும் சராசரியாக 2 கோடியே 10 லட்சம் பேர் பயணம் செய்தனர். வசூல் தொகையும் ரூ.21 கோடி வரை கிடைத்தது. கட்டண உயர்வுக்கு பிறகு சுமார் ரூ.35 கோடி முதல் ரூ.38 கோடி வரையில் வசூலாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தினசரி வசூல் ரூ.28 கோடியாக மட்டுமே உயர்ந்துள்ளது. பயணிகளின் மொத்த எண்ணிக்கையும் ஒரு கோடியே 85 லட்சமாக குறைந்து விட்டது. சுமார் 25 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணம் செய்வது குறைந்துள்ளது. இவர்கள் ரயில், தனியார், ஆம்னி பஸ் பயணத்துக்கு மாறியிருக்கலாம்’’ என்றனர்.
மேலும் சில அதிகாரிகள் கூறும்போது, “பஸ் கட்டணம் உயரும்போதெல்லாம், பயணி கள் எண்ணிக்கை கணிசமாக குறைவது வாடிக்கையான ஒன்றுதான். அதிக கட்டணம் உயர்வு, சீசன் இல்லாதது உள்ளிட்டவை இதற்கு காரணமாகும். இது நிரந்தரமானதல்ல. அதேநேரத்தில் அரசு போக்குவரத்து கழகங்களை உடனடியாக சீரமைத்து, தரமான சேவையை வழங்காவிட்டால் வருவாய் இழப்பு என்பது நிரந்தரமாகிவிடும்’’ என்றனர்.
தனியார் பஸ்கள்

இதுதொடர்பாக ஏஐடியுசி பொதுச்செயலாளர் ஜெ.லட்சுமணன் கூறும்போது, ‘‘ஒரே நேரத்தில் அதிகளவில் கட்டணம் உயர்த்தப்பட்டதால், குறிப்பிட்ட சதவீத மக்கள் ரயில், தனியார் பஸ் மற்றும் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்த தொடங்கி விட்டனர். சென்னையை காட்டிலும், தமிழகம் முழுவதும் இயக்கப்படும் 5 ஆயிரம் தனியார் நகரப் பஸ்களில் அரசு பஸ்களை விட குறைவாகவே கட்டணம் வசூலிப்பதால், அதிகளவிலான மக்கள் அதில் பயணம் செய்கின்றனர். எனவே, மக்களிடம் அரசு போக்குவரத்து கழகங்கள் நம்பக தன்மையை ஏற்படுத்த உடனடி யாக புதிய பஸ்களை வாங்கி, சிறப்பான சேவையை அளிக்க வேண்டும்’’ என்றார்.
நன்றி இந்து தமிழ்

Thursday, 25 January 2018

9 மணி நேரத்தில் ரயில் நிலையம் அமைத்து அசத்தல்: சீனாவில் அதிசய சாதனை


Wednesday, 24 January 2018

மத்திய சங்கங்களின் அறைகூவல்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து நவம்பர் 2017ல் நடைபெற்ற நாடாளுமன்ற முர்றுகைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக
25.01.2018 அன்று நாடு முழுமையும் மறியல் போராட்டம்.

25.01.2018
காலை 10 மணிக்கு
ஈரோடு  பேருந்து நிலையத்தில் அனைத்து
மத்திய சங்க ங்களின் மறியல் போராட்டம்.

வாரீர் தோழர்களே