NFTECHQ

Saturday, 9 December 2017

வேலைநிறுத்தம்
தவிர்க்க முடியாததே

ஊதிய மாற்றத்தை பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணமுடியாதா? எதற்கு வேலைநிறுத்தம்?

பேச்சு  வார்த்தைக்கு சில அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதற்குப்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை. தொழிற்சங்கங்களின் கருத்தையும் கேட்கவில்லை.CMD கனிவோடு இருக்கிறார். அமைச்சர் ஆதரவாக இருக்கிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் எந்த ஒரு துவக்கமும் இல்லாமல் இருப்பது ஏன்?

அரசு எந்த உதவியும் செய்யாது என கை விரித்து விட்டது.
அத்தோடு "நிறுவனத்தின் கொடுக்கும் திறன், கொடுத்தபின் செலவைத் தாங்கும் திறன்" என்ற அம்சங்க்களோடு மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை அமைச்சரும் CMDயும் மாற்ற முடியுமா?

BSNL நிறுவனம் ஊதிய மாற்றத்துக்கான செலவைச் சமாளித்துக் கொள்ளும் என CMD எழுத்து பூர்வமாக்ச் சொன்ன பின்னரும் DOT அதை ஏற்காமல் எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவிக்கிறது.

வேலைநிறுத்தம் என அறிவிப்பு கொடுத்த பிறகும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண மறுப்பது ஏன்?

ஆகவே சம்பள மாற்றத்துக்கான வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாதது. அனைத்து அமைப்புகளும் ஒன்றாக உறுதியுடன் போராடினால் மட்டுமே ஊதிய மாற்றம் என்ற கனவு நனவாகும்.

CMD செலவை BSNL சமாளித்துக் கொள்ளும் என்று சொல்லிவிட்டதால் பிரச்னை தீராதா?

ஊதிய மாற்றம் என்பதில் CMD அவர்களின் அதிகார எல்லை அவ்வளவே. ஏனெனில் ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனமும் சம்பந்தப்பட்ட  அமைச்சகத்திடம் அனுமதி பெற்றே தீர வேண்டும். இது வழக்கமானது என்பதோடு மத்திய அமைச்சரவையின் முடிவும் அதுதான். நம்மைப் பொறுத்தவரையில் தொலைத்தொடர்பு அமைச்சகம் அனுமதி தர வேண்டும்.

போராடினால் நிச்சயம் பிரச்னை தீர்ந்து விடுமா?

இன்று பெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து உரிமைகளும் சலுகைகளும் போராடித்தான்  பெற்றிருக்கிறோம். யாருடைய கருணையிலும் பெறவில்லை.

பெற்றுவரும் சம்பள்ம், பஞ்ச்சப்படி போறன்றவற்றிற்குப் பின்னால் சிலர் இன்னுயிரை இழந்துள்ளனர்என்பதை மறக்கக் கூடாது. பல தலைவர்களின் தியாக வாழ்வும் பின்னணியில் உள்ளது. முன்னேற்றம் என்பது தானாக வராது.

கடுமையான சூழ்நிலையில் ஒரு மாற்றத்துக்கான போராட்டம் இது என்ற உணர்வோடு களம் காண்போம்.


அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். இதுவும் நமது நியாயமும் வெற்றியைப் பெற்றுத் தரும்.
வேலை நிறுத்தம்
சில கேள்விகளும் பதில்களும்

டிசம்பர் 12,13 வேலை நிறுத்தம் முக்கியமானது ஏன்?

01.01.2017 முதல் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் சம்பள மாற்றம் நடைபெற வேண்டும். இன்று பணியில் உள்ள ஊழியர்கள், அதிகாரிகள் வரும் 2020 க்குள் பணி ஓய்வு பெற்று விடுவார்கள். எனவே சம்பள மாற்றம் மிக மிக அவசியம். ஒருவேளை சம்பள மாற்றம் ஏற்படாவிட்டால் கடந்த 10 ஆண்டுகளாகப் பெற்று வரும் சம்பள விகிதமே தொடரும். விளைவாக ஓய்வூதியம் பாதிக்கப்படும். எனவே சம்பள மாற்றத்தை பெற்றாக வேண்டிய கட்டாய சூழல் உள்ளது. சம்பள மாற்றம் செய்திட BSNL நிறுவனம் விரும்பினாலும் அரசின் முன் அனுமதி இல்லாமல் ஏதும் செய்யமுடியாது. அரசு அனுமதி தருமா? தராது என்றால் வேலை நிறுத்தம் அவசியமானது. வேறு வழியில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வழியில்லை.

BSNL நிறுவனம் ஏதும் செய்ய முடியாதா?

BSNL நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும்  ஒரு பொதுத் துறை நிறுவனம். மத்திய அரசின் கொள்கை நிலைபாடுகள் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது. விளைவாக கால்கள் கட்டப்பட்ட நிலையில் போட்டியில் ஓட வேண்டியுள்ளது. உண்மையில் கடினமான முயற்சி காரணமாக போட்டியில் BSNL நிறுவனம் நிலைபெற்று நிற்கிறது. எனினும் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக கட்டணங்களை மத்திய அரசுக்கு கட்ட வேண்டிய சூழ்நிலை. விளைவாக லாபத்துடன் இயங்கி வந்த நிறுவனம் நஷ்டதில் தள்ளப்பட்டது. லாபத்தில் இயங்கவில்லை என்ற காரணம் காட்டி சம்பளம் மறுக்கப்படுவது ஏற்புடையது அல்ல. மத்திய மாநில அரசில் பல துறைகள் நஷ்டத்தில் இயங்குகின்றன. ஆனால் அந்த துறையில் பணியாற்றுபவர்களுக்கு சம்பள மாற்றம் மறுக்கப்படவில்லை. எனவே மிக முக்கிய்மான கொள்கை பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒரு முறை லாப நஷ்ட கணக்கு பார்ப்பது அனுமதிக்கப்பட்டால் வருங்காலத்தில் சம்பள மாற்றமே நடைபெறாது. இந்த பின்னணியில் இந்த போராட்டம் அதி முக்கியமானது. அதில் பங்கேற்பது அவசியமானது.

BSNL நிறுவனத்திலிருந்து தொலைத் தொடர்பு கோபுரங்களை பிரித்து தனி அமைப்பு ஏற்படுத்துவதை ஏன் எதிர்க்க வேண்டும்? அது எப்படி ஊழியர்களைப் பாதிக்கும்?

BSNL நிறுவனத்திற்கு என  65000 கோபுரங்கள் உள்ளன. அவற்றில் ஏற்கனவே தனியாருக்கு அவர்களின் கருவிகளைப் பொருத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்வே தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்துவது அவசியம் இல்லை. அந்த அமைப்பை BSNL நிறுவன ஊழியர்கள் பராமரிக்க வேண்டும் அதற்காக ஊழியர்கள் புதிய அமைப்பிற்கு மாற்றப்படுவார்கள். இட மாற்றம் என்பதைவிட ஊழியர்களின் சேவை விதிகள் எவ்வாறு இருக்கும் என விளக்கப்படவில்லை. குறிப்பாக இன்று BSNL ஊழியர்கள் பெற்று வரும் ஓய்வூதியம் முதலியவை தொடருமா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே அரசு ஊழியர்கள்/அதிகாரிகள் சங்கங்களுடன் பேசி தீர்வு காணவேண்டும்.

போராட்டம் வெற்றி பெறுமா?


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இந்த போராட்டம் வெற்றி பெறும் என்பதற்கான நம்பிக்கையே அனைத்து சங்கங்களும் ஒன்றுபட்டுள்ளன என்பதுதான். வங்கி உட்பட பல நிறுவனகங்களில் அனைவரும் ஒன்றுபட்டு போராடி சம்பள மாற்றத்தைப் பெற்றுள்ளன. அதே வழியில் ஒன்றுபட்டு போராடி வெற்றியை ஈட்டுவோம்.

Friday, 8 December 2017

சுற்றுப்பயணம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளும் சுற்றுப்பயணத் திட்டம் வகுத்து மாவட்டம் முழுமையும் உள்ள ஊழியர்களைச் சந்தித்து வருகின்றனர்.

NFTE, BSNLEU, AIBSNLEA, SNEA, ,AIBSNLOA, AIGETOA, TEPU, SEWA, FNTO, BSNLAU என அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளும் திட்டமிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளியும், ஊழியர்களையும் சந்தித்து வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
"ஒற்றுமை மட்டுமே விடியலுக்கு வழி வகுக்கும்"
என்ற அடிப்படையில் செயல்படும் ஈரோடு மாவட்ட அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளையும் பாராட்டுகிறோம்.


"வாழ்வா சாவா என்பதற்க்கானபோராட்டம் அல்ல இது. வாழும் வழி காண போறாட்டம்.
சிறப்பான கூட்டம்
07.12.2017 மாலை 5 மணிக்கு ஈரோடு டெலொபோன் பவன் வளாகத்தில் வேலைநிறுத்த கோரிக்கை விளக்கக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சுமார் 400 பேர் பங்கேற்றனர். தோழியர்கள் அதிக அளவில் பங்கேற்றது மேலும் சிறப்பு.

அனைத்து அமைப்பின் தலைவர்களும் கோரிக்கைகள்குறித்தும் வேலைநிறுத்தத்தின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தோழியர்களுக்கும் தோழர்களுக்கும் மாவட்டச் சங்கத்தின் நன்றியும் பாராட்டுக்களும்.

ஆற்ப்பாட்டம்,
,மனிதச் சங்கிலி இயக்கம்,
கோரிக்கை விளக்கக் கூட்டம் அ
னைத்தும் சிறப்பாக முடிவுற்றது.


வேலைநிறுத்தத்தில் அமைவரும் பங்கேற்க வேண்டும். அதுவே ந்மது வெற்றிக்கான கதவைத் திறக்கும்.

Wednesday, 6 December 2017

07.12.2017 அன்று
மாலை 4.30 மணிக்கு
அனைத்து தொழிற்சங்க
அமைப்புகளின் தலைவர்கள்
பங்க்கேற்று உரையாற்றும்
வேலைநிறுத்த கோரிக்கைகள்
விளக்கக் கூட்டம்.

அனைவரும் பங்க்கேற்பீர்

வெற்றிகரமாக்குவீர்

வேலைநிறுத்தத்தை
அம்பேத்கர் நினைவு தினம்

டிசம்பர் 6
அண்ணல்  அம்பேத்கர் நினைவு தினம்.

அடித்தட்டு மக்களின் அவலம் நீங்க அயராது போராடியவர்.

உலகிலேயே மிகச் சிறந்த
அரசியல் சட்டம் உருவாகக் காரணியாக அமைந்தவர்.


இன்று ஆளுவோர் அம்பேத்கரை வாக்கு வங்கிக்காக பயன்படுத்தத் துடிக்கின்றனர்.

Sunday, 3 December 2017

2.4
01.01.2018 முதல்
விலைவாசிப்படி

2.4 சதம் உயர வாய்ப்புள்ளது.

Thursday, 30 November 2017

வாழிய பல்லாண்டு
இன்று பணிநிறைவு பெறும்

தோழர் G.ராஜசேகரன் OS
தோழியர் ஷைலஜா கெளதம் Rajbhasha Adhikari
தோழர் K.மணி TMO
ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ

வாழ்த்துகிறோம்.

Wednesday, 29 November 2017

வேலைநிறுத்தக் கோரிக்கைகள் விளக்கக் கூட்டம்
12.12.2017 மற்றும்
13.12.2017 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம்.

இதன் கோரிக்கைகள் குறித்து விளக்கும் கூட்டம்  07.12.2017 அன்று ஈரோட்டில் நடைபெறும்.

அனைத்து அமைப்புகளின் சார்பாக கீழ்க்கண்ட தலைவர்கள் பங்க்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தோழர்கள்
P.பாலமுருகன், NFTE
N.P.ராஜேந்திரன் BSNLEU
P.செந்தில்குமாரலிங்க்கம் AIBSNLEA
P.S.காங்கேஷ் SNEA
M.ரவீந்திரன் TEPU
J.செந்தில்குமாரி SEWA.
கூட்டத்தில் திரளாகப் பங்கேற்பீர்.
வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவீர்.
வென்றெடுப்பீர் நம் கோரிக்கைகளை
நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு

ஈரோடு மாவட்ட BSNL அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் சார்பாக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செல்வகுமாரசாமி அவர்களிடம் போராட்ட கோரிக்கைகள் குறித்த மனு இன்று 29.11.2017 வழங்கப்பட்டது

Monday, 27 November 2017

இனி என்ன நடக்கும்
ஊதிய மாற்றத்துக்கான DPE வழிகாட்டும் நெறிமுறைகள் வழக்கமான முறையில் உததரவிடப்பட்டுள்ளது.

கொடுக்கும் திறன்
ஏற்கும் திறன் என்ற வார்த்தைகள் உள்ளன.

அரசு எந்த நிதி உதவியும் செய்யாதாம்.
(தனியாரின் கார்ப்பரேட் நிறுபவனங்களுக்கு மட்டுமே உதவி செய்யும்)

இனி பேச்சு வார்த்தையைத் துவக்க வேண்டும்.
ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.
ஒன்றுபட்டு உறுதியுடன், வலுவாகப் போராட வேண்டும்.

ஊழியர்கள் எதிர்பார்ப்பு இனி அதிகரிக்கும்.


தொழிற்சங்கத் தலைவர்களுக்கு பொறுப்பு கூடும்.

Sunday, 26 November 2017

தோழர் கோஹ்லி
விடை பெற்றார்
NFPTE/NFTE இயக்கத்தின் அகில இந்தியத் தலைவர்கள் வரிசையில்  அரும்பணியாற்றிய
அருமைத் தோழர் கோஹ்லி
நிரந்தரமாக உடலால்
விடைபெற்றார்.

தோழர் குப்தாவின் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தவர்.

பல்வெறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்ட ஆற்றல் மிக்க தலைவராக இருந்தவர்.

அவரது மறைவுக்கு நமது கொடி தாழ்ந்த அஞ்ச்சலி.
தோழர் துரைராஜ் மறைவுக்கு
அஞ்சலி
TAD என அன்புடன் அழைக்கப்பட்ட அருமைத் தோழர் T.A. துரைராஜ் காலமானார் என்ற செய்தியை அறிவிப்பதில் பெரும் துயருறுகிறோம்.

NFPTE/NFTE இயக்கங்களில் ஈரோடு மாவட்டத்தில் இணையற்ற பனியாற்றிய முன்னணித் தலைவர்களில் ஒருவர்.

பழககுவதற்கு இனிய தோழரின் மறைவுக்கு நமது இதய அஞ்சலி.


அவரது துணைவியார மற்றும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Saturday, 25 November 2017

முடிவு வந்தது
முட்டுக்கட்டைகளோடு
பொதுத்துறை ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் வழங்குவது குறித்த முடிவை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது.

இது குறித்து DPE (பொதுத்துறைகளுக்கான அமைச்சகம்) வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்.

"கொடுக்கும் திறன்"
"நிதிஆதாரம்"
போன்ற நிபந்தனைகள் உள்ளன.

மந்திரத்தாலும்
மந்திரிகளாலும்
மாற்றம் நிகழாது.

உறுதியான ஒற்றுமை,
வலுவான போராட்டம்
 இவை மட்டுமே

ஊதிய மாற்றத்துக்கு வழி வகுக்கும்.
உன்னதமான தலைவன்

உலகின் உன்னதமான தலைவன்
புரட்சியின் நாயகன்
போராளிக்கு இல்லக்கணம் தந்தவன்

பிடல் காஸ்ட்ரோ நினைவு தினம் இன்று.

Friday, 24 November 2017

சம்மேளன தினம்
நவம்பர் 24.
NFPTE என்னும் தன்னிகரற்ற பேரியக்கம்
உதயமான தினம்.
தோழர் குப்தாவின் பெருமுயற்சியால்
ஒன்பது சங்கங்கள் NFPTE என்னும் ஒரு குடையின் கீழ ஒருங்கிணைக்கப்பட்ட தினம்.

கடுமையான சவால்களைச் சந்தித்து வெற்றி கண்ட இயக்கம்.

இப்போது நினைத்தாலும் இதெல்லம் எப்படி சாத்தியமாயிற்று- சாதனையாயிறு என்பது பிரமிப்பாக இருக்கிறது.

NFPTE ன்னும் பேரியக்கத்திலிருந்து,
NFPTE என்னும் பேரியக்கத்தின் செயல்பாடுகளிலிருந்து,
NFPTE ன்னும் பேரியக்கத்தை வழிநடத்திய ய தலைவர்களிடமிருந்து
கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்.

அவற்றைக் கற்று
அவை வழி நடப்பதே

காலத்தின் தேவை

Wednesday, 22 November 2017

மனிதச் சங்கிலி இயக்கம்

மூன்றாவது ஊதிய மாற்றம்.
தனி டவர் கம்பெனி எதிர்ப்பு
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி

BSN அனைத்து அமைப்புகளின் அறைகூவலை ஏற்று 23.11.2017 அன்று ஈரோடு நகரில் மனிதச் சங்கிலி இயக்கம்.

காலம் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இடம்  பொதுமேலாளர் அலுவலகம் முன்புள்ள கனரா வங்கி யிலிருந்து பாரத் ஸ்டேட்  வங்கி வரை


திரளாகப் பங்கேற்பீர்.

Thursday, 16 November 2017

சமுதாயப் பணியில்
சத்தி தோழர்கள்

சத்தி NFTE கிளையின் தோழ்ர்கள் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுத்துள்ளனர்


சமுதாய அக்கறையோடு பணியாற்றிய சத்தி கிளைத் தோழர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Wednesday, 15 November 2017

சாதனை படைத்த

செளந்தர்ராஜ்

அருமைத் தோழர் G.செளந்தரராஜூ
டெலிகாம் டெக்னீசியன்.
புதிய தொலைபேசி இணைப்புகள் தருதல்,
தொலைபேசி இடமாற்றத்தை (ஷிப்டிங்) விரைந்து தருதல்,
துண்டிக்கப்பட்ட தொலைபேசி
இணைப்புகளை மீண்டும் தருதல், (ரீகனெக்சன்),
தொலைபேசிக் கட்டண நிலுவைத் தொகை வசூல் செய்தல் போன்ற பணிகளைச் சிறப்பாகச் செய்துள்ளார்.
கொடுக்கப்பட்ட இலக்கையும் தாண்டி சாதனை படைத்துள்ளார்.

தற்போதைய சூழலில் இத்தகைய பணிகளைச் செய்வது அதுவும் இலக்கைத் தாண்டி செய்வது என்பது எளிதல்ல.

திரு. ஆறுமுகம், துணைப்பொதுமேலாளர் (CFA)
திரு ராஜமாணிக்கம் துணைப்பொதுமேலாளர் (நிதி)  ஆகியோர் அவர் பணிபுரியும் இடத்திற்கே சென்று
தோழரின் பணியைப் பாராட்டி
சால்வை அணிவித்து பாராட்டியுள்ளனர்.

நமது தோழரின் கடமை உணர்வும்,
பணியில் காட்ட்டும் அக்கறையும்
பாராட்டுதலுக்குரியது.

தோழர் செளந்தரராஜூ அவர்களை மாவட்ட்ச் சங்கம் மனதார வாழ்த்தி பாராட்டுகிறது. அவரது சாதனைப் பணி தொடர வாழ்த்துகிறோம்.
இத்தகைய சிறபாகப் பணியாற்றும் ஊழியர்களைப் பாராட்டி கெளரவப்படுத்திய மாவட்ட நிர்வாகத்தையும், அதிகாரிகளையும் மாவட்டச் சங்கம் சார்பாகப்  பாராட்டுகிறோம்.
ருஷய்ப் புரட்சி
நூல் வெளியீட்டு விழா

ருஷய்ப் புரட்சியின் நூறு ஆண்டுகள் நிறைவுற்றது.

ருஷய்ப் புரட்சி குறித்து தோழர் மதிவாணண் அவர்களின் மதிவண்ணத்தில் உருவான நூல் வெளியீட்டு விழா.

நாள்
17.11.2017 மாலை 3 மணி
இடம் ராஜா அண்ணாமலை மன்றம் சென்னை
விழா சிறக்க வாழ்த்துக்கள்
BSNL அனைத்து சங்க
கூட்ட முடிவுகள்
14/11/2017 அன்று BSNL அனைத்து சங்க கூட்டம் NFTE பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர்சிங் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
• 16/11/2017 அன்று நடக்கவிருந்த மனிதச்சங்கிலி இயக்கத்தை 23/11/2017 அன்று கூடுதல் பங்கேற்புடன் நடத்துவது.
• 23/11/2017 அன்று BSNL நிர்வாகத்திற்கும் DOTக்கும் டிசம்பர் 12 மற்றும் 13 வேலைநிறுத்த அறிவிப்பு செய்வது.
• 18/11/2017 அன்று மாநில மட்டத்தில் அனைத்து சங்க கூட்டம் நடத்தப்பட்டு மனிதச்சங்கிலி இயக்கத்தையும் வேலைநிறுத்தத்தையும் திறம்பட நடத்துவது பற்றி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். டெல்லி தலைமையகத்தில் 17/11/2017 அன்று கூட்டம் நடைபெறும்.
• 30/11/2017க்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை மனு அளிக்கப்படவேண்டும். கோரிக்கை மனுவின் மாதிரி இணையதளத்தில் உடனடியாக வெளியிடப்படும்.
அகில இந்தியத்தலைமையில் இருந்து சுவரொட்டி மற்றும் சுற்றறிக்கைகள் வெளியிடப்படும். மாநில மட்டத்தில் அவர்களது தாய்மொழியில் வெளியிட வேண்டும்.

அனைத்து அகில இந்தியத்தலைவர்களும் பங்கேற்கும் வேலைநிறுத்த விளக்கக்கூட்டம் நாடு முழுவதும் நடைபெறும். 20/11/2017 லக்னோவில் துவங்கி 08/12/2017 அன்று ஹைதராபாத் நகரில் முடிவுறும். சென்னையில் 05/12/2017 அன்று நடைபெறும்.
மனிதச் சங்க்கிலி இயக்கம்
16/11/2017 அன்று நடைபெறவிருந்த மனிதச்சங்கிலி இயக்கம் 23/11/2017 அன்று  நடைபெறும் என
தலிவர்கள் அறிவித்துள் ளனர்.

திரளாகப் பங்க்கேற்று சிறப்புடன் நடத்திடுவோம்.

Tuesday, 14 November 2017

நேரு பிறந்த நாள்
நவம்பர் 14
"உங்கள் தேசத்தில் பெரும்பான்மையினர் படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்களில் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளித்தது தவறு; உங்கள் தேசத்தில் ஜனநாயகம் தழைக்காது' - என்று நேருஜியிடம் சொன்னார் மேலைநாட்டு பத்திரிகையாளர் ஒருவர்.
"
என் மக்களில் பெரும்பாலோர் கல்வி கற்காதவர்கள் என்பது உண்மையே! ஆனால் அவர்கள் அனைவரும் புத்திசாலிகள். அவர்களிடம் கிராமியப் பொது அறிவு உண்டு. எது சரி; எது தவறு என முடிவு எடுக்கும் திறன் நிரம்பவே உண்டு' எனப் பளிச்செனப் பதில் தந்தார் பண்டித ஜவாஹர்லால்.

Thursday, 9 November 2017

இப்படை வெல்லும்
இன்று (நவம்பர் 9 2017)
மூன்று நாள் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் துவங்கியது.
நாட்டின் நலன் காக்க,
நாட்டு மக்கள் நலன் காக்க,
உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கு இழைக்கப்படும் இன்னல்கள் அகற்றிட
எழுந்திட்ட

இப்படை வெல்லும்.

Wednesday, 8 November 2017

வெற்றி பெற்றே தீரும்
இன்று இந்தியாவின் திட்டமிடல் கொள்கையும் அதன் அமைப்புமுறையும் மாறிப் போனதையும்கூட நாம் சோஷலிஸப் பயணத்திலிருந்து விலகி நடப்பதன் அடையாளமே.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, முதலாளித்துவம் சர்வதேச வணிக ஒப்பந்தங்களின் வழியாக இன்று தன்னை வலிமைப்படுத்திக்கொண்டிருக்கிறது.

இது சோஷலிஸத்தின் வீழ்ச்சியோ, முதலாளித்துவமே இறுதியில் வெற்றி பெறும் என்ற பேராசைக் கனவின் அறிகுறியோ அல்ல. வரலாறு நெடுகிலும் முதலாளித்துவம் தனது தோல்விகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டே தன்னை வலுப்படுத்திக்கொண்டிருக்கிறது.

இன்று நாடுகளின் எல்லைகளைக் கடந்து நிற்கும் பெருமுதலாளித்துவம் தனது தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தன்னைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்றால், சோஷலிஸம் தனது பலவீனங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாதா என்ன? மானுடத்தின் மாபெரும் விடுதலைக் கனவு தடைப்பட்டிருக்கலாம். ஆனால், அது வெற்றி பெற்றே தீரும். மனிதர்கள் அனைவரும் சமம் என்ற சோஷலிஸக் கனவு முழுமையாய் நிறைவேறும் நாளில்தான் மானுடம் என்ற வார்த்தை தனக்கான முழுமையான பொருளைப் பெறும்.


Tuesday, 7 November 2017

2017 நவம்பர-7
ருஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு நிறைவு.போற்றுதலுக்குரிய மகத்தான சில நினைவுகள்.
1. யுகப்புரட்சி நாயகன் லெனின்.
2. லெனின் புரட்சிக்காரனாய் உருவெடுத்ததின் உந்துசக்தி அவரது அண்ணன் அலெக்ஸாண்டர்.
3. காரியம் யாவிலும் கை கொடுத்த காதலி குருப்ஸ்கயா.
4. புரட்சியின் முதற்கட்டம்(1905)
5. கிரம்ளின் மாளிகை- லெனின் அலுவல் அறை.
6. கிரம்ளின் மாளிகையில் ஜனாதிபதியாக.
7. சோவியத் காங்கிரஸில் லெனின் உரை நிகழ்த்துகிறார்.
8. தேச நிர்மாணப்பணியில் மரத்துண்டின் அடிப்பாகத்தைச் சுமக்கும் ஜனாதிபதி லெனின்.

வாழ்க ருஷ்யப்புரட்சி.ஓங்குக புரட்சியாளர்களின் தியாகம்.

Monday, 6 November 2017

முற்றுகைப் போராட்டம்
2017
நவம்பர் 9,10,11
நாடாளுமன்ற முற்றுகைப்போராட்டம்.
மத்திய அரசின்
மக்கள் விரோத,
விவாசாயிகள் விரோத,
தொழிலாளர் விரோத
கொள்கைகளை முறியடிக்கும்
முற்றுகைப் போராட்டம்
கோடிக்கணக்கில்
கோப முகங்களுடன்
கோரிக்கை முழக்கத்தோடு
முற்றுகைப் போர்.

வெல்லட்டும்.

Sunday, 5 November 2017

அகில இந்திய மாநாடு
NFTE பேரியக்கத்தின்
அகில இந்திய மாநாடு
பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில்
14.03.2018 முதல்
16.03.2018 வரை
 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.