NFTECHQ

Thursday, 5 October 2017

எதிர்காலத் தலைவர்கள்

ஓர் உற்பத்தி நிறுவனம் அல்லது சேவை நிறுவனம், தனது வளர்ச்சிக்காகத் தரத்தினை உறுதி செய்தல், அதனை இடைவிடாது மேம்படுத்துதல், தனது சேவையை - உற்பத்தியை விரிவாக்குதல், சந்தையில் போட்டி மற்றும் அதனை சமாளிக்கும் திட்டங்கள், ஊழியர்களின் நலன், அவர்களுக்கு பயிற்சியளித்தல், லாபம் ஈட்டுதல், இவை தொடர்பான அடுத்த சில ஆண்டுகளுக்கான திட்டங்கள் போன்றவற்றை அந்நிறுவனங்களின் உயர்நிலை தலைவர்கள் மூலமாக திட்டமிட்டுச் செயல்படுத்தும் .
இன்னொருபுறம், களத்தில் - உற்பத்திக்கூடத்தில், அந்தப் பணிகளை, பொருள்களை உருவாக்குவது, சேவையை வாடிக்கையாளர்களுக்குத் தருவது எனக் கடைசி மட்ட ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் செயல்படுத்துவர்.
இவ்விரண்டு பெரும் பிரிவுகளுக்கு இடையில் ஒரு மிக முக்கியமான இணைப்புச் சங்கிலியாக இரண்டாம் கட்ட நிர்வாகம் செயல்படும்; இந்த இரண்டாம் கட்ட நிர்வாகம் என்பது மிக மிக முக்கிய அம்சம் ஆகும்.
எந்த ஒரு நல்ல நிறுவனமும், தனது வளர்ச்சியின் அங்கமாக, இந்த இரண்டாம் கட்ட அதிகாரிகளை, அடுத்த கட்டதுக்குத் தயார் படுத்தும்.
சில நிறுவனங்களில்- 'எதிர்காலத் தலைவர்கள்' என ஒவ்வொரு துறையிலும் சிலரைக் கண்டெடுத்து சவாலான பணிகளில் ஈடுபடுத்துவது, முக்கிய பேச்சு வார்தைகளில், திட்டங்களில் இணைத்துக் கொள்ளுவது என, ஒரு செயல் திட்டத்தோடு, அவர்களது திறமையை வளர்ப்பார்கள்
அவர்களை அதிக பொறுப்புக்களை ஏற்கவும், எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் மாற்றங்களுக்கும் - போட்டிகளுக்கும் ஈடு கொடுப்பவர்களாகவும் அருகில் இருந்து பயிற்றுவித்து, அடுத்த கட்ட வளர்ச்சிக்கு, தலைமை பொறுப்புக்கு தயார் செய்வர்.
இத்தகைய திறமைசாலிகள் - ஊக்கப்படுத்தப்படும்போது, நிறுவனத்தின் எதிர்காலம் உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு செய்யத் தவறினால், ஒரு நிறுவனம், தனது எதிர்கால திட்டங்களை சரிவர செயல்படுத்த முடியாது, உற்பத்தி வீழ்ச்சி - தரம் குறைவு படுதல் - நஷ்டம் - வாடிக்கையாளர் அதிருப்தி போன்றவை ஏற்படும்
மேலும், இவற்றைவிட முக்கியமாக, மூப்பு - மரணம் - பணி ஓய்வு போன்றவற்றின் காரணமாக அந்நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம் விலகும்போது - வெற்றிடம் ஏற்படாத வண்ணம் இத்தகைய இரண்டாம் கட்டத் தலைவர்கள் - எதிர்காலத் தலைவர்கள் - அந்த இடத்தை நிரப்புவது உறுதி செய்யப்படுகிறது.
இந்த இரண்டாம் கட்ட தலைமை - 'எதிர்காலத் தலைவர்கள்' - என்பது, தொழில் நிறுவனங்களில் மட்டுமல்ல - அரசியல் கட்சிகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது
லாப நோக்கோடு செயல்படும் தொழில் நிறுவனத்தையும், மக்கள் தொண்டு, அரசு நிர்வாகம் என வேறு தளத்தில் செயல்பட வேண்டிய அரசியல் கட்சிகளையும் ஒப்பீடு செய்வது தவறல்ல.
ஓர் அரசியல் கட்சியின் தலைமை, கொள்கைகளை வகுப்பது - அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கத் திட்டங்களை வகுப்பது, தேர்தலில் போட்டி, வெற்றிக்கு வழி வகுப்பது என செயல்படும்.
கட்சியின் கொள்கைகளால் - தலைமையால் ஈர்க்கப்பட்ட தொண்டர்கள், பொதுமக்கள், வாக்காளர்கள் என ஒரு சாராருக்கும் தலைமை என இன்னொரு சாராருக்குமிடையில் ஒரு முக்கியமான இணைப்பு சங்கிலியாக அக்கட்சியை சார்ந்த பேச்சாளர்கள் - பத்திரிக்கையாளர்கள் - எழுத்தாளர்கள் - தொழிற்சங்கவாதிகள் - கட்சியின் அடுத்த மட்ட நிர்வாகிகள் என்ற பல்வேறு நபர்கள் இரண்டாம் கட்ட தலைவர்களாக இருப்பார்கள்
தன்னம்பிக்கையும் திறமையும் மிக்க தலைவர்கள், இவர்களை எதிர்காலத்தில் அதிக பொறுப்புகளை ஏற்கும் திறமையான தலைவர்களாக உருவாக்குவார்கள். ஆனால் இன்று இவை எல்லாம் பழைய கதை
அரசியலில் கொள்கைப்பிடிப்பு - சேவை மனப்பான்மை போன்றவை பெருமளவில் நீர்த்துப் போயிருக்கும் நேரமிது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெரும் அறிவும் தீர்க்க தரிசனமும் தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக திகழ்வதும் அரிதாகி வருகிறது
இவர்களில் பலர், தங்களது தலைமையைத் தக்க வைத்துக் கொள்ளுவதில் மட்டுமே நாட்டம் காட்டுவதால், அடுத்த தேர்தலை தாண்டி சிந்திப்பதுமில்லை; அடுத்த கட்டத் தலைமையை உருவாக்குவதுமில்லை
சில கட்சிகளில் இரண்டாம் கட்டத் தலைவர்களை தயார் செய்வதனைவிட, கட்சி வளர்ச்சியின் செலவில் தனது வாரிசுகளை உருவாக்குவார்கள். சில கட்சிகளில், தன்னால் உருவாக்கப்படுபவர்களால், அரசியலில் தனது இடத்தையே இழப்பவர்களும் உண்டு. எனவே, பெருமளவு கட்சிகளில், இரண்டாம் கட்டத் தலைவர்களை உருவாக்குவதே இல்லை
சில கட்சிகளில், கவலை தரும் இன்னொரு அம்சம், திறமையைவிட விசுவாசம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, திறமையற்ற விசுவாசிகளையே இரண்டாம் கட்டத் தலைவர்களாக - எதிர்காலத் தலைவர்களாக -அடையாளம் காட்டும் போக்கு ஆகும். இத்தகையோரால், ஒரு நெருக்கடியான சூழலில், கட்சியில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப முடியாது போய்விடும்.
இத்தகைய, சரியான இரண்டாம் கட்டத் தலைமை அற்ற ஒரு நிலை, ஆளும் கட்சியில் ஏற்படும்போது சிக்கல் அதிகமாகும். இவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் பொறுப்புகளை ஏற்கும்போது,சரியான பயிற்சி மற்றும் திறமையின்மையால் கட்சி மட்டுமின்றி ஆட்சியும் பாதிக்கப்படும். மக்களின் எதிர்பார்ப்புகள் பொய்க்கும்.
இவற்றை நோக்கும்போது, அடுத்த கட்டத் தலைவர்களை - எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவது, தொழிற்கூடமாக இருப்பினும் - சேவை நிறுவனமாக இருப்பினும் - அரசியல் கட்சியாக இருப்பினும், எவ்வளவு முக்கியம் வாய்ந்ததென்று உணர முடிகிறது.
இத்தகைய முக்கிய பொறுப்பு, ஒரு நிறுவனத்திற்கோ - அரசியல் கட்சிக்கோ மட்டுமல்ல. இவை இரண்டையும்விட ஒவ்வோர் ஆசிரியருக்கும் - பெற்றோருக்கும் அதிகமாக உள்ளது. இவர்கள்தான், நாட்டுக்கு நல்ல குடிமக்களை - நல்ல தலைவர்களை உருவாக்க, சரியான அடித்தளம் அமைப்பவர்கள்.
 

நன்றி தினமணி 05.10.2017
உதவும் உள்ளங்கள் விழா
NFTE BSNL ஈரோடு மாவட்டம்
உதவும் உள்ளங்கள் சார்பாக உதவி வழங்கும் விழா
                       நாள் 11.10.2017
               காலம் காலை 11 மணி 
இடம் தோலைபேசி நிலையம் சத்தியமங்கலம்
அனைவரும் வருக
ஆதரவு தருக
இயன்றதைத் தரும்

ஈகை உள்ளத்துடன் வருக 

Saturday, 30 September 2017

வாழ்த்துகிறோம்
இன்று இலாகா பணி நிறைவு பெறும்,
தமிழகத்தில் NFTE இயக்கத்தின் வளர்ச்சிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்த
தோழர்கள்
பாலகுரு, திருச்சி
சென்னகேசவன், வேலூர்

ஆகிடோர் நலமுடனும் மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
தோழர் சுப்ரமனியன்

"சத்தி சுப்பு" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய சத்தியமங்கலம் கிளைச் செயலர் தோழர் சுரமணியன் இன்று இலாகா பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

மிகச்சிறந்த
ஒரு முன்மாதிரியான
கிளைச் செயலராக
இயக்கத்தின் மீது அளவற்ற பற்றுடனும் விசுவாசத்துடனும்  செயல்பட்டவர் அருமைத் தோழர் சுப்ரமனியன்

இவரது பணிநிறைவுக்காலம்
நலமுடனும்,
மகிழ்வுடனும்
பயனுடனும்

அமைய வாழ்த்துகிறோம்.
வாழிய பல்லாண்டு

இன்று பணி ஓய்வு பெறும்

தோழர் A.சுப்ரமணியன் OS
தோழியர் S.உஷா OS
தோழர் G.ராஜேந்திரன் JE
தோழர் R.குணசெகரன் TT

ஆகியோர் நலமுடனும்
 மகிழ்வுசனும்  

பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
5.3

01.10.2017 முதல்
விலைவாசிப்படி

5.3 சதம் உய்ரும்.

Wednesday, 27 September 2017

வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள்

"பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது."
“பொருளாதாரத்திற்கு அருண் ஜேட்லி செய்ததை நான் இப்போது கூட வாயைத் திறக்காமல் இருந்தால் நான் எனது தேசியக் கடமையிலிருந்து தவறுபவனாகி விடுவேன், நான் கூறப்போவது பாஜகவில் உள்ளவர்களுக்கே நன்கு தெரிந்ததுதான், ஆனால் இவர்கள் பயத்தின் காரணமாக வெளிப்படையாகப் பேசுவதில்லை” என்று ஆரம்பித்து நடப்பு பொருளாதாரக் கொள்கைகளின் முகமூடியைக் கிழித்து எறிகிறார்.
இன்று இந்தியப் பொருளாதாரத்தின் சித்திரம் என்ன?  என்று பலரும் தங்கள் கருத்தைக் கூறிவருகையில், அத்தகைய எதிர்க்கருத்துகளை ஊர்ஜிதம் செய்யும் விதமாக உற்பத்தித் துறை, கட்டுமானம், தொலைத் தொடர்பு உள்ளிட்ட சேவைத்துறைகள், ஏற்றுமதி அனைத்தையும் விட விவசாயத்தின் நிலை ஆகியவை கடும் சரிவுக்குள்ளாகி எண்ணற்ற லட்சக்கணககானவர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்"

"பொருளாதார வளர்ச்சி விகிதம் கணக்கிடும் முறை 2015-ம் ஆண்டில் நடப்பு அரசினால் மாற்றியமைக்கப்பட்டது என்றும் இந்தக் கணக்கீட்டின் படி கடந்த காலாண்டில் வளர்ச்சி விகிதம் 5.7% என்று நிர்ணயிக்கப்பட்டது"
2015-க்கு முன்பாக நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கணக்கிடும் முறைப்படி பார்த்தால் கடந்த காலாண்டில் வளர்ச்சி விகிதம் 3.7% தான் என்று ஒரே போடாகப் போட்டார்.
புதிய ஜிஎஸ்டியின் கீழ் வரி உள்ளீட்டு வரவு (input tax credit) தற்போது ரூ.95,000 கோடி என்றால் அந்தந்த தொழிற்துறையினர் கட்டிய கூடுதல்வரியை அரசு அவர்களுக்குத் திரும்பச் செலுத்த வேண்டிய தொகை மிகப்பெரிதான ரூ.65,000 கோடியாக உள்ளது"  ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஆய பயன் என்ன என்று சூசகமாகக் கேள்வி எழுப்புகிறார்.
மேலும்,  2019 மட்டுமல்ல 2023 வரை பாஜகவை அசைக்க முடியாது என்று அமித் ஷா உள்ளிட்டவர்கள் கூறி வரும் நிலையில்  "அடுத்த லோக்சபா தேர்தலுக்குள் பொருளாதாரம் மீள்வது சாத்தியமல்ல" என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஏழ்மையை மிக அருகில் இருந்து தான் பார்த்ததாகவும் அதனால் ஏழ்மை பற்றி தனக்கு அதிகம் புரியும் என்று பிரதமர் மோடி வானொலி உரை  உள்ளிட்ட உரைகளில் கூறிவருவதைக் கண்டு பலரும் நெகிழ்ந்துள்ள நிலையில்
"அனைத்து இந்திய மக்களும் ஏழ்மையை அருகில் இருந்து நெருக்கமாகப் பார்ப்பதற்காக ஓவர்-டைம் பணியாற்றி வருகிறார்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இப்படியெல்லம் சொல்வது வேறு யாருமல்ல.
முன்னாள் நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா.

(நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் 27.09.2017)

Monday, 25 September 2017

NFTE தூத்துக்குடி
மாவட்ட மாநாடு
25.09.2017ல்
NFTE தூத்துக்குடி மாவட்ட  மாநாடு
சிறப்புடனும்
எழுச்சியுடனும்
நடைபெற்றது.

ஒற்றுமையாய் நடைபெற்ற சிறப்பான மாநாடு.
கீழ்க்கண்டோர் நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் தோழர் தங்கவேலு
செயலர்  தோழர் பாலக்கண்ணன்
பொருளர் ஜான்சன்சாமுவேல்
ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப் பட்டனர்.


செயல்பாடு சிறக்க வாழ்த்துகிறோம்.
NFTCL
கடலூர் மாவட்ட மாநாடு
24.9.2017ல்
விழுப்புரத்தில்
NFTCL கடலூர் மாவட்ட  மாநாடு
எழுச்சியுடனும் சிறப்புடனும் நடைபெற்றது.


தோழர்கள் மதி, ஜெயராமன், பாபு, அசோகராஜன், மாரி, ஆனந்தன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றி சிறப்பித்தனர்.

கீழ்க்கண்டோர் நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் தோழர் அரிகிருஷ்ணன்
செயலர்  தோழர் மஞ்சினி
பொருளர் மணிகண்டன்
ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப் பட்டனர்.

செயல்பாடு சிறக்க வாழ்த்துகிறோம்.
வெல்லட்டும்
சிறக்கட்டும்
இன்று
25.09.2017 நடைபெறும்
NFTE தூத்துக்குடி மாவட்ட மாநாடு
சிறப்பாகவும்,
வெற்றிகரமாகவும்
 நடைபெற

வாழ்த்துக்கள்.

Saturday, 23 September 2017

நேற்று கேட்ட செய்தி

2040ஆம் ஆண்டில் நிலவில் 100 பேர் வ்சித்து வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய சர்வதேச அறிவியலாளர்கள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாம்.
2030ஆம் ஆண்டு 10 அறிவியலாளர்கள் நிலவுக்குச் செல்ல உள்ளனராம். பவீடு கட்டுதல், விவசாயம் செய்தல் மற்றும் பல பணிகளை அந்த 10 பேர் செய்வார்களாம். 10 ஆண்டுக்களுக்குள் பணி முடித்து 2040ஆம் ஆண்டு முதல் 100 பேர் நிலவில் வாழ்க்கை நடத்துவார்களாம்.


மத்திய சங்க செய்தி

BSNL அமைப்பின் நிர்வாகக் குழுக் கூட்டம்
(Management Committee) நடைபெற்றது.

01.01.2017 முதல் BSNL ஊழியர்களுக்கு 15 சத ஊதிய உயர்வு வழங்குவதற்கான முடிவை அக்குழு எடுத்துள்ளது.

தற்போது பெறும் அலவண்ஸ்களில் கூடுதல் இருக்காது.

இந்த முடிவை மேலும் ஒரு  குழு ஆ ராயும்.

பின்னர் BSNL வாரியத்தின் ஒப்புதலுக்கு
அனுப்பாப்படும்.

அதன் பின் DOT ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
************************************************************
நமது கருத்து

மேலே  கூறப்பட்ட  அத்தனை நிகழ்வுகளுக்குப் பின்னரே இறுதியான முடிவுகள் வரும்.

இதுவரை BSNLEU  வின் குரல் ஒலித்த வித்த வேறு.
தற்போது ஒரு நாள் வேலைநிறுத்தத்தின் விளைவே இந்த முடிவு என்கிறது அந்தக் குரல்.


இப்படியும் சில பச்சோந்திகள்...
வாழ்த்துக்கள்

நாளை 24.09.2017
நடைபெறவுள்ள
கடலூர் மாவட்ட
NFTCL மாநாடு

சிறக்க வாழ்த்துகிறோம்.

Thursday, 21 September 2017

 

ஜியோவுக்கு சாதகமான டிராயின் முடிவு..

ஜியோ  நெட்வொர்க் சேவை அறிமுகம் ஆனதில் இருந்தே
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இடையில் இண்டர்கனக்ட் கட்டணங்களை வசூலிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது.
ஜியோ மற்றும் டொக்கோமோ உள்ளிட்ட நிறுவனங்கள் இண்டர்கனக்ட் கட்டணங்களை நாங்கள் அளிக்க மாட்டோம், அதே போன்று எங்களது போட்டி நிறுவனங்களும் அதனை அளிக்கத் தேவையில்லை என்று கூறிவந்தன.

தற்போது அதற்கான கட்டணத்தைக் குறைத்து டிராய் அறிவித்து உள்ளது.

முன்பு ஒரு அழைப்பிற்கு 14 பைசாவாக இருந்த இண்டர்கனக்ட் கட்டணம் 6 பைசாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய இண்டர்கனக்ட் கட்டண முறை வருகின்ற அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று டிராய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜியோ    

போட்டி நிறுவனங்களிடம் இண்டர்கனக்ட் கட்டணங்களை அளிக்க மாட்டோம் என்று கூறி வந்த ஜியோ நிறுவனம் இது வாடிக்கையாளர்களுக்கு அதிகப் பயன் அளிக்கும் என்பதால் முழுமையாக நீக்க வேண்டும் என்று டிராய் கோரிக்கை வைத்து இருந்தது.

டெர்மினேஷன் கட்டணங்கள் 2020 ஜனவரி 1 முதல் உள்நாட்டு அழைப்புகளுக்கு முழுமையாக நீக்கப்படும் என்றும் டிராய் தெரிவித்தது.
பாபு தாரபாதா உரை
1921 செப்டம்பர் 21. லாகூர். தபால் ஊழியர் சங்க அகில இந்திய மாநாடு. அதன் ஒப்பற்ற தலைவர்  பாபு தாரபாதா
தலைமை உரையாற்றினார். அவரின் அந்த பேச்சக்காக குற்றம் சாட்டப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டார். அப்படி என்ன பேசிரிட்டார்?

" தொழிலாளர்கள் பிச்சைகாரர்கள் அல்ல. அவர்களே இந்த பூமியின் உயிர்ச் சத்து. உழைப்பின் முத்திரை விழுந்தாலன்றி எந்தப் பொருளும் செல்வமாவதில்லை. செல்வம் அனைத்தும் படைப்பவர்கள் அவர்களே. தொழிலாளர்கள் இல்லை என்றால் செல்வத்தை உற்பத்தி செய்யும் உழைப்பு எங்கிருந்து வரும்?
தொழிலாளி வேலை செய்வதை நிறுத்தினால் என்ன ஆகும்
ஒரு 
தானிய மணி கூட விளையாது. ஒரு முழத் துணி நெய்யப்படாது. ஒரு செங்கல் இடம் பெயராது."
அநீதி கண்டு ஆர்பரித்து போராடாது அநீதி களைய முடியாது என்பத தாரக மந்திரமானது.
தபால் தந்தி ஊழியர் இயக்கம் வீரமிக்க இயக்கமாக இருந்ததற்கு அடித்தளம் அமைத்த தலைவருக்கு தலை தாழ்த்தி அஞ்சலி செலுத்துவோம்.


நன்றி தோழர் மாலி

Wednesday, 20 September 2017

அஞ்சலி
தாராபுரத்தில் டெலிகாம் டெக்னிசியனாக பணியாற்றி வந்த
தோழர் V.ராஜ்
உடல்நலகுறைவால் இன்று காலமானார்.

அவரது  மறைவுக்கு நமது மாவட்டச் சங்கம் சார்பாக இதயபூர்வ அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறோம்.

Tuesday, 19 September 2017

செப்டம்பர் 19

ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்கள் பிற்க்கும் நாட்களில் பொதுத்துறை ஊழியர்களும் ஜனவரி, ஜூலை மாதங்களின்  முதல் நாளில் மத்திய, மாநில அரசு ஊழியர்களும் விலைவாசிப்படி உயர்வு எவ்வளவு என்பதை அறிந்து கொள்கின்றனர்.

விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு விலைவாசிப்படி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக ஒரு நாள் வேலைநிறுத்தம் 1960 செப்டம்பர் 19ஆம் நாள் நடைபெற்றது. வேலைநீக்கம், தற்காலிக வேலைநீக்கம், சிறைவாசம் என பல்வேறு அடக்குமுறைகளை அன்று எதிர்கொண்டனர் நமது தலைவர்களும் தோழர்களும்.

அன்று அவர்கள் செய்த தியாக வேள்வியால் இன்று விலைவாசிப்படி கிடைக்கிறது.
அநத்த் தியாகத்தையும் ,தியாகிகளையும் நினைவில் கொள்வோம்.
இரங்கல்
NFTE பேரியக்கத்தின்  ஈரோடு மாவட்டப் பொருளாளர் அன்புத் தோழர் மெளனகுருசாமி அவர்களின் அன்னை 18.09.2017 அன்று காலாமானார்.

அன்னையை இழந்திருக்கும் நமது தோழருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Saturday, 16 September 2017

என்னமோ நடக்குது
மர்மமாய் இருக்குது

சேவை மையங்களை தனியாருக்கு விடும் முடிவு குறித்து BSNLEU  சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஒரு உடன்பாடு வந்து விட்டது. இது BSNLEU இணையதளம்  தரும் செய்தி.

சோதனை அடிப்படையில் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு மண்டலங்களில் ஒவ்வொன்றிலும் மூன்று சேவை மையங்கள்  தனியாருக்கு விடப்படுமாம்.--இது உடன்பாடாம்.

சேவை மையங்க்களின் எண்ணிக்கைமற்றும் அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் குறித்து நிர்வாகம் இனிமேல்தான்தகவல் திரட்டுமாம். அப்படியானால் ஆள் பற்றாக்குறை என்று நிர்வாகம் எப்படி முடிவுக்கு வந்தது?

என்னமோ நடக்குது
மர்மமாய் இருக்குது


Friday, 15 September 2017

சென்னைத் தொலைபேசி

14.09.2017 அன்று சென்னைத் தொலைபேசி மாநிலச் செயலர் தோழர் மதி தலைமையில் 500க்கும் மேற்பட்ட  தோழர்கள் பங்கேற்ற ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணா சாலை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

வாடிக்கையாளர் சேவை மையங்களைத் தனியாருக்குத் தருதல், தனி டவர் கம்பெனி அமைத்தல் போன்ற முடிவுகளை எதிர்த்தும் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம்.

அரசியல் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள்  பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

தனி டவர் கம்பெனி அமைக்கும் முடிவை எதிர்த்து ஆர்ப்பாட்ட அறைகூவல். ஆனால் வாடிக்கையாளர் சேவை மையங்க்களைத் தனியாருக்கு விடும் திட்டம் குறித்து
ஏண் இந்த மெளனம்?

ஏன் இந்த மயான அமைதி? 
சேவை மையங்களைச் சூழ்ந்துள்ள கருமேகங்கள்

வாடிக்கையாளர் சேவை மையங்களைத் தனியார் நிறுவனங்கள் கையாளும் என்ற முடிவு அபாயகரமானது.

ஒரு மனிதனின் இதயத்துக்குள் வைரஸ் கிருமிகளைப் பாய்ச்சுவது போன்றது இந்த முடிவு.

இந்த முடிவு பல மோசமான விளைவுகளை உருவாக்கும்.

தற்போது உள்ள வாடிக்கையாளர்களைத் தக்க வைத்தல், புதிய வாடிக்கையாளர்களை இணைத்தல், மற்ற நிறுவனங்களிலிருந்து  நமது நிறுவனத்துக்கு வர விரும்புவோரை நம் வசப்படுத்துதல்
போன்ற பணிகளுக்கு    நெருக்கடிகள் உருவாகும். தடைகளும் தாண்டவமாடும்.

எதிர்பாராத பல சிக்கல்களும் உருவாகும்.

இது உடனடியாகக்      கவனிக்கப்பட்டு சேவைமையங்களை நமது வசமே தக்கவைத்துக் கொள்ள வழிவகை கான் வேண்டும்.

காலம் கடந்துவிட்டாலும் இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே எஞ்ச்சியுள்ளன.
கருததரங்குகள் நடத்தும் காலமல்ல இது. சூழ்நிலையின் கடுமையைக் கருத்தில் கொண்டு காலத்தே காரியமாற்ற வேண்டியது அவசியம்.  

"நல்ல பொழுதையெல்லாம்
தூங்கிக் கழிப்பவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன்
தானும் கெட்டார்"-பட்டுக்கோட்டை

2017 ஜூன் மாதமே இதற்கான டெண்டர் விடப்பட்டும் அதைப்பற்றி அறியாமல் இருந்தது விழிப்புணர்வற்ற தன்மையாகும்.

"விழித்துக் கொண்டோர் மட்டுமே பிழைக்க முடியும்.


விழித்துக் கொள்ள்வார்களா?

Monday, 4 September 2017


வாழிய பல்லாண்டு
31.08.2017 அன்று இலாகா பணி ஓய்வு பெற்ற
தோழியர் S.V.வான்மதி OS
தோழர் C.ராமன்குட்டி OS
தோழர் M.குருசாமி OS
தோழர் M.ராஜேஸ்வரன் TT
மற்றும் தோழியர் வசந்தமல்லிகா சுரேஷ் (விருப்ப ஓய்வு)

ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்

பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

Thursday, 24 August 2017

உச்சக்கட்ட அடாவடித்தனம்

வங்கி ஊழியர்கள் 22.08.2017 அன்று நாடு முழுமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

"வங்கிகள்  இணைப்பு கூடாது" என்பதும் ஒரு கோரிக்கை.

ஆனால் அடுத்த நாளே அதாவது    23.08.2017 அன்று மத்திய அமைச்சரவை கூடி வங்கிகள் இணைப்பை உடனடியாக அமலாக்க வேண்டும் என்ற முடிவினை எடுக்கிறது.  அதற்கான பணிகளை விரைவுபடுத்துமாறு ரிசர்வ் வங்கி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.


அரசின் இப்படிப்பட்ட  போக்கு கண்டிக்கத்தக்கது.

Friday, 18 August 2017

நன்கொடை?
2012-13 மற்றும் 2015-16 நிதியாண்டுகளில் 5 தேசியக் கட்சிகள் பெற்ற நன்கொடைத் தொகை ரூ.1,070.68 கோடி. இதில் 89% அதாவது ரூ.956.77 கோடி கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அளித்த நன்கொடையாகும்.

இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நன்கொடைகளில் பாஜக மட்டும் ரூ.705.81 கோடி பெற்றுள்ளது. அதாவது 2,987 கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜகவுக்கு இந்த நன்கொடையை அளித்துள்ளது.

ஜனநாயகச் சீர்த்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள இந்தப் புள்ளி விவரங்களின்படி கார்ப்பரேட் நிறுவன நன்கொடைகளில் மற்ற 4 கட்சிகள் பெற்றதவிட பாஜக 3 மடங்கு அதிக நன்கொடைகளைப் பெற்றுள்ளது. அடுத்ததாகப் பயனடைந்த தேசியக் கட்சி காங்கிரஸ், இது 167 கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து ரூ.198.16 கோடி நன்கொடை பெற்றுள்ளது.

ஆவணண்ங்களின்படி பகுஜன் சமாஜ் கட்சி இந்தக் காலக்கட்டத்தில் ரூ.20,000த்துக்கும் மேல் நன்கொடையாகப் பெறவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கார்ப்பரே நிறுவனங்களிடமிருந்து ஆகக்குறைந்த தொகையான ரூ.18 லட்சம் கிடைத்துள்ளது. இதனை அளித்தது 17 நிறுவனங்கள்.
பாஜக, காங்கிரஸ், தேசியவாதக் காங்கிரஸ் கட்சிகளே அதிகம் இத்தகைய நன்கொடைகளைப் பெற்றுள்ளன. அதாவது என்னமாதிரியான கார்ப்பரேட் நிறுவனங்கள் என்பதில்தான் சுவாரசியம் அடங்கியுள்ளது,

பெரும்பாலும் சுரங்கத்துறை, ரியல் எஸ்டேட், மின்சாரம், செய்தித்தாள்கள் மற்றும் பிற வர்த்தக ஆர்வ நிறுவனங்கள்தான் இந்த 3 கட்சிகளுக்கும் அதிக தொகையை நன்கொடையாக அளித்துள்ளன.
மொத்தம் 14 தொழிற்துறைகளிலிருந்தும் அதிக நன்கொடையைப் பெற்றுள்ளது பாஜகதான். இதில் ரியல் எஸ்டேட் துறை சுமார் ரூ.105.20 கோடி, சுரங்கம், கட்டுமானம், ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் ரூ.83.56 கோடி, ரசாயனம் மற்றும் மருந்துற்பத்தி நிறுவனங்கள் ரூ.31.4 கோடி என்று பாஜகவுக்கு நன்கொடை வழங்கியுள்ளன
*********************************************
நமது கருத்து

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இவ்வாறு வெள்ளையாகவே நன்கொடயென்றால் கருப்பாக எவ்வளவு இருக்கும்?

கார்பரேட் நிறுவனங்களிடம் இவ்வாறு நன்கொட பெறும் கட்சி பொத்துத்துறை நிறுவனங் வளர உதவுமா?

வாழத்தான் விடுமா?

நமது ஒற்றுமை அதன் வழியான போராட்டங்கள் மூலமே பொத்துதுறைகளைக் காத்திட முடியும்.

Monday, 14 August 2017

விடுதலைத் திருநாள்
வாழ்த்துக்கள்

சிறைக்குள் அடைக்கப்படனர்.
சிறையின் அறைக்குள்ளும்
சிறையின் வெளியிலும்
சித்ரவதைகளை அனுபவித்தனர்.

கொட்டடிச் சிறைக்குள்
கொடுமைகளின் கும்மாளம்.

எண்ணற்ற உயிர்ப்பலிகள்
ஏராளமான தியாகங்கள்

சுதந்திரம் வந்தது.
சுதந்திரம் பெற
சிறைக்குச் சென்று
சித்ரவதை கண்டு
இன்றும் வாழும் சிலருக்கும்
கோட்டை கொத்தளத்தில்
கொடியேற்றும்
வாய்ப்பற்ற நிலை.

ஆனால் ...
சிறைக்குள் இருக்க வேண்டியவர்களுக்கு
கோட்டை கொத்தளத்தில்
கொடியேற்றும் வாய்ப்பு.

கல்வி கற்க வந்த
பாரத மாதாவின்
பச்சிளம் குழந்தைகள்
கல்விக் கூடத்திலேயே
வெந்து செத்தார்கள்.

சாகடித்தவர்களுக்கு
சாதகமான தீர்ப்புக் காற்று.

சுதந்திரப் பிரதேசத்தில்
சுவாசம் தரும் காற்றின்றி
சுவாசத்தை இழக்கும்
பாரத மாதாவின்
பச்சிளம் குழந்தைகள்.

இப்படி பல சிந்தனைகள் நம
இதயத்தைச் சிதைத்தாலும்
நம்பிக்கைக் இழக்காமல்
நடைபோட வேண்டிய கட்டாயச் சூழல்.

எல்லாம் மாறும்
ஏற்றம் சேரும்.
உணர்வுகளை உள்ளுக்குள் வைத்து
அறிவைப் பயன்படுத்தி
நாட்டுக்கு ...
நாட்டு மக்களுக்கு...
நம்மால் ஆனதைச் செய்வோம்.

வேளிவியால் வந்த விடுதலையை
விடுதலையால் பெற்ற
உரிமைகள் காப்போம்.

அனைவருக்கும்
விடுதலயத் திருநாள்

வாழ்த்துக்கள்.

Wednesday, 9 August 2017

இது மாற்றமா?

அமைச்சருடன் சந்திப்பு
BSNL ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 08.08.2017 அன்று டெல்லியில் BSNL ஊழியர்கள் அதிகாரிகள் தேசியகூட்டமைப்பு சார்பாக இலாக்கா அமைச்சர் திரு.மனோஜ் சின்கா அவர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. நாடாளுமன்ற மேலவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா அவர்களால் கூட்டமைப்பு வழிநடத்தப்பட்டது. NFTE பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர் சிங் அவர்களின் தலைமையில் கூட்டமைப்புத் தலைவர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கை மனுவை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சாதகமாக பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இப்படிப்பட்ட நிகழ்வுகள் தோழர் குப்தா காலத்தில் நட்ந்ததில்லை.

பேச்சுவார்த்தை நடைபெறும்.
தேவையெனில் போராட்டம் நடைபெறும்.
உடன்பாடு வரும்.
உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.

மாற்றம் ஒன்றே மாறாதது.

இது மாற்றமா?

Friday, 4 August 2017


பவளவிழா வாழ்த்துக்கள்
அன்பு தோழர் ஆர்.கே. அவர்களுக்குக்கு உள்ளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். 


மிகச் சிறந்த தொழிற்சங்கப் போராளியாக செயல்பட்ட தோழர் ஆர்.கே. நாளை நடைபெறும் விழா சிறக்க வாழ்த்துக்கள்.