NFTECHQ

Friday, 10 March 2017

மத்திய சங்கத்துக்கு நன்றி

நமது மத்திய சங்கத்தின்
தொடர் முயற்சியின் விளைவாக
இரவு நேர
இலவச அழைப்பு வசதி
நிறுவனத்தின் ஓய்வு பெற்ற
ஊழியர்களுக்கும் உண்டு
என 09.03.2017 அன்று
நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பணியில் உள்ள ஊழியர்களுக்கும்
இச்சலுகையை வழங்க வேண்டும்
என நமது மத்திய சங்கம்
வலியுறுத்தியது.
இந்த முயற்சி தொடரும்.

முயற்சி வெல்லும்.
பாராட்டும்
வேண்டுகோளும்

நமது நிறுவனத்தின் செல் கோபுரங்க்களை
தனியாக பிரித்து துணை நிறுவனம் அமைம்பதை எதிர்த்து அனைத்து தொழிற்ச்சங்க தலைவர்களும் ஈரோடு மாவட்ட
ஆட்சியரைச்

சந்திதுத்து 9-3-2017அன்று மாலை நான்கு மணிக்கு மனு அளித்துள்ளனர்.

மத்திய அமைப்புகளின் முடிவை ஏற்று இந்த இயக்கம் நடத்திய தோழர்களுக்கு பாராட்டுக்கள்.

வேண்டுகோள்

நமது மாவட்டத்தில் நமது கேபிள்களை
மோசமாகப் பாதிக்கும் வகையில் மாநில அரசின் அமைப்புகள் ஈடுபடுகின்றன.
இதைத் தடுக்கும் வகையில் அனைத்து இயக்கங்களின் சார்பாக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து ஒரு மனு கொடுத்து, விளக்கி வேண்டுகோள் வைத்தால் பலன் கிடைக்கும் என நம்புகிறோம்.


இந்த முயற்சியில் ஈடுபடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

Thursday, 9 March 2017

முறியடிப்போம்

நமது நிறுவனத்தில் ஊழியர் சங்கங்கள் மட்டுமோ,
ஊழியர்கள் மற்றும அதிகாரிகள் சங்கங்களும் இணைந்தோ எந்த வித கூட்டமைப்பையும் (FORUM)
உருவாக்கக் கூடாது என்று கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

நிறுவனத்தின் நலன் காக்கவும்,

அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நலன் காக்கவும் ஒன்றுபட்டுச் செயல்படுவதைத் தடுக்கும் முயற்சியை முறியடிப்போம்.
வீச்சு

"காரைக்குடி இணையதளத்தின்
எதுகை மோனை எழுத்து முறை
பல தோழர்களை
வசீகரித்துள்ளது.

மாரியின் எழுத்துமுறை
வீச்சாக சென்றூள்ளது."

இந்த வரிகள் வேலூர் மாநில மாநாட்டு
செயல்பாட்டு அறிக்கையில் உள்ளது.

வேலூருக்கு முன்பு
வசீகரிக்கப்பட்ட எதுகை மோனையுடன்
வீச்சாக இருந்த எழுத்துக்கள்
அமைப்பு நிலைக்கு
உட்பட்டவையாகத் தெரிந்து
பாராட்டப்பட்டதா?

வேலூருக்குப் பின்பு
வசீகரிக்கப்பட்ட எதுகை மோனையுடன்  வீச்சாக இருக்கும் எழுத்துக்கள்
அமைப்பு நிலைக்கு மாறுபட்டவையாகத் தெரிகிறதா?

மாறியது அமைப்பு விதிகளா?
மனித மனங்களா?

வீச்சு சாதகமாக இருந்தால் வசீகரிக்கும்.

வீச்சு பாதகமாக இருந்தால் கரிக்குமோ?

நிலை மாறும் உலகில் எல்லாமே
நிரந்தரம் என்ற கனவில் வாழக் கூடாது.
தீர்மானங்கள்-தொடர்ச்சி

8.கிளைகள் இணைப்பு
இப்பிரச்னை பல ஆண்டுகளாக
 விவாதிக்கப்பட்ட்டு முடிவுகள எடுக்கப்பட்டுள்ளன.
யதார்த்த நிலை,
இயக்கத்தின் நலன்,
உறுப்பினர்களுடன் தொடர்பு குறித்து
சிந்தித்து செயல்படுத்தப்பட வேண்டிய பிரச்னை இது.

6.  ஒலிக்கதிர்  ஆசிரியர் குழு 4:2

7. ஊதிய மாற்றக்குழு 6:2

12. காரைக்குடி பிரச்னைக்கு (?!) மட்டும் 3:3

எழுகின்ற கேள்விகள்

இந்தக் குழுக்களில் ஏன்
ஒரு டெலிகாம் டெக்னீசியன்
தோழர் கூட இடம் பெறவில்லை.
அறிவார்ந்த பல டெலிகாம் டெக்னீசியன் தோழர்கள் இருக்கும்போது அவர்களை
முற்றிலுமாக ஒதுக்கி ஓரம் கட்டியது தவறில்லையா?

இந்தக் குழுக்கள் அமைக்கும்போது
உண்டான உணர்வு,
மாநிலக் கவுன்சில் உறுப்பினர்
நியமனத்தில்
உணர்வு
உறங்கிப் போனது ஏன்?
அறிவு சார் திறன் என்பது
ஒரு தரப்பில் மட்டும்
ஒளிந்து
ஒளிர்கிறதா?


காரைக்குடி பிரச்னை -தொடரும்
தீர்மானங்கள்

மாநிலச் செயற்குழு தீர்மானங்களைப் படித்தோம்.

1.மகளிர் தினம் கொண்டாட வேண்டும்.
நன்று.
(அதே சமயத்தில் வேலூர் மாநில மாநாட்டில் ஒரு தோழியர் கூட தங்கள் அணியில் நிர்வாகியாக இடம் பெறக் கூடாது என்பதில் கறாராகவும் கவனமாகவும் இருந்தது நினைவில் நிழலாடித் தொலைக்கிறதே.)

2.நெடுவாசல் போராட்டம்

வரவேற்கத்தக்கது. அறைகூவலுக்கான காலதாமதம் வருந்த்தக்கது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையிலும் இதே காலதாமதம் இருந்தது.
இந்த அறைகூவலுக்கு செயற்குழு கூடித்தான் முடிவெடுக்க வேண்டுமா என்ன?

3. போனஸ்
நன்று.
(மத்திய சங்கத்துக்கு  போதுமான அழுத்தம் தர வேண்டிய பிரச்னை இது)

4. பொதுத்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் அறைகூவல்
(அறைகூவலைச் சிறப்பாக்க வேண்டும்)
5. கோழிக்கோடு மத்திய செயற்குழு முடிவு
(இது கடமை)



தொடரும்...

Wednesday, 8 March 2017

ஒப்பந்த ஊழியர்கள்
கூலி உயர்வு

ஒப்பந்த ஊழியர்களுக்கு
19/01/2017 முதல் 
 
குறைந்த பட்சக்கூலியை உயர்த்தி வழங்கி 
மத்திய அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.
அதனை BSNLலில் அமுல்படுத்திட 
 
தமிழ் மாநில நிர்வாகம் 
07/03/2017
அன்று உத்திரவிட்டுள்ளது.

UNSKILLED LABOUR

A பிரிவு நகரம் ரூ.523…
B
பிரிவு நகரம் ரூ.437…
C
பிரிவு நகரம் ரூ.350…
எழுத்தர் பணி, காவல் பணி, கேபிள் பணி..
என திறன் அடிப்படையில் 
கூடுதல் கூலி பெறுவதற்கான..
நமது முயற்சி தொடரும்…

கூலி உயர்வு 19/01/2017லில் 
இருந்து அமுல்படுத்தப்படும்…
மகளிர் தினம்


தோழியர்கள்
அனைவருக்கும்
மனம் நிறைந்த
மகளிர் தின
வாழ்த்துக்கள்

பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக் களிப்பொடு நாம்பாடக்
கண்களி லேயொளி போல வுயிரில்
கலந்தொளிர் தெய்வம் நற் காப்பாமே.

கும்மி யடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!                                                  (
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.                                                         

மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டிவிட் டோமென்று கும்மியடி!                                                      (
நல்ல விலைகொண்டு நாயை விற்பார்,அந்த
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார்.                                                   (

கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வ்ற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.                                                 
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!                                              (
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்.                                                         

காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!                                                             

Sunday, 5 March 2017

சஞ்சீவ் குமார் ஐ.பி.எஸ்.

மரணம் ..... சொல்லும் பாடம் !


தமிழக கூடுதல் டி.ஜி.பி. சஞ்சீவ்குமார் இன்று உடல் நலக்குறைவால் இறந்தார்.
அவரது மறைவு குறித்து பல்வேறு உருக்கமான தகவல்கள் காக்கிச்சட்டை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த இவர் 1986 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியாவார். திருநெல்வேலியில் கமிஷனராகவும், உளவுத்துறையில் டி.ஐ.ஜி, ஐ.ஜி என்று பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இவர் பதவி வகித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து பதவி உயர்வில் காவல்துறை தலைமையிட கூடுதல் டி.ஜி.பி -யாக பதவி வகித்தார். பணியில் நேர்மையாக இருந்து, இவரது பணிக்காலங்களில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். குறுக்கு வழியில் பொருள் ஈட்டாத, கடமை தவறாத நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்தவருக்கு புற்றுநோய் வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயுடன் போரடிய இவர், நோயை குணப்படுத்துவதற்காக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். சிகிச்சைக்காக அவரது சேமிப்பு பணத்தை எல்லாம் செலவழித்தும் அவரால் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியவில்லை. மேலும், அவருடைய மருத்துவ பாலிசி லிமிட்டையும் மருத்துவச் செலவு தாண்டிவிட்டது. அதனால், அவர் பொருளாதாரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ளார். அதையடுத்து, இவரது பேட்சில் இருக்கும் சக அதிகாரிகள் சிலர் இவருக்கு பொருளாதார ரீதியாக பல உதவிகள் செய்து வந்திருக்கிறார்கள். இருந்தாலும் மேலும் இவரது சிகிச்சைக்கு கூடுதல் பண உதவி தேவைப்பட்டு இருக்கிறது.
இது போன்ற சிக்கலான சமயங்களில் காவல்துறையில் உயர் அதிகாரிகளுக்கென்று சிறப்பு நிதி திட்டம் மூலம் நிதியுதவியை முதல்வர் வழங்குவார்.இதற்கு விண்ணப்பிக்கும் அதிகாரிகள் உள்துறை செயலாளரிடம் விண்ணப்பிப்பர். அவர் முதன்மைச் செயலாளருக்கு பரிந்துரை செய்வார். முதன்மைச் செயலாளர் முதல்வருக்கு அந்தக்கோப்பை அனுப்பி வைப்பார். முதல்வர் இல்லாத காலங்களில் உள்துறைச் செயலாளரும் , முதன்மைச் செயலாளரும்தான் இதற்கு பொறுப்பு.
கடந்த முறை பழைய டி.ஜி.பி அமித் வர்மாவிற்கும் இது போன்று உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது , முதல்வராக இருந்த ஜெயலலிதா சிறப்பு நிதி ஒன்றில் அவருக்கு உதவி செய்துள்ளார். எனவே அதை நம்பி சஞ்சீவ் குமாரும் அந்த தொகைக்காக விண்ணப்பித்து காத்திருந்தார். இந்தநேரத்தில், முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அதையொட்டி, ஒட்டு மொத்த நிர்வாகமும் முடங்கிப்போக இவரது கோப்பும் அங்கு முடங்கிப் போனது.
உயர் அதிகாரிகள் சிலர் அழுத்தம் கொடுத்தும் கோப்பு நகராமல் இருக்க சஞ்சீவ்குமாருக்கு நோயின் தன்மையும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த சஞ்சீவ்குமார் மேற்கொண்டு அங்கு சிகிச்சை பெறமுடியாமல், அந்த மருத்துவமனையில் இருந்து வெளியேறி வேறு ஒரு சுமாரான மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இடம் பெயர்ந்தார். இடம் பெயர்ந்த சில நாட்களிலே நோயின் தன்மை அதிகரித்து இன்று இவர் காலமானார் . இவருக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் பணிக்காலம் இருக்கிறது.
மக்களுக்கு சஞ்சீவ் குமாரின் மரணம் ஒரு சம்பவத்தை சொல்லிவிட்டு சென்றிருக்கிறது.

உதவியோ ,அன்போ எதுவாக இருந்தாலும் காலத்தில் ஒருவற்கு கிடைத்தால்தான் அது சாலச்சிறந்தது .இல்லையேல் அது வெறும் சம்பவம்தான் . அது சாமானியன் முதல் அதிகாரத்தில் இருக்கும் அனைவருக்கும் பொருந்தும்!.

Friday, 3 March 2017

மாநிலச் செயற்குழு
மார்ச் 4
சேலத்தில்
மாநிலச் செயற்குழு.
இயக்கத்தின் பலம்,
இயக்கத்தின் பலகீனம்,
பலத்தைப் பெருக்குதல்,
பலகீனத்தைக் களைதல்,
ஊழியர்களின்
பிரச்னைக்குத் தீர்வு காணும் வழிகள்,
இப்படி பல்வேறு பிரச்னைகள் சூழ்ந்திருக்கும் சூழலில் கூடுகிறது மாநிலச் செயற்குழு.

சமீப காலங்களில் மாநிலச் செயற்குழுக்கள் ஒரு கும்பமேளா கூடிக் களைவதைப் போலத்தான் நடைபெறுகிறது.

தலைவர்கள் சிறப்புரையிலேயே  ஒரு நாளின் பெரும்பான்மை நேரம் கழிந்து விடுகிறது.

கருத்தரங்கமும் காலத்தை விழுங்கி விடுகிறது.

மாவட்டச் செயலர்கள், மாநிலச் சங்க நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களையும், ஊழியர் பிரச்னை உள்ளிட்ட சில பிரச்னைகளையும் பேச காலமும் இல்லை. நேரமும் இல்லை.

மாநிலச் செய்லர் தொகுப்புரையின் போது அரங்கில் சில நாற்காலிகள் மட்டுமே நிரம்பியிருக்கும்.

பொருட்செலவின் அருமையையும்,
காலத்தின் அருமையையும் அறிந்து சேலம் செயற்குழு சூழ்நிலைகேற்ற செயற்குழுவாக அமையுமா?


அமைந்தால் அது இயக்கத்தின் வ்ரும் கால நலனுக்கு உதவும்.