NFTECHQ

Tuesday, 10 May 2016

ஈரோடு மாவட்டம்

வாக்குப் பதிவு விபரம்

வ.எண்
வாக்குச் சாவடி
மொத்த வாக்குகள்
பதிவு
  சத
விகிதம்
1
பொதுமேலாளர் அலுவலகம்
107
103
96.3
2
டெலிபோன் பவன்
153
148
96.7
3
ஈரோடு எக்ஸ்டர்னல்
78
78
100
4
பவானி
103
97
94.2
5
கோபி
74
74
100
6
சத்தி
45
44
97.8
7
பெருந்துறை
73
72
98.6
8
காங்கயம்
60
60
100
9
தாராபுரம்
82
82
100

மொத்தம்
775
758
97.8

தபால் வாக்குகள்    5
மொத்தம்          780

Monday, 9 May 2016

முன்னணித் தோழர்களின்

கவனத்திற்கு

வாக்குப்பதிவு துவங்கும் நேரம் நெருங்குகிறது.

கற்பனைக்கும்  எட்டாத
கணக்கற்ற பொய்கள்
பரப்பப்டுகின்றன.

பொய்களைச் சொல்லியே
பொழுதைக் கழித்தவர்கள் அவர்கள்.

அந்த் பொய்கள் அனைத்தையும்
புறம் தள்ளி விட்டு கவனத்துடன்
நமது கடமையாற்ற வேண்டுகிறோம்.

எத்தகைய சூழ்நிலையிலும்
பொறுமை காத்து
அமைதியுடன் நமது பணியைச்
சிறப்பாகச் செய்தல் என்பதை மட்டுமே கவனத்த்ல்
கொண்டு செயல்பட வேண்டுகிறோம்.

Saturday, 7 May 2016

  1.    

    அன்பான வேண்டுகோள்

    10.05.2016

    நமது
    வருங்காலத்தை
    நிர்ணயிக்கும்
    நாள்.

    நிகழ்காலப் பலன்களை
    நிரந்தரமாக்கும்
    நாள்.

    இழந்த பலன்களை
    மீட்டெடுக்க
    வழி காணும் நாள்.

    வாழ்வு தரும் நிறுவனத்தை
    வாழ்விக்க வழி காணும் நாள்.

    பணியில் இருப்போருக்கும்,
    பணி ஓய்வு பெற்றோருக்கும்
    பாதுகாப்பை
    உறுதி செய்யும் நாள்.

    இனி வரும் காலம்
    இனிதாக
    அமைய இணைந்த கரங்கள்
    மட்டுமே சாத்தியமாக்க
    முடியும்
    என்பதே
    சத்தியம்.

    SEWA BSNL
    TEPU
    NFTE BSNL
    கூட்டணி
    நிறுவன
    நலன்
    காக்கவும்,
    ஊழியர்
    நலன்
    காக்கவும்
    உறுதியோடு செயல்படும்.

    மே 10
    2016
    16
    வரிசை
    எண்ணில் வாக்களிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

Thursday, 5 May 2016

05.05.1818


உலகத் தொழிலாளர்களை  ஒன்றுபடச் சொன்ன,
உலகம் உய்விக்க தத்துவம் தந்த
கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம் இன்று.

மார்க்சியம்
இன்றைக்கும் என்றைக்கும்
பொருத்தமானதே.

தேவையெல்லாம் அவர்
சொன்னதை ஏற்றுச் செயல்படுவதே.

தொழிலாளர் ஒற்றுமை,
தொழிற்சங்க ஒற்றுமை
என்பதே காலத்தின்
அவசியத் தேவை.

ஆனால் பெரியண்ணன் மனப்பான்மையோடு
மற்ற சங்கங்களை
அழித்தொழிக்கும்
அநாகரீகச் செயலில்
ஈடுபடுவோரை
காலம் மான்னிக்காது


உழைக்கும் வர்க்கமும்
அவர்களை ஓட ஓட விரட்டும்

அனைவரையும் ஒன்றுபடுத்தும்
ஒற்றுமை உணர்வு கொண்ட
சங்கங்க்களையே தொழிலாளர்கள் மதிப்பார்கள்

Tuesday, 3 May 2016

நன்றி விமல்

கல்லூரி நாட்களில்  
உன் கவிதயால்
என்னைக் கட்டிப்போட்ட
நண்பன் நீ

அப்போது நினைத்தோமா நாம்.

தோழன் என்ற வார்த்தையின்
பொருளோடு நம் வாழ்வு
தொடரும் என்று.

தக்க சமயத்தில்
ஒரு கவிதை தந்து உதவிய என் தோழனே நன்றி

தோழன் விமலாத்தித்தனின் கவிதை

எங்கள் உயிர் சங்கம் NFTE BSNL

அத்துக்கூலி என்று சொல்லி
அவமானம் செய்தவரை
ஓரங்கட்டி துரத்தியே
ஒதுக்கிய சங்கம் NFTE

அதிகாரியின் வால் பிடித்து
அற்பனுக்கெல்லாம் காசு அழுது
வேலை பெற்ற கொடுமையினை
வேரறுத்த NFTE

நிரந்தரங்கள் என்பதெல்லாம் 
நிச்சயமாய் கனவு தான்
என்று சொன்ன வீணருக்கும்
வாழ்வு தந்தது NFTE

நன்றி கெட்ட மனிதருக்கும்
நலமே செய்தது NFTE

நான்காம் பிரிவு ஊழியரை
மூன்றாம் பிரிவு ஊழியராக்கி
அதிகாரியாய் மேலும உயர்த்தி
அழகு பார்த்த NFTE

ஓய்வு பெற்ற ஊழியரின
ஒவ்வொரு பிடி சோற்றுக்குள்ளும்
உப்பு போல கரைந்திருக்கும் 
O P குப்தா பென்சன் திட்டம் 
இன்றும் எங்கள் வாழ்விலே
இனிமை சேர்த்த சங்கத்தை
நன்றியோடு தெய்வமாக 
நாளும் நாளும் வணங்குவோம்
வாக்களிப்பீர்
NFTE இயக்கத்தின்
இணைந்த கரங்கள் சின்னத்தில்



ஈரோட்டில்
எழுச்சி மிகு தேர்தல்

பிரச்சாரக் கூட்டம்

02.05.2016 அன்று ஈரோடு டெலிபோன் பவன் வளாகத்தில் எழுச்சி மிகு தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

தோழர்கள் ரவிச்சந்திரன் (SEWA),
தோழர் பூசப்பன் (மாநில உதவிச் செயலர் TEPU ஆகியோரின் நம்பிக்கை உரையும் தோழர் மதிவாணன் அவர்களின் எழுச்சி மிகு உரையும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.










டெலிபோன் பவன் கிளையின் தலைவர் அன்புத் தோழியர் S.P.நிலைமதி அவர்கள் 31.05.2016 அன்று பணி ஓய்வு பெறுகிறார். 02.05.2016 அன்று நடைபெற்ற எழுச்சி மிகு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு தலைமை வகித்த போது அவருக்கு தோழர் மதி வாழ்த்தி கதராடை அணிவித்தார்.



கண்ணீர் அஞ்சலி

கடலூரில் நமது இயக்கம் வளர ஓயாது உழைத்த தோழன் ரங்கனாதன் 02.05.2016 அன்று நிரந்தர உறக்கத்தி ஆழ்ந்து விட்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம்.



அவரது மறைவுக்கு நமது கண்ணீர் அஞ்சலி

Monday, 2 May 2016





ஈரோட்டில்
தோழர் பட்டாபி
அவர்களின்

தேர்தல் பிரச்சார உரை
27.04.2016

Saturday, 30 April 2016


மேதின
வாழ்த்துக்கள்
01.05.2016
அனைவருக்கும்
மே தின வாழ்த்துக்கள்

உழைப்பையும்,
ஓய்வையும்
உறக்கத்தையும்
உறுதி செய்திட்ட
தியாகத் தலைவர்களுக்கு
நன்றி சொல்வோம்.

2017 ஆம் ஆண்டின் மேதினம்  
நம்மைப் போன்ற
BSNL ஊழியர்களுக்கு
மகிழ்வான தினமாக அமைய
2016 மே மாதம் 10 ஆம் நாளன்று
வரிசை எண் 16ல்
ஒற்றுமையின் சின்னமாம்
இணைந்தகரங்களில்
வாக்களித்து
வருங்காலத்தை
வளமுள்ளதாக்குவோம்.
இருப்பதைக் காத்திடுவோம்
இழந்த்தை மீட்டிடுவோம்.
வாழிய பல்லாண்டு
30.04.2016  அன்று பணி
ஓய்வு பெறும்
1. திரு N.சுப்ரமணியன் SDE
2.தோழர் P.பழனியப்பன் SSSO
3. தோழர் M. வெற்றிவேல் STS
4. தோழர் S.சதாசிவம்-I  TM
5. தோழர் S.சதாசிவம்-Ii  TM
6. S.பெருமாள் TM
7. தோழர் S. சுப்ரமணியன்  TM
8. தோழர் P.பாபு  TM
9. தோழர் K.கோவிந்தன் TM
10. தோழர் P.மாரியப்பன் TM

ஆகியோர்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ
வாழ்த்துகிறோம். 


SEWA-NFTE-TEPU
ஏழாவது உறுப்பினர்
சரிபார்ப்புத் தேர்தல்
பிரச்சாரக் கூட்டம்
02.05.2016
மாலை 4.30 மணி
டெலிபோன் பவன் வளாகம்
சிறப்புரை
தோழர்
T.முத்துக்கிருஷ்ணன்
தோழர்
C.K.மதிவாணன்
தோழர்
பூசப்பன்
மாநில உதவிச் செயலர்  TEPU
அனைவரும் வருக
என
அன்புடன் அழைக்கும்
ஷாஜகான்
மாவட்டச் செயலர் TEPU
சதாசிவம்
மாவட்டச் செயலர் SEWA
பழனிவேலு
மாவட்டச் செயலர் NFTE

Thursday, 28 April 2016

பயனுள்ள

கூட்டங்கள்

27.04.2016 அன்று
ஈரோடு எக்ஸ்டர்னல் அலுவலகம்,
பொதுமேலாளர் அலுவலம்,
பவானி தொலைபேசி நிலையம்
என மூன்று இடங்களில்
தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்
சிறப்புடன் நடைபெற்றன.
ஊழியர் பங்கேற்பும் சிறப்பாக இருந்தது

தோழர்கள்
பட்டாபி,
கிருஷ்ணன்,
தமிழ்மணி
சதாசிவம்,
காசிராஜன்
ரவிச்சந்திரன்
ஆகிய தலைவர்கள்
 "NFTE இயக்கம் வெற்றி பெற வேண்டியதன்
அவசியம்"
மற்றும்
 "எதிர்கால சவால்களும் அவற்றைச்  சந்திக்து வெற்றி காணவும் அதற்கு ஒற்றுமையின் அவசியம்"
குறித்தும் ஆற்றிய உரைகள் பயனளிப்பதாகவும் மே 10 அன்று நல்ல பலனை விளைவிப்பதாகவும் அமைந்த்ன.

நிகழ்வுகள் அனைத்தும்
சிறக்க உதவிட்ட தோழர்கள்
அனைவருக்கும் நன்றி.

Sunday, 24 April 2016

வரவேற்கிறோம்
27.04.2016
அன்று
ஈரோடு
மாவட்டத்திற்கு
வருகை
தரும்
தோழர்
சுப்புராமன்
தோழர்
பட்டாபி
தோழர் 
முத்துகிருஷ்ணன்
தோழர்
கிருஷ்ணன்
தோழர்
அசோகராஜன்
ஆகியோரை
அன்புடன்
    வரவேற்கிறோம்.

Thursday, 21 April 2016

இழப்பின் அளவு

26000 கோடி ரூபாய்

BSNLEU அங்கீகாரத்தில்
இருந்த காலத்தில்
ஊழியர்களுக்கு ஏற்பட்ட

இழப்பு ரூபாய் 26000 கோடி.


இழப்பின் விபரம்

போனஸ் இழப்பு
 1860 கோடி ரூபாய்

மெ2டிக்கல் அலவண்ஸ் இழப்பு
8200 கோடி ரூபாய்

78.2 சத பஞ்சப்படி இணைப்பு மூலம் கிடைக்க வேண்டிய அரியர்ஸ் இழப்பு
6100 கோடி ரூபாய்

பயணப்படி போன்ற அலவண்ஸ்கள்
மாற்றம் செய்யாத்தால் இழப்பு
7500 கோடி ரூபாய்

விடுப்புக் கால 10 நாள் சம்பளம்
பெற இயலாத்தால்
350 கோடி ரூபாய்

தேக்க நிலை ஆண்டுயர்வுத் தொகை மற்றும் 01.01.2007க்குப் பின் பணி நியமணம் பெற்ரவர்கள் சம்பள இழப்பு மூலம்
1100 கோடி ரூபாய்

78.2 அகவிலைப்படி இணைப்பில் வீட்டு வாடகைப்படி கிடைக்காததால் இழப்பு
1250 கோடி ரூபாய்
கோடி ரூபாய்

இத்தனையும் இழந்தோம்.
இனியும் இழக்கலாமா?
சிந்திப்பீர்
இனி வரும் காலமாவது
இழபுகள் இல்லாத காலமாகட்டும்.

10.05.2016 அன்று
வரிசை எண் 16ல்
நாம் அளிக்கும் வாக்கால்
இணைந்த கைகள் உயரட்டும்
இழப்புகள் நம்மை விட்டு அகலட்டும்