NFTECHQ

Saturday, 12 July 2014

தண்ணீர் தண்ணீர்



இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் படத்தின் தலைப்பு இது.

பவானியில் காவிரி நதிக் கரையோரத்தில் நமது தொலைபேசி நிலையத்திலும் ஊழியர்கள் குடியிருப்பில் ஒரு சொட்டு தண்ணிருக்கும் வழியின்றித் தவிக்கிண்றனர். இது குறித்து நமது கிளைச் சங்கம் கோட்ட அதிகாரியிடம் முறையாக விவாதித்தது. இதற்கான செலவு தனது நிதி வரம்புக்குள் இல்லாததால் அதற்கான கோப்புகளை மேலதிகாரிக்கு அனுப்பியுள்ளார். நமது மாவட்டச் சங்கமும்  இது குறித்து பொது மேலாளரிடம் விவாதித்தது. உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

(AGM PLANNING)  கோப்புகளை சிவில் பகுதிக்கு அனுப்பியுள்ளார்.

பவானியில் ஊழியர்கள் மிகுந்த கோபத்துடன் உள்ளனர். இந்த கோபம் நியாயமானதே. நியாயமான கோபம் சூழ்நிலையைச் சூடாக்கும். சூழ்நிலை சூடானால் விளைவுகள் கடுமையாவது இயல்பே.

எனினும் நமது அதிகாரிகள் பிரச்னையின் கடுமையான தன்மையை உணர்ந்து விரைவில் தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கை மாவட்டச் சங்கத்துக்கு உள்ளது.


Friday, 11 July 2014

சாமான்யனின் கேள்வி



11.07.2014 இன்று காலை ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டே ப்ட்ஜெட் பற்றிய செய்திகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். அவரவர் பார்வையில் விவாதம் நடைபெற்றது.
அப்போது ஒரு கட்டிடத் தொழிலாளி என்னைப் போன்றவர்களுக்கு ஏதாவது இருக்கா என்று கேட்டார். யாரும் அதற்கு பதில் சொல்லவில்லை. அவர் சொன்னார். கட்டிடம்  இடிந்து நான் செத்தால் கூட எதுவும் கிடைக்காது. ஏன்னா என் மனைவி ஏற்கெனவே
வைத்தியம் பாக்க வசதியில்லாத்தால்
கேன்சரில் செத்துப் போயிட்டா.
என்னோட மகனூம் ஒரு விபத்தில் போய்ச் சேர்ந்துட்டான். நாங்கல்ல்லம் ஓட்டைப் போட்டுவிட்டு வெந்தும் வேகாம சாப்பிட்டுட்டு விதி வந்தா சாக வேண்டும். எந்த கவர்ன்மெண்ட் வந்தாலும் எங்க தலையெழுத்தை மாத்த முடியாது என்று சொல்லி விட்டு டீ டம்ளரை வைத்து விட்டு  டீக்கான காசைக் கொடுத்து விட்டு ஒரு கட்டு பீடியை வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.

Thursday, 10 July 2014

வருமான வரி



80(சி) பிரிவின் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.


வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்வு.
மூத்த குடிமக்களுக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பஞ்சப்படி உயர்கிறது




01/07/2014 முதல்
2.9 சதவிகிதம்
பஞ்சப்படி
உயர்வுக்கு
BSNL  உத்திரவு வெளியிடடுள்ளது.

Wednesday, 9 July 2014

பாரபட்சம்



அனைத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று BSNL ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு ப்ரிபெய்டு சிம்கார்டு தர நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.

மாதம் தோறும் முதல் தேதியில் 200 ரூபாய் டாப் அப் செய்யப்படும். இது இலவசமே.
CUG வசதி SSA அளவில் மட்டுமே தரப்ப்படும்.
STD வசதி இல்லை.
மற்ற நிறுவனங்களின் தொலைபேசிகளுக்குப் பேசும் வசதி கிடையாது.
சிம் கார்டுக்கான விலையை ஊழியர்கள் செலுத்த வேண்டும்.
இது வரை ஊழியர்களுக்கு விலையில்லா சிம்கார்டு தரப்பட்டது. தற்போது அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்கிறது நிர்வாகம்.
மேலும் அதிகாரிகளுக்கு இலவசமாகத் தரப்படும் சிம்கார்டுகளைப் பயன்படுத்த செல்போன் வாங்க ரூபாய் 2000,3000,4000 என பதவிகளுக்கேற்ப நிர்வாகம் தருகிறது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் செல்போன் வாங்க நிர்வாகம் பணம் தருகிறது.
ஊழியர்களுக்கு இந்த சலுகை கிடையாது.
ஒரு காலத்தில் அனைத்தையுமே விமர்சனம் செய்தவர்கள் இப்படிப்பட்ட பாரபட்சங்களை நிர்வாகம் செய்வதற்கு அவர்களே துணை போனது சரியா?

Monday, 7 July 2014

பட்ஜெட் ரகசியமாக தயாரிக்கப்படுவது ஏன்?



ஒவ்வொரு வருடமும் மிக ரகசியமாகவே பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. இந்த வருடம் கூட, ஜூன் மாதம் 27 முதல் இந்த ரகசிய ஏற்பாடு துவங்கியது. நிதி அமைச்சகத்தில் உள்ள அனைவருக்கும் அல்வாகொடுத்து நிதி அமைச்சர் துவங்கிவைத்தார். நம்ம ஊர்ல அல்வா கொடுக்கறதுன்னா வேற விஷயம், அங்கு அனைத்து நல்ல காரியத்தையும் ஸ்வீட்டுடன் ஆரம்பிக்கும் பழக்கம், ஸ்வீட் எடு கொண்டாடு என்பது போல.
ஏன் ரகசியம்?
பட்ஜெட்டில் பல வரி விகிதங்கள் மாற்றப்படும், புதிய வரிகள் போடப்படும், வரி அமைப்பில் மாற்றங்கள் செய்யப்படும். அதேபோல் புதிய செலவு திட்டங்கள் வரும், நடைமுறையில் உள்ள திட்டங்கள் நிறுத்தப்படலாம், அல்லது அவற்றிற்கு கூடுதல் தொகை ஒதுக்கலாம். இவை எல்லாம் ஒவ்வொருவரையும் வெவ்வேறாக பாதிக்கும் என்பதால், இவை பற்றி பாராளுமன்றத்திற்கு மட்டுமே முதலில் தெரியப்படுத்தவேண்டும். அதன் பிறகு, அங்கு நமது உறுப்பினர்கள் விவாதம் செய்யும்போது, அதற்கு ஏதுவாக நமது சிந்தனைகளை ஊடகங்கள் மூலமாக, அல்லது நேரடி கடிதம் மூலமாக வைக்கலாம். குறிப்பாக வரி திருத்தங்களை முன்கூட்டியே தெரிந்துகொண்டு வரி ஏய்ப்பில் சிலர் ஈடுபடலாம், அல்லது அந்த திருத்தங்கள் நாடாளுமன்றதிற்கு வருவதையே தடுக்க முயற்சிக்கலாம் என்ற நோக்கில் பட்ஜெட் இரசியமாக தயாரிக்கப்படுகிறது.
பட்ஜெட் கெடுபிடி
நார்த் பிளாக்’ (north block) என்ற கட்டிடத்தில் நிதி அமைச்சகம் இயங்குகிறது. இதில் உள்ள அடித்தளத்தில் பட்ஜெட், கூடுதல் அட்டவணைகளும் அச்சிடப்படுகின்றன. பட்ஜெட் உரை நாளன்றுதான் காலையில் அச்சிடப்பட்ட பட்ஜெட் உரை நாடாளுமன்றத்திற்கு எடுத்துசெல்லப்படும்.
இதற்காக, 15 நாட்களுக்கு நிதி அமைச்சகத்தின் அலுவலர்கள் எவரும் (கூடுதல் செயலர் வரை) நிதி அமைச்சகத்தை விட்டு வெளியே வரமுடியாது. நிதி அமைச்சக ஊழியர்கள் மட்டுமல்லாது, சட்டம், செய்தி உள்ளிட்ட பிற துறை அலுவலர்கள் சிலரும் நிதி அமைச்சகத்தில் இந்த வேலையில் இருப்பார்கள், அவர்களும் வெளியே வரமுடியாது. உண்பது, உறங்குவது, அலுவக நடவடிக்கை செய்வது எல்லாமே அலுவலகத்தில்தான். இவர்கள் யாவரும் கைபேசி கூட எடுத்து செல்லமுடியாது. இவர்களுக்கு உணவு முதல் எல்லாமே அரசு செலவில் அளிக்கப்படும்; கூடுதலாக ஊக்கத்தொகையும் தரப்படும் (சுமார் ஒரு மாத சம்பளம்). பட்ஜெட் உரையை நிதி அமைச்சர் வாசித்த பிறகே இவர்கள் அலுவலகத்தை விட்டு வெளியே வருவார்கள்.
நார்த் பிளாக்கில் எல்லா இடங்களிலும் கைபேசி அலைவரிசையை முறியடிக்கும் மின்னணு சாதனங்கள் வைக்கப்படும். எனவே, வெளியிருந்து எந்த கைபேசி அழைப்பையும் நிதி அமைச்சகத்தில் உள்ளவர்கள் எடுக்க முடியாது. அமைச்சகத்தில் உள்ள தரைவழி தொலைபேசிகள் மிக கவனமாக கண்காணிக்கப்படும். இணையதளம் மூலமாக பெறப்படும் மின்னஞ்சல்களும் நிறுத்தப்படும். முக்கிய கணினிகள் தேசிய செய்தி தொடர்பு மையத்தில் (National Informatics Centre) இருந்து துண்டிக்கப்படும்.
எஃகு கதவுகளும், X-ரே ஸ்கேனர்களும் எல்லா வழிகளிலும் இருக்கும். எனவே அமைச்சகத்தின் உள்ளே செல்லும் நிதி அமைச்சர் முதல் அனைவரும் மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையம் தாண்டி செல்லவேண்டும். இதற்காக பெரிய அளவில் காவல்துறை அலுவலர்கள் பணியில் உள்ளனர்.
பாதுகாப்பு சேவை சரியாக உள்ளதா என்பதும் அவ்வப்போது சோதிக்கப்படும். சிலரை பாதுகாப்பு வளையத்தில் ஊடுருவச் செய்வது இந்த சோதனை நடத்தப்படும்.
பட்ஜெட்டின் ஒவ்வொரு அம்சமும் ஒரு குறிப்பிட்ட செயலாளருக்குத் தெரிந்தாலும், பட்ஜெட்டின் மொத்த வடிவம் கடைசிவரை நிதி அமைச்சர், செயலாளருக்கு மட்டுமே தெரியும்.
பட்ஜெட் ரகசியங்கள் வெளிவரா திருப்பது மிக முக்கியம். அமைச்சர்கள் எடுக்கும் ரகசிய காப்பு பிரமாணத்திற்குஉண்மையாக இருப்பது இவ்வாறான ரகசியங்களை பாதுகாப்பதில் உள்ளது.

Saturday, 5 July 2014

அஞ்சலி



தோழர் P.V.சண்முகம் 04.07.2014 அன்று இரவு இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.. PVS என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட தோழர். NFPTE, NFTE பேரியக்கங்களில் ஆழமான பற்றும் விசுவாசமும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட தோழனாக வாழ்ந்தார். குன்னூர், கோவை, சேலம், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களை  உள்ளடக்கிய த்ந்திப்பிரிவு கோட்டத்திற்கு கோட்டச் செயலராக சிறப்பாகப் பணியாற்றிய தோழர்.

தந்தி நம்மை விட்டு நிரந்தரமாகப் பிரிந்திருக்கலாம். ஆனால் தந்திப் பிரிவின் தளபதிகளில் ஒருவராக வாழ்ந்த தோழர் PVS நம் நினைவுகளில் என்றும் வாழ்வார்.

Friday, 4 July 2014

இலவச சிம் கார்டு



ஊழியர்கள் பலருக்கு இலவச ப்ரிபெய்டு சிம் கார்டு (FREE SIM) வழங்க்ப்பட்டுள்ளது. அதற்கு மாதம் தோறும் 200 ரூபாய் டாப்அப் செய்யப்படுகிறது. இந்த சிம் கார்டுக்கு காலக்கெடு (வேலிடிட்டி) அந்த ஊழியர் பணி ஓய்வு பெறும் நாள் வரை உண்டு.

ஓய்வு பெறும் போது இந்த சிம் கார்டை நிர்வாகத்திடம் திருப்பித் தர வேண்டிய அவசியம் இல்லை. ஓய்வு பெற்ற அடுத்த நாள் அந்த் சிம் கார்டு வினாடி பிளானுக்கு மாற்றப்பட்டு CUG திட்டத்திலிருந்தும் வெளியேற்றப்படுகிறது. 200 ரூபாய் டாப் அப் செய்யப்படுவதும் நிறுத்தப்படும்.

ஊழியர் விரும்பினால் ஓய்வுபெறும் நாளில் தனது விருப்பத்திற்கேற்ற பிளானுக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.


மாவட்டச் சங்க நிர்வாகிகளும் கிளைச் செயலர்களும் இத்தகவலை உரியவர்களுக்குத் தெரிவிக்க வேண்டுகிறோம்.

Thursday, 3 July 2014

பணிக்குழு



நமது மாநிலச் சங்கம் தலைமைப் பொது மேலாளரிடம் விவாதித்த அடிப்படையில் மாநில நிர்வாகம் 01.07.2014 அன்று ஒரு உத்தரவு வெளியிட்டுள்ளது.

அந்த உத்தரவின் அம்சங்கள்

ஒவ்வொரு மாதமும் பணிக்குழு (WORKS COMMITTEE)கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

சேவையின் மேம்பாடு, விரிவாக்கம், தேவையான உபகரணங்கள் மற்றும் உதிரி பாகங்கள் ஆகியவற்றை உரிய காலத்தில் கிடக்கச் செய்தல், வளர்ச்சிக்கும் வருமானத்துக்கான புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.

இக்கூட்ட அறிக்கையினை (MINUTES) மாநில அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

Tuesday, 1 July 2014

ரிலையன்ஸ் ஜியோவுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு ரத்து?



  
முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு நாடு முழுவதும் தொலைத் தொடர்பு சேவை அளிப்பதற்கு வழங்கப்பட்ட அலைக்கற்றை லைசென்ஸை ரத்து செய்யுமாறு தலைமை தணிக்கைத் துறை (சிஏஜி) வரைவு அறிக்கை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அலைக்கற்றை ஏலத்தை முறைகேடாக இந்நிறுவனம் பெற்றுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத்துறைக்கு அனுப்பிய கடிதத்தில் சிஏஜி குறிப்பிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் தொலைத் தொடர்பு சேவை அளிப்பதற்கான லைசென்ஸை இன்ஃபோடெல் பிராட்பேண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (ஐபிஎஸ்பிஎல்) நிறுவனம் பெற்றது. இந்நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பை விட 5 ஆயிரம் மடங்கு அதிக தொகைக்கு இந்நிறுவனம் டெண்டர் கோரி பெற்றது.
லைசென்ஸ் பெற்ற பிறகு இந் நிறுவனத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வாங்கி அதன் பெயரை ரிலையன்ஸ் ஜியோ என மாற்றியதாக சிஏஜி குறிப்பிட்டுள்ளது. ஐபிஎஸ்பிஎல் நிறுவனம் செலுத்திய முன்வைப்புத் தொகை ரூ. 252.50 கோடி. ஆனால் அது ரூ. 12,847.77 கோடி தொகைக்கான லைசென்ஸை பெற்றுள்ளது. இது அந்நிறுவனத்தின் சொத்து மதிப்பை விட 5 ஆயிரம் மடங்கு அதிகம் என்று சிஏஜி சுட்டிக் காட்டியுள்ளது.
இந்து தமிழ் நாளிதழ் (30.06.2014) இச் செய்தியை வெளியிட்டுள்ளது.
தொலைத்தொடர்புத் துறையில் முறைகேடுகள் தொடர்கதையாகி விட்டது.
ஊழலற்ற இந்தியா என்ற மத்திய அரசின் முழக்கம் இப் பிரச்னையில்
நியாயம் நிலைநிறுத்தப்படுமா? தர்மம் காக்கப்படுமா?

பஞ்சப்படி



01.07.2014 முதல் 2.9 சதவிகிதம் பஞ்சப்படி
உயர்கிறது

Monday, 30 June 2014

மாவட்டச் செயற்குழு



மாவட்டச் செயற்குழு 28.06.2014 அன்று ஈரோட்டில்  நடைபெற்றது. செழுமையான, ஆக்கபூர்வமான விவாதங்களோடு நல்ல ஆலோசனைகளும் தந்திட்ட செயற்குழுவாக அமைந்தது.

கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன

உதவும் உள்ளங்கள் NFTE BSNL  ஈரோடு மாவட்டம் சார்பாக ஆண்டு தோறும் நடத்தப்படும் விழாவினை இந்த ஆண்டும் சிறப்பாக நடத்த வேண்டும். அதற்கான பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.

சேலம் மாநிலச் செயற்குழுவில் மாநிலச் செயலர்  பணிக்குழு (WORKS COMMITTEE) குறித்து பயிலரங்கம் ஒன்றை ஈரோட்டில் நடத்தித் தர விடுத்த வேண்டுகோளை ஏற்று அதைச் சிறப்பாக நடத்திட வேண்டும்.

நமது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் சேவைக்கும் தடையாக உள்ள சிக்கல்கள் குறித்து பொது மேலாளரிடம் பேசி தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கிளை மாநாடுகள் நடத்திட வேண்டிய கிளைகள் கிளை மாநாட்டை நடத்திட வேண்டும் என்பதன் அவசியத்தை விளக்கி அதற்கான காலமும் நிர்ணயம் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டச் சங்கத்தின் இணைய தளத்தை மாவட்டத் தலைவர் குமார் பராமரிக்க வேண்டும்.

`இந்த ஆண்டு போனசைப் பெற்றிட மத்திய சங்கம் உறுதியான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என மாவட்டச் செயற்குழு வலியுறுத்தியது.


சீர்மிகு கிளை மாநாடு



டெலிபோன் பவன் கிளை மாநாடு 28.06.2014 அன்று கிளைத்தலைவர் தோழியர் லட்சுமி அவர்கள் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. கீழ்க்கண்டோர் புதிய நிர்வாகிகளாக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் தோழியர் S.P.நிலைமதி STSO
செயலர்    தோழர் A.நித்ய ஜெரால்டு TTA
பொருளர்  தோழர் M.ரவி TTA

புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
ஏழு ஆண்டுகள் சிறப்பாகச் செயல்பட்ட முன்னாள் கிளைச் செயலர் தோழர் தங்கமணி அவர்களுக்கு ந்மது பாராட்டுக்கள்.

மாநாட்டில் தோழியர் லட்சுமி, தோழியர் உஷாராணி ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு சிறப்புடன்நடத்தப்பட்டது.
மாநில உதவிச் செயலர் தோழர் யாசின், மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு மற்றும் தோழர்கள் மாலி, செல்வராஜன், ராஜமாணிக்கம் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

Monday, 7 April 2014

விழா



நமது மாவட்டச் சங்கத்தின் அலுவலகத் திறப்பு விழா 08.04.2014 அன்று காலை 11 மணிக்கு நடைபெறும்.
அகில இந்திய துணைப் பொதுச் செயலர் தோழர் மதிவாணன் அவர்கள் சங்க அலுவலகத்தைத் திறந்து வைப்பார்.

Tuesday, 1 April 2014

ப்ல்லாண்டு வாழ்க



தோழர் D.சுப்ரமணியன் (AGM ADMN)
தோழர் S.ஈஸ்வரன் (AGM NWOP CM)
தோழர் S.சீனிவாசன் SDE
தோழர் G.ஜெகதீசன் SDE
தோழர் R.கோவிந்தசாமி SSSO
தோழர் M.கஜபதிராஜன் TM
தோழர் A.M.முருஜகேசன் TM
தோழர் I. சதாசிவம் TM
தோழர் அய்யாசமி T M
தோழர் முருஜகேசன் TM

31.03.2014 அன்று இலாகா பணியை நிறைவாகச் செய்து பணி ஓய்வு பெற்றுள்ளனர்

அனைவருக்கும் நமது மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்கள்

அவர்களின் பணி ஊய்வுக் காலம் சிறப்பாகவும் இனிமையாகவும் அமைய வாழ்த்துக்கள்

Saturday, 8 March 2014

மகளிர் தினம்



மார்ச் 8
சர்வதேச மகளிர் தினம்.
அனைத்து மகளிருக்கும்
மாவட்டச் சங்கத்தின்
மனம் நிறைந்த
வாழ்த்துக்கள்

Thursday, 6 March 2014

சொசைட்டி தேர்தல்



NFTE-TEPU-BSNLAU-FNTO
வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர்கள்

வரிசை எண்
பெயர்
பதவி
ஊர்
1
அங்குராஜ்.V
TM
ஈரோடு
5
குல்சார் அகமது.A
JTO
கோபி
11
நாகராஜன்.M
RM
பவானி
17
செல்வராஜ்.P
TTA
கோபி
18
சௌந்தரராஜு.G
TM
புதுப்பை
19
சுப்ரமணி.D
TM
பவானி
21
சுப்ரமணியன்.M II
TSO
ஈரோடு
23
சுந்தர்.N
SR TOA G
ஈரோடு

நமது  கூட்டணி வேட்பாளர்களின் வரிசை எண்கள்
நாம் வாக்களிக்க வேண்டிய வரிசை எண்கள்


1     5    11     17    18   19     21     23