NFTECHQ

Thursday, 3 October 2013

நம் நக்கீரன்

குற்றம் யார் செய்தாலும் குற்றம் குற்றமே! இப்படி சொல்வது எளிது. ஆனால் தனது துறையில் அமைச்சராக இருந்தவர் செய்த குற்றத்தை அம்பலப்படுத்தி அதன் விளைவாக தனது ஓய்வூதிய பலன்களை இழந்து நிற்கும் தோழர் மதி இந்திய மக்கள் மத்தியில் உயர்ந்து நிற்கிறார். வாழ்த்துக்கள்.


From Today's Times of India 
    (timesofindia.indiatimes.com)

BSNL man loses pension for exposing Dayanidhi Maran's illegal telephone exchange
Jayaraj Sivan, TNN | Oct 3, 2013, 01.15 AM IST


CHENNAI: The whistleblower, who exposed the secret telephone exchange set up by former Union telecom minister Dayanidhi Maran at his Boat Club residence in Chennai, was a BSNL subdivisional engineer, whose pension has now been stopped on disciplinary grounds.

CK Mathivanan carried out a campaign within BSNL against Maran for three years for alleged misuse of infrastructure to facilitate free transmission of data and visuals for a television channel owned by Dayanidhi's elder brotherKalanithi Maran.

After retiring in June 2013, Mathivanan found that he was among the staffers who were penalized for an agitation against superiors, including those under whose names Maran was allotted 323 ISDN lines. Mathivanan is yet to receive his pension, but the fact that his actions helped expose a Rs 440-crore revenue loss to the PSU is a matter of his satisfaction.

'Feud in DMK exposed scam'

Today, the National Federation for Telecom Employees deputy general secretary says he was relieved when he heard the news that the CBI had filed an FIR in the case. His modesty does not permit him to take credit for it, though. "In fact, it was not I who exposed the scam. It got exposed because of the feud in the DMK," he told TOI.

According to him, Maran's exchange was secretly set up by the BSNL Chennai circle office in 2007. "I happened to see a file in which then general manager (operations) G Selvam had written that other than himself, chief general manager (CGM) and deputy general manager (operations), no one else should come to know about the 323 lines being provided at Maran's house. It was a state-of-the-art exchange, which was connected by just one pair of optical fibre cables. It could carry huge amount of data and visuals at very high speed," said Mathivanan.
After a preliminary probe, a CBI team had filed a report recommending action against Maran and senior BSNL officials. But the departmental nod remained elusive. The issue came back into focus after a PIL was filed in Supreme Court in 2012 seeking action against the former Union minister.

Trouble had started for the trade unionist in September 2011, when he, along with 100 colleagues, protested against former BSNL CGM MP Velusamy (in whose name the 323 lines were allotted) visiting BSNL Chennai circle headquarters after his retirement.

"We had information that he had visited CGM's office several times to destroy files pertaining to the secret exchange. The new CGM, A Subramaniam, acted with a vengeance against us. Seventy-eight people faced a break in their service. I was given the maximum penalty, which would have led to my dismissal or compulsory retirement. The next CGM allowed me to retire, but recommended a cut in my pension. BSNL CMD, however, did not accept the recommendation. The CMD referred the case back to the CGM for review and it is pending there," said Mathivanan.

His prayer to the CBI is that it should expand the scope of its investigation to find out whether such secret exchanges were set up in other parts of the country as well. "What BSNL has lost is huge money. It (Rs 440 crore) is adequate to pay minimum bonus to 2.89 lakh employees of BSNL for four years in a row. It should be recovered from Maran," Mathivanan said.


Tuesday, 1 October 2013

மாவட்ட நிர்வாகிகள்



செப்டம்பர் 29,30  தேதிகளில் ஈரோட்டில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்ட
புதிய நிர்வாகிகள்
தலைவர்
தோழர் G.குமார் STSO ஈரோடு
துணைத் தலைவர்கள்
தோழர் S.ரங்கனாதன்  TM உப்பார்டேம்
தோழர் M.ஆனந்தன் TM எக்ஸ்டர்ணல் ஈரோடு
தோழர் M.பிரகாசம் TM கொடுமுடி
செயலர்
தோழர் N.பழனிவேலு TM கோபி
துணைச் செயலர்கள்
தோழர் M.யாசின் அலிகான் TM உப்பார்டேம்
தோழர் V.நல்லுசாமி TM எண்ணமங்கலம்
தோழர் G.மௌனகுருசாமி TM பவானி
தோழர் A.நித்ய ஜெரால்டு  TTA டெலிபோன்பவன்
பொருளாளர்.
         தோழர் T.ராஜேந்திரன் SSSO GM அலுவலகம்
அமைப்புச் செயலர்கள்
தோழர் K.P.ஈஸ்வரன் TM சத்தி
தோழர் P.பாலசுப்ரமணியன் SRTOA GM அலுவலகம் தோழர் C.பாலகிருஷ்ணன் TM அலங்கியம்
தோழர் S.கோகுலகிருஷ்ணன்  RM GM அலுவலகம்

தோழர் K.சையத் மதார் TTA டெலிபோன்பவன் ஈரோடு தணிக்கையாளராக நியமிக்கப்பட்டார்.

மாநாட்டு படங்கள் தொடர்சி









மாவட்ட மாநாடு படங்கள்







Saturday, 14 September 2013

மாவட்ட மாநாடு அறிவிப்பு

NFTE –BSNL 

  ஈரோடு மாவட்டச் சங்கம் 

மாவட்ட மாநாடு அறிவிப்பு

07.09.2013


நமது மாவட்ட மாநாடு வரும் 29.09.2013 மற்றும் 30.09.2013 தேதிகளில் ஈரோடு ஆயிர வைசிய மண்டபத்தில் மாவட்டத் தலைவர் தோழர் K.ராஜமாணிக்கம் அவர்கள் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.


ஆய்படு பொருள்

செயல்பாட்டு அறிக்கை
வரவு செலவு கணக்கு
அமைப்பு நிலை
தீர்மானங்கள்
புதிய நிர்வாகிகள் தேர்வு

வாழ்த்துக்களுடன்,

G. குமார்
மாவட்டச் செயலர்.

நகல்:
கிளைச் செயலர்கள்
மாவட்டச் சங்க நிர்வாகிகள்
தோழர் R.பட்டாபிராமன், மாநிலச் செயலர்.

Thursday, 5 September 2013

நமது யோசனை ஏற்பு

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள வசதியாக [CUG] இணைப்புகள் வழங்கலாம் என்ற ஆலோசனையை ஈரோடு மாவட்டச் செயலர் தோழர் குமார் மாநில நிர்வாகத்திற்குத் தெரிவித்தார். தமிழ் மாநில தலைமைப் பொதுமேலாளர் அந்த யோசனையை ஏற்றுக் கொண்டுள்ளார். மகிழ்ச்சி. உத்திரவு வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம். இது போன்ற பல யோசனைகளை நிர்வாகத்திற்கு வழங்கிட அனைவரையும் வேண்டுகிறோம். 

Friday, 30 August 2013

இப்படி செய்தால் என்ன?

FOR KIND ATTENTION OF CGM BSNL TAMILNADU CIRCLE
Respected Sir,
Sub: Introduction of BSNL Employees Family CUG Scheme

We provide Postpaid/Prepaid mobile connections under CUG to various group of customers/companies. In Erode SSA Prepaid connections are being given to the family members of Police officials.

We request that Prepaid CUG connections may kindly be provided to the family members of our BSNL Employees as a goodwill measure to boost the morale of our employees and also to earn revenue for BSNL.

It is suggested that an amount of Rs 30 may be charged per connection to avail the CUG facility. However the administration can decide the CUG charges. However we request that the amount does not exceed Rs 50/- per month. The administration can decide the number of connections per employee and we suggest that the minimum number of connection per employee may fixed as three and maximum as five.

The following illustration is given for revenue. For example there are 1000 employees in Erode SSA. If we provide an average of four connections per employee the total number of connection arrives at 4000.
The following table will show the revenue.

Number of                       Revenue @ Rs 30       Revenue @ Rs 40       Revenue @ Rs 50
Connections                     per month                    per month                        per month
 4000                                1,20,000                        Rs 1,60,000                      2,00,000

We suggest that the existing connections and the new connections may be brought under CUG. It may be insisted that each BSNL Employee to get one new connection to avail this BSNL Employees family CUG.

(G.KUMAR)
STSO
MOBILE CUSTOMER CARE CENTRE

DISTRICT SECRETARY, NFTE BSL ERODE SSA

Wednesday, 14 August 2013

சேர்ந்து வாழ்வோம்!

எண்ணத்தில் விடுதலை
பேச்சில் நம்பிக்கை
இதயத்தில் பெருமை
ஆத்ம நேயத்துடன்
வாழ்த்துவோம்!
வாழ்க இந்தியா!

Tuesday, 30 July 2013

பல்லாண்டு வாழ்க!

31.07.2013 அன்று பணி நிறைவு பெற்று 
விடை பெறும் அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்
             திரு. S.துரைசாமி துணைக் கோட்ட அதிகாரி
             திரு. S.கதிர்வேல் துணைக் கோட்ட அதிகாரி
             தோழர் K.தியாகராஜன் SSS
             தோழர் A.முருகானந்தம் TTA
             தோழர் M.சின்னையன் Tech.Supr
             தோழர் M.ராஜூ-I TM

             தோழர் M.சிவானந்தம் TM

Wednesday, 17 July 2013

ஜூலை 18


1988 ஆம் ஆண்டு. லைன்ஸ்டாப் சங்கத்தின் மாநில மாநாடு கடலூரில் நடைபெற்றது. அந்த மாநாடு குறித்து திட்டமிட்டார் மாநிலச் செயலர் தோழர் ஜெகன். ஒரு வித்தியாசமான நிகழ்வுக்கான திட்டத்தினை அவர் கூறினார். அனைவரும் உடனடியாக ஏற்றனர்.

கடலூரில் மாநாடு சிறப்பாக துவங்கியது. மாநாட்டின் பின் திரை நிறவெறி ஆட்சிக்கு எதிராக போராடி தனது இளமைக் காலம் முழுவதையும் தனிமைச் சிறையில் கழித்த  தென் ஆப்பிரிக்க நாட்டின் காந்தி நெல்சன் மண்டேலாவின் உருவம் நிறைத்தது. மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் அவரின் உருவம் பொறித்த அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாநாட்டு நிகழ்வின் ஒரு பகுதியாக நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் ஜூலை 18 அன்று நடைபெற்றது.

நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கையில் ஒரு நிகழ்வு, தனக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் வாதாடுவது, நாடக வடிவில் நடித்துக் காட்டப்பட்டது.  நடித்தவன் ஒரு சிறுவன். அந்த நாடகத்தை வடிவமைத்து இயக்கியவர் திருச்சி தோழர் பால்சாமி மற்றும் அவர் குழுவினர்.  அந்நிகழ்வினை பார்த்தவர்கள்  நெகிழ்ந்து நெக்குறுகிப் போனார்கள். மாநாட்டில் நிறவெறி அரசுக்கு எதிராக போராடி சிறையில் இருக்கும் நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்யுமாறு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விடுதலைக்காகப் போராடும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சிக்கு நிதி திரட்டப்பட்டு அனுப்பப்பட்டது. 1990 இல் நெல்சன்  மண்டேலா 27 ஆண்டு சிறைவாசத்திலிருந்து  விடுதலை செய்யப்பட்டார். நாடு நிறவெறி ஆட்சியிலிருந்து மீண்டது. அந்நாட்டின் முதல் குடியரசு தலைவராக நெல்சன் மண்டேலா தேர்ந்தெடுக்கப்பட்டார். தான் தனது என்ற சிந்தனையிலிருந்து விடுபட்டு சக மனிதனின் விடுதலைக்காக போராடுவது குறித்த உணர்வை தொழிலாளிக்கு ஏற்படுத்தும் நிகழ்வாக அமைந்தது அந்நிகழ்வு.


தோழர் ஜெகனின் சீரிய சிந்தனையால் அன்று நாம் மட்டும் நமது சங்க மாநாட்டில் அவரது பிறந்த நாளை கொண்டாடினோம்.  இன்று ஜூலை 18. உலகம் முழுவதும் அவர் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது.

அன்று நிறவெறி ஆட்சிக்கு எதிராக போராடினார். இன்று தன்னை தாக்கும் நோய்க்கு எதிராக போராடிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

போராளிகளுக்கு ஓர் முன்னுதாரணம் நெல்சன் மண்டேலா. அவரது பிறந்த நாளில் மனம் நிறந்து வாழ்த்துவோம்! வாழிய பல்லாண்டு!!


Wednesday, 3 July 2013

ஒற்றுமை வெல்லும்

நெய்வேலி நிலக்கரி நிறுவன ஊழியர் சங்கங்கள் ஒன்றிணைந்து மத்திய அரசின் பொதுத்துறை பங்குகளை விற்கும் முடிவிற்கு எதிராக போராட்டத்தை துவக்குகின்றனர். ஒன்றுபட்ட போராட்டம் வெல்லும். 2000 செப்டம்பரில் நாம் போராடி அரசை பணிய வைத்தோம். 2013 இல் மத்திய அரசு பணிந்தாக வேண்டும். பணியும்.