NFTECHQ

Friday 31 March 2017

வாழ்த்துக்கள்

31/03/2017 அன்று பணிநிறைவு பெறும்
NFTCL
மாநிலப்பொருளரும்
அன்புணர்வு கொண்ட தோழனுமாகிய
தோழர்.E.சம்பத் 
அவர்களின் பணிநிறைவுக்காலம்
நலமானதாகவும்,
மகிழ்வானதாகவும்,
மற்றவர்களுக்குப் பயனுள்க்ளதாகவும்
பல்லாண்டு காலம் அமைய  

வாழ்த்துகிறோம்.
குறைகிறது விலைவாசிப்படி !

01.04.2017 முதல் விலைவாசிப்படி
2.3 சதம் குறைந்து

மொத்தம் 117.2 சதமாக மாறியுள்ளது.
வாழிய பல்லாண்டு

31.03.2016 அன்று பணி ஓய்வு பெறூம்
1. A.திரு சாமிதாஸ் DGM
2.K.H.அப்துல் காதர் DRAUGHTSMAN (விருப்ப ஓய்வு)
3. தோழர் M.ரங்காராம் OS
4. தோழர் M.துரைராஜ்  TT
5. தோழர் G.ஜெயராஜ் TT
6. தோழர் S.கந்தசாமி TT
7. தோழர் P.நடராஜன் TT
8. தோழர் K.ராமசாமி TT
9. தோழியர் M.ருக்மணி  TT
ஆகியோர் நலமுடனும்
மகிழ்வுடனும் மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ
மாவட்ட்ச் சங்கம்

சார்பாக வாழ்த்துகிறோம்.
மாண்பு காப்பாற்றப்படுமா?

BSNL அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்கள் 
DPE மற்றும் DOT இலாக்கா செயலர்களுக்கு கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 29/03/2017 அன்று கடிதம் எழுதியுள்ளன.

·                     3வது ஊதியக்குழுவில் BSNL நிறுவனத்திற்கு  செலவினம் மற்றும் இலாபம் என்ற நிபந்தனைகளில் இருந்து விலக்கு...
·                     அனைவருக்கும் 15 சத ஊதிய உயர்வு
·                     5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு
·                     ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத் திருத்தம்
·                     வாங்கும் சம்பளத்தில் ஓய்வூதியப் பங்களிப்பு
·                     ஒழுங்குபடுத்தப்பட்ட  ஆண்டு ஊதிய உயர்வு

இது காரைக்குடி மாவட்டச் சங்க இணைய தளத்தின் செய்தி.

இதன் மூலமான கடிதம் வேலூர் மாவட்ட இணையதளத்தில் ஆங்கிலத்தில் உள்ளது.  தலைவர்கள் கையொப்பமிட்ட கடிதமும் அந்த இணையதளத்தில் கண்டோம்.

பார்த்து, படித்தவுடன் கோபம் கொப்பளித்தது.
அனைத்து இயக்கங்களும் இணைந்து கோரிக்கை வைப்பது தவறல்ல. ஆனாலும் ....

நியாயமான உணர்வுகளின் அடிப்படையில் மத்திய சங்கத்துக்கு நமது கேள்விகள்.
1. நமது மத்திய் செயற்குழு அமைத்த ஊதிய மாற்றப் பேச்சு வார்த்தைக் குழு கூடியதா?
கூடி விவாத்திதா?
ஏதேனும் முடிவுகள் எடுத்ததா?
2. மத்திய செயற்குழு முடிவின் படி நமது கூட்டணிச் சங்கத் தலைவர்களோடு ஏதேனும் கலந்தாலோசனை நடைபெற்றதா?
3.DPE வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்துவதில் தவறில்லை. ஆனால் அதைத்தாண்டி பல்வேறு அம்சங்கள் கடிதத்தில் உள்ளன.
நமது இயக்கத்துக்குள், நமது குழு விவாதிக்காமல், நமது கூட்டணிச் சங்கக்ங்க்ளோடு விவாதிக்காமல் எப்படி வரையறுக்கப்பட்டது?

அடிப்படைச் சம்பளத்துடன் பஞ்சப்படி இணைப்பு மற்றும் 2000 ரூபாய் இடைக்கால நிவாரணம் எனற உழியர்களைக் கவ்விப்பிடிக்கும் சென்னைத் தொலைபேசி மாநிலச் சங்கத்தின் தீர்மானம் மத்திய செயற்குழுவில் எடுத்துரைக்கப்பட்ட பின்னும் அது சபையேறவில்லை.

மத்திய சங்கத்துக்கு வழிகாட்டும் மாண்பு பெற்ற தமிழ் மாநிலச் சங்கமும், ஊதிய மாற்றக்குழுவில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநிலச் செயலரும்
மத்திய சங்கத்தின் தவறுகளைச்
சுட்டிக்காட்டி சரி செய்வார்கள என நம்புகிறோம்.  



Wednesday 29 March 2017

இனிய
யுகாதித்
திருநாள்

நல்வாழ்த்துக்கள்

Friday 24 March 2017

கடைசி 12 மணி நேரம்

 

1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி... லாகூர் மத்தியச் சிறைச்சாலையின் விடியல், மற்ற நாட்களை போல இயல்பானதாக இல்லை. அன்று அதிகாலையிலேயே அங்கு ஒரு சோகப்புயல் நுழைந்து மையம் கொண்டது. அன்றைய மாலைப்பொழுதில், ஒரு வரலாற்று சோகம் நிறைவேறப்போகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.

லாகூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் 86-ஆவது நினைவு நாள் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட சூழலில், அவரது வாழ்க்கையின் கடைசி 12 மணி நேரத்தில் நிகழ்ந்தவை மற்றும் அவரது மறைவுக்கு பிறகு நாட்டில் மக்களிடையே ஏற்பட்ட உணர்ச்சி கொந்தளிப்புகள் ஆகியவை குறித்த ஒரு தொகுப்பு இது.
1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி.....
லாகூர் மத்தியச் சிறைச்சாலையின் விடியல், மற்ற நாட்களை போல இயல்பானதாக இல்லை. அன்று அதிகாலையிலேயே அங்கு ஒரு சோகப்புயல் நுழைந்து மையம் கொண்டது. அன்றைய மாலைப்பொழுதில், ஒரு வரலாற்று சோகம் நிறைவேறப்போகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.
அன்று மாலை நான்கு மணிக்கே சிறைக்கைதிகள் தங்கள் அறைகளுக்குள் அனுப்பப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அதற்கான காரணத்தையும் சிறை கண்காணிப்பாளர் கூறவில்லை.
மேலிடத்து உத்தரவு என்பதைத் தவிர வேறு எந்த காரணமும் கூறப்படவில்லை. இதன் பின்னால் ஏதோ விவகாரம் இருக்கிறது என்பது அனைவருக்கும் புரிந்தாலும், குழப்பமாகவே இருந்தது. பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூவரும் அன்று இரவு தூக்கிலிடப்படப்போவதாக சிறையில் முடி திருத்தும் பணியில் இருப்பவர் ஒவ்வொருவரின் அறைக்கும் வந்து தகவல் சொல்லிப்போனார்.
அனைவரையும் உலுக்கிப்போட்ட இந்தச் செய்தியால், சிறைச்சாலை மயான அமைதியில் மூழ்கியது. கலகம் ஏதும் ஏற்படக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையின் விளைவாகவே அனைவரும் விரைவாகவே அறைக்குள் அடைக்கப்பட்டது புரிந்தது. நிலைமையை மாற்றமுடியாது என்று உணர்ந்த கைதிகள், தாங்களும் பகத்சிங்குடன் சிறை வாழ்க்கையை கழித்தவர்கள் என்று பெருமையுடன் கூற ஆசைபட்டார்கள். பகத்சிங் பயன்படுத்திய பேனா, சீப்பு, கடிகாரம் போன்ற எதாவது ஒரு பொருள் கிடைத்தால், தங்கள் பேரப்பிள்ளைகளுக்கு காண்பிக்கலாம் என்று தெரிவித்தார்கள்.
பர்கத், பகத்சிங் அடைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று அவர் பயன்படுத்திய பேனா, சீப்பு போன்றவற்றை எடுத்துவந்தார். அதை எடுத்துக் கொள்வதற்காக கைதிகளுக்குள் போட்டா-போட்டி நிலவியது. இறுதியில் சீட்டுக் குலுக்கிப் போடப்பட்டு முடிவு செய்யப்பட்டது)
அதன்பிறகு மீண்டும் அமைதி திரும்பியது. இப்போது அறையில் இருந்து வெளியே செல்லும் பாதையின் மீது அனைவரின் கவனமும் குவிந்தது. தூக்கில் இடப்படுபவர்கள் அந்த வழியிலே தான் வெளியே செல்லவேண்டும்.
ஒரு முறை பகத்சிங் அந்த வழியாக செல்லும் போது பஞ்சாப் காங்கிரஸின் தலைவர் பீம்சேன் சச்சர் உரத்தக் குரலில் பகத்சிங்கிடம் கேட்டார், "நீயும், உன் நண்பர்களும், லாகூர் சதி வழக்கில், தவறு செய்யவில்லை என்று ஏன் நீதிமன்றத்தில் முறையிடவில்லை?" என்று கேட்டார்.
அதற்கு பகத்சிங்கின் பதில் என்ன தெரியுமா? "போராட்டக்காரர்கள் என்றாவது ஒரு நாள் இறந்துதான் ஆகவேண்டும், அவர்களின் உயிர்த் தியாகம்தான் அமைப்பை வலுவாக்கும். நீதிமன்றத்தில் முறையிடுவதால் மட்டுமே அமைப்பு ஒருபோதும் வலுவாகாது".
பகத் சிங்கிடம் அன்பு கொண்ட சிறை கண்காணிப்பாளர் சரத் சிங், தன்னால் முடிந்த உதவிகளை செய்துவந்தார். அவரின் உதவியால்தான் லாகூரின் துவாரகதாஸ் நூலகத்தில் இருந்து பகத்சிங்கிற்காக புத்தகங்கள் சிறைச்சாலைக்குள் வந்தது.
புத்தகப்பிரியர் பகத்சிங்
புத்தகப்பிரியரியரான பகத்சிங், தன்னுடைய பள்ளித்தோழர் ஜெய்தேவ் கபூருக்கு எழுதிய கடித்த்தில், கார்ல் லிப்னேக்கின் "மிலிட்ரியிசம்", லெனினின் "இடதுசாரி கம்யூனிசம்", அப்டன் சின்க்லேயரின் "தி ஸ்பை" (உளவாளி) ஆகிய புத்தகங்களை குல்வீரிடம் கொடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
பகத்சிங்கின் சிறை தண்டனை பாதி முடிந்துவிட்டது. அவருடைய செல் (அறை) எண் 14 -இன் தரை, புல் முளைத்த கட்டாந்தரை. ஐந்து அடி, பத்து அங்குல உயரம் கொண்ட பகத்சிங், படுக்கும் அளவிலான அறை அது.
பகத்சிங்கை தூக்கில் இடுவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு, அவருடைய வழக்கறிஞர் பிராண்நாத் மெஹ்தா சிறைக்கு வந்தார். அப்போது, கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கம் போன்று பகத்சிங் காணப்பட்டதாக பின்னர் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
பகத்சிங் புன்னகையுடன் மெஹ்தாவை வரவேற்று, "ரெவல்யூஷனரி லெனின்" புத்தகத்தை கொண்டு வரவில்லையா?" என்று கேட்டாராம்! அந்த புத்தகத்தை மெஹ்தா பகத்சிங்கிடம் கொடுத்ததும் அதை உடனே படிக்க தொடங்கிவிட்டாராம் பகத்சிங்! படிப்பதற்கு அவரிடம் அதிக நேரம் இல்லையே...
நாட்டிற்காக எதாவது செய்தி சொல்லுங்கள் என்று மெஹ்தா கேட்டதற்கு, புத்தகத்தில் இருந்து கண்ணை விலக்காமல் பகத்சிங் சொன்னது, "இரண்டு செய்திகள்... ஏகாதிபத்தியம் ஒழிக.... இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக)".
தன்னுடைய வழக்கில் அதிக அக்கறை செலுத்திய பண்டித ஜவஹர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திர போஸிடம் தனது வணக்கத்தை தெரிவிக்குமாறு, மெஹத்தாவை கேட்டுக்கொண்டார் பகத்சிங். பிறகு மெஹ்தா, ராஜ்குருவின் அறைக்கு சென்றார்.
"விரைவில் மீண்டும் சந்திப்போம்" -இதுதான் ராஜ்குருவின் கடைசி வார்த்தை. மெஹ்தாவிடம் பேசிய சுக்தேவ், தன்னை தூக்கில் போட்டபிறகு, சிறை அதிகாரியிடமிருந்து தான் பயன்படுத்திய கேரம்போர்டை வாங்கிக்கொள்ளுமாறு கூறினார். மெஹ்தா சில மாதங்களுக்கு முன்னதாகத்தான் அந்த கேரம்போர்டை வாங்கிக் கொடுத்திருந்தார்.
மெஹ்தா சென்ற பிறகு, குறிப்பிட்ட நேரத்திற்கு 12 மணி நேரம் முன்னதாகவே, அதாவது, அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு தூக்கில் போடுவதற்கு பதிலாக அன்று மாலை ஏழு மணிக்கே அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மெஹ்தா கொடுத்துச் சென்ற புத்தகத்தின் சில பக்கங்களை மட்டுமே பகத்சிங்கால் படிக்க முடிந்தது. இந்தப் புத்தகத்தின் ஓர் அத்தியாயத்தைக் கூட படிக்க விட மாட்டீர்களா? என்று அவர் சிறை அதிகாரியிடம் கேட்டாராம்.
தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள், சிறையில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றிவந்த பேபே என்ற இஸ்லாமியரின் வீட்டில் இருந்து உணவு கொண்டு வருமாறு பகத்சிங் கேட்டுக்கொண்டாராம்.
ஆனால் பகத்சிங்கின் கடைசி ஆசையை பேபேவால் நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில் 12 மணி நேரத்திற்கு முன்னதாகவே பகத்சிங் தூக்கிலிடப்பட்டார். சிறைக்குள் செல்ல பேபே அனுமதிக்கப்படவில்லை.
சுதந்திர கீதம்
சிறிது நேரத்திற்கு பிறகு, மூன்று புரட்சியாளர்களை தூக்குமேடைக்காக தயார் செய்வதற்காக வெளியே அழைத்து வந்தார்கள். அப்போது, பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவின் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், தங்களுக்கு விருப்பமான சுதந்திரப் பாடல்களை பாடத் தொடங்கினார்கள் -
அந்த நாளும் கண்டிப்பாக வரும்...
நாம் சுதந்திரம் அடையும் போது,
இந்த மண் நம்முடையதாக இருக்கும்
இந்த வானமும் நம்முடையதாக இருக்கும்... என்ற பொருள் கொண்ட பாடல்கள் அவை.
பிறகு ஒவ்வொருவரின் எடையும் பார்க்கப்பட்டு, குறிக்கப்பட்டது. அனைவரின் எடையும், முன்பு இருந்த்தை விட அதிகமாகியிருந்தது! இறுதிக் குளியலை மேற்கொள்ளலாம் என்று அவர்களிடம் கூறப்பட்டது. பிறகு கருப்பு உடை அணிவிக்கப்பட்டது, ஆனால், அவர்களுடைய முகம் மூடப்படவில்லை.
"வாயே குரு" என்ற சீக்கியர்களின் புனிதமான வார்த்தையை நினைவில் கொள்ளுமாறு சரத் சிங், பகத்சிங்கின் காதில் சொன்னார்.
தூக்கு மேடை
"என் வாழ்க்கை முழுவதும் நான் கடவுளை நினைக்கவில்லை. உண்மையில், ஏழைகளின் துயரங்களை பார்த்து, கடவுளை நான் திட்டியிருக்கிறேன். அவர்களிடம் இப்போது நான் மன்னிப்பு கேட்க நினைத்தால், என்னை விட பெரிய கோழை வேறு யாரும் இருக்கமுடியாது. இவனுடைய இறுதி காலம் வந்துவிட்டதால், மன்னிப்பு கேட்கிறான் என்று நினைப்பார்கள்" என்று பகத்சிங் கூறினார்,
சிறைச்சாலையின் கடிகாரம் ஆறு மணியை காட்டியதும், கைதிகளின் ஓலக்குரல் தொலைவில் இருந்து கேட்டது. அத்துடன் காலணிகளின் கனமான ஓசையும் ஒலித்தது. அத்துடன், பாடலும் கேட்டது.
"தியாகத்தின் ஆசையே எங்கள் இதயத்தில் உள்ளது" என்ற பொருள் கொண்ட பாடல் அது.
"இன்குலாப் ஜிந்தாபாத்" என்றும், "ஹிந்துஸ்தான் ஆஜாத் ஹோ" ("புரட்சி ஓங்குக", இந்தியா விடுதலை வேண்டும்") என்ற முழக்கங்கள் எழுந்தன. தூக்குக்கயிறு மிகவும் பழையதாகவும், வலுவிழந்தும் இருந்தது. ஆனால், தூக்கில் இடப்படுபவர்களோ மிகவும் பலமானவர்களாக இருந்தார்கள். தூக்கில் இடும் பணியை நிறைவேற்றுவதற்காக, லாகூரில் இருந்து சிறப்புப் பணியாளர் ஒருவர் வரவழைக்கப்பட்டிருந்தார்.
மூவரில் பகத்சிங் நடுநாயகமாக நின்றார். தனது தாயை மனதில் நினைத்துக்கொண்ட பகத்சிங், தூக்கில் இடப்படும்போதும் இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழங்கப்போவதாக அளித்த வாக்குறிதியை நிறைவேற்றவேண்டும் என்பதை நினைவுபடுத்திக் கொண்டார்.
லாகூர் மத்திய சிறைச்சாலை
லாகூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிண்டி தாஸ் சோந்தியின் வீட்டிற்கு அருகாமையில் தான் லாகூர் மத்திய சிறைச்சாலை இருந்தது. இன்குலாப் ஜிந்தாபாத் என்ற பகத்சிங்கின் உரத்த முழக்கம் சோந்தியின் காதுகளையும் எட்டியது.
பகத்சிங்கின் குரல் கொடுத்த உத்வேகத்தில், சிறைக் கைதிகளும் முழக்கங்களை எழுப்பினார்கள். மூன்று இளம் புரட்சியாளர்களின் கழுத்திலும் தூக்குக்கயிறு மாட்டப்பட்டது. அவர்களின் கைகளும் கால்களும் கட்டப்பட்டன. அப்போது தண்டனையை நிறைவேற்றுபவர் கேட்டார், "யாருக்கு முதலில் செல்ல விருப்பம்?".
சுக்தேவ் முதலில் செல்வதற்கு விருப்பம் தெரிவித்தார். ஒன்றன் பின் ஒன்றாக தூக்குக் கயிற்றை இழுத்து, அவர்களின் காலின் கீழ் இருந்த பலகையை அகற்றினார் தண்டனை நிறைவேற்றுபவர். தூக்கில் இடப்பட்ட புரட்சியாளர்களின் வீர உடல்களும் நீண்ட நேரத்திற்கு தொங்கிய நிலையிலேயே விடப்பட்டன.
இறுதியில் அவர்களை கீழே இறக்கியபோது, அங்கிருந்த மருத்துவர்கள், லெப்டிணென்ட் கர்னல் ஜே.ஜே.நெல்சன் மற்றும் லெபடிணென்ட் கர்னல் எம்.எஸ்.சோதி மூவரின் மரணத்தையும் உறுதி செய்தனர்.
இறுதிச் சடங்கு
இவர்களை தூக்கிலிட்டது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும், அங்கிருந்த ஒரு சிறை அதிகாரி மிகுந்த மனவேதனை அடைந்தார். மரணத்தை உறுதிப்படுத்துமாறு அவரிடம் கூறப்பட்டபோது, அவர் மறுத்துவிட்டார். பிறகு மற்றொரு இளைய அதிகாரிதான் மரணத்தை உறுதிப்படுத்தினார்.
இவர்களின் இறுதிச்சடங்குகள் சிறைச்சாலைக்குள்ளேயே செய்துவிடலாம் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், வெளியில் காத்திருக்கும் மக்கள் கூட்டம், இங்கு சிதை மூட்டப்பட்டு, புகை வெளிவந்ததுமே, சிறையை தாக்கக்கூடும் என்ற பேரச்சத்தின் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது.
எனவே, சிறையின் பின்புறச் சுவர் உடைக்கப்பட்டு, அந்த வழியாக டிரக் ஒன்று வரவழைக்கப்பட்டது. மிகவும் தரக்குறைவான முறையில், பொருட்களைப் போல வீரர்களின் உடல் டிரக்கில் ஏற்றி, கொண்டு செல்லப்பட்டது.
இறுதிச்சடங்குகள் ராவி நதிக்கரையில் நடத்தலாம் என்ற யோசனை, அங்கு நீர் குறைவாக இருந்ததால் கைவிடப்பட்டு, பிறகு சட்லஜ் நதிக்கரையில் சிதையூட்ட என்று முடிவு செய்யபட்டது.
லாகூரில் நோட்டீஸ்
புரட்சியாளர்களின் சடலங்கள் பிரேஜ்புர் அருகில் சட்லஜ் நதிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது இரவு பத்து மணி ஆகிவிட்ட்து. இதற்குள் காவல்துறை கண்காணிப்பாளர், சுதர்ஷன் சிங், கசூர் கிராமத்தில் இருந்து ஜக்தீஷ் என்ற பூசாரியை அழைத்துவந்துவிட்டார்.
சிதையூட்டப்பட்ட பிறகு, இது குறித்து மக்களுக்கு தகவல் தெரிந்துவிட்டது. மக்களின் கூட்டம் வெள்ளமென தங்களை நோக்கி வருவதைக் கண்ட பிரிட்டன் சேனைகள், சடலங்களை அப்படியே விட்டு, அங்கிருந்த தங்கள் வாகனங்களை நோக்கி ஓடினார்கள். மக்கள் கூட்டம் இரவு முழுவதும் சிதைகளை சுற்றி நின்றது.
பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு என மூவருக்கும் ஹிந்து மற்றும் சீக்கிய மத முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டதாக, அடுத்த நாள் காலை அருகில் இருந்த மாவட்ட நீதிபதியின் கையொப்பத்துடன், லாகூரின் எல்லா பகுதிகளிலும் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டன.
இந்த செய்தி மக்களின் மனதில் பெரும் எதிர்ப்பை எழுப்பியது. இறுதிச் சடங்குகள் செய்வது ஒருபுறம் இருக்கட்டும், அவர்களின் சடலங்கள் முழுமையாக எரிக்கப்படவில்லை என்று மக்கள் கோபக்கனலை கக்கினார்கள். இதை மாவட்ட நீதிபதி மறுத்தாலும், யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
புரட்சி வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் மூன்று மைல் தொலைவுக்கு பேரணி ஒன்று நடத்தப்பட்டது. எதிர்ப்பை காட்டும் வகையில் ஆண்கள் கருப்பு நிற பட்டைகளையும், பெண்கள் கருப்பு நிற உடைகளையும் அணிந்திருந்தார்கள்.
ஏறக்குறைய அனைவரும் கையில் கருப்புக் கொடியை ஏந்திய வண்ணம் ஊர்வலத்தில் கலந்துக் கொண்டார்கள் லாகூரின் மால் வழியாக சென்ற ஊர்வலம், அனார்கலி சந்தைப்பகுதியில் நடுவில் நின்றது.
அங்கு ஊர்வலம் நின்றதும் பேரமைதி நிலவியது. பகத்சிங்கின் குடும்பத்தினர், மூன்று மாவீரர்களின் எச்சங்களுடன் பிரோஜ்புரில் இருந்து வந்துவிட்டது தான் அதற்கு காரணம்.
மலர் தூவிய சவப்பெட்டிகள் அங்கு வந்ததும், மக்கள் கூட்டத்தின் உணர்ச்சிகள் கரை கடந்தன. அனைவரின் கண்களின் இருந்து கண்ணீர் பொங்க, கண்ணீரஞ்சலி நடந்தேறியது.
பிரிட்டன் சாம்ராஜ்யம்
"வீரர்களின் உடல் பாதி எரிந்த நிலையில், திறந்தவெளியில் தரையில் இருந்தது" என்பது பற்றிய செய்தியை அந்த இடத்தில் இருந்த பிரபல பத்திரிகையாளர் மெளலானா ஜபர் அலி வாசித்தார்.
அங்கே, சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் சரத் சிங் தளர்ந்த நடையில் தனது அறைக்கு சென்று, மனம் விட்டு கதறினார். அவருடைய முப்பதாண்டு பணிக்காலத்தில், நூற்றுக்கணக்கானவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றியிருந்தாலும், இது போன்ற தீரமிக்கவர்களுக்கு அவர் மரணதண்டனையை நிறைவேற்றியதே இல்லை என்பதுதான் அதற்கு காரணம்.
16 ஆண்டுகள் கழித்து பிரிட்டன் சாம்ராஜ்யம், இந்தியாவில் தனது ஆட்சியை முடித்துக்கொண்டு வெளியேறுவதற்கு இந்த நாளும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கும் என்பது அப்போது யாருக்கும் தெரியாது.

நன்றி இந்து தமிழ்
எழுந்தது காண் ஒற்றுமை

23.03.2017 அன்று மதுரை மற்றும் காரைக்குடி NFTE மாவட்டச் சங்கங்க்களின் இணைந்த மாவட்டச் செயற்குழு சிறப்போடும் எழுச்சியோடும் நடைபெற்றது.

அற்புதமான இந்த நிகழ்வில்
பங்க்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

இயக்கத்தின் நலன்,
இயக்கத்தின் ஒற்றுமை,
நிறுவனத்தின் நலன் காத்தல்
ஊழியர்களின் உரிமைகளைய பெறுதல் மற்றும் பாதுகாத்தல் போண்ற அம்சங்க்கள்  குறித்து தோழர் மதி ஆற்றிய சிறப்புரை மிகவும் பயனுள்ளதாகவும் காலத்துக்கு ஏற்றதாகவும் சிறப்பாக அமைந்தது.

ஊழியர்களின் மிக முக்கியமான பிரச்னைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி நல்ல பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன்.

மதுரை
மறுமலர்ச்சிக்கும்
மறுவளர்ச்சிக்கும்
வித்திட்டுள்ளது.

2019ல்
நாட்டுக்கும்
நமது இயக்கத்துக்கும்
நல்லது பல நடக்க
2017 மற்றும் 2018  
நிகழ்வுகளுமே
நிலைபாடுகளுமே
வழி வகுக்கும்.
அறிய வேண்டியதும்

புறிய வேண்டியதும் இதுவே.

Wednesday 22 March 2017

தோழர்  பகத்சிங்
நினைவு தினம்
மார்ச் 23
ஒரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல, அது ஒரு பாடமும் கூட. இன்றைய இந்தியாவில் எத்தனையோ இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் பகத்சிங் வாழ்க்கை போற்றத்தக்க ஒன்றாகும். விடுதலைப் போராட்ட உணர்வுகளை இளைஞர்கள் மனதில் விதைத்திட, தன் மரணத்தையே பரிசாகத் தந்த மாபெரும் போராளி. வாழ்வதன் மூலமாக மட்டுமல்லாமல், இறப்பதன் மூலமாகவும் ஒரு சகாப்தத்தினை உருவாக்க முடியும் என வாழ்ந்துக் காட்டியவர். அவர் வாழ்ந்த வாழ்க்கை காலம் குறுகியது என்றாலும் நூற்றாண்டுகளைக் கடந்து சுமந்து நிற்கும்.



மாவட்டச் செயற்குழு

நாள்
30.03.2016
காலம்
காலை 10 மணி
இடம்
கோபி தொலைபேசி நிலையம்

தலைமை
தோழர் P.பாலசுப்ரமணியன்
(மாவட்டத் தலைவர்)

ஆய்படு பொருள்

அமைப்பு நிலை
மாற்றல் கொள்கை அமலாக்கம்
மே 17-தோழர் ஜெகன் பிறந்த நாள் விழா மற்றும்
உதவும் உள்ளங்கள்  சார்பாக உதவிக் கரம் நீட்டும் நிகழ்வு
இன்ன பிற

வாழ்த்துரை
தோழர் N. புண்ணியகோட்டி
(மாநில அமைப்புச் செயலர்)

கிளைச்செயலர்கள் மற்றும்
 நிர்வாகிகள் காலத்தே
பங்கேற்க  வேண்டுகிறோம்.

தோழமை வாழ்த்துக்களுடன்
N.பழனிவேலு

மாவட்டச் செயலர்
உலக தண்ணீர் தினம்
மார்ச் 22
தண்ணீர் இன்றி தள்ளாடும் தமிழ்க்குடிமக்கள்.
தண்ணியாலும் தள்ளாடும் தமிழ்க்"குடி"மக்கள்
தண்ணீர் கொடு என்கிறது உச்சநீதிமன்றம்
தண்ணீர தரமுடியாது என்கிறது கர்நாடகம்
தண்ணீர் தந்தது ஆந்திரம்
தண்ணீர் பாதியிலேயே பாய்ந்தது மறுபக்கம்.
தண்ணீர் தற்போது இல்லை என்று சொல்லி விட்டது ஆந்திரம்
தண்ணீரைத் தடுக்கிறது கேரளம்.
தண்ணீருக்காக தவிக்கிறது தமிழகம்

தமிழகம் மட்டுமல்ல
புவி முழுமையும்
தண்ணீருக்குப் பஞ்சம்தான்.
மூன்றாவது உலகப் போர்
மூண்டால் அது
தண்ணீருக்காகத்தான் என்கின்றனர்
தண்ணீர் கேட்டாலும்
கன்னடத்தில் உள்ள
தமிழன் அடிவாங்குகிறான்
தண்ணீரைக்கொடுத்தாலும்
கன்னடத்தில் உள்ள
தமிழன் அடிவாங்குகிறான்
தண்ணீரைச் சேமியுங்க்கள்
என்பது மக்களுக்குபோதனை
தண்ணீர் இருந்தால்தானே சேமிக்க
தாமிரபரணித் தண்ணீரை
தனியாருக்குத் தாரை வார்ப்பதை
எதிர்த்து மக்கள் போராட்டம்
தாமிரபரணித் தண்ணீரை
தனியாருக்குத் தாரை வார்ப்பதை
சரி என்கிறது  உயர்நீதி மன்றம்.
ஆக
தண்ணீர் என்பது
தங்கத்தின் விலையைக் கூட தொடலாம்.
நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர்.
பணம் படைத்தவனுக்கு
எதற்கும் என்றைக்கும் பஞ்சமில்லை.
தண்ணீர் இல்லாவிட்டால் என்ன
பன்னீரைக் குடியுங்கள்
என்று கூட அறிவுரை வரலாம்

ஆளுவோரிடமிருந்து.

Tuesday 21 March 2017

தோழர் பகத்சிங்

நினைவேந்தல் விழா


தத்துக்குழந்தை விடுப்பு
CHILD ADOPTION LEAVE
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையை 
தத்து எடுத்து வளர்க்கும் 
பெண் ஊழியர்களுக்கும், 
ஆண் ஊழியர்களுக்கும் 
விடுப்பை அதிகரித்து BSNL நிர்வாகம் 
20/03/2017
அன்று உத்திரவிட்டுள்ளது.
பெண் ஊழியர்களுக்கு 
தற்போதுள்ள 135 நாள் விடுப்பு 
180
நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆண் ஊழியர்களுக்கு 15 நாட்கள் 
 PATERNITY LEAVE
தந்தையர் விடுப்பு அளிக்கப்படும்.
குழந்தையை தத்து எடுத்த 
ஆறு மாத காலத்திற்குள் 
தந்தையர் விடுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.
குழந்தை இல்லாதவர்களும், 
2
குழந்தைகளுக்கு குறைவாகப் பெற்றவர்களும் 
குழந்தையைத் தத்து எடுத்தால்

இந்த விடுப்புச் சலுகை உண்டு.

Wednesday 15 March 2017

கவன ஈர்ப்பு இயக்கம்

நாள்
16.03.2017

காலம்
பகல் 1.30 மணி

இடம்
பொது மேலாளர் அலுவலகம்

கோரிக்கைகள்

மத்திய அரசே
மூண்றாவது ஊதியமாற்றத்துக்கான DPE   வழிகாட்டுதலை உடபனே வெளியிடு

தனி செல் கோபுர நிறுவனத்தைத் துவக்காதே

BSNL நிறுவனத்தைத் விற்கும் முயற்சியை விட்டுவ்டு

தோழர்களே
தோழியர்களே


அனைவரும் வாரீர்

Tuesday 14 March 2017

தலித்களுக்கு மட்டும்

ஏன் மர்ம மரணங்கள்?


ரோஹித் வெமுலா,
சரவணன்,
முத்துகிருஷ்ணன்
மரணங்கள்.

இந்த மரணங்கள் முற்றுப்புள்ளிகள் அல்ல, கமாக்கள். "நீங்கள் படிக்க வந்தால் இப்படித்தான் சாவீங்கடா," என மத்திய கல்வி நிறுவனங்களை ஆதிக்கத்தில் வைத்திருக்கும் உயர்சாதி வெறியர்களின் எச்சரிக்கை.

ஊடகங்களில் மர்ம மரணங்கள் என்ற பெயரில் வெளியாகும் இச்செய்திகளை மர்ம மரணங்களாகவே மறந்துவிடுகிறோமே தவிர, அதெப்படி மர்ம மரணம் அடைகின்றவர்கள் எல்லோருமே தலித்களாக இருக்கிறார்கள்?

மர்ம மரணம் என்பதென்ன எப்போதும் தலித்துகளுக்கும், எப்போதாவது பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் மட்டும் வரும் அரிய வியாதியா?

பெரியாரும் அம்பேத்காரும் அரசியலுக்காக மட்டுமே போற்றப்படுபவர்கள் ஆகிவிடக் கூடாது.


அவர்கள் வழியில் நின்று போராடி இத்தகைய கொடுமைகளைத் தடுக்கவும், வேரறுக்கவும் அவர்கள் வகுத்த பாதை பயன்படுத்தப்பட வேண்டும்.
பிரிட்ஜோ

இளம் வயதில்
இன்னுயிரை இழந்தான்.
ஏழு நாட்கள்
ஏ சி பெட்டியில் இருந்தான்.
நேற்று மண்ணோடு கலந்தான்
மீன்களோடு வளர்ந்தான்.
மீன்களோடு வாழ்ந்தான்.
நஞ்சுள்ளம் கொண்ட
வஞ்ச்சகர்களால்
வாழ்வை இழந்தான்.
இவனின் இறப்பில்
ஆள்வோருக்கும் பங்குண்டு.
இயற்கைக்கு மனிதன் விளைத்த
இன்னலால் உருவான
பருவநிலை மாற்றத்துக்கும் பங்குண்டு.
பவளப் பாறைகள் அழிந்ததும்
மரணத்தின் ஒரு காரணியே.
இத்தகைய கொடுமையான இழப்பு

இத்தோடு நிற்கட்டும்
மார்ச் 14


மார்ச் 14.
மாபெரும் தத்துவம் தந்த
மார்க்ஸ் நினைவு தினம்.
எல்லாக் காலத்துக்கும்
ஏற்ற்தொரு தத்துவத்தை
ஏட்டில் வடித்துத தந்த
மார்க்ஸ் நினைவு தினம்.

உழைப்பாளிகளுக்கு
உற்றதொரு தத்துவம் தந்த
மார்க்ஸ் நினைவு தினம்.

அவரைப் படிப்போம்.
அவரது தத்துவத்தை படிப்போம்.
அதன் வழியில் பயணத்தைத் தொடர்வோம்.

Monday 13 March 2017

4ஜி சேவை தொடங்கும் பி.எஸ்.என்.எல்.!


வருகிற 2017-18 நிதியாண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் சுமார் 28,000 டவர்களை அமைத்து, 4ஜி சேவையை அறிமுகப்படுத்த பி.எஸ்.என்.எல். நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அரசு கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டுவரும் பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் நிறுவனம், டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு தொலைதொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் வருகையைத் தொடர்ந்து நாட்டில் 4ஜி பயன்பாடு அதிகரித்துவருவதால், பி.எஸ்.என்.எல். நிறுவனம்மும் 4ஜி சேவை வழங்க முடிவெடுத்துள்ளது. அதற்காக, நாடு முழுவதும் 4ஜி சேவை வழங்குவதற்கான செல்போன் டவர்களை அமைத்து தனது சேவையை விரிவுபடுத்தவுள்ளது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். நிறுவனத் தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘பி.எஸ்.என்.எல். நிறுவனம் 8ஆம் கட்ட விரிவாக்கத் திட்டத்தின்படி, அனைத்து 2ஜி டவர்களுக்கு மாற்றாக நவீன வசதிகளை உள்ளடக்கிய புதிய டவர்களை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த டவர்களைக் கொண்டு 3ஜி மற்றும் 4ஜி சேவைகளை வழங்க முடியும். மேலும் அடுத்த 2017-18 நிதியாண்டின் இறுதிக்குள் குறிப்பிட்ட சில பகுதிகளில் 4ஜி சேவையைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, 3ஜி அலைக்கற்றையின் ஒரு பகுதியை 4ஜி சேவைக்காக பயன்படுத்தும் திட்டமும் உள்ளது. இந்த டவர்கள் அமைக்கும் பணிகளில் ஐரோப்பாவைச் சேர்ந்த நோக்கியா, எரிக்ஸன் மற்றும் சீனாவின் இசட்.டி.. ஆகிய நிறுவனங்கள் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளன. இதில் குறைந்த டெண்டர் தொகை கோரும் நிறுவனத்துக்கு இந்த டவர் அமைக்கும் பணி ஒப்படைக்கப்படும். முதற்கட்டமாக மேற்கு மற்றும் தென் பகுதிகளிலும் பின்னர் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளிலும் பணிகள் மேற்கொள்ளப்படும்என்று கூறினார்.