NFTECHQ

Tuesday 28 February 2017

வாழிய பல்லாண்டு

28.02.2017 அன்று பணி ஓய்வு பெறும்
S.சின்னசாமி SDE
D.முரளீதரன் OS
V.கிருஷ்ணவேணி TT

ஆகியோர் நலமுடனும்
மகிழ்வுடனும் பல்லாண்டு

வாழ வாழ்த்துகிறோம்.
இராணுவ வேலைக்குமா?

27.02.2016 அன்று இராணுவத்துக்கு ஆள் எடுப்பதற்காக நாடு முழுமையும் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்கு தேர்வு மையங்க்களில் நடைபெற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


தேர்வுக்கான வினாத்தாள்கள் இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்றல் வாங்கல் நடந்ததே இந்த தேர்வு  ரத்துக்குக் காரணமாம்.
உலக தலைவர்கள்
எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள்

டொனால்டு டிரம்ப் தனக்கு வழங்கப்படும் 4,00,000 டாலர் சம்பளத்தை தவிர்த்துவிட்டு 1 டாலர் மட்டுமே ஊதியமாக பெறுகிறார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்ற டொனால்டு டிரம்ப் தனக்கு வழங்கப்படும் 4,00,000 டாலர் சம்பளத்தை தவிர்த்துவிட்டு 1 டாலர் மட்டுமே ஊதியமாக பெறுகிறார். ஆம், இது உன்மை தான்,

இதைப் பார்க்கும் போது உலக தலைவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரும். சம்பளம் மட்டும் இல்லாமல் ஜனாதிபதிகளும், பிரதமர்களும் வரி, இலவசம் என பல சலுகைகளை தங்களது பதவி காலத்தில் அனுபவிக்கின்றனர். இங்கு வழங்கப்பட்டுள்ள சம்பளம் 2015 ஆம் ஆண்டின் தரவின் படி வழங்கப்படிகிறது. இந் பராக் ஒபாமா

2016 ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா தன்னுடைய சம்பளமாக 4,00,000 டாலர்களைப் பெற்று வந்துள்ளார். இது இந்திய மதிப்பில் 2.72 கோடியாகும். ஜஸ்டின் ட்ரூடியோ

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ 2015 ஆம் ஆண்டு வரை 2,60,000 டாலர்கள் சம்பளமாக பெற்றுவந்துள்ளார். இது இந்திய மதிப்பில் 1.77 கோடி ரூபாய் ஆகும். அங்கேலா மேர்க்கெல்

ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் 2,34,400 டாலர்கள் சம்பளமாக பெறுகிறார். இது இந்திய மதிப்பில் 1.59 கோடி ரூபாய் ஆகும். ஜேக்கப் ஜுமா

தென் ஆப்ரிக்காவின் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா 2015 ஆம் ஆண்டு வரை 2,23,000 டாலர்கள் சம்பளமாக பெற்றுவந்துள்ளார் அதாவது இந்திய மதிப்பில் 1.51 கோடி ரூபாயாகும்.

ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே 2,03,000 டாலர்களை சம்பளமாக 2015 ஆண்டு வரை பெற்றுவந்துள்ளார் அதாவது இந்தியமதிப்பில் 1.38 கோடி ரூபாயாகும்.

துருக்கியின் ஜனாதிபதி ரிசிப் தயிப் எர்டோகன் 2015 ஆம் ஆண்டு வரை 1,97,000 கோடி சம்பளமாக பெற்றுவந்துள்ளார். இது இந்திய பதிப்பில் 1.3 கோடி ரூபாயாகும்.

பிரஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் 2015 ஆம் ஆண்டு வரை 1,94,000 டாலர் சம்பளமாக பெற்றுவந்துள்ளார். இது இந்திய மதிப்பில் 1.3 கோடி ரூபாயாகும்.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரேசா மேவின் சம்பளம் 1,78,250 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 1.2 கோடி ரூபாய்.

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டின் 1,36,000 டாலர் சம்பளமாக பெற்று வந்துள்ளார். இது இந்திய மதிப்பில் 92 லட்சம் ரூபாய் ஆகும்.

இத்தாலியின் பிரதம மந்திரி மடியோ ரென்சியும் 1,24,600 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 84 லட்சம் சம்பளமாக பெறுகிறார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 30,300 டாலர் சம்பளமாக பெறுகிறார். இந்திய மதிப்பில் 20.63 லட்சம் ஆகும்.


சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் 22,000 டாலர் சம்பளம் பெற்று வருகிறார் அதாவது இந்திய மதிப்பில் 14 லட்சம் ரூபாயாகும் 
சமத்துவம்
சமத்துவம் என்பது
சமமாக நடத்தப்படுவது அல்ல.
வாய்ப்புகளைப்

சமமாகப் பகிர்ந்துகொள்வது.
உடல்நலக் குறைவு,

அகன்ட அலைவரிசைக்கும் ஏற்ப்ட்ட அதேநிலை காரணமாக சில நாட்களாக செய்திகளைப் பகிர்ந்து கொள்ள இயலாமைக்கு வருந்துகிறோம்.
வங்கி ஊழியர் வேலைநிறுத்தம்

சீர்திருத்தம் என்ற பெயரிலே வங்கித்துறையை சீரழிக்கும்
மத்திய அரசின் முடிவை எதிர்த்து…
முதலைகள் முழுங்கிய வாராக்கடன்களை
முழுமையாக வசூல் செய்யக்கோரி…
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி….
பணமதிப்பிழப்பு பிரச்சினையின் போது… மணிக்கணக்காக
பணிபுரிந்தோருக்கு மதிப்பூதியம் வழங்கக்கோரி..

வங்கி ஊழியர்கள்
இன்று 28/02/2017 
ஒரு நாள் நாடு தழுவிய 
அடையாள வேலைநிறுத்தம்..
போராட்டம் வெற்றி

பெற வாழ்த்துக்கள்….

Friday 17 February 2017

ஆண்டுப் பேரவை
ஈரோடு மாவட்ட ஓய்வூதியரகளின் அனமைப்பின் ஆண்டுப் பேரவைக் கூட்டம் 18.02.2017 அன்று காலை 10 மணிக்கு ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெறவுள்ளது.

அனைவரும் வா
938 மதிப்பெண்ணுக்கு
மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு

NFTCL காரைக்குடி தமிழ் மாநில மாநாட்டில் ESI இணை இயக்குனர் உயர்திரு கணேசன் அவர்கள் பங்கேற்று ESI திட்டம் குறித்து மிக விரிவாக எடுத்துரைதார்.

ESI திட்டத்தில் இணைந்துள்ளவர்களுக்கு
மருத்துவ வசதி,
அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ வசதி,
பணியில் இருக்கும்போது விபத்து ஏற்பட்டல் கிடைக்கும் விடுப்பு மற்றும் மருத்துவ வசதிகள்,
பெண் ஊழியர்களுக்கு பேறு கால விடுப்பு மற்றும் மருத்துவ வசதிகள்,
மனைவியின் பிரசவ காலத்தில் கனவணுக்குக் கிடைக்கும் விடுப்பு,
என பல்வேறு திட்டங்கள் பற்றி மிக விரிவாக எடுத்துரைத்தார்.

அவர் கூறிய ஒரு செய்தி

"ESI திட்டத்தில் இணைந்துள்ள ஒரு தொழிலாளி என்னைச் சந்தித்து மிக்க நன்றி எனக் கூறினார். எதற்கு எனக் கேட்டேன். எனது பெண்ணுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது அதற்காகத்தான் என்றார். என்ன மதிப்பெண் என்று கேட்டேன். 938 என்று சொன்னார்."

அவர் மேலும் தனது உரையில் "938 மதிப்பெண் பெற்றவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பது சாத்தியமல்ல.
ESI திட்டத்தில் இணைந்துள்ளவர்களின் குழந்தைகளுக்கு 20 சத ஒதுக்கீடு உண்டு. அதனால்தான் அவருக்கு மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்தது" என்று கூறினார்.


ESI திட்டத்தில் உள்ள பல்வேறு திட்டங்க்களையும் வசதிகளையும் அவர் அழகு தமிழில் அருமையாக எடுத்துரைத்தார்.

Thursday 16 February 2017

உலக சாதணை
இந்திய விஞ்ஞானிகள் 
உலக சாதணை
104 வின்கலங்களோடு
இந்திய ஏவுகணை
கம்பீரமாக 
வின்னில்
சீறிப்பாய்ந்தது
நெஞ்சை நிமிர்த்தி.

வாழ்த்துக்கள்

இப்படிப்பட்ட இந்திய
அறிவியல் ஞானிகளின்
உலக சாதனையை  
எந்த் ஒரு தமிழ் ஊடகமும்
 தலைப்புச் செய்திகளில்  
முதல் செய்தியாகச்

சொல்லவில்லை
இப்படியும்
ஒரு அதிகாரி

காரைக்குடியில் நடைபெற்ற NFTCL மாநில மாநாட்டில் EPF மண்டல அதிகாரி
உயர்திரு சங்கரலிங்கம் அவர்கள் பங்கேற்றார்.

EPF திட்டம் குறித்து விரிவாகவும் தெளிவாகவும்
ஒப்பந்த ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் எளிதில் புரியும்படி
தாய்மொழியாம் தமிழ் மொழியில் எடுத்துரைத்தார்.

அதுமட்டுமல்லாது "நான் EPF விதிகள் குறித்து கூறினேன். சந்தேகங்கள், கேள்விகள் கேளுங்கள்" என தெரிவித்தார்.

ஒப்பந்த ஊழியர்கள் உட்பட பல் தோழர்கள் கேள்விகள் கேட்டனர்.

அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக,விளக்கமாக பதில் அளித்தார்.

அத்தோடு "EPF பிரச்னை சம்பந்தமாக என்னை எப்போதும் சந்திக்கலாம். நான் ப்ரச்னைகளைத் தீர்த்துத் தருகிறேன்" என்று கூறி தன்னுடைய தனிப்பட்ட தொலைபேசி எண்ணையும் அறிவித்து "நேரில் வர இயலாதவர்கள் "என்னை இந்த தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம"  எனவும் தெரிவித்தார்.


இப்படியும் ஒரு அதிகாரி இருக்கிறார் என்பது மனதுக்கு மகிழ்வைத் தருகிறது.
25,000 பேரின் வேலைக்கு 'ஆபத்து'..

அதிர்ச்சியில் இந்திய டெலிகாம் துறை..! 25,000 ஊழியர்களுக்கு 'பிங்க் சிலிப்'.. அதிர்ச்சியில் டெலிகாம் துறை.. இந்திய வர்த்தகச் சந்தையில் கடந்த 3 வருடத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் முக்கியமான ஒன்று டெலிகாம் துறை. இந்த வளர்ச்சியில் தானும் பங்குபெற வேண்டும் திட்டமிட்ட முகேஷ் அம்பானி, சில மாதங்களுக்கு முன்பு இந்திய சந்தையில் ஜியோ என்னும் பெயரில் டெலிகாம் சேவையை அறிமுகம் செய்தார். இது ஜியோ-விற்கு நன்மையாக இருந்தாலும் டெலிகாம் துறையில் இருக்கும் பல ஆயிரம் ஊழியர்களின் வேலைக்கு உலை வைத்துள்ளது. எப்படி..? ஜியோ அறிமுகம் ஜியோ-வின் அறிமுகத்திற்கு முன் இந்தியா டெலிகாம் சந்தை மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியது. ஆனால் இந்நிறுவனத்தின் இலவச ஆபர்கள் மற்றும் குறைந்த கட்டணங்கள் குறித்த எதிரொலிகள் சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளதை நாம் மறுக்க முடியாது.

அதிர்வுகளின் எதிரொலி ஜியோவின் அதிர்வுகளைக் கட்டுப்படுத்த நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஐடியா, வோடபோன் என அனைத்தும் தங்களின் சேவைக் கட்டணத்தை அதிகளவில் குறைத்தது. இதன் காரணமாக நிறுவனங்கள் தங்களின் லாபத்தையும், வருவாயை இழந்து தவித்து வந்தனர். புதிய வழி.. இந்நிலையில் நிறுவனங்கள் தங்களின் வர்த்தகம், வருவாய் மற்றும் வாடிக்கையாளர்களை இழக்கக் கூடாது என்பதற்காகவும் தற்போது அறிவித்திருக்கும் குறைக்கப்பட்ட கட்டணத்திலேயே சிறப்பான சேவையை அளிக்க வேண்டும் என்பதற்காகப் புதிய வழியைக் கையாண்டு வருகிறது.

இதன் மூலமாகவே டெலிகாம் துறையில் வேலைவாய்ப்பு இழப்பு எண்ணிக்கை அதிகரிக்து ஒட்டுமொத்த துறையே ஆடிப்போய் உள்ளது. இணைப்பு ஆம், ஜியோ அறிமுகத்திற்குப் பின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (அனில் அம்பானி) ஏர்செல் நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டம் இரு தரப்பிலும் ஒப்புதல் பெற்றது, அதைத் தொடர்ந்து டெலிகாம் துறையில் டாப் 5 இடங்களில் இருக்கும் வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தற்போது இணையப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

வேலைவாய்ப்புப் பாதிப்பு இந்திய டெலிகாம் நிறுவனங்களின் தொடர் இணைப்பால் இத்துறையில் வேலைவாய்ப்புகள் மீதான பாதிப்பு அதிகரித்துள்ளது. இணைப்பால் எப்படி வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படும் என்று நீங்கள் கேட்கலாம். 4 - 4.5 சதவீதம் இந்திய டெலிகாம் துறையில் 1.3 லட்சம் கோடி என்ற மொத்த வருமானத்தில் 35000 கோடி ரூபாய் ஊழியர்களின் சம்பளம் மற்றும் அவர்களுக்கான செலவுகள் மூலம் மட்டுமே இழந்து வருகிறது டெலிகாம் நிறுவனங்கள். இதிலும் விற்பனை மற்றும் விநியோக பிரிவில் மட்டும் அதிகப்படியான வருவானத்தை ஊழியர்கள் வாயிலாக இழந்து வருகிறது.

இந்நிலையில் டெலிகாம் நிறுவனங்களில் 22 சதவீத வருவாயும் இப்பிரிவில் இருந்து தான் வருகிறது.   செக் பாயின்ட் இத்தகைய சூழ்நிலையில், 22 சதவீத வருவாய் அளிக்கும் இப்பிரிவில் இருந்து வருவாய் அளவுகளை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது டெலிகாம் நிறுவனங்கள். இதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது நிறுவன இணைப்புகள். பொதுவாக இரு நிறுவனங்கள் இணைக்கப்பட்டால், அதிகச் சம்பளம் பெறும் ஊழியர்கள், தேவையற்ற ஊழியர்கள், ஆட்டோமேஷன், எனப் பல காரணங்களுக்காக ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள். இதே சூழ்நிலை தான் தற்போது டெலிகாம் துறையில் ஏற்பட்டுள்ளது.   25,000 வேலைவாய்ப்புகள் டெலிகாம் துறையின் முன்னணி நிறுவனத்தின்
மனித வள பிரிவின் உயர் அதிகாரி கூறுகையில், நிறுவன இணைப்புகளால் டெலிகாம் துறையில் குறைந்தபட்சம் 10,000 முதல் 25,000 வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட உள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்தச் சில வருடங்களில் 1 லட்சம் வரையில் கூட உயரலாம். மேலும் பல டெலிகாம் துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் வேலைவாய்ப்பு குறித்த ஆபத்தை உறுதி செய்துள்ளனர்.   3 லட்சம் வேலைவாய்ப்புகள் இந்திய டெலிகாம் துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3 லட்சம் பேர் பணியில் உள்ள இந்நிலையில் நிறுவன இணைப்புகள் மூலம் அடுத்த 18 மாதத்தில் இத்துறையில் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவது கண் முன்னே தெரியும் என்று சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊழியர்கள் எண்ணிக்கை
ஏர்டெல் - 19,048
ஐடியா - 17,000
வோடபோன் - 13,000
ஏர்செல் - 8,000
ஆர்காம் - 7,500
டாடா டெலிகாம் - 5,500
இவை அனைத்தும் நேரடி வேலைவாய்ப்பைப் பெற்றவர்கள்.
நன்றி பிசினஸ் ஸ்டேண்டர்டு

"ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றவர்கள் ஆட்சியில்தான் இந்த அவலம்.


இப்படிப்பட்ட அவலங்களைத் துடைத்தெறிந்து ஊழியர் நலன் காக்க அகில இந்திய அளவில் ஒரு இயக்கம் காண வேண்டுமென AITUC தலைமை கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் உருவானதே NFTCL..

Monday 13 February 2017


NFTECL
காரைக்குடி மாநில மாநாட்டுத் தீர்மனங்கள்
 உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் 
கிடைக்கசட்டப்படியான நடவடிக்கையினை 
சம்மேளத்தின் மூலம் எடுக்கவேண்டும்.

மத்திய அரசு 19.01.2017 ல் வெளியிட்ட குறைந்தபட்ச ஊதியத்தை அன்றைய தேதியிலிருந்தே அமல்படுத்த வழிவகை 
செய்யவேண்டும்.

அனைத்து பகுதிநேர ஒப்பந்த தொழிலாளர்களுக்கும்
8 
மணி நேர வேலையை உத்திரவாதம் செய்திடல் வேண்டும்.

மாதம் 30 நாட்களும் சம்பளம் வழங்கிட வேண்டும்.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஈட்டிய விடுப்பு EL,
தற்செயல் விடுப்பு CL வழங்கிட வேண்டும்.

சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்கிட வேண்டும்.

பண்டிகை காலங்களுக்கு ஊதியத்துடன் கூடிய
சம்பளம் வழங்கி வேண்டும்.

BSNL முத்திரையுடன் கூடிய அடையாள அட்டையை அனைவருக்கும்உடனடியாக
வழங்கிட வேண்டும்.

ஒரு மாத சம்பளத்தை போனஸ் தொகையாக ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு முன்பே வழங்க உறுதி செய்யவேண்டும்.

ஒப்பந்ததாரர் மூலம் EPF மற்றும் ESI பிடித்தம் உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய சம்பளப் பட்டியல் 
அளிக்கவேண்டும்.

தொழிலாளர்களை UNSKILLED, SEMI SKILLED, SKILLED  எனத்தரம்பிரித்து உரிய ஊதியத்தைப் பெற வகை செய்தல் வேண்டும்.

ESI விதிகளின்படி பகுதிநேர ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் அனைத்து ஊர்களிலும்மருத்துவ ஈட்டுறுதி திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும்.

பகுதிநேர ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் EPF திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும்

மாதந்தோறும் ஊழியர்களின் பெயர் மற்றும் UAN எண்ணுடன் கூடிய EPF பிடித்த விவரப்பட்டியலை அலுவலகத்
தகவல் பலகையில் தெரிவிக்க வேண்டும்.


அனைவருக்கும் ஆயுள்  குழுக்காப்பீட்டுத்திட்டத்தை நிர்வாகம்
ஒப்பந்ததாரர் மூலம் ஏற்படுத்தி தர வேண்டும். 
NFTCL மாநிலச்சங்க
புதிய நிர்வாகிகள்

தலைவர் : தோழர். V.பாபு - TT – சென்னை

செயல்தலைவர் : தோழர்V.மாரி - AO –                                          காரைக்குடி

உதவித்தலைவர்கள் :
தோழர். R.கணபதிராமன் – OS - அம்பாசமுத்திரம்
தோழர். L. அன்பழகன் – OS- கடலூர்
தோழர். கவின்ராஜ் – CLR - திருச்சி
தோழர். G.குமார் – Rtd OS - ஈரோடு
தோழர். R.வேதகிரி – சென்னை
தோழர். முருகேசன் – TT - திருவள்ளூர்

செயலர் : தோழர். S.ஆனந்தன் – JE - கடலூர்

உதவிச்செயலர்கள்:
தோழர். U.பாலசுப்பிரமணியன் – TT - அறந்தாங்கி
தோழர் A.சேகர் – TT - திருவாரூர்
தோழர் நாகையா – JE -  சென்னை
தோழர் R.மாரிமுத்து – CLR - காரைக்குடி
தோழர் M.வெற்றிச்செல்வன் – TT - சென்னை
தோழர் R.ரவி - விழுப்புரம்
தோழர் தயாளன் – CLR – சென்னை

பொருளர்: தோழர்.சம்பத் – OS – சென்னை

உதவிப்பொருளர்: தோழர்.V.இரத்தினம் – TT - சென்னை

அமைப்புச்செயலர்கள்:
தோழர். S.ஆறுமுகம் – தஞ்சை
தோழர். ரூபன்தாஸ் – CLR - சென்னை
தோழர். மாரியப்பன் – CLR - நெல்லை
தோழர். பன்னீர்செல்வம் – தூத்துக்குடி
தோழர். மதிவாணன் – CLR - கடலூர்
தோழர். வில்லியம் ஹென்றி – JE - திருச்சி
தோழர். T.பொய்யாதப்பன் – CLR – சென்னை

தணிக்கையாளர்:தோழர்.P.சங்கிலி DGM(FINANCE) –                                                               சென்னை.

ஒப்பந்த ஊழியர்கள் வாழ்வில் ஏற்றம் பெறும் வகையில் ப்திய நிர்வாகிகள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்
மத்திய செயற்குழு

நமது பேரியக்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் பிப்ரவர் 13,14 தேதிகளில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெறுகிறது.

நமது துறையும்,
ஊழியர்களும்  பயனுறும் வகையில்
நலல பல முடிவுகளூடன்
மத்திய செயற்குழு சிறக்க

வாழ்த்துகிறோம்.
NFTCL
காரைக்குடி மாநில மாநாட்டு நிகழ்வுகள்


NFTCL தேசிய தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க
தமிழக முதல் மாநில மாநாடு
காரைக்குடியில் பிப்ரவரி 11, 12 தேதிகளில் மிகச்சிறப்பாக நடந்தேறியது.

11.02.2017 அன்று மாலை வாழ்த்துரை நிகழ்ச்சியுடன் மாநாடு துவங்கியது.
மாநில செயல் தலைவர் தோழர்.மாலி தலைமை ஏற்றார்.
வரவேற்புக்குழுப் பொதுச்செயலர் தோழர் சி.முருகன் வரவேற்புரையாற்றினார். 
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் T.வெள்ளையன்,
தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் சங்கப் பொதுச்செயலர் தோழர் J.லட்சுமணன், 
NFTE சம்மேளனச்செயலர் தோழர் T.R.ராஜசேகரன்,
NFTCL சம்மேளன உதவிச்செயலர் தோழர் L.சுப்பராயன்,
முன்னாள் NFTE மாநிலப்பொருளாளர் தோழர் K.அசோக்ராஜன்,
BSNL துணைப் பொதுமேலாளர்(நிதி) தோழர்.P.சங்கிலி,
NFTE திருச்சி மாவட்டச் செயலர் தோழர் எஸ்.பழனியப்பன்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டின் ஒரு பகுதியாக
ருஷ்ய புரட்சியின் நூற்றாண்டு விழா  பாட்டாளி வர்க்க கடமைகள்
என்ற தலைப்பில் கருத்தரங்கு
NFTCL-ன் அகில இந்திய பொதுச்செயலர் தோழர் C.K.மதிவாணன்
தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
சிவகங்கை மாவட்டச் செயலர் தோழர் எஸ்,குணசேகரன்,
AITUC மாநில துணைப் பொதுச்செயலர் (உள்ளாட்சி)
தோழர் P.L.இராமச்சந்திரன்..
NFTE சம்மேளனச் செயலர் தோழர் G.ஜெயராமன்,
NFTE தேசிய செயற்குழு உறுப்பினர் தோழர் K.M. இளங்கோவன்
ஆகியோர் பங்கேற்று கருத்துரையாற்றினர்.
12.02.17 அன்று காலை 9 மணிக்கு
மாநாட்டில் பங்கேற்ற ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள்
மாநாட்டு அரங்கிலிருந்து மிக்க எழுச்சியுடன்…
தோழர்.C.K.மதிவாணன் அவர்கள் தலைமையில்
ஊர்வலமாகச் சென்று தந்தைப்பெரியார் சிலைக்கு
மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மாநாட்டு அரங்கில்..
தேசியக்கொடியினை AITUC தலைவர் தோழர் P.L.இராமச்சந்திரனும்,
சங்கக் கொடியினை NFTCL மாநிலச் செயலர்
தோழர் S.ஆனந்தனும் உணர்வோடு உற்சாகமோடு ஏற்றுவித்தனர்.
நாடி நரம்புகள் புடைக்க… உணர்ச்சி மிகு கோஷங்களை
மூத்த தோழர்.நாகேஸ்வரன் முழங்கினார்….
மறைந்த தோழர்களின் நினைவுகளைப் போற்றி..
தோழர் பூபதி தலைமையில் தியாக தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வரவேற்புக்குழுவின் சார்பாக தோழர்.மாரி வரவேற்புரையாற்றினார்.
மாநாட்டினை துவக்கி வைத்து
தமிழ்நாடு AITUC கட்டிடத்தொழிலாளர் சங்கப் பொதுச்செயலர்
தோழர் கே.ரவி அருமையானதொரு உரையாற்றினார்.
மண்டல வைப்புநிதி ஆணையர் திரு.சங்கரலிங்கம்,
EPF திட்டங்களின் அம்சங்கள் குறித்து உரையாற்றினார்.
தோழர்களின் சந்தேகங்களுக்கு
பொறுமையாக அருமையாக விளக்கவுரையாற்றினார்.
ESI துணை இயக்குனர் G.கணேசன்
ESI மருத்துவ வசதிகள் பற்றி மிக மிக விரிவாக விளக்கிப் பேசினார். 
தொழிலாளர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் அயராது விளக்கமளித்தார்.

மாநாட்டில் செயல்பாட்டு அறிக்கை வாசிக்கப்பட்டு
விவாதிக்கப்பட்டு முழுமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
NFTE காரைக்குடி மாவட்டச் செயலர் தோழர் V.மாரி,
மாநிலச் செயலர் தோழர் ஆனந்தன்,
மாநிலப் பொருளாளர் V. பாபு, ஆகியோர் கருத்துரையாற்றினர்.
NFTCL அகில இந்தியப் பொதுச்செயலர்
தோழர் C.K.மதிவாணன் சிறப்புரையாற்றினார்.
சமவேலைக்கு சம சம்பளம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து
AITUC அகில இந்திய செயல் தலைவர் தோழர் H.மகாதேவன் அவர்கள்
மிக விரிவாக எளிமையாக தோழர்களுக்கு விளக்கி சிறப்புரையாற்றினார்.
ஒப்பந்த ஊழியர்களும் அமைப்பு நிலை விவாதத்தில் பங்கேற்று அவர்களின் பிரச்னைகளை எடுத்துரைக்கும் வாய்ப்பு தரப்பட்டது. அந்த வாய்ப்பைப் அந்த தோழர்கள் பயன்படுத்தி தங்களின்  பிரச்னைகளைய் தெரிவித்தனர்.
எடுத்த பணியை
கொடுத்த பணியை
கண் துஞ்ச்சாது
மண்ணுக்கே உரிய மகத்துவத்தோடு
நம்பிக்கையோடு வருகை தந்த
ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஊழியர்களின்
மனங்களில் தன்னம்பிக்கையை விதைக்கும் வகையில்
எழுச்சியோடும்
சிறப்போடும்
மனதுக்கு மட்டுமல்லாது
வயிற்றுக்கும் நிறைவான முறையில் 
நீடித்து நிலைக்கப் போகும் ப்கழ்
மிக்க மாநாடை நடத்திய தோழர்கள் மாரி, முருகன் வழிகாட்டுதலில்
மாநாட்டை நடத்திட்ட காரைக்குடி தோழர்களை
மனதாரப் பாராட்டுகிறோம்.