NFTECHQ

Wednesday 31 August 2016

செப்டம்பர் 2
வேலைநிறுத்தம்

கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
தேசத்தின் நலன் காத்திட
தேசத்தின் வளம் காத்திட
தேசத்து  மக்களின் எதிர்கால
வாழ்வு இருள் படியாமல்
காத்திட
உழைக்கும் வர்க்கத்தின்
உரிமைகள் காத்திட
பொத்துத்துறை நிறுவனங்களை
எவரும் பொறுக்கித் தின்று விடாமல்
பொத்திப் போற்றிக் காத்திட
நாடு தழுவிய வேலை நிறுத்தம்.
02.09.2016
அனைவரும்
பங்க்கேற்று
ஆளுவோருக்கு எச்சரிக்கை

விடுக்க வேண்டுகிறோம்.

Tuesday 30 August 2016

செய்திகள்
இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் உயர்நிலையை   அடைந்த்தது.
---------------------------------------------------------------------------------
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் மருத்துவ உதவி மறுக்கப்பட்ட அலட்சியத்தினால் 12 வயது சிறுவன் தந்தையின் தோள்களிலேயே பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.

மருத்துவமனைகளின் அலட்சியம், மற்றும் போதிய மருத்துவ வசதியின்மை விவகாரம் சிலகாலமாக செய்திகளில் அடிபட்டு வந்தன. இந்நிலையில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் மருத்துவமனைகளின் அலட்சியப் போக்கிற்கு இன்னொரு வெளிப்படையான சாட்சியமாக விளங்குகிறது.

கான்பூர் பஸால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஆன்ஷ் என்ற 12 வயது சிறுவன் மேலதிக காய்ச்சல் காரணமாக லாலா லஜ்பத் ராய் மருத்துவமனையில் திங்களன்று சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிறுவனை அனுமதிக்க மறுத்துள்ளது லாலா லஜ்பத் ராய் மருத்துவமனை நிர்வாகம். அனுமதி மறுத்ததோடு, அருகில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு கைவிரித்துள்ளது.

மேலும் குழந்தைகள் மருத்துவமனைக்கு உடனடியாக எடுத்துச் செல்ல இந்த மருத்துவமனை எந்த ஒரு வாகன வசதியும் செய்து தரவில்லை. இதனையடுத்து தந்தை சுனில் குமார், தனது மகனை தோள்களில் சுமந்தபடியே ஹாலெட் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
 

ஆனால் ஹாலெட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் ஆன்ஷ் உயிர்பிரிந்தது.
 

இந்தச் சம்பவம் குறித்து தந்தை சுனில் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறும்போது, “எனது மகனுக்கு பயங்கர காய்ச்சல். ஆன்ஷ் 6-ம் வகுப்பு படித்து வந்தான், படிப்பில் கெட்டிக்காரன். பயங்கர காய்ச்சலில் வீழ்ந்தான். நான் மருத்துவர்களிடம் அவசர சிகிச்சை தேவை என்று மன்றாடினேன். அவர்கள் 30 நிமிடங்கள் என்னை காக்க வைத்து ஒன்றுமே கூறாமல் அதன் பிறகு குழந்தைகள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல கூறினர். ஆனால் அங்கு மருத்துவமனையில் என் மகன் இறந்து விட்டான் என்று கூறினர்” என்றார் கண்ணீரை அடக்க முடியாமல்.
 

ஒடிசாவில் இறந்த மனைவியின் உடலை பல கிலோ மீட்டர்கள் தூரம் கணவன் தூக்கிச் சென்ற அவல, துயரச் சம்பவத்திற்குப் பிறகு தற்போது சிகிச்சை மறுக்கப்பட்ட சிறுவன் தந்தையின் தோளிலேயே உயிரை விட்டது பெரும் துயரத்தை  ஏற்படுத்தியுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------
பங்குச் சந்தையில்
வர்த்தகம் குறைந்தால்
பதை பதைத்துப் போகிறது
ஆளும் வர்க்கம்.
ஆனால் மனித உயிர்களைப்
பற்றி மயிரிழை கூட அகக்றை
காட்டாத நிலை.


எல்லாம் மாறும்
கண்ணீர் அஞ்சலி

தேசிய தபால் தந்தி தொழிலாளர் சம்மேளனத்தின் (NFPTE) துவக்க காலத் தலைவர்களில் ஒருவரான தோழர் C.M.N.நம்பீசன்
காலமானார்.

அவருக்கு வயது 94. தோழர் குப்தாவுடன் இணைந்து பணியாற்றியவர் தோழர் நம்பீசன்.


அவரது மறிவுக்கு நமது கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறோம்.

Friday 26 August 2016

26.08.2016 அன்று
மாவட்ட மாநாட்டில்
ஒரு மனதாகத்  தேர்வு செய்யப்பட்ட
புதிய நிர்வாகிகள்

தலைவர்
தோழர் P.பாலசுப்ரமணியன்  OS
பொதுமேலாளர் அலுவலகம் ஈரோடு

உதவித் தலைவர்கள்
தோழர் C.பாலகிருஷ்ணான் TT
தாராபுரம்
தோழர் D.மாரிக்கன்னு TT
கவிந்தப்பாடி
தோழர் M.சுப்ரமணியம் OS
பொதுமேலாளர் அலுவலகம் ஈரோடு

செயலர்
தோழர் N.பழனிவேலு TT
கோபி

உதவிச் செயலர்கள்
தோழர் V.நல்லுசாமி TT
அந்தியூர்
தோழர் M.நாகராஜன் TT
11th     மைல்
தோழர் P.செக்வராஜ் JE

கோபி
தோழர் A.முருகதாஸ் TT
டெலிபோன் பவன்  ஈரோடு
தோழர் R.குணசேகரன் TT
 பாப்பினி

பொருளர்
G.மெள்னகுருசாமி JE
விஜயமங்கலம்

அமைப்புச் செயலர்கள்

G.செள்ந்த்ரராஜூ TT
எக்ஸ்டர்னல் ஈரோடு
K.மாதேஸ்வரன் JE
அரச்சலூர்
K.P.ஈஸ்வரன் TT
சத்தி
S.முருகேசன் TT
கொடுமுடி


தோழியர் B.லலிதா  OS டெலிபோன்பவன் ஈரோடு தணிக்கையாளராக நியமிக்கப்பட்டர்.

Sunday 21 August 2016

மாவட்ட மாநாடு
25.08.2016 மற்றும் 26.08.2016
இடம்
நகர அயிர வைசியர் திருமன மண்டபம்
ஈரோடு

மாவட்ட மாநாடு
சேவைக் கருத்தரபங்கு
உதவும் உள்ள்ங்கள் NFTE BSNL ஈரோடு மாவட்டம் சார்பாக உதவி வழங்க்கும் விழா

இயக்கம் வளர்த்த தலைவர்கள்
இயக்கம் வளர்க்கும் தலைவர்கள்
பங்கேற்பு

மாநாட்டில் பங்கேற்போம்.
மாபெரும் இயக்கத்தின்
மாண்பையும்
புகழையும் காப்போம்.

இயக்கமும்
இயக்கத்தின் வளர்ரச்சியும்
இயக்கத்தின் செம்மையான செயல்பாடும்
மேன்மேலும் சிறந்திட
திட்டமிடுவோம்.


வாரீர் வாரீர்
நல்ல முடிவு
உல்லாசமாய் என்ற தலைப்பில்
ஒரு செய்தி வெளிடயிட்டிருந்தோம்.

மாற்றல் உத்தரவு வெளியிட்டால்
சம்பந்தப்பட்டவர்களை
உடனடியாக
விடுவிக்க வேண்டும்.

அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள்
அப்பகுதியில் பணியில் இணைய தரும்
JOINING REPORT ஐ
சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தப் பணிகளைச்
சரிவர அமல்படுத்தத் தவறும்
அதிகாரிகள் மீது
ஒழுங்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று
பொது மேலாளரே கையெழுத்திட்டு உத்தரவிட்டுள்ளார்.

நல்ல முடிவு.

வரவேற்கிறோம்.

Saturday 20 August 2016


24.08.2016
போனஸ் கமிட்டி கூட்டம்.

இந்த முறை
போன்ஸ் பெற்றுத்
தரவில்லையென்றால்
வரலாறும் மன்னிக்காது.

வாக்களித்தவர்களும்

மன்னிக்க மாட்டார்கள்.

Thursday 18 August 2016

உல்லாசமாய்..

பொதுமேலாளர் (GM ) வெளியிடும்
உத்தரவுகள் உல்லாசமாக ஓய்வெடுத்து
உறங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த உத்தரவுகளை
ஒரு துணைப்பொதுமேலாளர்
(DGM) மதிப்பயதில்லை.

ஒரு உதவிப் பொதுமேலாளர் (AGM) மதிப்பதேயில்லை.

ஒரு துணைப்பொதுமேலாளர்  (DGM)
சொல்வதை ஒரு துணைக் கோட்ட அதிகாரி (SDE) மதிப்பதில்லை.
ஏனெனில் பொதுமேலாளர் உத்தரவை மதிக்காதவர்தான் அந்த உதவிப் பொது மேலாள்ர்.
ஆனால் அந்த துணைக்கோட்ட அதிகாரியோ பணி நேரத்தில் உறங்க்குவதறகு பாற்கடலில் உறங்கும் பரந்தாமனிடம் அனுமதி பெற்றுள்ளார்.

பொதுமேலாளரின்
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு
என நம்புகிறோம்.


நமது பொறுமைக்கு
 எல்லை 31.08.2016

Sunday 14 August 2016

சுதந்திர தினம்-70




அகிம்சையோடும்,
கத்தியோடும்,
இரத்தத்தோடும்,
சுதந்திர தேவி
பிறந்த நாள்
ஆகஸ்ட் 15.

காவிகளுக்கும்
கார்ப்பரேட்டுகளுக்கும்
பூர்ண சுதந்திரம்
பூத்துக் குலுங்குகிறது.

வறுமைக்கு இங்கே
கோடுண்டு.
வயிற்றுப் பசியால்
 வாடுவோரும் உண்டு.

ஆயிரம் ஜாதிகள் இங்குண்டு.
ஜாதியின் பெயரால்
சாவோரும் உண்டு.
சாகடிப்பவரும் உண்டு.

ஆனாலும்...
நம் நாடு பெருமை மிக்கது.
சுதந்திரக் காற்றை

சுகமாகச்
சுவாசிக்கும் உரிமை உண்டு.

விடுதலை தந்த
தியாகிகளை வனங்குவோம்.
நாட்டை நேசிப்போம்.
மக்களை நேசிப்போம்.
தாய் மண்னை வனங்குவோம்.
அனைவருக்கும்
இனிய சுதந்திரத்
 திருநாள் வாழ்த்துக்கள்

Friday 12 August 2016

"நான் வந்துட்டேண்டா"

ஆகஸ்ட் 15.
ஆண்டவர்களைத் துரத்திய நாள்.
ஆளும் உரிமை பெற்றிட்ட நாள்.

நமது தேசத்தின்
எழுபதாவது விடுதலைத் திருநாள்.

இந்த நாள்..
நமது BSNL நிறுவனம் "நான் வந்துட்டேண்டா" பாணியில் ஒரு அதிரடித் திட்டத்தை அறிவித்துள்ளது.

ஒவ்வொரு வாரமும்
சனிக்கிழமை இரவு 9 மணி முதல்
திங்கள் கிழமை காலை 7 மணி வரை
இந்தியா முழுவதும்
அனைத்து லேண்ட்லைன்
மற்றும் மொபைல் போன்களுக்கும்
(ALL PHONES OF ALL NETWORKS)
இலவசமாகப் பேசும் திட்டத்தை ஆறிமுகப்படுத்தியுள்ளது.

வாடகை செலுத்தி இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்களுக்கு
மட்டுமே இச் சலுகை பொருந்தும்.

வரவேற்கத்தக்க ஒரு நல்ல முடிவு.

சிந்தித்தவர்..
செயலாக்கம் செய்தவர்
யாரெனினும்
பாராட்டுதலுக்குரியவர்.

கிராமத்தில் ஒரு பழமொழியைக்
 கேட்டதுண்டா?

"ஆடுகளை அவுத்து உட்டுட்டு பட்டிக்கு பூட்டு போடரானாம்"  

இது நமக்கும் பொருந்தும்.

காலம் முடிந்து போய் விடவில்லை.
முயற்சி செய்தால்
சரண்டரைத் தடுக்கலாம்.
இணைப்பு கேட்போரைத்
துரத்தியடிக்காமல்
இணைப்பு தரலாம்.

நம்பிக்கையே வாழ்க்கை.


வாழ்க்கையே நம்பிக்கை
வாழ்த்துக்கள்
ஈரோடு மாவட்டத்தில் JAO தேர்வில்  வெற்றி பெற்ற
1.தோழியர் ராஜி  SRTOA வெள்ள்கோயில்
2.தோழியர் இந்துமதி SRTOA ஈரோடு
3.தோழர் பாலாஜி ஸ்ரீதர் TTA ஈரோடு
4.தோழர் சதீஷ் பாபு SRTOA ஈரோடு
5.தோழர் சிராஜுதீன் TTA பவானி

ஆகியொருக்கு உள்ளம் நிறைந்த வாழ்த்துக்க

Wednesday 10 August 2016

உயரும்
வீட்டு வாடகைப்படி
78.2 சதவிகித விலைவாசிப்படி
அடிப்படையில்
வீட்டு வடகைப்படி வழங்க
ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவு

விரைவில் வெளியிடப்படும்
அமைப்பு துவக்கம்
ஈரோடு மாவட்டத்தில் நமது கூட்டணிச் சங்கங்களை உள்ளடக்கிய அமைப்பு 08.08.2016 அன்று துவக்கப்பட்டது.
தலைவர்
தோழர் ஷாஜகான்
மாவட்டச் செயலர் TEPU

ஒருங்க்கிணைப்பாளர்

தோழர் பழனிவேலு
மாகவட்டச் செயலர் NFTE

இணை
ஒருங்கிணைப்பாளர்
தோழர் சதாசிவம்

மாகவட்டச் செயலர் SEWA
NATIONAL FORUM OF BSNL WORKERS
TEPU       NFTE BSNL        SEWA BSNL
ஈரோடு மாவட்டம்
BSNL  நிர்வாகமே...
2014-15 மற்றும் 2015-16ஆம் ஆண்டுகளுக்கான போணஸ் வழங்கு
78.2 சத IDA அடிப்படையில் வீட்டு வாடகைப்படி வழங்கு...
2017 ஊதிய மாற்றத்திற்கு  இருதரப்பு ஊதியக்குழு அமைத்திடு...
நிதி ஆணையத்தின் பங்கு விற்பனை முடிவிற்கு தலையசைக்காதே...
ஆகிய கோரிக்க்ககளை நிறைவேற்க் கோரி
12.08.2016 அனறு
ஆர்ப்பாட்டம்

அனைவரும்
பங்க்கேற்க
வேண்டுகிறோம்.

Thursday 4 August 2016

இரங்கல்
தோழர் வீரமுத்து டெலிகாம் மெக்கானிக் 03.08.2016 அன்று காலமானார் என அறிந்து வருந்துகிறோம்.

ஒரு விபத்தில் காயமுற்று ஏறத்தாழ ஒன்றரை மாதம் நமது நிறுவனத்தால் அங்கீகரிக்காப்பட்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி காலமானார்.

தோழர் வீரமுத்து அவர்களின் மறைவிற்கு அஞ்சலியையும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்க்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

விபத்தில் காயமுற்ரார்.
காயம் பட்ட பகுதியோ தலையில்.
நினைவற்ற நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் "பணம் செலுத்தினால் மட்டுமே சிகிச்சை. இதுவே உடன்பாடு" என்றது மருத்துவமனி நிர்வாகம்.
நிர்வாகமோ அதையே வழி மொழிந்தது.
எத்தனை லடசங்க்கள் செலவானது என்பது இனிதான் தெரியும். கருணை மனுக்களால் கனிவும் காசும் கிடைக்குமா என்பதை காலம்தான்
சொல்லும்
"உசிருக்கு ஆபத்துன்னா ஊட்டோட சாகனும்" இதுதான் விதியோ?


நிர்வாகம் போட்ட மாற்றல் உத்தரவை மதித்து 2014ல்  கோபியிலிடருந்து மலைப்பகுதியான எரஹனஹள்ளிக்கு மாற்றலில் சென்றார். 2016ல் கோபிக்கு திரும்ப மாற்றலில் வருவதற்காக வெளியிடப்பட்ட உத்தரவைப் பார்க்காமலேயே மண்ணோடு கலந்தார் தோழர் வீரமுத்து

Wednesday 3 August 2016

JTO தேர்வு

28.08.2016 அன்று நடைபெறவுள்ள் JTO தேர்வுக்கு 10.08.2016 வரை விண்ணப்பிக்கலாம் என்பது நிர்வாகத்தின் உத்தரவு.

குழப்பங்கள் பல இருக்கலாம்.
குறைகளும் பல இருக்கலாம்.

அனைத்தையும் மீறி வென்று காட்டுவோம் என்ற உறுதியுடன் ஆன்லைனில் ஆர்வத்துடன் விண்ணப்பிக்க வேண்டுகிறோம்.

தோழர்.ஜெயராமன்
பணி நிறைவு பாராட்டு விழா

06.08.2016
 சனிக்கிழமை
 காலை 10 மணி 
TOWN HALL -
கடலூர் 
தலைமை: தோழர்.C.K. மதிவாணன் 
வாழ்த்தரங்கம் - கவியரங்கம் - பட்டிமன்றம் - நூல் வெளியீடு 

வாழ்த்துரை 
பொதுவுடைமை இயக்கத்தலைவர்கள்
தோழர்.முத்தரசன் 
தோழர்.மகேந்திரன்
தோழர்.திருமலை - AIYF
தோழர்.நல்லக்கண்ணு

தொழிற்சங்கத்தலைவர்கள் 
தோழர்.மாலி 
தோழர்.இரகுநாதன் 
தோழர்.இலட்சுமணன் AITUC 
தோழர். கு.பாலசுப்பிரமணியன் 
மற்றும் இயக்க முன்னணித்தலைவர்கள் ....
வாருங்கள் தோழர்களே...
வாழ்த்துங்கள் தோழர்களே...

Tuesday 2 August 2016

Monday 1 August 2016

கால நீட்டிப்பு

வருமானவரி சம்பந்தமான
விபரங்க்களை
05.08.2016 வரை
சமர்ப்பிக்கலம்

என அறிவிக்கப்பட்டுள்ளது. 
அறிவிக்கப்படாத முடிவுகளும்
தெளிவுக்கு வராத குழப்பங்க்களும்.
22/05/2016 அன்று   2013-14ம்  ஆண்டிற்கான  
JTO காலியிடங்களுக்கு இலாக்காத்தேர்வு நடத்தப்பட்டது
08/07/2016 அன்று முடிவுகள் முழுமையான  முறையில் இல்லாமல் அரைகுறையாக வெளியிடப்பட்டது

விசாரித்த்போது அது முடிவல்ல. அது
Inter Communicationஎன்று
சொல்லப்பட்டது.

2008ம் ஆண்டு TTA  நியமனம் பெற்ற தோழர்களின் 
முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன
இதன் பின் மொத்த முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டன

இந்த முடிவுகளை முறையாக அறிவிக்கும் முன்னரே 
2014-15ம் ஆண்டிற்கான JTO காலியிடங்களுக்கு  28/08/2016 அன்று தேர்வெழுத  விண்ணப்பங்கள் இணையத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டன. 31/07/2016 அன்று பதிவு செய்யக் கடைசி நாள்
ஏற்கனவே நடந்து முடிந்த தேர்வின் முடிவுகளைஅறிவிக்காமல் 
அடுத்த தேர்வுக்கு ஆயத்தமாவது முற்றிலும் அபத்தமாகும்
தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தோழர்கள் வரக்கூடிய தேர்வை எழுதுவதா? வேண்டாமா ? என்ற குழப்பத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்

ஏற்கனவே நடந்த தேர்வு முடிவுகளை அறிவிக்காதநிலையில் 
28/08/2016 நடக்கவுள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதியை தள்ளி வைத்திருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை
JTO பதவிகளுக்கான தேர்வு மட்டும் நடக்கும்
வேறு எதுவும் நடக்காது என்பது கேலிக்கூத்தாக உள்ளது.
குழப்பத்தின் உச்சமாக உள்ளது.

இலாக்கா உடனடியாக நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை    ஒட்டு மொத்தமாக உடனடியாக  அறிவிக்க வேண்டும்.   
நடக்கப் போகும் தேர்வுக்கான 
விண்ணப்ப தேதியை தள்ளி வைக்க வேண்டும்.

இதுவே இளம் தோழர்களின் எதிர்பார்ப்பு... கோரிக்கை...
இனி வரும் காலத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாம்

இளைய தோழர்களை இவ்வாறு குழப்புவது நமது நிறுவனத்தின் எதிர்கால நலனுக்கு நல்லதா?