NFTECHQ

Sunday 31 July 2016

வாழிய பல்லாண்டு
31.07.2016 அன்று பணி ஓய்வு பெறூம்

1.தோழர் J.தாமஸ் முத்துச் செல்வன்  STS ஈரோடு.
2.தோழர் வெங்கடாஜலம் SSS பவானி
3.தோழர் விஜயராஜ் SSS ஈரோடு
4.தோழர் பெருமாள் TM ஈரோடு
5.தோழர் சீனிராஜ் TM ஈரோடு
6.தோழர் K.A.சுப்ரமணியம் TM ஈரோடு
7.தோழியர் M.சந்திரா TM ஈரோடு
ஆகியோர் நலமுடனும், மகிழ்வுடனும் பல்லாண்டு வாழ மாவட்டச் சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம்.

மகிழ்வோடும்..
மனநிறைவோடும்..

என் அன்பிற்கினிய தோழர்களே தோழியர்களே

இன்று 31.07.2016.
துறையில்
நிறைவான
பணி நிறைவு.

என் அலுவலகப் பணியில்
என்னோடு துணை நின்ற
அனைவருக்கும் உள்ளம் நிறைந்த் நன்றி.

தொழிற்சங்கப் பனியில்
தொடர்ந்து தொய்வின்றி
துணை நின்ற தோழர் தோழியருக்கு
நெஞ்சு நிறைந்த நன்றி.

தொழிற்சங்கப் பணியில் மட்டுமல்லாது
தனி மனித வாழ்க்கையிலும்
நேர்மையைக் கற்றுத் தந்த
தோழர் மாலி...

எல்லாவகையிலும்
துணை நினறு வள்ர்த்திட்ட
தோழர்கள் செல்வராசன், ராஜமாணிக்கம்
தோள் கொடுத்து உதவிய தோழர் யாசின்..
இப்படி பல நூறு தோழர்கள்.

ஈரோடு மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு உள்ளிட்ட அனைத்து மாவட்டச் சங்க நிர்வாகிகள்
கிளைச் செயலர்கள் முன்னணித் தோழர்கள்..

வாழ்த்து வழங்கிய நல்ல உள்ளம் படைத்திட்ட அதிகாரிகள்..

மாநிலம் முழுமையும் பல்வேறு பகுதிகளிலிருந்து வாழ்த்து வழங்கிய என் அருமைத் தோழர்கள்..

அனைவருக்கும் இதயம் நிறைந்த நண்றி.

எனது பொது வழ்க்கைப் பணி என்பது
பயனுள்ள முறையில் தொடரும்.

தோழமை உள்ளத்துடன்
G.குமார்.
தோழர்  G.ஜெயராமன்

நமது இயக்கத்தில்
மாவாட்ச் செயலராய்,
மாநிலப் பொருளராய்,
சம்மேளனச் செயலராய்
போற்றுதலுக்குரிய
பொதுவுடைமைத் தத்துவத்தின்
தளபதியாய்
பல பரிணாமங்கள்.

அன்புத் தோழனே இனி உன் சிறகுகள்  விரியட்டும்.

என் தோழனே உன்னிடம்
ஏராளாமான எதிர்பார்ப்புகள் உள்ளன.
அவை அனைத்தும் நிறைவேற்றுவாய் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துகிறோம்.

உன் பணி அனைத்திலும் நீ வெற்றி காண வேண்டும்.

வாழ்த்துக்கள்.


Tuesday 26 July 2016

உத்தரவாய் 
உயிரோடு உள்ள  
BSNL ஊழியர்களுக்கான 
நடத்தை மற்றும் ஒழுங்க்கு முறை விதிகளில் ஒன்று

RULE 5 MISCONDUCT

(27) Making representations in order to bring any political or any outside influence to bear upon any superior authority to further employee’s interest in respect of matters pertaining to employment, postings or transfers. 

Sunday 24 July 2016

தோழர் புண்ணியகோட்டி

தோழர் மாலி
தோழர் செல்வராசன்
தோழர் ராஜமாணிக்கம்
தோழர் யாசின
ஆகியோர் வரிசையில்...
இன்று
தோழர் புண்ணியகோட்டி.

ஈரோடு மாவட்டத்தின் சார்பாக வேலூர் மாநில மாநாட்டில் மாநில அமைப்புச் செயலராக
ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டச் சங்கத்தில் உதவிச் செயலராக சிறப்பாகப் பணியாற்றி வரும் தோழர்.

அருமைத் தோழனே
வந்த வாய்ப்பினை
வரமாய் ஏற்றிடு.

இயக்கத்தின் நலனுக்கு
எறும்பாய் உழைத்திடு.

உன் பணி சிறக்க
வாழ்த்துகிறோம்.

நீ உயர்ந்த்டு.

இயக்கத்தை உயர்த்திடு.
ஒன்றுபட்டு
வெற்றி பெற்ற
வேலூர் மாநாடு.

சிறப்பான ஏற்பாடுகள்.
வீறு கொண்டெழுந்த
ஆயிரக்கணக்கான
தோழியர்கள் தோழர்கள்.

சேவைக்கருத்தரங்கம்.
மகளிர் கருத்தரங்கம்
இளைஞ்ர் கருத்தரங்கம்
தலைவர்களின் நம்பிக்கை உரைகள்.
ஒன்றுபட்ட ஒரு மனதான
நிர்வாகிகள் தேர்வு
என
சிறப்புகள்
பல பெற்ற மாநாடு.

மாநிலத்தலைவர்
தோழர்.காமராஜ்

மாநிலச்செயலர்
தோழர்.நடராஜன்

மாநிலப்பொருளர்
தோழர்.சுப்பராயன்
உள்ளிட்ட புதிய தலைமையின் 
செயல்பாடு செழுமை பெற

நமது வாழ்த்துக்கள்.   

Tuesday 19 July 2016

FORM – 16
ERODE SSA

ERODE மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் FORM-16 , HRMS NO உதவியுடன் DOWNLOAD செய்து கொள்ளலாம்.


FORM -16 (PART – A)

FORM-16 (PART – B)

2015-16 INCOME TAX RETURN , FILE செய்வதற்கான கடைசி தேதி 31-07-2016

Monday 18 July 2016

NFTE BENL
தமிழ் மாநில மாநாடு
21.07.2016
22.07.2016 தேதிகளில்
வேலூரில்.

இயக்கத்தின் வலிமை பெருகட்டும்.

நிறுவனத்தின் நலமும் வளமும் காத்திட,
ஊழியர் உரிமைகள் காத்திட
வழிகாணும் மாநாடாக
வேலூர் மாநாடு
அமைய

வாழ்த்துக்கள்

Friday 15 July 2016

உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்

JTO தேர்வில் வெற்றி பெற்ற்

தோழர் நித்ய ஜெரால்டு
தோழர் ரவி
தோழர் சரவணமூர்த்தி
தோழியர் மைதிலிபிரியா
தோழியர் சுபா ஆப்ரகாம்
தோழர் ராமச்சந்திரன்
தோழர் கணேசன் தோழர் மோகன்
தோழர் சக்திவேல்
தோழர் திருமால் ராஜ்
தோழர் பாலவரதன்
தோழர் சந்திர சேகர்
தோழர் முத்துசெல்வன்
தோழர் பாலாஜி ஸ்ரீதர்

ஆகியோருக்கு மாவட்டச் சங்க்கத்தின்
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.
சீனியர் TOA சுழல் மாற்றல் சம்பந்தமாக பல நாட்கள் விவாதித்து ஒரு வழியாக 13.06.2016 அன்று உத்தரவு வெளொயிடப்பட்டது.
தொழில்நுட்பப் பிரச்னை காரணமாக செய்திகளை வெளியிட இயலாமைக்கு வருந்துகிறோம்.

Friday 1 July 2016

வணிகப்பகுதிகள்

தமிழகத்தில் ERP  முழுமையாக அமுலானதைத் தொடர்ந்து தற்போதைய SSA  எனப்படும் தொலைத்தொடர்பு மாவட்டங்கள் 
BUSINESS AREA எனப்படும் வணிகப்பகுதிகளாக பிரிக்கப்பட்டு
டெல்லி தலைமையாகத்தால்  உத்திரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் கீழ்க்கண்டவாறு 10 வணிகப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
வணிகப்பகுதி           இணைக்கப்படும் மாவட்டம்
கோவை                    - நீலகிரி 
மதுரை                      - காரைக்குடி 
நாகர்கோவில்        - திருநெல்வேலி 
பாண்டிச்சேரி          - கடலூர் 
சேலம்                        - தர்மபுரி 
தஞ்சாவூர்                 - கும்பகோணம்       
தூத்துக்குடி               - விருதுநகர் 
வேலூர்   
ஈரோடு 
திருச்சி     
வேலூர், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டங்கள் வழக்கம் போல்  தனித்து செயல்படும். சிறிய 7 மாவட்டங்கள் பெரிய   மாவட்டங்களுடன்  இணைக்கப்பட்டுள்ளன.
வணிகப்பகுதிகள் மனிதவளம்,நிதி,திட்டம் மற்றும் பொருள் கொள்முதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.

இணைக்கப்பட்ட சிறிய மாவட்டங்கள்  வலைப்பின்னல் பராமரிப்பு மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.
வணிகப்பகுதிகள் உருவாக்கத்தால் ஊழியர் மாற்றல் இருக்காது. ஊழியர்களுக்கான மாற்றல் எல்லை பழைய SSA என்ற அளவிலேயே இருக்கும்.

20/08/2016க்குள் மேற்கண்ட வணிகப்பகுதி உருவாக்கம் அமுல்படுத்தப்பட வேண்டும்.

Best and Hard Working officers and officials are being demotivated in service sectors. This is a wakeup call.