NFTECHQ

Thursday 28 January 2016

வாழ்வில் முன்னேற வாய்ப்பு


வாழ்த்துகிறோம் தோழர்களே

JTO 50 சத LICE தேர்வு  வரும் 08.05.2016 அன்று நடைபெறும் என BSNL நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


2013-14,

2014-15

2015-16 ஆம் ஆண்டுகளுக்கான காலியிடங்களுக்கு இத்தேர்வு நடைபெறூம்.

22.02.2016 முதல் 22.03.2016 வரை இத்தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்வில் வெற்றி பெற்று வாழ்வில் முன்னேற்றம் காண உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களைத்    தெரிவிக்கிறோம்.

இதற்காக முயற்சிகள் எடுத்த நமது மத்திய் சங்கத்தை
மனதார பாராட்டுகிறோம்.

Wednesday 27 January 2016


திருத்தியமைக்கப்பட்ட 

             மாற்றல் கொள்கை



கிராமப்புற மற்றும் பிரபலமில்லாத ஊர்களுக்கு மிகவும் தேவையான 

ஊழியர்களை பணியில் அமர்த்தவும்,


அந்த ஊர்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்றல் தர 

ஏதுவாகவும்


BSNL
தலைமை அலுவலகம் கீழ்க்கண்ட திருத்தியமைக்கப்பட்ட 

மாற்றல் கொள்கையை  வெளியிட்டு உள்ளது.


அதன் முக்கிய அம்சங்கள்:


1.
பிரபலமில்லாத ஊர்களுக்கான  கட்டாய மாற்றல் இரண்டு வருட 

டென்யூர் மாற்றலாக ஆக்கப்படுகிறது. அவை எந்த எந்த ஊர்கள் 

என்பதை மாநில தலைமை மேலாளர் நிர்ணயிப்பார்.


2.
பிரபலமில்லாத ஊர்களாக நிர்னயிக்கப்படாத கிராமப்புற

 
ஊர்களுக்கான கட்டாய மாற்றல் டென்யூர் 3 வருடங்களாக

நிர்ணயிக்கப்படுகிறது.அவை எந்த எந்த ஊர்கள் என்பதையும் 

மாநில தலைமை மேலாளர் நிர்ணயிப்பார்.


3.
டென்யூர் முடிந்த ஊழியர்களுக்கு 3 விருப்ப ஊர்கள் கேட்க வாய்ப்பு 

அளிக்கப்படும்.நிர்வாகம் இயன்றவரை அவர் கேட்ட இடத்திற்கு 

மாற்றல் தரும். நிர்வாகரீதியாக இயலாது என்றால் அதற்கான காரணம்

எழுத்துபூர்வமாக தெரிவிக்கப்படும்.


4.
டென்யூர் காலத்திற்குரிய லீவுகளை எடுக்கலாம். அதற்கு மேல் 

எடுத்தால் அது டென்யூர் காலத்திலிருந்து கழித்துக்கொள்ளப்படும்


5.
முடிந்தவரை , விருப்பமில்லாத பெண் ஊழியர்களும் 55 வயது 

கடந்தவர்களும் மாற்றப்படமாட்டார்கள்.
    






Sunday 17 January 2016

25000 ரூபாய்

தமிழகத்தில் சமீபத்திய கடும் மழையால் பாதிக்கப்பட்ட நமது ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ரூபாய் 25000 வெள்ள நிவாரண முன்பணமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு முயற்சி செய்த நமது மத்திய, மாநிலச் சங்கங்களுக்கு பாராட்டுக்கள்.

Thursday 14 January 2016

ன்ம் பொங்ட்டும்


அகமும்
புறமும்
அளவில்லா  இன்பம்
பொங்கும்
எதிர்காலத்தை
பொங்கல் திருநாள்
உருவாக்கட்டும்
என வாழ்த்துகிறோம். 

Monday 11 January 2016

மருத்துவத் திட்டம்

MRS எனப்படும் மருத்துவத் திட்டம்  பற்றி
NFTE, BSNLEU  அமைப்புகளுடன் நிர்வாகம் கலந்தாய்வு செய்தது.
ஊழியர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் – சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இறுதியாக எடுக்கப்பட்ட முடிவுகள்.

BHEL,SBI,COAL INDIA போன்ற பொதுத்துறைகளில் உள்ள அமலில் உள்ள மருத்துவத் திட்டம் குறித்து அறிந்து முடிவெடுப்பது.

தேங்கிக் கிடக்கும் மெடிக்கல் பில்களை உடனடியாக பட்டுவாடா செய்வது.

MEDICLAIM என்னும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமலாக்குவது குறித்தும் பரிசீகிக்கப்படும்.

பிப்ரவரி 2016ல் மீண்டும் கூடி இறுதி முடிவெடுப்பது. 
01.01.2016
முதல்
4.5 சதம்
விலைவாசிப்படி உயர்வுக்கான
உத்தரவை
பி எஸ் என் எல்
நிர்வாகம்

வெளியிட்டுள்ளது.
ஏழாவது அங்கீகாரத் தேர்தல்


இது குறித்து 11.01.2016 அன்று நிர்வாகம் சங்கங்களுடன்
பேச்சு வார்த்தை நடத்தியது.

இப்பணிக்கான  துவக்கம் 14.01.2016 அன்று துவங்கும்.
18.02.2016 அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.

தேர்தல் களத்தில் இருந்து விலக விரும்பும் அமைப்புகள் 22.02.2016 க்குள் விலகலாம்.

26.04.2016 அன்று தேர்தல் நாளாகும்.

28.04.2016 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

29.04.2016 முதல் 28.04.2019 வரை மூன்று ஆண்டுகள் அங்கீகார காலமாக இருக்கும்.

இவை ஏற்கப்பட்டு எடுக்கப்பட்ட உத்தேச முடிவுகள்.
தமிழகம் உள்ளிட்ட மாநில சட்டமன்ற தேர்தல்கள் தேதியைக் கணக்கில் கொண்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும். 

Sunday 10 January 2016

‘வை-பை’

அடுத்த நிதியாண்டுக்குள் நாடு முழுவதும் 256 இடங்களில் 2,500 ‘வை-பை’ மையங்கள் அமைக்கப்படும் என மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 

மும்பை பங்குச் சந்தையில் ஞாயிறன்று இலவச ‘வை-பை’ சேவையை தொடங்கிவைத்து அவர் பேசியதாவது:

மொபைல் தொலைபேசி பயன்பாடு 100 கோடியை எட்டியுள்ளது. இணையதள பயன்பாடு 40கோடியை கடந்துவிட்டது. அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் கூடுதலாக 20 முதல் 30 கோடியாக அதிகரிக்கும். எனினும் அடுத்த 6 மாதங்களுக்குள் 50 கோடியை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
 

இதற்காக மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் தொலைதொடர்பு நிறுவனம் நாடு முழுவதும் 256 இடங்களில் 2,500 ‘வை-பை’ இணைப்பு மையங்களை அமக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த நிதியாண்டுக்குள் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். இதுவரை 200 இடங்களில் 500 ‘வை-பை’ இணைப்பு மையங்களை பி.எஸ்.என்.எல் தொடங்கியுள்ளது.

Wednesday 6 January 2016

மலையென வளரும்

மாமனிதனின் புகழ்


குன்றாத புகழுக்குச் சொந்தக்காரர் குப்தா.

தொலைத்தொடர்பு ஊழியர்களுக்குத் தொண்டால் பொழுதளந்த தோழன் குப்தா.

சமூக சிந்தனையோடு சாதனைகள் படைத்திட்ட பாட்டாளி வர்ககத்த் தோழன் குப்தா.

லட்சக்கணக்கான தோழர்களுக்கு சமூகத்தில் ஏற்றம் தந்து வாழ்வினில் மறுமலர்ச்சியை உருவாக்கிய தோழன் குப்தா..

ஓய்வீதியம் என்றாலே ஓ.பி. குப்தா மட்டுமே நினைவுக்கு வரும் வகையில் சாதனை நிகழ்த்திய தோழன்.

தோழன் குப்தா தொழிலாளி நலன் குறித்து சிந்திப்பதை இயற்கை சிதைத்த நாள்
இன்று
06.01.2016.

அவரது  வழியில் தொடர்ந்து தொண்டாற்ற சபதமேற்போம்

Tuesday 5 January 2016

மகிழ்வு தரும் செய்தி

31.03.2016 வரை உள்ள JTO காலியிடங்களுக்கு 50 சத LDCE  தேர்வு நடத்துமாறு BSNL தலைமை அலுவலம் உத்தரவிட்டுள்ளது.

நமது நிறுவனத்தில் உள்ள இளைய தோழர்கள்
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நன்முயற்சி எடுத்து வெற்றிபெற்று முன்னேற்றம் பெற  வாழ்த்துகிறோம். 

Sunday 3 January 2016

சிவ்ப்பு மனிதனுக்கு

வீரவணக்கம்




கொள்கையில் உறுதி,

கொள்கையையைச் சொல்வதில் தெளிவான உறுதி,

கொள்கையின்படி வாழ்வதில் உறுதி,

நேர்மையில் உறுதி,

என வாழ்ந்து

AITUC இயக்கத்தின் பொதுச்செயலாராய்,

இந்திய கம்யூணிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராய்,

ஏழை எளிய மக்களின் வாழ்வில் முன்னேற்றத்துக்குப் 
போராடும் போராளியாய்,

உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்காக ஒயாது உழைத்தவராய்,

ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் உறுதியோடு நின்றவராய்,
வாழ்ந்த
தோழர் பரதன்

02.01.2016 அன்று மண்ணோடு கலந்தார்.

நம் மனங்களில்  என்றும் வாழ்வார்.

அவருக்கு நமது செவ்வணக்கம்
பத்தாயிரம் கோடி

வருமான வரித்துறையிலிருந்து நமது பி எஸ் என் எல் நிறுவனத்துக்கு வர வேண்டிய ரூபாய் பத்தயிரம் கோடி ரூபாய் விரைவில்  கிடைய்கும் என்று நமது CMD திரு அனுபம் ஶ்ரீவத்சவா 01.01.2016 அன்று கார்ப்பரேட் அலுவலக்த்தில் ப்த்தாண்டு உரையாற்றிய போது தெரிவித்துள்ளார். 


இந்த 10000 கோடி ரூபாய் கடந்த 15 ஆண்டுகளாக வருமானவரித்துறை பி எஸ் என் எல் நிர்வாகத்திடமிருந்து பெற்ற தொகையாகும்.

FORUM சார்பாக  நடைபெற்ற இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் இதுவும் ஒரு கோரிக்கையாக் இருந்தது.

Saturday 2 January 2016

MNP நிலை டிசம்பர் 205

                    உள்ளே     வெளியே    நிகரம்             

கோவை                                   2521    1152        1369
கடலூர்                                     730      452          278
குடந்ட்தை                             581      363          218
தர்மபுரி                                    1417    707          710
ஈரோடு                                     1076    523          553
காரைக்குடி                            384      501          -117
மதுரை                                     916      900          16
நாகர்கோவில்                     1418    417          1001
நீலகிரி                                     325      256          69
புதுவை                                    402      216          186
சேலம்                                      1583    1281        302
தஞ்சை                                     403      365          38
திருச்சி                                     761      966          -205
தூத்துக்குடி                            631      403          228
நெல்லை                                 2096    783          1313
விருதுநகர்                             481      520          -39
வேலூர்                                     1196    872          324

தமிழகம்                16921    10677         6244