NFTECHQ

Sunday 30 June 2013


பணி முடிந்து  பணி தொடர்கிறது. 

விதிகளின் கட்டுப்பாடுகள் தகர்ந்தன 
பணியில் இருந்த காலத்திலேயே! 
தடையில்லா வேகப் பயணம் தொடர்கிறது. 
ஆயீரத்திற்கும்  மேல் பிறைகள் காண வாழ்த்துக்கள்.

Saturday 29 June 2013

நீடூ வாழ்க!

30.06.2013 அன்று பணி நிறைவு பெற்று விடை பெறும் 
அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்


திரு. C.பெரியசாமி, பொது மேலாளர், ஈரோடு
திரு.M.M.ஈஸ்வரன், தலைமை கணக்கு அதிகாரி (நிதி)
தோழர் A.நடராஜா TGM(O)
தோழர் K.R.குமார், SSS(O)
தோழர் S.அய்யாவு STS(O)
தோழர் சையத் மஹபூப் பாஷா TM

தோழர் R.ஜெயகுமார் TM

Tuesday 25 June 2013

தகைமையாளர்!

“1966 நெய்வேலியில் (மந்தாரகுப்பம்) அன்றைய சேலம் கோட்ட மாநாடு நடைபெற்றது. ஒரு பிரிவினர் சார்பாளர்கள் கட்டணத்தைத் திருப்பித் தர வேண்டுமென்ற பிற்போக்கு தனமான கோரிக்கையை வைத்தனர். முறையற்ற இக் கோரிக்கையினை இயல்பாகவே வரவேற்புக் குழு ஏற்கவில்லை. மாநாடு விவாதங்கள் துவங்குவதற்கு முன்பாக இதையே காரணமாகச் சொல்லி அந்த அணி அடாவடி செய்து வெளியேறியது. வரவேற்புக் குழு அளிக்கும் உணவை ஏற்கமாட்டோம் என்று வெளியே போனார்கள். சார்பாளர்களில் ஒரு பகுதியினர் சாப்பிடாததால் வரவேற்புக் குழுவும் கோட்ட சங்க நிர்வாகிகளும் தாமாக முன் வந்து உண்ணாநிலை மேற்கொண்டனர். அப்போது மாநிலச் செயலராக இருந்த தோழர் ஜெகன் தாமும் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.”

-          தோழர் ஜெகன் நினைவு நாளில் கடலூர் தோழர் டி.ரகுநாதன் ஜனசக்தி
                         இதழில் எழுதியிருந்த கட்டுரையிலிருந்து.

25.06.2013 அன்று வேலூரில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் பங்கேற்ற தோழர்களில் சில உண்ணாமல்  இருந்த நிலையில் வரவேற்புக் குழு அளித்த அருசுவை உணவை ரசித்து அருந்தியவர்களுக்கு தோழர் ஜெகன் வாழ்க்கையோ அவரது வழிமுறையோ தெரியாமல் இருக்கலாம். அதை சுட்டிக்காட்டிய என்னை அவர்கள் மன்னிப்பார்கள் என்றே நம்புகிறேன். – மாலி.

Monday 10 June 2013

நிறைவு

சென்ற ஆண்டு போட்ட ஒப்பந்தம் ஒரு ஆண்டிற்குப் பின் தொலைத் தொடர்பு துறை இன்று அளித்த ஒப்புதலால் அமுலுக்கு வருகிறது. ஒன்று பட்டு போராட தயாரான ஊழியர்கள், அதிகாரிகள் பாராட்டிற்குரியவர்கள். ஒற்றுமைக்கு வெற்றி கிடைத்துள்ளது.  இந்த ஒற்றுமை தொடர்வது நிறுவனம் காத்திட ஊழியர்களின் உரிமைகளைப் பெற்றிட.மிகவும் தேவையானது.  

Thursday 6 June 2013

நெஞ்சம் மறப்பதில்லை

அவர் குடியிருந்த வீட்டில் ஒரு வீட்டின் முன்அறை வரவேற்பரையாக, தொழிற்சங்க அலுவலகமாக செயல்பட்டது. அன்று தோழர்களுடன் அவரை சந்தித்தேன். அவருடன் பேசிக் கொண்டிருந்தோம். தொலைக்காட்சியில் கர்ணாடக இசை வழிந்தது. எங்களுடன் பேசியவாரே அவர் அதையும் வெகுவாக ரசித்தார். சொந்த குழந்தைகளுடன் பேசிட நேரமில்லாமிலிருக்கும் அவருக்கு  இசையில் அதுவும் கர்ணாடக இசையில் இவ்வளவு ஈடுபாடா? அவரிடமே கேட்டுவிடுவோமே என்று எனக்கு தோன்றியது. ஆமாம் கர்ணாடக இசையினை இவ்வளவு ஆர்வமாக ரசிக்கிறீர்களே உங்களுக்கு அந்த இசையில் அவவளவு ஈடுபாடா? இது நான். ஏன் இந்த கேள்வி? இது அவர். இல்லை இந்த பாட்டு எந்த ராகம் என்று சொல்வீர்களா? இது எனது கேள்வி. அவர் அதற்கு பதில் சொல்வதற்கு பதிலாக ஒரு கேள்வி கேட்டார். உங்களில் யாருக்காவது இந்த பாட்டு என்ன ராகம் என்று தெரியுமா என்று கேட்டார். நாங்கள் அனைவரும் அப்பாவிகள் என்று ஒரு சேர சொன்னோம். அப்படியா! இந்த பாட்டு ’காபி’  ராகத்தில் அமைந்தது என்று சொன்னார். எங்கள் தலைவர் சகலகலா வல்லவர் என்ற பெருமிதம் எங்களுக்கு. உங்கள் இசை அறிவுக்கு பாரட்டுகள் என்றேன். அதெல்லாம் இல்லை எனக்கு ஒரு விசயம் முதலில் தெரிந்து விட்டது அதனால் எனக்கு பதில் சொல்வதில் சிக்கல் இல்லாமல் போய்விட்டது என்றார் அவர். அப்படி என்ன தெரிந்து கொண்டீர்கள் என நான் கேட்டேன். வழக்கமான அந்த மந்தகாசமான சிரிப்பு அறை முழுக்க பரவியது. சிரிப்பை நிறுத்தி விட்டு சொன்னார் ‘உங்களில் யாருக்கும் ராகம் பற்றிய ஞானம் ஏதுமில்லை என்பது உங்கள் பதிலிலிருந்து தெரிந்து கொண்டேன். எனவே நான் எந்த ராகம் பற்றி சொன்னாலும் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் எனவே எனக்குத் தெரிந்த ஒரு ராகத்தின் பெயரைச் சென்னேன் அவ்வளவு தான்’ என்றார். கேள்விக்கு எதிர் கேள்வி போட்டு பதில் சொன்ன அவரது திறமை வியப்பாக இருந்தது.  இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள்.  அவர் மறைந்து விட வில்லை. அனைவரின் நெஞ்சங்களில் நினைவுள்ளவரை வாழ்வார். 

Monday 3 June 2013

கிளை மாநாடு + பாராட்டு விழா.

03.06.2013 அன்று பவானி கிளை மாநாடு சிறப்பாக நடைபெற்றது. தோழர் பாரதி தலைமை தாங்கினார். பல கிளைச் செயலர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். மாவட்டச் செயலர் தோழர் குமார் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் சங்க  நிர்வாகிகள் தோழர்கள் ஜெயராமன், பங்காரு, குல்சார் அகமது, நல்லுசாமி, மெளனகுருசாமி ஆகியோர் பங்கேற்றனர். தோழர் செல்வராஜன், தோழர் மாலி பங்கேற்று வாழ்த்தினர்.
நிர்வாகிகள் தேர்வு ஒருமனதாக இருந்தது. தோழர் குருமூர்த்தி தலைவராகவும், தோழர் நாகராஜன் செயலராகவும், தோழர் பாலசுப்ரமணியன் பொருளராகவும் தேர்வு பெற்றனர்.
நெடுங்காலம் நமது சங்கத்தில் உறுப்பினராக இருந்தவரும், பணி ஓய்வு பெற்ற தோழர் கிருஷ்ணன் குட்டி பாராட்டப்பட்டார். தோழர் முருகானந்தம் நன்றி நவின்றார்.